Advertisment

பில்லி, சூனியம், ஏவல் அகற்றும் எந்திர வழிபாடு!-பேட்டைநாதன்

/idhalgal/balajothidam/billy-witchcraft-eel

ம்சத்தில் அல்லது ஒருவரது முற்பிறவிகளில் நிகழ்ந்த பெண் சாபம், சகோதர சாபம், பாமர சாப தோஷம் ஆகிய மூன்று விதமான தோஷங்களில், ஏதாவது ஒன்றை கணவன்- மனைவி, பிள்ளைகளில் ஒருவர் அடைந்திருந்தாலும், அந்த குடும்பம் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை பாதிப்புகளை அடையும்.

Advertisment

பெண்களுக்கு இழைக் கப்படும் பல்வேறு கொடுமை களால், அவர்கள் வயிறெரிந்து விடும் சாபம் கடுமையான பாதிப்பைத் தரும்.

aa

வம்ச முன்னோர்கள் தேடிவைத்த சொத்தில், தன் சகோதர- சகோதரி களுக்கு முறையாகத் தரவேண்டியதைப் பிரித்துக்கொடுக்காமல், அவர்களை ஏமாற்றி தான் மட்டுமே வைத்துக் கொண்டு, அவர்கள் குடும் பத்தை அன்னம், துணிக்கு அலையவிட்டு சிரமப்படச் செய்த பாவம்.

Advertisment

குடும்பத்தில் பொதுச் சொத்துகளை நிர்வாகம் செய்து, அதில்வந்த வருமா னத்தை பொய்க்கணக்கு எழுதி, தனது தாய், தந்தை, சகோதர, சகோதரிகளை, குடும்பத்தாரை ஏமாற்றி, தானும், தன் மனைவி, குழந்தைகள் மட்டுமே அனுபவித்த பாவம்.

தன் குடும்பக் குலதெய்வக் கோவில் சொத்துகளை நிர்வகித்து, அதன் பராமரிப்புப்பணி, உற்சவம், விழா

ம்சத்தில் அல்லது ஒருவரது முற்பிறவிகளில் நிகழ்ந்த பெண் சாபம், சகோதர சாபம், பாமர சாப தோஷம் ஆகிய மூன்று விதமான தோஷங்களில், ஏதாவது ஒன்றை கணவன்- மனைவி, பிள்ளைகளில் ஒருவர் அடைந்திருந்தாலும், அந்த குடும்பம் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை பாதிப்புகளை அடையும்.

Advertisment

பெண்களுக்கு இழைக் கப்படும் பல்வேறு கொடுமை களால், அவர்கள் வயிறெரிந்து விடும் சாபம் கடுமையான பாதிப்பைத் தரும்.

aa

வம்ச முன்னோர்கள் தேடிவைத்த சொத்தில், தன் சகோதர- சகோதரி களுக்கு முறையாகத் தரவேண்டியதைப் பிரித்துக்கொடுக்காமல், அவர்களை ஏமாற்றி தான் மட்டுமே வைத்துக் கொண்டு, அவர்கள் குடும் பத்தை அன்னம், துணிக்கு அலையவிட்டு சிரமப்படச் செய்த பாவம்.

Advertisment

குடும்பத்தில் பொதுச் சொத்துகளை நிர்வாகம் செய்து, அதில்வந்த வருமா னத்தை பொய்க்கணக்கு எழுதி, தனது தாய், தந்தை, சகோதர, சகோதரிகளை, குடும்பத்தாரை ஏமாற்றி, தானும், தன் மனைவி, குழந்தைகள் மட்டுமே அனுபவித்த பாவம்.

தன் குடும்பக் குலதெய்வக் கோவில் சொத்துகளை நிர்வகித்து, அதன் பராமரிப்புப்பணி, உற்சவம், விழா விசேஷங்களை முன்னின்று செய்து, கோவில் சொத்து வருமானத்தில் பொய்யான வரவு- செலவு கணக்கெழுதி, தெய்வத் தையும், மற்ற பங்காளிகளையும் ஏமாற்றி பணத்தை அபகரித்த பாவம். இதனால் உண்டான தெய்வ சாபம், பங்காளி சாபம்.

பூர்வீக வீடு, சொத்துகளை, தன் சகோதர- சகோதரிகளுக்குக் கிடைக் காத வகையில் தன் தாய்- தந்தையிடம் ஏமாற்றி எழுதிவாங்கி, பின் பெற்றவர்களையும் உடன்பிறந்தவர்களையும் வீட்டில் வசிக்கவிடாமல் வெளியேற்றி, தானும், தன் மனைவி, குழந்தைகளும் வசித்த பாவம்.

கூட்டுத்தொழிலில், தன்னை நம்பி பணம் முதலீடு செய்த பங்குதாரர்களுக்கு முறையாகத் தரவேண்டிய பங்கு, லாபப் பணத்தைத் தராமல், பொய்யான நஷ்டக் கணக்குக் கூறி அவர்கள் பணத்தைப் பறித்துக்கொண்ட பாவம். மற்றவர்களின் பூமி, நிலம், மனை, வீடு, சொத்துகளை அடாவடியாய் மிரட்டி அபகரித்து, அவர்களை விரட்டிவிட்டுக் கஷ்டப்படச் செய்த பாவம்.

