Advertisment

உடலே உன் வீடு... புதிய வாஸ்து சாஸ்திரம்! (10)

/idhalgal/balajothidam/body-your-house-new-vastu-shastra-10

"ஐவர்க்கு நாயகன் அவ் வூர் தலைமகன்

உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு

மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்

பொய்யரைத் துள்ளி விழுத்திடும் தானே.'

-திருமூலர்

(மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து புலன்களுக்கும் மனமே தலைவர். அவருக்கு சந்திர கலை, சூரிய கலை என்ற இரண்டு குதிரைகள் உள்ளன.

Advertisment

அந்த குதிரைகளை வசப்படுத்தி வாரி பிடிக்கும் தந்திரம் அறிந்தால்தான் தலைவர் வெற்றிபெறுவார்.)

Advertisment

நம் புராணங்கள், சாத்திரங்கள் எல்லாம் உடல், மனம், உயிர் என்ற மூன்றையும் சார்ந்த வாழ்வியல் கருத்துகளையே மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளன. மகாபாரதத்தில் மனமே தி

"ஐவர்க்கு நாயகன் அவ் வூர் தலைமகன்

உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு

மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்

பொய்யரைத் துள்ளி விழுத்திடும் தானே.'

-திருமூலர்

(மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து புலன்களுக்கும் மனமே தலைவர். அவருக்கு சந்திர கலை, சூரிய கலை என்ற இரண்டு குதிரைகள் உள்ளன.

Advertisment

அந்த குதிரைகளை வசப்படுத்தி வாரி பிடிக்கும் தந்திரம் அறிந்தால்தான் தலைவர் வெற்றிபெறுவார்.)

Advertisment

நம் புராணங்கள், சாத்திரங்கள் எல்லாம் உடல், மனம், உயிர் என்ற மூன்றையும் சார்ந்த வாழ்வியல் கருத்துகளையே மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளன. மகாபாரதத்தில் மனமே திரௌபதியாகவும், பஞ்ச பாண்டவர்களே ஐம்புலன்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதை உற்று நோக்கவேண்டும்.

தேங்காயின் மூன்று கண்கள் போலவும், தமிழ் மொழியின் "ஆய்த எழுத்து' போலவும் அமைந்துள்ள, சந்திர கலை, சூரிய கலை மற்றும் சுழு முனையே. சூரிய, சந்திர, அக்னியாக வர்ணிக்கப்படுகிறார்கள். புருவ மத்தியில் மலைகளுக்கு நடுவே எழும் கதிரவன் போன்ற சுழு முனையே சிவபெருமானின் நெற்றிக்கண்.

சைவர்களின் திரு நீரும், வைணவர்களின் திரு மண்ணும், ஆன்மிக சின்னமாகிய முப்புரி நூலும், சூரிய கலை, சந்திர கலை, சுழு முனை சுவாசத்தைக் குறிக்கக்கூடியவை. முப்புரிநூல் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வழியே உடலின் குறுக்கே அணியும் மூன்று பிரிவுகளைக்கொண்ட மாலையாகும். எல்லா மனிதரும் தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் தீர்க்கவே பிறவி எடுக்கிறார்கள்.

vv

1. சந்திர கலை: வழக்கமான முறையில் இடது தோளிலிருந்து வலது கைப்புறம் அணிதல்.... கடவுள் வழிபாடு (தேவ கடன்).

2. சுழு முனை: கழுத்து வழியே நெஞ்சின்மீது மாலையாக அணிதல்- காண்ட ரிஷி, மகான் வழிபாடு (ரிஷி கடன்).

3. சூரிய கலை: வலது தோளிலிருந்து இடது கைப்புறம் அணிதல்லி முன்னோர் வழிபாடு (பித்ரு கடன்).

சர ஜோதிடத்தில் பஞ்சபூத தத்துவம் பஞ்சபூத தத்துவத்தை அறிந்தால் மட்டுமே, மருத்துவ ஜோதிடத் தில், நோயின் காரணத் தையும், தாக்கத்தையும் கணிக்கமுடியும்.

* எலும்பு, தோல், நரம்பு, தசை, முடி- நில தத்துவம்.

* ரத்தம், சிறுநீர், மூளை, கொழுப்பு ஆகியன நீரின் தன்மை.

* ஓடுதல், நடத்தல், நிற்பது, உட்காருவது, படுப்பது போன்ற இயக்கங்களும், தச வாயுக்களும் காற் றின் கூறினை கொண்டவை.

* உடலின் இயக்கங்களுக்கு உதவும், ஜாதராக்னி (செரிமானம்), மனதை இயக்கும், சித்தாக்னி (அச்சம், கோபம், சோம்பல்) முதலியவை நெருப்பின் கூறாகும்.

v பிராணன், அபாணன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவ தத்தன், தனஞ்செயன் ஆகிய பத்து வாயுக்களும் சேர்ந்ததே வாயு தத்துவம்.

* உயிரும், ஆன்மாவும், ஆகாய தத்துவம். சர ஜோதிடத்தில் ரோக பிரசன்னம்- நோய் தீரும் காலத்தை அறிய, சர கர்த்தாவிற்கு (ஜோதிடர்) பிரசன்ன காலத்தில் ஓடும், பஞ்சபூத தத்துவத்தைக்கொண்டு துல்லியமாக பலன் கூறலாம்.

சூரிய கலையில்

* பிருத்வி (நில தத்துவம்) ஓடினால்- நோய் தீராது.

* அப்பு (நீர்)- ஒரு வாரத்தில் நோய் தீரும்

* வாயு- நோயின் கடுமை வேகமாக பரவும்.

* தேயு- (நெருப்பு)- மூன்று நாட்களில் குணமாகும்.

* ஆகாயம்- அடுத்த நாளே குணமாகும்.

சந்திர கலையில்

* பிருத்வி- நோய் தீர நீண்ட நாட்களாகும்.

* அப்பு- ஒரு பட்சத்தில் (15 நாள்)- நோய் தீரும்

* வாயு- நோயினால் ஆயுளுக்கு பாதகம்.

* தேயு- (நெருப்பு)- அறுவை சிகிச்சையால் குணமாகும்.

* ஆகாயம்- நோயினால் உடலுறுப்பை இழப்பார்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala120424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe