கடனும் நோயும் ஒருவருடைய வாழ்க்கையை மாற்றிப் போடும் அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. நோயைக்கூட பணம் இருப்பவர்கள் நினைத்தால் அதற்கான மருத்துவத்தை மேற்கொண்டு சரி செய்துகொள்ளலாம். ஆனால் கடன் என்பது நோயைவிட மிகவும் கொடுமையான ஒன்றாக திகழ்கிறது. கடன் ஏற்பட காரணம் பணப் பற்றாக்குறை என்பதால் அந்தக் கடனை திருப்பி செலுத்தகூட முடியாத அளவிற்கு மேற்கொண்டு மேற்கொண்டு கடனை வாங்கி கடனில் பலரும் மாட்டிக்கொண்டு தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் பைரவரை எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட, அவர்களின் கடன் பிரச்சினை படிப்படியாக நீங்கும் என்றுதான் நாம் பார்க்கப் போகிறோம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bairavar_1.jpg)
கண்ணுக்கு தெரியாது புதைகுழியை நாம் பார்த்திருப்போம். அதை நாம் பார்க்கும்பொழுது எந்தவித சலனமும் இல்லாமல்தான் இருக்கும். ஆனால் அதன் மேல் கால் வைத்தவுடன் அது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உள்ளே இழுத்து அதற்குள் மூழ்கடித்துவிடும். இதேபோல்தான் கடனும் வெளியில் இருந்து பார்க்கும்பொழுது இவ்வளவுதானே கடன் வாங்கி இருக்கிறோம்.
திருப்பி செலுத்தி விடலாம் என்று நினைப்போம். ஒருமுறை வாங்கிவிட்டால் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு சூழ்நிலைக்காக கடனை வாங்கி வாங்கி அந்தக் கடன் என்னும் புதை குழியிலேயே புதைந்து போவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகிவிடும்.
இதிலிருந்து மீள்வதற்கு நமக்கு உதவிசெய்யக்கூடிய கடவுளாக திகழ்பவர்தான் காலபைரவர். பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை தீர்க்க உதவும் ஒரு அற்புத தெய்வமாகத்தான் காலபைரவர் திகழ்கிறார். நம்முடைய வாழ்க்கையில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சினைக்குரிய வழிபாட்டை நாம் காலபைரவருக்கு செய்யும் பொழுது அவர் கண்டிப்பான முறையில் அந்த பிரச்சினையில் இருந்து நம்மை காப்பாற்றுவார். அந்தவகையில் கடன் பிரச்சினையிலிருந்து தீர்வதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய வழிபாட்டு முறையைப் பார்ப்போம்.
இந்த வழிபாட்டை செவ்வாய்க் கிழமையன்றுதான் செய்யவேண்டும். ராகு காலத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம். இயலாதவர்கள் மாலை ஆறு மணிக்குமேல் பைரவர் வழிபாட்டை மேற்கொள்ளலாம். அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய காலபைரவருக்கு மொத்தம் 11 தீபங்கள் ஏற்றவேண்டும்.
11 அகல் விளக்குகளை வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து அதில் நெய் ஊற்றி, திரிக்கு பதிலாக சிவப்பு நிற துணியில் ஒன்பது மிளகுகளைப் போட்டு மூட்டையாக கட்டி அதை திரியாக பயன்படுத்தி தீபமேற்றவேண்டும். இப்படி நாம் 11 தீபங்களை ஏற்றிவிட்டு அந்த 11 தீபங்களுக்கும் செவ்வரளி பூக்களை சமர்ப்பணம் செய்து காலபைரவருக்கும் செவ்வரளி பூக்களை சமர்ப்பணம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 21 வாரங்கள் காலபைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கும் கடன் பிரச்சினைகளை அவர் படிப்படியாக குறைக்க ஆரம்பிப்பார். பைரவரை வழிபட்டுவிட்டோம் இனிமேல் கடன் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று வீட்டிலேயே உட்காராமல் பணத்தை சம்பாதித்து கடனை அடைக்கும் முயற்சியிலும் நாம் ஈடுபடவேண்டும். அப்பொழுதுதான் பைரவரின் அருளால் அந்த முயற்சிகள் வெற்றியடைந்து விரைவிலேயே நம்மால் கடனை அடைக்கமுடியும்.
மிகவும் எளிமையான இந்த பைரவர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக செய்பவர்களின் வாழ்க்கையில் கடன் என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல் போய்விடும்.
செல்: 98425 50844
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/bairavar-t.jpg)