இதுபோன்று இன்னும் பல பாவங் களை தன் குடும்பத்தாருக்கும், பங்காளி களுக்கும், தொழில்முறைக் கூட்டாளி களுக்கும் செய்ததால், பாதிக்கப்பட்ட அவர்கள் மனம் வெறுத்து வாரிவிட்ட மண், வாக்கு சாபம், கோவில்களில் ஈடுபோட்டது போன்ற இன்னும் பல வழிகளில் தங்கள் கோபத்தைக் காற்றில் கலந்துவிட்டு, நிம்மதியில்லாத நிலையில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்களின் ஆவித்தாக்கம், இப்பிறவியில் கண்ணுக்குத் தெரியாத சக்தியாக செயல்பட்டு, பல துன்பங்களை செய்வினை ரூபத்தில் அனுபவிக்கச் செய்கிறது.

சகோதரர்களுக்குச் செய்த வினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பிறவியில் பூர்வீகச் சொத்துகள் இல்லாமல் போய்விடும். சொத்துகள் இருந்தாலும் அவற்றை அனுபவிக்கமுடியாமல்- அதன் வருமானம் விருத்தியில்லாமல் வம்பு, வழக்கு, வியாஜ்ஜியங்களில் இருக்கும்.

ரத்த சம்பந்தமான உறவுகளுடன் பகை உண்டாகும். பெற்றோர், சகோதரர்கள் பகையாவார்கள்; அவர்களால் ஒதுக்கப்படுவார்கள். குடும்பத்தார் ஆதரவு பெரிதாக இராது. எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது. பணத்தோடு பணம் சேர்க்கமுடியாது.

சிலர் கோவில், பூஜை, விழா, விரதம் என கோவில் கோவிலாகச் சென்று பணம் செலவுசெய்து, நிம்மதியைத் தேடி அலைந்துகொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் வட்டிக்கு ஆசைப்பட்டு பிறருக்கு பணத்தைக் கடன் கொடுத்துவிட்டு, வட்டியும் வராமல், கொடுத்த அசலும் வராமல், பணத்தை இழப்பார்கள்.

இவர்கள் இந்த செய்வினை பாதிப்புகளைத் தடுக்கவும் தெரியாமல் சுழல் காற்றில் அகப்பட்ட படகுபோல நிம்மதியின்றி வாழ்வார்கள்.

அகத்தியர் எந்திரம்

6 ஷ் 4 அங்குல அளவுள்ள செப்புத்தகடு வாங்கி, இந்த எந்திரத்தை வரைந்து, சுத்தமான சந்தனம், ஐவ்வாது, அத்தர் ஆகியவற்றைப் பன்னீரில் கலந்து, தகட்டிலும், பூஜை செய்யும் இடத்திலும் தெளித்து, வெள்ளைத்துணி விரித்து, அதில் தகட்டினை வைத்து, மல்லிகை மலர் தூவி, ஊதுபத்தி கொளுத்தி வைத்து, இரவு 7.00 மணிக்குமேல் பூஜையை ஆரம்பித்து, கீழே தரப்பட்டுள்ள மந்திரத்தை ஒரு நாளைக்கு 1,200 முறை வீதம், மூன்று நாட்களுக்கு 3,600 முறை கூறி பூஜைசெய்து, அகத்தியரையும், வம்ச முன்னோர்களையும், சாபம் தீர பிரார்த் தனை செய்து பூஜையை முடிக்கவும்.

தினமும் பூஜை ஆரம்பித்து முடியும் வரை ஊதுபத்தியை எரியவிட வேண்டும்.

இந்த பூஜையை வீட்டின் பூஜை யறையில் செய்யக்கூடாது. மூன்று நாட்கள் பூஜை முடிந்தவுடன், எந்திரத் தகட்டினைக் கண்ணாடி பிரேமிட்டு, பூஜையறை யைத் தவிர்த்து வேறெந்த அறையில் வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். எந்திரத் தகட்டினை கடவுள் படங்கள் அருகில் வைக்கக்கூடாது. சித்தர்கள் படங்கள் அருகிலோ உங்கள் வம்சத்தில் இறந்துபோன முன்னோர்கள் படத்தின் அருகிலோ மாட்டி வைக் கலாம்.

மூலமந்திரம்

"வஞ்சம் அகற்றி வழியோல் மாற்றி

வரும் பில்லியை அஞ்சப் பிடித்து

அறைக்குள் அடைத்தே அதன் வயிறு

நெஞ்சைப் பிளந்து நிணக்குடல் வாங்கி

நெறி நெறித்துப் பஞ்சாய்ப் பறக்கும்

பறியந்தம் ஆட்டி வைப்பீர்

அகத்தியர் என்ற நாமம் கொண்டே.'

இந்த அகத்தியர் எந்திரத்தை வீட்டினுள்ளே வைத்து, தினமும் ஊதுபத்தி கொளுத்தி மூலமந்திரத்தை 36 முறை கூறி, வம்ச சாபம் நீங்க அகத்தியரையும், வம்ச முன்னோர்களையும் பிரார்த் தனை செய்துவந்தால், வம்சத்தில் உண்டான செய்வினை, ஏவல், சூனிய பாதிப்புகளும், முற்பிறவிகளில் செய்த செயல்களால் உண்டான பாதிப்புகளும், குடியிருக்கும் வீட்டிலுள்ள கண்ணுக்குத் தெரியாத துர்சக்திகளின் பாதிப்புகளும், அடிமனை, பூமி தோஷமும் படிப் படியாக அகத்தியர், முன்னோர்கள் அருளால் நீங்கும்.

செல்: 93449 95889

bala170120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe