Advertisment

உடலே உன் வீடு... புதிய வாஸ்து சாஸ்திரம்! (15)

/idhalgal/balajothidam/body-your-house-new-vastu-shastra-15

"சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி

சத்தி சிவமுமாம் சிவன்சத்தியு மாகும்

சத்தி சிவமன்றி தாபரம் வேறில்லை

சத்தி தானென்றும் சமைந்துரு வாகுமே.'

-திருமூலர்

பொருள்: இவ்வுலகம் முழுவதும் சிவசக்தியரின் அளவில்லாத விளையாட்டேயாகும். சக்தி வடிவம் உடையவள் என்றால் சிவம் தூய அறிவு மயமானவன். சக்தி சிவனாக மாறுவாள். சிவன் சக்தியாக மாறுவான். சிவசக்தியரின் கலப்பு இன்றி உயிர்கள் இருக்க முடியாது. சக்தியே தேவைக்கு ஏற்பப் பற்பல வடிவங்களை எடுப்பாள். ஆண்-சிவன், பெண்-சக்தி.

Advertisment

ஒருவரின் உருவ அமைப்பிற்கு ஜனனகால கிரக நிலைகளே காரணமாகிறது.இரட்டையராகப் பிறக்கும் குழந்தைகள் ஜ

"சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி

சத்தி சிவமுமாம் சிவன்சத்தியு மாகும்

சத்தி சிவமன்றி தாபரம் வேறில்லை

சத்தி தானென்றும் சமைந்துரு வாகுமே.'

-திருமூலர்

பொருள்: இவ்வுலகம் முழுவதும் சிவசக்தியரின் அளவில்லாத விளையாட்டேயாகும். சக்தி வடிவம் உடையவள் என்றால் சிவம் தூய அறிவு மயமானவன். சக்தி சிவனாக மாறுவாள். சிவன் சக்தியாக மாறுவான். சிவசக்தியரின் கலப்பு இன்றி உயிர்கள் இருக்க முடியாது. சக்தியே தேவைக்கு ஏற்பப் பற்பல வடிவங்களை எடுப்பாள். ஆண்-சிவன், பெண்-சக்தி.

Advertisment

ஒருவரின் உருவ அமைப்பிற்கு ஜனனகால கிரக நிலைகளே காரணமாகிறது.இரட்டையராகப் பிறக்கும் குழந்தைகள் ஜனன காலத்தில் ஒரேமாதிரியான கிரக அமைப்பைக் கொண்டிருப்பதால், அவர்களுக்கு, அங்க அடையாளங்கள் ஒரேமாதிரியாக உள்ளன என்பதே உண்மை. அங்க லட்சணத்தைக் கொண்டு, ஒருவரின் ஜனன காலத்து கிரக நிலைகளையும், அவர் ஜாதகத்தில், கிரகங்களின் ஆளுமை எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் அறியலாம்.

Advertisment

சாமுத்திரிகா லட்சணங்கள்- பெண் ப் சங்கு போன்ற கழுத்தினை உடைய பெண்கள் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித்தருவார்கள்.

* மூக்கு நீண்டு இருந்தால் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவார்கள்.

* கண்புருவங்கள் வில்லைப்போல் வளைந்து இரு புருவங்களும் சேராமல் இருந்தால் உலகில் சுகபோக வாழ்வு வாழ்வார்கள். கூட்டு புருவம், குடியைக் கெடுக்கும்.

* நீண்டகால்களும் கைகளும் உடைய பெண்கள்- ஆண்களை அடக்கி ஆள்வார்கள்.

* சந்திரன், சுக்கிரன் சரியாக இருந்தால் பெண்கள் அழகாக இருப்பார்கள்.

vv

* புருவம் வில்லைப்போன்று வளைந்திருக்கவேண்டும்.

* நெற்றி வடிவம் நெற்றி மேடாகவும் நெற்றியில் கோடுகள் இருந்தால், அறிவாளிகளாக இருப்பார்கள்.

* புருவத்தின் அமைப்பு, செவ்வாயின் வலிமையைக் குறிப்ப தால், கனவனின் குண நலன்களை, புருவத்தைக்கொண்டு அறியலாம்.

* மூக்கின் நுனி கூராக இருந் தால், புத்திசாலியாக அரசாளும் அமைப்போடு இருப்பார்களாம்.

* பரந்த காதுகளை கொண்டவர்களுக்கு பரந்த மனதாக இருக்குமாம்.

* ஐந்து விரல்களும் பூமியில் பதியவேண்டும். குதிகால் அகலமாக இருக்கவேண்டும். பெருவிரல் நீண்டிருக்கவேண்டும்.

* கால் கட்டை விரலுக்கு அடுத்து உள்ள விரல் நீண்டிருந்தால், உற்சாகம் அதிகம் உடையவர்கள்.

* நடுவிரலுக்கு அடுத்த விரல் நீண்டிருந்தால் செல்வச்செழிப்புடன் வாழ்வாள்.

* சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும்.

அவ்வாறு இருந்தால் அந்தப் பெண் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவர் அல்ல.

* ஒரு காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருந்தால் அந்தப் பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம்.

* வளையக்கூடிய புருவங்கள் அமைந்தால்,. இசையில் ஆர்வம் இருக்கும்.

* உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.

* தலை முடியை இரண்டாக வகுக்கும், வகிடு, நேராக அமையாமல் போனால், வக்ர புக்திகொண்ட கணவர் அமைவார்.

தாந்திரீக இரகசியம்

* மங்கள காரகனாகிய, செவ்வாயின் அருளைப்பெற, பெண்கள், கை, கால்களில், மருதாணி வைப்பது நல்லது. பெண் ஜாதகத்தில், செவ்வாயின் வலிமையைக்கொண்டே, அந்தப் பெண்ணின், திருமண வாழ்க்கையை தீர்மாணிக்கமுடியும். திருமணத் தடை, குடும்ப பிரச்சினைகள் தீர, இந்த பரிகாரம் உதவிசெய்யும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala240524
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe