Advertisment

சனி தோஷம் தீர்க்கும் சப்தரிஷிகளின் அருள்வாக்கு! -மணிமொழி சப்தரிஷி நாடி ஜோதிடர்

/idhalgal/balajothidam/blessings-sabtarishis-who-solve-shani-dosha-manimozhi-saptarishi-nadi

வகிரகங்கள் அனைத்தும் நன்மை- தீமை என இரண்டு பலன்களையும் தரும். ஆனால் இன்றையநாளில் சனி கிரகத்தை மட்டும் கண்டுதான் பலரும் அஞ்சுகின்றனர். கோட்சார நிலையில், ஜாதகத்திலுள்ள 12 ராசிகளையும் சனிபகவான் ஒருசுற்று முடிக்க முப்பது வருடங்கள் ஆகின்றன. சப்தரிஷி நாடியில் கூறப்பட்டுள்ள, சனி தீமையான பலன்களைத் தரும் காலநிலையை அறிவோம்.

சந்திரன் இருக்கும் ராசிக்கு 12, 1, 2-ஆவது ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியாகவும், 4-ஆவது ராசியில் சஞ்சாரிக்கும் காலத்தை அர்த்தாஷ்டமச் சனி யென்றும், 8-ஆமிட ராசிக்கு வரும்போது அஷ்டமச்சனி காலம் என்றும் கூறப்படுகிறது. இந்த ராசிகளில் சனி சஞ்சாரம் செய்யும் காலத்தில் கெடுபலன்களை அதிகமாகச் செய்யும்.

ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு 3, 5, 10, 15, 19, 25, 27-ஆவது நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்யும்போதும், சனி அஸ்தங்கமாகும் காலத்திலும், வக்ரநிலையிலும் அசுபப் பலனைத் தரும்.

Advertisment

ss

பிறப்பு ஜாதகத்தில்

வகிரகங்கள் அனைத்தும் நன்மை- தீமை என இரண்டு பலன்களையும் தரும். ஆனால் இன்றையநாளில் சனி கிரகத்தை மட்டும் கண்டுதான் பலரும் அஞ்சுகின்றனர். கோட்சார நிலையில், ஜாதகத்திலுள்ள 12 ராசிகளையும் சனிபகவான் ஒருசுற்று முடிக்க முப்பது வருடங்கள் ஆகின்றன. சப்தரிஷி நாடியில் கூறப்பட்டுள்ள, சனி தீமையான பலன்களைத் தரும் காலநிலையை அறிவோம்.

சந்திரன் இருக்கும் ராசிக்கு 12, 1, 2-ஆவது ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியாகவும், 4-ஆவது ராசியில் சஞ்சாரிக்கும் காலத்தை அர்த்தாஷ்டமச் சனி யென்றும், 8-ஆமிட ராசிக்கு வரும்போது அஷ்டமச்சனி காலம் என்றும் கூறப்படுகிறது. இந்த ராசிகளில் சனி சஞ்சாரம் செய்யும் காலத்தில் கெடுபலன்களை அதிகமாகச் செய்யும்.

ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு 3, 5, 10, 15, 19, 25, 27-ஆவது நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்யும்போதும், சனி அஸ்தங்கமாகும் காலத்திலும், வக்ரநிலையிலும் அசுபப் பலனைத் தரும்.

Advertisment

ss

பிறப்பு ஜாதகத்தில் 1, 5, 9, 2, 7, 8, 12-ஆவது ராசிகளில் சனியுடன் சந்திரன், செவ்வாய், ராகு- கேது கிரகங்கள் சேர்ந்திருந்தாலும் அல்லது பார்வை சம்பந்தம் பெற்றிருந்தாலும் ஏழரை வருடங்களுக்கு ஒருமுறை அதிக கஷ்டங்களை அனுபவிக்கச் செய்யும்.

54 வயதுவரை, தன் வருங்கால வாழ்க்கையைப்பற்றி சிந்திக்க விடாமல், பணம், சொத்து சம்பாதிக்கமுடியாமல், நன்மைகளை அடையமுடியாமல் தடுத்து, விபரீதமாக கெடுபலன்களை அனுபவிக்கச் செய்யும்.

Advertisment

சனி கிரகம் தனது பகைவீடு, நீசவீடு, ஜென்ம லக்னத்திற்கு கேந்திர, திரிகோண ராசிகளில் இருந்தால், வக்ரகதியில் தான் இருந்த ராசிக்குப் பின்னாலுள்ள ராசிக்குச் செல்லுதல் போன்ற காலங்களில் துன்பம், தடைகளைத் தரும்.

ஒருவருக்கு பிறப்பிலேயே சனி கெடுதல் செய்யும் நிலையிலிருந்தால், தொழில் தடை, முடக்கம், குடும்பம், உறவுகளின் ஆதரவின்மை, சொத்து, பணம் இழப்பு, அடிமை சேவகம், பிறருக்காக உழைத்தல், சோம்பேறித்தனம், மந்தபுத்தி, அவமானம், தீயோர் நட்பு, ஏமாற்றப்படுதல், அலைச்சல், அகால போஜனம், விபத்து, நரம்பு, எலும்பு பாதிப்பு, கடன்தொல்லை போன்ற பலன்களை உண்டாக்கும். வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருக்கும். போராட்டமில்லாமல் எதையும் அடையமுடியாது.

ஒருவரின் வாழ்வில் ஏழரைச்சனி மூன்றுமுறை வரும். இதில் முதல் சுற்றில் முப்பது வயதுவரை ஜாதகருக்கு சிரமம், கண்டங்கள், கஷ்டங்கள் உண்டாகும். ஆனால் ஜாதகரின் தந்தைக்கு நன்மைகள் உண்டாகும்.

இரண்டாவது சுற்றில் முப்பது வயதிற்குமேல் ஜாதகருக்கு பல நன்மைகளைத் தரும். ஆனால் தந்தைக்கும், பெற்ற மகனுக்கும் கஷ்டங்களைத் தந்து அனுபவிக்கச் செய்யும்.

மூன்றாவது சுற்று அறுபது வயதிற்குமேல், ஜாதகருக்கு நோய், கண்டம், விரயம், கஷ்டம் போன்றவற்றைத் தரும்.

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவற்றில் சனி இருந்தால், ஜாதகர் தான் பிறந்த ஊரில் மரணமடையாமல் வேறு ஊர், தேசங்களில் மரணடைவார்.

ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளில் சனி இருந்தால் ஜாதகர் தன் சொந்த ஊரில் மரணடைவார்.

உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் சனி இருந்தால் மருத்துவமனை, கோவில் தலங்கள், சத்திரம் போன்ற நூதனமான இடத்தில் மரணமடைவார்.

சனி கெடுதலான இடங்களில் இருந்து தீமையான பலனகளைத் தரும் காலங்களில், பாதிப்பினைத் தடுத்துக்கொள்ள, சனிக்கு பிரீதி தரும் எளிமையான, ஆனால் பலமுள்ள பரிகாரங்களைக் கூறியுள்ளார்கள். இந்தப் பரிகாரங்களைக் கோவில்களில் செய்யக்கூடாது. நமக்கு நாமே செய்துகொள்ளும் சுய பரிகாரங்களாகும்.

சனிக்குப் பிடித்தமான கருப்பு உளுந்து, வால்மிளகு, நவதானியங்கள், நீலநிற சங்குப்பூக்கள் அல்லது குவளை மலர்களை நீரில் கலந்து குளித்துவரவேண்டும்.

சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் அல்லது தைலம் தேய்த்துக் குளிக்கவேண்டும்.

சனி தீமை தரும் காலங்களில் நோய்த் தாக்கம் உண்டானால், நெய், நல்லெண் ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து ஒரு இரும்புக் கரண்டியில் ஊற்றி, சிவப்பு, வெள்ளை, கருப்புநிற நூல்களால் திரிசெய்து போட்டு, நோயாளி படுத்திருக்கும் அறையின் மேற்கு திசைப் பக்கம் சனி தீபமேற்றி வந்தால், நோயின் தாக்கம் குறையும்.

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் குரு, சுக்கிரன், புதன் இருந்தால் சனி பாதிப்பு தராமல் நன்மை களை மட்டுமே தந்து வாழ்வில் உயர்வடை யச் செய்யும். ஜாதகத்திலேயே கிரகப் பரிகாரம் பெற்று நன்மைகளைத் தரும்.

சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் சந்திரன், ராகு- கேது இருந் தால், அவர் வெளிநாடு, வெளிமாநிலம் சென்று பணம் சம்பாதிப்பார்.

நவகிரகங்கள் தரும் தீமையான விதிப்பலனைத் தன் மதியால் அறிந்து, நமது அறிவு, உழைப்பு, முயற்சி சரியான பிரார்த்தனை, நடைமுறை செயல்மூலம் தடுத்து, நல்லகதியை வாழ்வில் அடைய வேண்டும். விதியை மதியால் அறிந்து வாழ்ந்து நல்ல கதியை நிர்ணயித்துக் கொள்ளுபவரே ஞானமுள்ளவர் ஆவார் என்பதே ரிஷிகள் வாக்கு.

செல்: 93847 66742

bala151124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe