சென்ற இதழ் தொடர்ச்சி...
ஜீவநாடியைத் தொடர்ந்து படிக்கத் தொடங்கினேன்.
நாடியில் அகத்தியர், ""மகனே, இதுவரை உன் கடந்தகால வாழ்க்கை யைப் பற்றிக் கூறினேன். அதுபோன்று இதுவரையில் வாழ்ந்திருந்தால், இனி நான் சொல்வதுபோல் நடைமுறையில் கடைப்பிடித்து வாழத்தொடங்கி, இனிவரும் எதிர்கால வாழ்வில் உன் முற்பிறவி கர்மவினைகளைத் தடுத்து, அமைதியும் ஆனந்தமும் அடைவாய்.
அகத்தியர் மைந்தனே. உனது இப்பிறவியின் சூட்சும ரகசியத்தைக் கூறுகிறேன். முதலில் அதனை அறிந்து கொள். நீ பிறவிச்சித்தன். எங்கள் சித்தர்களின் அருளைப் பெற்றவன். நீ இப்பிறவியில் எங்கள் பாதுகாப்பில் வாழ்ந்துவருகிறாய். இதுவரையில் உயர்வு, தாழ்வு, சிரமங்கள் என அனைத் தையும் உன்னை அனுபவிக்கச் செய்து, உன் பூர்வஜென்ம வினைகளைத் தீர்க்க வைத்து, உன் உடனிருந்து காப்பாற்றி வருகிறோம்.
மகனே, இந்தப் பிறவியே உனக்குக் கடைசிப்பிறவி. இனி இந்த பூமியில் உனக்குப் பிறவியில்லை. நீ மோட்சப்பிறவி மாந்தன். இப்பிறவியில் உன் உடலை விட்டு உயிர் பிரிந்தபின், உன் உயிர் காற்று, வான்வெளியில் காற்று மண்டலத்தில் கலந்துவிடும். ஆனால் தன் கர்மவினைகளைத் தீர்த்து முடிக்கவேண்டிய மனிதர் களின் உயிர், காற்று மண்டலத்திலுள்ள காற்றுடன் கலக்காது. தன் வம்ச வாரிசுகள் வாழும் வீட்டையே சுற்றிவந்து கொண்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள். இப்பிறவியில் நீ மோட்ச மடைவதற்கான காரணத்தைக் கூறுகிறேன்.
ஒரு வம்சம் வளர்ந்து விருத்தியாவது, அந்த வம்ச முன்னோர்களின் ஆத்மாவால்தான். அவரவர் வம்ச முன்னோர்கள் தங்களின் முற்பிறவிகளில், தன் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் செய்த பாவ- சாப- புண்ணியப் பதிவுகளை அனுபவித்துத் தீர்த்துமுடிக்கவே, அவரவர் வம்ச வாரிசுகளின் விந்துமூலம் அந்த குடும்பத்திலேயே பிறந்து வாழ்ந்து, நன்மை- தீமைகளை அனுபவித்து, அடுத்தடுத்த பிறவிகளில் தீர்த்து முடிக்கிறார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவன் பாட்ட னாகப் பிறந்து செய்த வினைகளை, மறுபடியும் அதேவம்சத்தில் பேரனாகப் பிறந்து தீர்த்து முடிப்பான்.
உனது முற்பி

உனது முற்பிறவியில் சிவன் பெயரும், பெருமாள் பெயரும் இணைந்த ஒரு பாட்ட னாகப் பிறந்திருந்தாய். இதுவரை இந்த பூமியில் அவரின் ஆத்மா, பல பிறவிகள் பிறந்து, ஒவ்வொரு பிறவியிலும் தன் முற்பிறவி கர்மவினைகளை, பாவ- சாப- புண்ணியப் பதிவுகளை கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்த்து முடித்து, மீதமுள்ள வினைப்பதிவுகளை முற்றிலும் தீர்த்து முடிக்க எட்டாவது மோட்சப் பிறவியாக இப்பிறவியில் உன் ஆத்மா பிறந்துள்ளது. இதற்கும் உண்மையான காரணத்தைக் கூறுகிறேன்.
உன்மூலம் வம்சம் வளர, உன் முன்னோர் களும் நீயும் மறுபடியும் இந்த பூமியில் பிறக்கக் காரணமாக இருக்கும் வாரிசு இந்தப் பிறவியில் உனக்குக் கிடையாது. அதனால் உன் விந்து, ரத்தம் இந்த பூமியில் இல்லாமல் போனது.
அதனால் நீ மறுபடியும் இந்த பூமியில் பிறக்க வழியில்லாமல் போனது. இதுவே மோட்சப் பிறவியின் விதி, நியதி. இதனை எந்த சக்தியாலும் மாற்றியமைக்கமுடியாது.
பதினெட்டுச் சித்தர்களாகிய நாங்கள், பூமியில் மனிதனாகப் பிறந்து குண்டலினி யோக சித்தியடைந்து, மரணத்தை வென்று, பிறப்பினைத் தடுத்துக்கொண்டு, பிறவியில்லா நிலையை அடைந்தோம். எங்களின் அருள் பெற்ற நீ மரணமடைவாய்; ஆனால் மறுபடியும் இந்த பூமியில் பிறக்கமாட்டாய்.
அகத்தியன் குமாரனே. உனக்கு மட்டும் மோட்சமில்லை; ஒரு சித்தர் பிறவியை தன் கர்ப்பத்திலும் விந்துவிலும் தாங்கி வளர்த்த உன் தாய்க்கும் தந்தைக்கும் மோட்சம்; உன்னை வளர்த்துக் காப்பாற்றிய வளர்ப்புத் தந்தைக்கும் தாய்க்கும் மோட்சம்; உன் மூத்த சகோதரர்களுக்கும் மோட்சம்; உன்னை மணம்புரிந்து வாழ்ந்து மறைந்த உன் மனைவிக்கும் மோட்சம். இவர்களின் ஆத்மாக்கள் உன்னால் பிறவியை முடித்து மோட்சமடைந்தன.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதார மாகும். பூமியில் அவரின் அவதார நோக்கம் முடிந்தது. அதற்குப்பின் அவதாரப் பிறப் பில்லை. அந்த ஆத்மா பூமியில் பிறக்கவில்லை.
இதுபோன்றே உன் ஆத்மா மறுபடியும் பூமியில் பிறக்காது. இப்பிறவி உனக்கு கண்ணனின் அவதாரப் பிறப்பாகும்.
இனி இந்த பூமியில் உனக்குப் பிறவியில்லை யென்பதால், நீ தீர்த்துமுடிக்க வேண்டிய முற்பிறவி கர்மவினைகள் அனைத்தையும் மீதமில்லாமல் அனுபவித்துத் தீர்த்து முடிக்க வேண்டும். அதற்கு நாங்கள் பதினெட்டுப் பேரும் உனக்குப் பக்கத்துணையாக இருப் போம்.
மைந்தனே, இப்பிறவியில் நீ ஆசைப் பட்டபடி, அடுத்தவர்கள் கூறும் நன்மை- தீமையான பலன்கள் எதுவும் நடக்காது. உன் கர்மவினைகளையும், தீர்க்கும் வழிமுறைகளையும் சித்தர்கள் நாங்கள் மட்டுமே அறிவோம். உன் வினைதீர்க்கும் செயல்களை மட்டும் செய்யவைத்து, ஒவ்வொரு வினையாக உன்னையே தீர்த்துமுடிக்கச் செய்வோம். எங்கள் எண்ணப்படிதான் உன் வாழ்வின் நிகழ்வுகள் அமையுமே தவிர, உன் ஆசைப் படி- திட்டப்படி எதுவும் நடைபெறாது.
