காலதேவனின் ஆதிபத்தியத்திற்குக் கட்டுப்பட்டு உருளும் காலச்சக்கரம் என்ற மாயக்கண்ணாடியில், நமக்கு இப்போதைக்குத் தேவையான விஷயங்களும், இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மாறக்கூடிய சூழலில் உருவாகும் விஷயங்களும் பொதிந்து கிடக்கின்றன. இந்த காலச்சக்கரம் என்பது புதியதல்ல. ஒவ்வொருவரும் பிறக்கும்போது உருவாகும் ஜாதக சக்கரங்களேயாகும். காலச்சக்கரம் என்பது ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட கற்பனையான புத்தகம். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பன்னிரண்டு லக்னத்தாருக்கும் பலன்கள் பொதிந்து கிடக்கின்றன. ஒரு பக்கத்தில் ஆரோக் கியத்திற்கான தகவல்கள், அடுத்த பக்கத்தில் தொழில் சம்பந்தமான விஷயங்கள், அதற் கடுத்த பக்கத்தில் வியாபார சம்பந்த மான விஷயங்கள் என்று பல துறை யினருக்கும், மனித வாழ்க்கையில் நடக்கும் ஆயிரக்கணக்கான விஷயங்கள் அடுக்கிவைக்கப் பட்டுள்ளன.
12 லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ஆரோக்கியம் எப்படியிருக்கும்- நோய்கள் எவ்வாறு உருவாகும்- அவற்றின் அடிப்படை என்னவென்பதை இங்கு காண்போம்.
ஒரு ஜாதகத்தில் 6 மற்றும் 8-ஆம் பாவங்கள் ஒருவருக்கு உண்டாகும் நோயைப் பற்றிக் கூறும் இடங் களாகும். ஜாதகருக்கு காலச்சக்கர சூழலில் 6, 8-ஆம் பாவங்கள் அமைந்த நெருப்பு, நிலம், காற்று, நீர் ஆகிய வீடுகளைப் பொருத்து நோய்கள் உண்டாகின்றன. இவற்றை பித்தம், சிலேத்துமம், வாதம், கபம் என்று வைத்தியர்கள் கூறுவர்.
மேஷ லக்னம்
இதன் 6-ஆம் பாவமான கன்னி நில ராசியாகும்; உபய ராசியுமாகும். காலச்சக்கர சூழலில் வயிற்றுப் பகுதியைக் குறிக்கும். ஆதலால் இவர்களுக்கு வயிற்றில் ஜீரணம் சம்பந்தமான நோய் திரும்பத் திரும்ப உண்டாகும். அந்த ராசியிலுள்ள கிரகங்களைப் பொருத்து நோயின் தன்மை கூடவோ குறையவோ செய்யும். ஒருவர் ஜாதகத்தில் கன்னி ராசியில் கேது இருந்தால் அமில சுரப்பிகளால் அரிப்பு உண்டாகி, வயிற்றில் புண் (மப்ஸ்ரீங்ழ்) உண்டாகும். 6-ஆம் இடம் நில ராசியாதலால் உடல் எடையும் கூட
காலதேவனின் ஆதிபத்தியத்திற்குக் கட்டுப்பட்டு உருளும் காலச்சக்கரம் என்ற மாயக்கண்ணாடியில், நமக்கு இப்போதைக்குத் தேவையான விஷயங்களும், இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மாறக்கூடிய சூழலில் உருவாகும் விஷயங்களும் பொதிந்து கிடக்கின்றன. இந்த காலச்சக்கரம் என்பது புதியதல்ல. ஒவ்வொருவரும் பிறக்கும்போது உருவாகும் ஜாதக சக்கரங்களேயாகும். காலச்சக்கரம் என்பது ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட கற்பனையான புத்தகம். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பன்னிரண்டு லக்னத்தாருக்கும் பலன்கள் பொதிந்து கிடக்கின்றன. ஒரு பக்கத்தில் ஆரோக் கியத்திற்கான தகவல்கள், அடுத்த பக்கத்தில் தொழில் சம்பந்தமான விஷயங்கள், அதற் கடுத்த பக்கத்தில் வியாபார சம்பந்த மான விஷயங்கள் என்று பல துறை யினருக்கும், மனித வாழ்க்கையில் நடக்கும் ஆயிரக்கணக்கான விஷயங்கள் அடுக்கிவைக்கப் பட்டுள்ளன.
12 லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ஆரோக்கியம் எப்படியிருக்கும்- நோய்கள் எவ்வாறு உருவாகும்- அவற்றின் அடிப்படை என்னவென்பதை இங்கு காண்போம்.
ஒரு ஜாதகத்தில் 6 மற்றும் 8-ஆம் பாவங்கள் ஒருவருக்கு உண்டாகும் நோயைப் பற்றிக் கூறும் இடங் களாகும். ஜாதகருக்கு காலச்சக்கர சூழலில் 6, 8-ஆம் பாவங்கள் அமைந்த நெருப்பு, நிலம், காற்று, நீர் ஆகிய வீடுகளைப் பொருத்து நோய்கள் உண்டாகின்றன. இவற்றை பித்தம், சிலேத்துமம், வாதம், கபம் என்று வைத்தியர்கள் கூறுவர்.
மேஷ லக்னம்
இதன் 6-ஆம் பாவமான கன்னி நில ராசியாகும்; உபய ராசியுமாகும். காலச்சக்கர சூழலில் வயிற்றுப் பகுதியைக் குறிக்கும். ஆதலால் இவர்களுக்கு வயிற்றில் ஜீரணம் சம்பந்தமான நோய் திரும்பத் திரும்ப உண்டாகும். அந்த ராசியிலுள்ள கிரகங்களைப் பொருத்து நோயின் தன்மை கூடவோ குறையவோ செய்யும். ஒருவர் ஜாதகத்தில் கன்னி ராசியில் கேது இருந்தால் அமில சுரப்பிகளால் அரிப்பு உண்டாகி, வயிற்றில் புண் (மப்ஸ்ரீங்ழ்) உண்டாகும். 6-ஆம் இடம் நில ராசியாதலால் உடல் எடையும் கூடும். 8-ஆம் பாவமான விருச்சிகம் நீர் ராசியாதலால் குளிர்ந்த நீர், திரவப் பொருள், கிணறு, ஆறு போன்றவற்றால் தீங்கு நேரும். இவர்களுக்கு குளிர்ந்த நீரே எமனாகும். ஆதலால் இவர்கள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுப் பொருள்களை உண்ணவேண்டும். பூமிக்கு அடியில் விளையும் கிழக்கு வகைகள் உடலுக்கு எடை கூட்டுவதால் அவற்றைத் தவிர்த்தல் அவசியம். மேலும் குடிநீர், குளிர்பானங்களை அருந்துவதில் கவனம் தேவை. சிறுநீர்ப் பிரச்சினைகளையும் அடிக்கடி சந்திப்பர்.
ரிஷப லக்னம்
இவர்களுக்கு சிறுநீரகம், கர்ப்பப்பை உறுப்புகளில் நோய் பாதிப்பு இருக்கும். வாயு சம்பந்தமான நோய்களையும் கொடுக்கும். அதிக வாயுவை (Gas)உண்டாக்கும் உணவு வகைகளைத் தவிர்த்தல் வேண்டும். இவர்கள் அதிகம் வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நலம். 8-ஆம் இடம் தனுசு நெருப்பு ராசி; உபய ராசி. இவர்களுக்கு உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஆசனவாயிலிலில் ஏற்படும். இவர்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் ஆசனவாயில் உஷ்ணம் அதிகமாகி மலச்சிக்கல், மூலம் போன்ற நோய் களுக்கு ஆளாக நேரிடும். ஆதலால் இவர்கள் உஷ்ணம் சம்பந்தப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும். 7-ஆம் வீடு நீர் ராசியாத லால், திரவப்பொருளை அதிகமாக அருந்து வது நலம் பயக்கும்.
மிதுன லக்னம்
இவர்களுக்கு மர்ம உறுப்பில் நோய், எரிச்சல், நீர்க்கடுப்பு, விந்து ஸ்கலிதம் போன்ற நோய்கள் உண்டாகும். திரவ உணவுப் பொருட்களால் நோய் உண்டாகும். உடலுணர்வு Sexual) பிரச் சினைகளை அதிகம் சந்திப்பார்கள். குளிர் பானங்களைத் தவிர்க்கவேண்டும். தொடைப் பகுதியிலும், தொடையும் இடுப்பும் சேரும் பகுதியிலும் அடிக்கடி தொல்லைகள் உண்டாகும். 10-ஆம் இடம் மகர ராசியாகவும், அதீத உற்பத்தி சார்ந்ததாகவும் இருப்பதால் உடல் எடை அதிகமாகி தொல்லைகள் உண்டாகும். நிலத்தில் விளையும் கிழங்கு வகைகளையும், எடை கூட்டும் உணவு வகைகளையும் தவிர்த்தல் அவசியம்.
கடக லக்னம்
உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் உருவாகும். மூலம் போன்ற வியாதி உண்டாகும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நலம். 8-ஆம் பாவமாகிய கும்பம் காற்று ராசியாகும். ஆதலால் இவர்களுக்கு காற்றுதான் எதிரி. ஆதலால் வாயு சம்பந்தப்பட்ட பொருட்களை சாப்பிடுவது தீமையுண்டாக்கும். பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் பயன் படுத்தி வாயுத் தொல்லைகளைத் தடுக்கலாம். இவர்களுக்கு முழங்காலில் நோய் வரும். வைட்டமின் பற்றாக்குறை, சத்துக் குறைபாடுகளால் அவதிப்பட நேரிடும்.
சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்திற்கு 6-ஆம் பாவமான மகரம் நில ராசி; சர ராசி. ஆதலால் இவர்களுக்கு அதீத கொழுப்பு போன்ற உற்பத்தி சார்ந்த நோய்கள் உண்டாகும். உடல் எடை கூடும். தொடைப்பகுதியில் அதிகமாக சதை வளர்ந்து அவதிப்பட நேரிடும். இவர்கள் பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள், உடல் எடையைக் கூட்டும் உணவுகளைத் தவிர்ப்பது நலம். 8-ஆம் பாவம் மீனம். எனவே இவர்களுக்கு நீரினால் துன்பம் உண்டாகும். இவர்களுக்கு பாதத்தில் நீர் கோர்த்து கழிவுப்பொருள்களை வெளியேற்றுதல் போன்ற நோய்கள் உண்டாகும். இத்தகைய நோய்கள் திரும்பத் திரும்ப வரும்.
கன்னி லக்னம்
இவர்களுக்கு 6-ஆம் பாவமான கும்பம் காற்று ராசி. ஆதலால் வாயுப்பொருட்களால் வியாதிகள் உண்டாகும். முழங்காலில் வலிலி, வைட்டமின் குறைபாடுகளால் சத்துகள் குறைவ தால் நோய்கள் உண்டாகும். வாயுத் தொல்லைகளைப் போக்க பூண்டு, வெங் காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும். 8-ஆம் பாவமானது காலச் சக்கரத்திற்கு முதல் வீடாகையால், இவர்கள் உஷ்ணம், தலைவலிலியால் அவதிப்படுவார்கள். வாயு அல்லாத குளிர்ச்சியைக் கொடுக்கும் உணவு வகைகளை உண்ணுவது உடல்நலத்திற்கு நல்லது. பெண்களுக்கு காலச்சக்கரத்தின்படி மேஷமானது 7-ஆம் வீடாக அமைவதால், கர்ப்பப்பையில் நோய் மற்றும் ஆபரேஷன் செய்யும் வாய்ப்பு அதிகமுண்டு.
துலா லக்னம்
இவர்களுக்கு 6-ஆம் பாவமானது காலச்சக்கரத்திற்கு 12-ஆம் இடமாக வருவதால் பாதத்தில் வீக்கமும், நீரினால் தொல்லைகளும் உண்டாகும். கழிவுப் பாதைகளில் சிக்கல்களும் அல்லது மலம் அதிகமாகப் போவதும் உண்டாகும். திரவங்களினால் தொல்லைகள் உண்டாகும். நில ராசியான ரிஷபம் 8-ஆம் இடமாக அமைவதால், மண்சரிவு, பள்ள மான இடங்களில் தேங்கியுள்ள நீரை எதிர் கொள்வதன்மூலம் விபத்துகள் உண்டாகி, சிலருக்கு உயிருக்கு ஆபத்தும் உண்டாகும். மேலும் உடல் எடை கூடுவதால் உபத்திரவம் உண்டாகும். பெண்களுக்கு மர்ம உறுப்புகளில் புண் மற்றும் பாதிப்புகளால் நோய்வாய்ப்பட நேரிடும். உடல் எடையில் கவனம் தேவை.
விருச்சிக லக்னம்
இவர்களுக்கு 6-ஆம் பாவமான மேஷம் நெருப்பு ராசி. இது தலை பாகத்தைக் குறிப்ப தால் இவர்களுக்கு உஷ்ண மிகுதியால் தலையில் பிரச்சினை உண்டாகும். இந்தத் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகமாகும் வாய்ப்புண்டு. 8-ஆம் பாவம் காற்று மற்றும் உபய ராசியாதலால் இவர்கள் வாயு சம்பந்த மான தொல்லைகளை அடிக்கடி சந்திப் பார்கள். ஆதலால் வாயுவை உண்டாக்கக் கூடிய உணவுப் பொருட்களை அறவே தவிர்த்தல் நலம். உஷ்ணமில்லாத- குளிர்ச் சியை உண்டாக்கக்கூடிய உணவுப் பொருட்களை சாப்பிட, ஆரோக்கியம் வளர்ச்சி யடையும்.
தனுசு லக்னம்
இவர்களுக்கு 6-ஆம் பாவமான ரிஷபம் நில ராசி, ஸ்திர ராசியாதலால் உடல் எடை கூடுவதால் கழுத்துப்பகுதியும், தைராய்டு சம்பந்தப்பட்ட வகையிலும் வியாதிகள் வரும். தவிரவும் நீர் ராசி கடகம் 8-ஆம் பாவமாக அமைவதால் மார்பு சம்பந்தப் பட்ட நோய்கள் உண்டாகும். குளிர்ச்சி யான உணவு வகைகளையும், கிழங்கு போன்ற எடைபோடக்கூடிய வஸ்துகளையும் தவிர்ப்பது நலம். இவர்களுக்கு நீர் அல்லது திரவப்பொருட்களே எதிரியாகும். ஆதலால் குளிர்ந்த பானங்களையும், எண்ணெய்ப் பதார்த்தங்களையும் தவிர்த்துவிடுவது நலம்.
மகர லக்னம்
இவர்களுக்கு வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து வந்து போகும். அதனால் தோள், கைகளில் வலிலி அதிகம் உண்டாகும். இவர்கள் கீழே விழுந்தால் முதலிலில் தோள் பட்டையில்தான் பாதிப்பு உண்டாகும். 8-ஆம் பாவம் சிம்மம் நெருப்பு ராசியாதலால், இவர்களுக்கு உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள், இதயத்தில் ரத்த நாளங்களில் உருவாகும் வாய்ப்பு அதிகம். வாயு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்வது நலம்.
கும்ப லக்னம்
இவர்களுக்கு 6-ஆம் பாவமான கடகம் சர ராசி; நீர் ராசி. ஆதலால் இவர்கள் மார்பில் கபம் சம்பந்தப்பட்ட நோய் களால் அவதிப்படுவார்கள். குளிர்ந்த நீர் அல்லது திரவங்களினால் மார்புப் பகுதியில் நோய் உண்டாகும். உடல் எடை அதிகரிப்பதால் அது சம்பந்தப்பட்ட வகையில் நோய்கள் ஏற்படும். பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளைத் தவிர்த்தல் நலம் பயக்கும். சிலருக்கு நிலச்சரிவு, பள்ளங்களில் தேங்கியுள்ள நீர் போன்றவற்றால் உயிருக்கு கண்டம் உண்டாகும்.
மீன லக்னம்
இவர்களுக்கு 6-ஆம் பாவமான சிம்மம் ஸ்திர ராசியாகவும் உஷ்ண ராசியாகவும் உள்ளதால் இவர்களுக்கு உஷ்ணமான உணவு வகைகளால் நோய்கள் உண்டாகும். ஒருமுறை நோய் உண்டானால் நாட்பட்ட வியாதியாக மாறக்கூடிய வாய்ப்புண்டு. ஏனெனில் இவர்களது லக்னமே 12-ஆம் வீட்டுக்குடையதாகையால் 6, 8, 12-ஆம் பாவங்கள் அதிகமாக வேலை செய்யும். ஆகவே இவர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். 8-ஆம் பாவம் காற்று ராசியாகவும், சர ராசியாகவும் இருப்பதால் வாயு சம்பந்தப்பட்ட வியாதிகள் இவர்களுக்கு அதிக தொல்லைகளைக் கொடுக்கும். வாகனத்தில் செல்லும்பொழுது கவனமாகச் செல்லவேண்டும். ஏனெனில் அதிகமான விபத்துகள் காற்று சம்பந்தமாக (டயர் வெடிப்பது) ஏற்படும். காற்றடிக்கும் காலங்களில் மரத்திற்குக் கீழே இருந்தால், காற்றடித்து மட்டைகள் தலைமீதுபட்டு விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பாதத்திலும் மிகவும் கவனம் தேவை. பாதம் மற்றும் கழிவு உறுப்புகளில் அடிக்கடி நோய்கள் ஏற்படும். எனவே இவற்றில் கவனம் தேவை.
செல்: 91767 71533