சித்தர்தாசன் சுந்தர்ஜி

ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ந்த பூமியில் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போன்ற செயல்களை ஒருவர் மற்றவர் களுக்குச் செய்து அவர்களை சிரமமடையச் செய்ய இயலாது. ஒருவருக்கு செய்வினை செய்து அவர்களை வாழ்வில் துன்பமடையச் செய்வது, நோயை உருவாக்கி அவரை நடமாடமுடியாமல் செய்வது, பதவியில் இருப்பவரை அதிலிருந்து விலக்குவது, பதவியை அடைவது போன்ற செயல்களையும் செய்யமுடியாது.

ஒருவருக்கு செய்வினை செய்து கெடுத்து வீழ்த்துவதென்பது நடைமுறையில் உண்மையானால், ஏவல், பில்லி, சூனியம் செய்யும் மந்திரவாதிகள் மட்டும் தான் ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் போன்ற உயர்ந்த பதவிகளில் இருப்பார்கள். அவர்கள் மட்டும்தான் உலகில் மிக சக்தி வாய்ந்த மனிதர்களாக இருப்பார்கள்.

Advertisment

muruga

ஒருவர் தன் முற்பிறவிகளில் பிறருக்குச் செய்த பாவங்களால், கொடுமையான செயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் ஆன்மா, இப்பிறவியில் தன்னை பாதிப்படையச் செய்த ஆன்மாவை, அவர்களது வம்சத்தைச் சேர்ந்தவர்களைத் தேடிவந்து பழிவாங்கும். பகையைத் தீர்த்துக் கொள்ளும். அதன்பின்னரே அந்த ஆன்மா சாந்தியடையும். உடல் அழிந்தாலும் உயிரும் ஆன்மாவும் அழியாது. நாம் முற்பிறவிகளில் ஒருவருக்குச் செய்த தீமைகளே இப்பிறவியில் நமக்கு செய்வினையாக வந்து திரும்பத் தாக்குகிறது. இதனையே திருவள்ளுவர்-

"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

Advertisment

பிற்பகல் தாமே வரும்'

என்று கூறினார். (முற்பகல்- முற்பிறவி; பிற்பகல்- இப்பிறவி).

இந்த பூமியில் பிறக்கும்போதே பெண்சாபம், சகோதரசாபம், பாமரசாபம் ஆகிய மூன்று தோஷங்களுடன் பிறந்தவர்களே இதுபோன்று ஏவல், பில்லி, சூனியம், செய்வினைகளால் அதிக பாதிப்பை அடைகின்றனர். சொல்லொணாத் துயரத்தை இப்பிறவியில் அனுபவித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பெண்சாபம், சகோதரசாபம், பாமரசாபம் ஆகியவற்றை பொதுவான ஒன்றாகக் கருதிவிடக்கூடாது. பெண்சாபம் என்பது 18 விதமான முறையில் உருவாகி, 18 விதமாக கண்களுக்குத் தெரியாதவகையில் செய்வினையாக வந்து ஒருவரைத் தாக்கும். இதேபோன்று சகோதரசாபம், பாமரசாபம் ஆகிய ஒவ்வொன்றும் 18 விதமான வகையில் ஏவல், பில்லி, சூனியம் என்ற நிலையில் தாக்கி வாழ்நாள் முழுவதும் சிரமத்தைத் தந்துகொண்டிருக்கும்.

இந்த பாவ- சாப- செய்வினை தோஷங்கள் ஒருவருக்குப் பிறப்பிலேயே எவ்விதம் அமைந்துள்ளது என்பதை, அவரவர் பிறப்பு ஜாதகத்தைக்கொண்டு அறிந்துகொள்ளலாம். ஜாதகம் இல்லாதவர்கள் பிரசன்ன நாடிமூலம் "கர்ம காண்ட'த்தில் சுலபமாக அறிந்துகொள்ளலாம் பிரசன்ன நாடிமூலம் இந்த மூன்று தோஷங்களும் ஒருவர் வாழ்விலும், அவரது வம்சத்தினர் வாழ்விலும் எந்தெந்த காலகட்டத்தில், எந்த வயதில் செயல்பட்டு, எவ்விதமான சிரமங் களைத் தரும்- வம்ச வாரிசுகளை எப்படித் தொடர்ந்துவரும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

மேற்சொன்ன தோஷங்களை முறிக்கும் எந்திரத்தை 6பு6 அளவுள்ள தாமிரத் தகட்டில் அல்லது செப்புத் தகட்டில் எழுதிக்கொள்ளவேண்டும். தூய்மையான சந்தனம், கஸ்தூரி, அத்தர், ஜவ்வாது ஆகியவற்றைப் பன்னீரில் கலந்து, எந்திரத்தி லும் பூஜை இடத்திலும் தெளித்து, வெள்ளைத் துணியை விரித்து அதன்மேல் எந்திரத்தை வைத்து, மல்லிகைப்பூ தூவி, சாம்பிராணி தூபம் காட்டி, பூஜை முடியும்வரை ஊது வத்தி கொளுத்திவைத்து, அதற்கான மூல மந்திரத்தை 3,700 முறை ஜெபிக்கவேண்டும். இதனை இடை விடாமல் ஒரேமுறையில் செய்யவேண்டும்.

மூல மந்திரம்v "முத்திரையானது மூவுலகெங்கு முழங்கிவந்த

பத்திரையானது முஹையதீன் பாதம்பணி நெஞ்சமே

சத்துரு வஞ்சனை சூனியம் தன்னைத் தறித்தறுத்து

பத்திரையாய் என்னை வைத்தாளு முஹையதீன் என்ற பராபரமே.'

இந்த எந்திர பூஜையை வீட்டுப் பூஜையறையில் வைத்து செய்யக்கூடாது. தீபம் ஏற்றக் கூடாது. இரவு பத்து மணிக்குமேல் பூஜையைத் தொடங்கிச் செய்யவேண்டும். பூஜை முடிந்தவுடன் எந்திரத்தகட்டை கண்ணாடிச் சட்டமிட்டு, வீட்டின் பூஜையறையைத் தவிர வேறெந்த அறைகளில் வேண்டுமானாலும் மாட்டிவைத்து, தினமும் ஊதுவத்தி கொளுத்தி, 37 முறை மேற்சொன்ன மூலமந்திரத்தைக் கூறி, பில்லி, சூனியம், வஞ்சனை நீங்க குருவை பிரார்த்தனை செய்யவேண்டும்.

இவ்வாறு தினமும் பிரார்த்தனை செய்துவர, வீட்டின் உள்ளேயும், உங்கள் ஆன்மா, உடலினுள்ளேயும் மந்திரத்தின் சக்தி பரவி, உங்களைத் தாக்கியுள்ள வஞ்சனை, பில்லி, சூனியம், துர்ஆவிகளின் தாக்கம், காரியத் தடைக்குக் காரணமான தீயசக்திகளின் பாதிப்பு கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும்.

நீங்கள் வசிக்கும் வீட்டில் துஷ்ட சக்திகளின் பாதிப்பு, அந்த வீட்டில் மனம் வெறுத்துத் தற்கொலை செய்துகொண்ட ஆன்மாவின் பாதிப்பு இருக்கலாம், புதிதாக மனைவாங்கி அங்கு வீடுகட்டி வசித்துவரும் நிலையில், அது பாவச் செயல்கள், துர்மரணம் நிகழ்ந்த பூமியாக இருந்தால் சிரமம் தரும். சிலர் கட்டிய வீட்டை வாங்கி வசிக்கும் நிலையில், அந்த வீடு சாப சொத்தாக இருந்தாலும், அந்த வீட்டில் குடும்பத் தினரால் துன்புறுத்தப்பட்டு மாண்டுபோன ஆவிகளின் தோஷம் இருந்தாலும் அங்கு வசிப்பவர்களுக்கு மனபயம், நிம்மதியின்மை, குடும்பப் பிரச்சினை, பொருள் விரயம், பிள்ளை கள் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாதல், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, ஏதாவது நடமாட்டம் இருப்பதுபோன்று தோன்றுதல், பாம்புகள் நடமாட்டம் போன்றவை இருக்கும்.

இதுபோன்று கண்களுக்குத் தெரியாத பாதிப்புகள் இருந்தால், மேற்சொன்ன எந்திரத்தை வீட்டில் வைத்து தினமும் பூஜித்து வரும்போது, படிப்படியாகத் தீமைகள் குறைந்து நன்மைகள் உருவாகும்.