உன் வாழ்க்கையில் நீ செய்யும் செயல் களை, அறியாமையில் வாழும் மக்களும், சடங்கு, சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து நம்பி வாழும் மக்களும் தவறென்றுகூட கூறலாம். அதை நீ நம்பவேண்டாம். இந்தப் பிறவியில் உனக்கு எதுவும் நல்லதும் கிடையாது; கெட்டதும் கிடையாது. இப்பிறவி வாழ்வில் உன்னைத்தேடி வருவதெல்லாம், சென்ற பிறவியில் உனக் குப்பட்ட கடனைத் தீர்க்கவருவது. இது உனது முற்பிறவி புண்ணியக் கணக்கு. உன்னைவிட்டுப் போவதெல்லாம், நீ பட்ட கடனைப் பெற்றுக்கொண்டு, கடன் தீர்ந்தபின்பு உன்னைவிட்டு விலகிப்போவது. இது நீ தீர்க்கவேண்டிய பூர்வஜென்மக் கடன். வந்ததையும் போனதையும் நினைத்துக் கலங்காதே. அமைதியாக இருந்து, அடுத்த செயலை செய்யத் தொடங்கு.
முற்பிறவிகளில் நீ செய்த பாவங் களுக்கான பலனை, உன் இளம்வயதில் அனுப விக்கவேண்டியதை அனுபவிக்கமுடியாமல் இழந்து தீர்த்து முடித்தாய். பருவ வயதிற்கு மேல் பணம், பொருள், பதவி, உறவு என எல்லாம் இருந்தும், ஒன்றுமே இல்லாதது போல் வாழ்ந்துவருகிறாய். மனதில் கவலைகொள்ளாதே. காரணமில்லாமல் எந்தவொரு காரியமும் இப்பூமியில் இல்லையென்பதை மட்டும் புரிந்துகொள்.
இந்தப் பிறவியில் நீ எதைச் செய்தாலும் அதில் பாவமும் கிடையாது, புண்ணியமும் கிடையாது. ஒரு வினைக்கடன் தீர்ந்ததென்று நிம்மதிகொள். இப்பிறவியில் நீ செய்யும் செயல்களின் வெற்றியையும், நன்மைகளையும் அடைய எப்படி செயல்படவேண்டும் என்று கூறுகிறேன்.
அகத்தியன் யான் உனக்கு அறிவுரைகள் கூறப்போவதில்லை. சித்தர்கள் நாங்கள் யாருக்கும் அறிவுரையோ, ஆன்மிகக் கருத்துகளையோ கூறுவதில்லை. அது எங்கள் வேலையுமில்லை. நாங்கள் யாருக்கு அருள்புரிய வேண்டுமோ அவர்களைத் தேடிச்செல்வோம். அல்லது அவர்களை எங்களைத் தேடிவரச் செய்து, அவர்களின் பூர்வஜென்ம கர்மவினைகளைத் தீர்த்து முடிக்கவும், செயல்களில் வெற்றி, லாபம் அடையத்தக்க வழிமுறைகளையும், அவர் களின் உடல், உயிர், ஆன்மா பற்றிய உண்மை களையும் கூறி தெளிவுபடுத்தி, அவர்களின் கர்மவினைகளை அவர்களையே தீர்த்து முடிக்கச் செய்வோம். நான் கூறுவதை அறிவுரையாகக் கொள்ளாதே. வாழ்வின் வழிமுறையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவா. நன்மைகளை மட்டுமே அடைவாய்.
இல்லறம்
அகத்தியர் மைந்தனே, இல்லறம், குடும்ப வாழ்க்கை என்பது அவரவர் பூர்வஜென்ம கர்மவினைப்படி நிர்ணயிக்கப்பட்டது. ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்தாலே அது இல்லறம். உன் வாழ்வில் பெண்களின் தொடர்பு, சம்பந்தம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதனைத் தவிர்க்கமுடியாது. பல பெண்களை உன் வாழ்வில் சந்திக்கநேரும். மனைவியைத் தவிர வேறு பெண்கள் உறவு உண்டாகும் அல்லது இருதாரம் அமையும். இதனைத் தடுக்க முடியாது.
முற்பிறவியில் மனைவியாக யார் இருந்தாளோ, அவளை மணந்து, அவளுக்குச் செய்யவேண்டியதைச் செய்து, அவளுக்கு மோட்சத்தை அளித்து, அந்த ஆத்மா சாந்திபெறச் செய்துவிட்டாய். இப்போது அடுத்து ஒரு பெண்ணிற்குச் செய்யவேண்டிய பூர்வவினைக் கடனைச் செய்து முடிக்க வேண்டும். அதனையும் கூறுகிறேன்.
முற்பிறவியில் நீ தொழில் செய்யச் சென்ற இடத்தில், ஒரு இளம் விதவைப் பெண்ணிடம் பழக்கம் கொண்டு வாழ்ந்துவந்தாய். அவளையும் காப்பாற்றினாய். கட்டிய மனை வியைக்கூட கவனியாமல் அவளிடம் அன்பு செலுத்தி வாழ்ந்தாய். அவளிடமும், அவள் குடும்பத்தாரிடமும் அன்பு கொண்டு காப்பாற்றி, அந்த குடும்பத்தினருக்கு நன்மை களைச் செய்தாய். அவளும் உன்னையே கணவனாக ஏற்று வாழ்ந்தாள். சென்ற பிறவியில் நீ மடிந்தபிறகு அவள் உன்னையே நினைத்துத் தன் வாழ்வை முடித்தாள்.
அவளையும் இப்பிறவியில் நீ சந்தித்து வாழ்ந்து முடிக்கவேண்டும் என்பது உன் விதிக்கடன்.
அந்தப் பெண் கிழக்கு அல்லது தெற்கு சார்ந்த திசையிலிருந்து வருவாள். அவளுக்கு குழந்தையே இல்லாமல் இருக்கலாம். அல்லது பெண் குழந்தைகள் மட்டும் இருக்கலாம். அவளும் இப்பிறவியில் உன்னுடன் இணைந்து வாழ்ந்து தன் பிறவியைத் தீர்த்து முடிக்கப் பிறந்தவள். அவளை நீ அறிந்து இணைந்தவுடன், உன் அடுத்த இல்லற வாழ்க்கை இனிதே ஆரம்பமாகும். புதுவாழ்வும் புனல் சுகமும் கிட்டும். அவள் கடனையும் தீர்த்து முடித்துவிடு.
ராமவதாரத்தில் ராமனுக்கு சீதை மட்டுமே மனைவியாக இருந்தாள். ராமன் ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தான். ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணருக்கு ருக்மணியைத் தவிர, மித்திரவித்தை, சத்தியை, ஜாம்பவதி, ரோகிணி, சுசீலை, சத்தியபாமை, லக்ஷ்மணை என மேலும் ஏழு மனைவியர் இருந்தார்கள். இந்த ஏழு மனைவிகளைத் தவிர கிருஷ்ணருக்கு பதினாறாயிரம் பத்தினிகள் உண்டு என்று கிருஷ்ணாவதாரக் கதையில் கூறப்பட்டுள்ளது.
உன் பிறவியும் கிருஷ்ண ரைப்போன்ற பிறவி என்ப தால், பெண்கள் உன்னிடம் விரும்பிப் பழகுவார்கள். இவையெல்லாம் விதிப்படி நிர்ணயிக்கப்பட்டது.
அதற்கு ஒரு முன்வினைக் காரணம் உண்டு என்பதைப் புரிந்துகொண்டால் போதும்; மனபயம், குழப்பம், கலக்கமெல்லாம் மறைந்து விடும்.''
-இதுபோன்று இவரது எதிர்காலச் செயல்களில் வெற்றிபெறும் வழிமுறைகளையும், நோய்களைத் தீர்க்கும் வழிமுறைகளையும், முற்பிறவி பாவம்- சாபம் நீங்க முறையான வழிபாட்டு முறைகளையும் கூறி, இவரின் வருங்கால வாழ்வு மகிழ்ச்சியாக அமைய ஆசி கூறி அகத்தியர் ஜீவநாடி ஓலையிலிருந்து மறைந்தார்.
ஜீவநாடி படிக்க வந்தவர், இவ்வாறு பலன் கூறியவுடன், தன் பிறப்பு ஜாதகத்தினை எடுத்துக்கொடுத்தார். சித்தர்கள் கூறிய தமிழ்முறை ஜோதிட முறையில் ஆய்வு செய்ததில், நாடியில் அகத்தியர் கூறிய பலன்களுக்கு ஒப்பவே அவரின் பிறப்பு ஜாதகத்திலும் கிரகங்கள் அமைந்திருந்தன. அவரின் பிறப்பு ஜாதகமும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
செல்: 99441 13267