Advertisment

உடலே உன் வீடு... புதிய வாஸ்து சாஸ்திரம்! (12)

/idhalgal/balajothidam/body-your-house-new-vastu-shastra-12

"முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்

செப்பும் மதிள் உடைக்கோயிலுள் வாழ்பவர்

செப்பும் மதிள் உடைக்கோயில் சிதைந்தபின்

ஒப்ப அனைவரும் ஓட்டெடுத்தாரே.'

-திருமூலர்

பொருள்: முப்பதும் முப்பதும் முப்பத்தறு வரும் கூட்டினால் 96 தத்துவங்கள். இதில் 60 உடல்கூறு தத்துவங்கள். மற்ற 36 தத்துவங்கள்= ஆன்மா மற்றும் மனம் சார்ந்த தத்துவங்கள். 96 தத்துவங்களை உடைய உடம்பில் வாழும் உயிரானது, மதில்களை உடையகோல் எனும் உடல் சிதைந்தபின் ஓடிவிடும்.

Advertisment

மரத்தில் செய்யப்பட்ட யானை சிலையை, யானையாக பார்த்தால், மரம் மறைந்துவிடும். மரச்சிலையென்று நோக்கினால், மரம் மட்டுமே தெரியும். யானை காணாமல் போகும்.

cc

(மரத்தை மறைத்தது மாமத யானை- மரத்தில் மறைந்தது மாமத யானை). உடலை, பௌதீக பொருளாகக் காணும் போது, அதில் குடிகொண்டி

"முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்

செப்பும் மதிள் உடைக்கோயிலுள் வாழ்பவர்

செப்பும் மதிள் உடைக்கோயில் சிதைந்தபின்

ஒப்ப அனைவரும் ஓட்டெடுத்தாரே.'

-திருமூலர்

பொருள்: முப்பதும் முப்பதும் முப்பத்தறு வரும் கூட்டினால் 96 தத்துவங்கள். இதில் 60 உடல்கூறு தத்துவங்கள். மற்ற 36 தத்துவங்கள்= ஆன்மா மற்றும் மனம் சார்ந்த தத்துவங்கள். 96 தத்துவங்களை உடைய உடம்பில் வாழும் உயிரானது, மதில்களை உடையகோல் எனும் உடல் சிதைந்தபின் ஓடிவிடும்.

Advertisment

மரத்தில் செய்யப்பட்ட யானை சிலையை, யானையாக பார்த்தால், மரம் மறைந்துவிடும். மரச்சிலையென்று நோக்கினால், மரம் மட்டுமே தெரியும். யானை காணாமல் போகும்.

cc

(மரத்தை மறைத்தது மாமத யானை- மரத்தில் மறைந்தது மாமத யானை). உடலை, பௌதீக பொருளாகக் காணும் போது, அதில் குடிகொண்டிருக்கும், நவ கிரகங்களையும், இயக்கும் பஞ்ச பூதங்களையும், இயங்கும் தொன்னூற்றாறு தத்துவங்களை யும் உணர முடியாது. 96 தத்துவங்களை யும் அறிந்தால்தான், உடலைப் பற்றியும், மனதின் இயக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

96 தத்துவங்கள்

பூதங்கள் - 5

ஞானேந்திரியம் - 5

ஞானந்திரிய கிரியைகள் - 5

கன்மேந்திரியம் - 5

கன்மேந்திரிய கிரியைகள் - 5

அறிவு - 1

கரணம் - 4

நாடி - 10

வாய்வு - 10

ஆசயம் - 5

கோசம் - 5

ஆதாரம் - 6

மண்டலம் - 3

மலம் - 3

தோஷம் - 3

ஈஷனை - 3

குணம் - 3

விராகம் - 8

வினை - 2

அவஸ்தை - 5

------

மொத்தம் - 96

------

பூதங்கள்- 5

விளக்கம்: ஒவ்வொறு பூதமும், ஐந்து குணங்களைக் காட்டும்.

1. ஆகாயம்: பரவெளி- நிறம்- ஸ்படிகம்.

