Advertisment

உடலே உன் வீடு... புதிய வாஸ்து சாஸ்திரம்! (1 2)

/idhalgal/balajothidam/body-your-house-new-vastu-shastra-12-0

"சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய

சரநூல் மார்க்கம்

கோதறு வகார வித்தை

குருமுனி ஓது பாடல்

தீதிலாக் கக்கிடங்கள்

செப்பிய கன்ம காண்டம்

ஈதெலாம் கற்றுணர்ந் தோர்

இவர்களே வைத்தியராவர்.'

-சித்தர் நாடி நூல்

பொருள்: மருத்துவத்திலும், ஜோதிடத்திலும், சிறந்து விளங்க, மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, பரிகாரம் போன்றவற்றை கற்றுணரவேண்டும்.

அட்சய பாத்திரம்

அள்ள அள்ள குறையாமல் அமுதத்தைக் கொடுக்கும் தன்மை உடையது.

கற்பக விருட்சம்

இந்த மரத்தடியில் நின்றுகொண்டு எதை நினைத்தாலும் அது உடனே கிடைக்கும்.

காமதேனு

Advertisment

இந்த தெய்வீக பசு, நாம் விரும்பி கேட்கின்ற பொருட்களைத் தருகின்ற சக்தி படைத்து.

இந்த மூன்றும், நம் மனதைக் குறிக்கும் அடையாள சின

"சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய

சரநூல் மார்க்கம்

கோதறு வகார வித்தை

குருமுனி ஓது பாடல்

தீதிலாக் கக்கிடங்கள்

செப்பிய கன்ம காண்டம்

ஈதெலாம் கற்றுணர்ந் தோர்

இவர்களே வைத்தியராவர்.'

-சித்தர் நாடி நூல்

பொருள்: மருத்துவத்திலும், ஜோதிடத்திலும், சிறந்து விளங்க, மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, பரிகாரம் போன்றவற்றை கற்றுணரவேண்டும்.

அட்சய பாத்திரம்

அள்ள அள்ள குறையாமல் அமுதத்தைக் கொடுக்கும் தன்மை உடையது.

கற்பக விருட்சம்

இந்த மரத்தடியில் நின்றுகொண்டு எதை நினைத்தாலும் அது உடனே கிடைக்கும்.

காமதேனு

Advertisment

இந்த தெய்வீக பசு, நாம் விரும்பி கேட்கின்ற பொருட்களைத் தருகின்ற சக்தி படைத்து.

இந்த மூன்றும், நம் மனதைக் குறிக்கும் அடையாள சின்னங் கள். நம் மனம், நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும் சக்தி படைத்தது. பூதக் கண்ணாடியில் குவியும் சூரிய ஒளி, நெருப்பை உண்டாக்குவதுபோல், மனதை ஒரு நிலைப்படுத்தி, பிரார்த்தனை செய்தால், நாம் விரும்பிய வாழ்க்கை அமையும்.

உடலைப்பற்றியும் நம் மனதின் இயக்கத்தைப் பற்றியும் அறிய அடிப்படையான, 96 தத்துவங்களை முழுமையாக அறியவேண்டும்.

Advertisment

vv

தச வாயு விளக்கம்

பிராணன்: மூலாதாரத்தை சேர்ந்து மேல்நோக்கி இதயத்தில் நின்று நாசியில் சென்று திரும்பி அலையும்.

அபானன்: குதத்தை பற்றி நின்று ஜாடராக்கினியாய் உஷ்ணத்தை உண்டாக்கி, உண்ட உணவை ஜீரணிக்கும், வியானன்: உடல் முழுவதும் பரவி, களைப்பு தரும்.

சமானன்: தொப்புளில் நின்று ஜீரணித்த அன்ன பானாதிகளை உதிரமாக்கி ரத்த நாடி களின் வழியாக இழுத்துச் சென்று சமமாக பரவி தேகத்தை வளர்க்கும்.

உதானன்: கழுத்தில் நின்று குரலோசை தரும்.

நாகன்: வாயில் இருந்து வாந்தி செய்விக்கும்.

கூர்மன்: கண் இரப்பையை அசைக்கும்.

கிரிதரன்: மூக்கில் நின்று தும்மல் உண்டாக்கும்.

தேவதத்தன்: மார்பில் நின்று கொட்டாவி, விக்கல் உண்டாக்கும்.

தனஞ்செயன்: பிராணன் நீங்கின பிறகும் தங்கி, இறுதியில், உடலைவிட்டு நீங்குவான்.

ஆசயம் ஐந்து விளக்கம்

ஆமாசயம்: அன்னம், தண்ணீர் பருகுமிடம்

ஜலாசயம்: அன்னம், தண்ணீர் இறங்குமிடம்

மலாசயம்: மலம் சேருமிடம்

ஜலஞ்சயாசம்: சிறுநீர் சேருமிடம்

சுக்கிலாசயம்: விந்து நிறைந்து இருக்குமிடம்

கோசங்கள் ஐந்து விளக்கம்:

அன்னமய கோசம்: உடல் அழியாமல் காக்கும்.

பிராணமய கோசம்: பிராண வாயும் கர்மேந்திரியங்களும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்துடன் சேர்ந்து விணைபுரியும்.

மனோமய கோசம்: மலமும் கண்மேந்திரியமும் சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் சேர்ந்து செயல்படும்

விஞ்ஞானமய கோசம்: புத்தியும் பொறிகளும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் செயல்படும்

ஆனந்த மய கோசம்: காரண சரீரத்துக்கு ஆதாரமாக இருந்து மேற்கூறிய பிராண, மனோமய, விஞ்ஞானமய கோசத்துடன் சூட்சும சரீரம் நிலைத்து நிற்கும்

ஆதாரங்கள்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா.

மண்டலங்கள்: அக்னி

மண்டலம், ஆதித்த மண்டலம், சந்திர மண்டலம்.

மலங்கள்: ஆணவம், காமம், மாயா.

முப்பிணிகள்: வாதம், பித்தம், சிலேத்துமம்.

ஆசைகள்: பெண்ணாசை / ஆணாசை, புத்திர, புத்திரிமீது அதிக ஆசை, பொருள்கள்மீது அதிக ஆசை.

குணங்கள்: சாத்வீகம், ராஜஸ குணம், தாமச குணம்.

தீய குணங்கள்

காமம்: அதிக ஆசை கொள்ளல்.

குரோதம்: பகை கொள்ளல், அன்பில்லாமை.

லோபம்: பிறர்க்கு ஈயாதவர், கருமி.

மோகம்: பலவற்றிலும் ஆசைப்படுதல்.

மதம்: பிறரை மதியாதிருத்தல்.

மாச்சரியம்: மனதில் சதா விரோத எண்ணங்கள்.

இடும்பை: எல்லோரையும் உதாசீனப்படுத்துதல்.

அஸ்சூயை: பொறாமைக்குணம்.

மனதின் அவஸ்தைகள்

நினைவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு அடக்கம்.

மொத்தமாக 96 தத்துவங்கள். இவை அனைத்தையும் அறிந்தால், உடல், மனம், உயிரின் இயக்கத்தை புரிந்துகொள்ளலாம்.

(தொடரும்)

செல்: 63819 58636

தாந்திரீக பரிகாரம்! ஒரு நிலைக் கண்ணாடிக்குமுன், தீபம் முதலான மங்கலப் பொருட்களை வைத்து, தீபத்தின் ஒளியை, கண்ணாடியில் பார்த்து, பிரார்தனை செய்தால், மனம் அமைதியடையும்; எண்ணங்கள் நிறைவேறும்.

bala030524
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe