இன்றைய நாளில் ஒவ்வொருவரும் ஏதாவது சிரமத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. தொழிலில் சம்பாதித்த பணம் சேமிக்கமுடியாமல் விரயமாதல், சம்பாதிக்க வழிதெரியாமல் அலைதல், புத்திரத்தடை, திருமணத்தடை, எதிர்பார்ப்புகள் நிறைவேறாமை, எதிரி, கடன், நோய், கணவன்- மனைவி ஒற்றுமைக் குறைவு, தூக்கமின்மை, மனபயம், குழப்பம் என இதுபோன்று ஏராளமான பிரச்சினைகளால் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
இவர்கள் தங்கள் வாழ்வில் உண்டாகும் சிரமம், தடைகளுக்கு விதி, கர்மவினை, கிரகக்கோளாறு, தனக்கு வேண்டாதவர்கள் ஏவல், பில்லி, சூனியம் வைத்துவிட்டார்கள் எனக் கூறிக்கொள்கின்றனர்.
"விதி' என்று கூறுவோர் அதை மாற்றிட ஏதாவது முயற்சியைச் செய்துகொண்டும், கிரகம்தான் காரணம் என்று கூறுவோர் ஜோதிட ரைத் தேடிச்சென்று, அவர் கூறும
இன்றைய நாளில் ஒவ்வொருவரும் ஏதாவது சிரமத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. தொழிலில் சம்பாதித்த பணம் சேமிக்கமுடியாமல் விரயமாதல், சம்பாதிக்க வழிதெரியாமல் அலைதல், புத்திரத்தடை, திருமணத்தடை, எதிர்பார்ப்புகள் நிறைவேறாமை, எதிரி, கடன், நோய், கணவன்- மனைவி ஒற்றுமைக் குறைவு, தூக்கமின்மை, மனபயம், குழப்பம் என இதுபோன்று ஏராளமான பிரச்சினைகளால் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
இவர்கள் தங்கள் வாழ்வில் உண்டாகும் சிரமம், தடைகளுக்கு விதி, கர்மவினை, கிரகக்கோளாறு, தனக்கு வேண்டாதவர்கள் ஏவல், பில்லி, சூனியம் வைத்துவிட்டார்கள் எனக் கூறிக்கொள்கின்றனர்.
"விதி' என்று கூறுவோர் அதை மாற்றிட ஏதாவது முயற்சியைச் செய்துகொண்டும், கிரகம்தான் காரணம் என்று கூறுவோர் ஜோதிட ரைத் தேடிச்சென்று, அவர் கூறும் கோவில்களுக்குச் சென்று, பூஜை, யாகம், திதி என பரிகாரங்களைச் செய்துகொண்டும், ஏவல், பில்லி, சூனியம் என்று கூறுவோர் மந்திரவாதிகள், குறிசொல் வோரைத் தேடிச்சென்று, அவர்கள் தரும் பொருட் களை வீட்டில் வைத்துக் கொண்டு சிரமம் தீரும் என்ற எதிர்பார்ப்பு டனும் வாழ்ந்துவரு கிறார்கள்.
ஏவல், பில்லி, சூனியம், கிரகக்கோளாறு, ஜாதகப்பலன், கர்மவினைத் தாக்கம் போன்றவற்றால் ஒருவருக்கு வாழ்வில் எந்த சிரமங்கள் இருந்தாலும், அவற்றைத் தடுத்து, நல்வாழ்வையடைய "குரு முகையதீன் ஆண்டகை' பெருமகனார் சாதி, மத பேதமின்றி, உலகமக்களுக்கு பல விதமான எந்திர வழிபாட்டு முறை களைக் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள முறையில் செயல்பட்டு வாழ்ந்தால் நிச்சயம் வாழ்வில் வளமும் நலமும் பெறலாம்.
கவச எந்திரம் கொடுக்கப்பட்டுள்ள எந்திர சக்கரத்தை 6 ஷ் 6 அங்குல அளவுள்ள செம்புத் தகட்டில் எழுதிக்கொள்ளவும்.
பூஜைப் பொருட்கள்: சுத்தமான சந்தனம், கஸ்தூரி, அத்தர், மல்லிகைப்பூ, வெள்ளைத்துணி, பன்னீர்.
இந்த எந்திர பூஜையை வீட்டிலுள்ள பூஜையறையில் செய்யக்கூடாது. வேறு எந்த இடத்திலும், அறைகளிலும் செய்யலாம். தெய்வப் படங்களோ வேறு படங்களோ இருக்கக்கூடாது. விளக்கேற்றி வைக்கக்கூடாது.
வாசனைப் பொருட்களை பன்னீரில் கலந்து, எந்திரத் தகட்டில் தடவி, அந்த நீரை பூஜை செய்யும் அறையில் தெளிக்கவும். வெள்ளைத்துணியை விரித்து, அந்த துணியின்மேல் மல்லிகைப் பூக்களைத் தூவி, அதில் எந்திரத் தகட்டினை வைத்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 3,300 முறை கூறி ஜெபிக்கவும். ஊதுபத்தி ஏற்றிவைத்து பூஜை முடியும்வரை அது எரிந்து கொண்டே இருக்குமாறுபார்த்துக் கொள்ளவேண்டும்.
மூல மந்திரம்
"முத்தனி பிட்டு முதநாளி களிட்டு
முச்சுடரின் பத்தினி வைத்து
நடுவிட்டுப் பார்வை யிட்டுக்
குத்திட்டுக் கூவிட்டுக் கூசா
திட்டமான பீட மதில்
சத்திட்டு இருக்கும்
முகையதீன் காட்சிதரு மெழுத்தே.'
இந்த மூல மந்திரத்தை காலை, மாலை என இரண்டு வேளையும், மூன்று நாட்களுக்கு, 3,300 முறை கூறி பூஜை செய்யவேண்டும். பூஜை ஆரம்பித்தபின் ஒரு நாள்கூட நிறுத்தாமல் தொடர்ந்து பூஜிக்கவேண்டும். (ஒருநாளைக்கு இரண்டு வேளையும் 1,100 முறை கூறவும்). ஒவ்வொரு நாளும் பூஜை செய்ய ஆரம்பித்தவுடன் காபி, டீ, தண்ணீர் என எதுவும் குடிக்கக் கூடாது. இடையில் நிறுத்தி பின் மந்திரம் கூறக்கூடாது.
இந்த மூல மந்திரத்தைக் கூறி, மூன்று நாள் பூஜை முடித்து, இந்த எந்திரத் தகட்டினை கண்ணாடி பிரேம் போட்டு, வீட்டின் தலைவாசல் நிலைப்படியின் மேலே வெளிப்பக்கம் தெரியுமாறு மாட்டிவைத்து, தினமும் குளித்துவிட்டு ஊதுபத்தி கொளுத்தி, இந்த மூல மந்திரத்தை 21 முறை கூறிவரவேண்டும்.
இந்த மந்திரத்தை சிறிய தகட்டில் எழுதி, தாயத்துபோல் உருட்டி, ஒரு வெள்ளித் தாயத்துக் குப்பியில் அடைத்து, ஆண்கள் இடுப்பு, கழுத்து, கைகளில் கட்டிக்கொள்ளலாம். பெண்கள் இடுப்பில் மட்டும் அணியக்கூடாது. கையில், கழுத்தில் கட்டிக்கொள்ளலாம்.
இந்த எந்திரம் உங்கள் வீட்டிற்கும், தாயத்து உங்களுக்கும் கவசமாக இருக்கும். உங்களுக்கெதிராக பிறர் ஏவல், பில்லி, சூனியம் போன்றவை, கண்திருஷ்டி, பிறர் கழிப்பு கழித்து தெருவில் போட்ட பொருட்களைத் தாண்டியது, மிதித்ததால் உண்டாகும் பாதிப்புகள் உங்களைத் தாக்காது. கோபமாகப் பேசுபவர்கள்கூட உங்களிடம் சாந்தமாகப் பேசுவார்கள். உங்களைத் தாக்கவேண்டுமென மனதில் நினைப்பவர்கள்கூட, உங்களை நேராகப் பார்க்கும்போது அமைதியாகிவிடு வார்கள். எதிரிகளின் வேலை எதுவும் பாதிக்காது.
செல்: 93449 95889