இதன் கூறுகள்: காமம், குரோதம், லோபம், மோஹம், மதம்.

2. வாய்வு: காற்று- நிறம்- புகை, பச்சை, ஸ்படிகம்.

இதன் கூறுகள்: இருத்தல், நடத்தல், ஓடுதல், கிடத்தல், நிற்றல்.

3. தேயு: நெருப்பு/ அக்னி- நிறம்- சிவப்பு.

இதன் கூறுகள்: பயம், அகங்காரம், சோம்பல், நித்திரை, மைதுனம்.

4. அப்பு: நீர்- நிறம்- ஸ்படிக வெள்ளை.

இதன் கூறுகள்: உதிரம், எலும்பு மஜ்ஜை, சிறு நீர், மூளை, சுக்கிலம்.

5. பிருதிவி: மண்- நிறம்- பொன்மை.

இதன் கூறுகள்: மயிர், தோல், நரம்பு, எலும்பு, சதை.

ஞானேந்திரியம்- 5

1. காது சப்தங்களை கேட்கும்.

2. மேல் தோல்- தொடு உணர்வு.

3. கண்- உருவங்களை பார்க்கும்.

4. நாக்கு- அறுசுவைகளை அறியும்.

5. மூக்கு- வாசனைகளை அறியும்.

ஞானேந்திரிய- செயல் 5

1. சப்தம்- செவியில் நின்று கேட்பது.

2. ஸ்பரிசம்- தேகத்தில், தோலில் இருந்து உணர்வைத் தெரிவிக்கும்.

3. ரூபம்- கண்ணில் காட்சிகளை காட்டும்.

4. ரசம்- நாவில் அறுசுவையினை அறிவிக்கும்.

5. கந்தம்- மூக்கில் வாசனையை நுகரும்.

கன்மேந்திரியம்- 5

1. வாக்கு- வாய்- பேசுவது.

2. அசைவு- கை- ஆட்டி அசைத்து வேலை செய்தல்.

3. பாதம்- கால்- நடத்தல்.

4. உபஸ்த்தம்- நீர் வரும் குறி- காம சுகம் அனுபவித்தல்.

5. குதம்- எருக்குழி- ஆசனவாய்.

கன்மேந்திரிய- செயல் 5

1. வசனம்- வாயில் இருந்து பேசுவிப்பது.

2. தானம்- கையில் இருந்து கொடுப்பது.

3. கமனம்- காலில் நின்று நடத்துவிக்கும்.

4. ஆனந்தம்- லிங்கம், யோனியில் நின்று கர்மானந்தம் விளைவிக்கும்.

5. விசர்ஜனம்- அபானத்தில் நின்று மலத்தை வெளியேற்றும்.

அறிவு

அறிவு அல்லது மனம். இது ஆகாயத்தின் அம்சம், உச்சியில் இருந்து சகலத்தையும் செயல்படுத்தும்.

தச நாடிகள்- 10

1. இடகலை- வலதுகால் பெருவிரலில் இருந்து அசைந்து இயங்கி ஏறி இடது நாசியை பற்றி நிற்கும்.

2. பிங்கலை- இடதுகால் பெருவிரலில் இருந்து அசைந்து இயங்கி ஏறி வலது நாசியை பற்றி நிற்கும்.

3. சுழுமுனை- குதத்தை பற்றி நின்று ஏறி பிராண வாயுவை சேர்ந்து தலையளவு முட்டி நிற்கும்.

4. சிங்குவை- உண்ணாக்கில் நின்று அன்ன சாரம் ஊறவும் பானத்தை விழுங்கவும் செய்யும்.

5. புருடன்- வலக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்.

6. காந்தாரி- இடக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்.

7. அத்தி- வலக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்.

8. குரு- இடக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்.

9. அலம்புடை- கண்டத்தில் இருந்து நாசியில் கசிந்து நீரை ஏற்ற இறக்க உபாயங்கள் செய்யும்.

10. சங்கினி- உபஸ்தத்தில் இருந்து ஆனந்தத் தில் மிஞ்ச வொட்டாமல் காக்கும்

(தொடரும்)

63819 58636

bala260424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe