Advertisment

உடலே உன் வீடு... புதிய வாஸ்து சாஸ்திரம்! (11)

/idhalgal/balajothidam/body-your-house-new-vastu-shastra-11

"இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில்;

இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்;

இருக்கும் உடலில் இருந்தில ஆகில்;

இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.'

-திருமூலர்

பொருள்: தனஞ்செயன் என்ற வீங்கற் காற்றோடு, மற்ற ஒன்பது வாயுக்களும், இணந்திருக்கும் வரைதான், உடல், உயிருடன் வாழும்.

Advertisment

வீணையும், புல்லாங்குழலும், நம் உடலையும், உயிர் மூச்சையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இசைக் கருவிகள். வீணையின் ஏழு நரம்புகள், சப்த கிரகங்களைக் குறிப்பவை. வீணையின் அகன்ற பாகம் ராகுவையும், சிறுத்த பாகம் கேதுவையும் குறிக்கும். வீணையில் நான்கு பெரிய நரம்புகள் ஆண் கிரகங்களையும் மூன்று சிறிய நரம்புகள் பெண் கிரகங்களையும் குறிக்கும். முதுகு தண்

"இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில்;

இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்;

இருக்கும் உடலில் இருந்தில ஆகில்;

இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.'

-திருமூலர்

பொருள்: தனஞ்செயன் என்ற வீங்கற் காற்றோடு, மற்ற ஒன்பது வாயுக்களும், இணந்திருக்கும் வரைதான், உடல், உயிருடன் வாழும்.

Advertisment

வீணையும், புல்லாங்குழலும், நம் உடலையும், உயிர் மூச்சையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இசைக் கருவிகள். வீணையின் ஏழு நரம்புகள், சப்த கிரகங்களைக் குறிப்பவை. வீணையின் அகன்ற பாகம் ராகுவையும், சிறுத்த பாகம் கேதுவையும் குறிக்கும். வீணையில் நான்கு பெரிய நரம்புகள் ஆண் கிரகங்களையும் மூன்று சிறிய நரம்புகள் பெண் கிரகங்களையும் குறிக்கும். முதுகு தண்டிற்கு, வீனா தண்டு என்ற பெயருமுண்டு. புல்லாங் குழலில், மொத்தமாக ஒன்பது துளைகள் உண்டு. இவையே,நம் உடலின், நவ துவாரங்களைக் குறிக்கும். ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையே இசை. சரம் தான் (மூச்சு), ஸ்வரம். மூச்சுக் காற்றினால், தச நாடிகளையும் கட்டுப் படுத்தினால், நாம் இசைபட வாழலாம்.

மருத்துவ நாடிபோல் ஜோதிட நாடியையும் 72,000 வகை நாடிகளாக பரவி, பிறவிகளை வேறுபடுத்துகிறது. (மருத்துவ நாடிக்கும் ஜோதிட நாடிக்கும் உள்ள தொடர்பு இரகசியமாகத் தெரிந்தாலும், இவை வேதவிஞ்ஞானம் என்ற சரீரத்தின் இரண்டு பாகங்கள்.) ஜோதிடத்திலும் மருத்துவ நாடியடிப்படையில் நட்சத்திரங்கள் பிரிக்கப்படுகின்றன,

s

Advertisment

பார்சுவ (அ) வாத நாடி

திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

மத்தியா நாடி (அ) பித்த நாடி

பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை,

அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

சமான நாடி (அ) சிலேத்தும நாடி

கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

நாடி இலட்சணம்

வாத நாடி நட்சத்திரங்கள்:

பாதம்- 1 சர்ப நாடி

பாதம்- 2 மீன் நாடி

பாதம்- 3 அட்டை நாடி

பாதம்- 4 டோலா (தூளி) நாடி

பித்த நாடி நட்சத்திரங்கள்:

பாதம்- 1 மண்டூக நாடி (தவளை)

பாதம்- 2 காக நாடி

பாதம்- 3 கிளி நாடி

பாதம்- 4 மீன் குத்தி பறவை நாடி

சிலேத்தும நாடி நட்சத்திரங்கள்:

பாதம்- 1 மயில் நாடி

பாதம்- 2 ஹம்ச நாடி

பாதம்- 3 கஜ நாடி (யானை)

பாதம்- 4 குக்குட நாடி (கோழி)

இங்கு குறிப்பிட்ட நட்சத்திர பாதங்களில் பிறந்தவர் களின் மனதின் இயக்கமும், மிருக, பறவைகளின் குணம் போல் அமையும்.

பித்தம், வாதம், சிலேத்து மம் ஆகிய மூன்று தோஷங் களின் கலவையே, மனமும், உடலுமாக அமைகிறது. இவையே ரஜோ, தமோ, சத்வ குணங்களுக்கு காரண மாகிறது.

பித்த தோஷ சமநிலையின்மையால் பாதிப்பு உடல்- உஷ்ண நோய்கள்.

மனம்- கோபம், எரிச்சல், பொறாமை, பேராசை.

வாத தோஷ சமநிலையின்மையால் பாதிப்பு உடல்- வறட்சி, உடல் இயக்கத்தில் பாதிப்பு.

மனம்- தூக்கமின்மை, பதட்டம், குழப்பம்.

சிலேஷ்ம தோஷ சமநிலையின்மையால் பாதிப்பு உடல்- சுவாசக் கோளாறு.

மனம்- சோம்பல், மனச்சோர்வு.

உடலும், மனமும் இணைந்ததே வாழ்க்கை.

மனதே, உடலை இயக்குகிறது.இதனால்தான் சித்தர்கள் மருத்துவத்தையும், ஜோதிடத் தையும் ஒன்றாகவே வளர்த்தார்கள். சித்த மருத்துவர்கள் ஜோதிடம் அறிந்தவர்களாக வும், ஜோதிடர்கள் மருத்துவம் தெரிந்தவர் களாகவும் இருந்தார்கள்.

மருத்துவ நாடியையும், ஜோதிட நாடி யையும் ஒப்பு நோக்கினால் இரண்டும் 72,000 என்ற எண்ணிக்கையில் உள்ளன- மருத்துவ நாடி (72,000) ஜோதிட நாடிகள் (72,000 புள்ளிகள்- பல கோணங்கள்- பல கேந்திரங் கள்- பல அம்சங்கள்) மூச்சுக்காற்று ஒரு நாளைக்கு 21,600- லக்னம் ஒரு நாளைக்கு 21,600 கலைகளை சுற்றிவரும் (360பாகை ஷ் 60கலை= 21,600 கலைகள்) உத்தம நாடிகளான இடகலை (சந்திரன்) பிங்கலை (சூரியன்) சுழுமுனை(லக்னம்) மூன் றும் சேர்ந்தாலே, ஜோதிடத்தின் முப்பரிமாண மும் கிடைக்கும்.

bala190424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe