வெற்றிலை சிறந்த மருத்துவ குணம்கொண்டது. அதனை பூஜைக்குப் பயன்படுத்துவதோடு, பரிகாரத் திற்கும் பயன்படுத்தலாம். வெற்றிலையானது அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே பயன்படுத்தப் படுகிறது. திருமணம் பேசி முடிப்பதற்கும் வெற்றிலை, பாக்குதான் முக்கிய பங்குவகிக் கின்றன. அப்படிப்பட்ட வெற்றிலையை வைத்து 12 ராசிக்காரர்கள் செய்யவேண் டிய பரிகாரங்களைப் பார்ப்போம்.

மேஷம்

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானுக்கு இரண்டு வெற்றிலை வைத்து, அதன்மீது மாம்பழம் வைத்து வழிபடவேண்டும். பூஜை முடிந்தபின், வெற்றிலையை மருத்துவரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோன்று மாம்பழத்தை நீங்களே சாப்பிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக கஷ்டங்கள் யாவும் நீங்கும். கவலைகள் பறந்தோடும் என்பது ஐதீகம்.

Advertisment

DD

ரிஷபம்

செவ்வாய்க்கிழமைதோறும் ராகு பகவானுக்கு இரண்டு வெற்றிலையுடன் ஒன்பது மிளகு வைத்துப் பூஜை செய்யவேண்டும். வீட்டிற்கு வந்ததும், அந்த மிளகு மற்றும் வெற்றிலையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள அஷ்டங்கள், கடன் தொல்லைகள் நீங்குமொன்பது ஐதீகம்.

Advertisment

மிதுனம்

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று குல தெய்வத்திற்கு இரண்டு வெற்றிலைகளைக்கொண்டு பூஜை செய்யவேண்டும். வெற்றிலையுடன் இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபடவேண்டும். பூஜை முடிந்தபின், அந்த வாழைப்பழத்தை நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன்மூலம் அனைத்து துன்பங்களும் நீங்கும். குலதெய்வத்தின் அருள் கிடைத்து நிம்மதி கிடைக்கும்.

கடகம்

வெள்ளிக்கிழமைதோறும் காளி கோவிலுக்குச்சென்று இரண்டு வெற்றிலையுடன் பூஜை செய்யவேண்டும். வெற்றிலையுடன் ஒரு மாதுளம் பழம் வைத்து வழிபட பூஜை முடிந்தபின் அந்த மாதுளையை உரித்தோ அல்லது சாறெடுத்தோ நீங்கள் சாப்பிட்டுக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதன்மூலமாக உங்களது கஷ்டங்கள் நீங்கி நலம் கிட்டும். மனமும் தெளிவடையும்.

சிம்மம்

ஒவ்வொரு வியாழக்கிழமையும் இஷ்டதெய்வத்திற்கு இரண்டு வெற்றிலைகளைக்கொண்டு பூஜை செய்யவேண்டும். வெற்றிலையுடன் இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்தபின், அந்த வாழைப்பழத்தை நீங்கள் சாப்பிட்டுக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதன்மூலமாக தீராத துன்பங்கள் அனைத்தும் தீரும். மனது தெளிவடையும்.

கன்னி

வியாழக்கிழமையன்று இஷ்டதெய்வத்தை நினைத்து இரண்டு வெற்றிலைகள்கொண்டு பூஜை செய்யவேண்டும். வெற்றிலையுடன் 27 மிளகுவைத்து வழிபட கஷ்டங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி பிறகும். அந்த மிளகை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

துலாம்

வெள்ளிதோறும் குலதெய்வத்திற்கு பூஜை செய்யவேண்டும். அப்போது இரண்டு வெற்றிலையுடன் சிறிதளவு கிராம்பு சேர்த்து வழிபடவேண்டும். கிராம்பு சிறந்த மருத்துவ குணம் கொண்டது. அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன்மூலமாக அனைத்து பிரச்சினைகளும் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும்.

விருச்சிகம்

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அம்பிகையை வழிபடவேண்டும். அப்போது இரண்டு வெற்றிலையுடன் பேரீச்சம் பழம் சேர்த்து வழிபடவேண்டும். பின்னர், அந்த பேரீச்சம் பழம், வெற்றிலை ஆகியவற்றை நீங்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன்மூலமாக அனைத்து துன்பங்கள் நீங்குவதோடு, வாழ்க்கையை வெறுத்தவர்கூட நிம்மதியடைவர்.

தனுசு

வாரந்தோறும் வியாழக்கிழமையில் முருகப் பெருமானுக்கு இரண்டு வெற்றிலைகள் கொண்டுபூஜை செய்யவேண்டும். அப்போது, வெற்றிலையுடன் சிறிது கற்கண்டை வைத்து வழிபடவேண்டும். பின்னர், அந்த கற்கண்டு மற்றும் வெற்றிலை ஆகியவற்றை நீங்களே பயன்படுத்த கஷ்டங் கள் நீங்கி, வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகரம்

ஒவ்வொரு சனிக்கிழமையும் காளி கோவிலுக்குச்சென்று இரண்டு வெற்றிலைகொண்டு பூஜை செய்யவேண்டும். வெற்றிலையுடன் அச்சு வெல்லம் சேர்த்து வழிபடவேண்டும். பூஜை முடிந்தபின்னர், அந்த அச்சுவெல்லத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி செய்வதன்மூலமாக துன்பங்கள் நீங்கும்.

கும்பம்

வாரந்தோறும் சனிக்கிழமையன்று காளி கோவிலுக்குச்சென்று இரண்டு வெற்றிலைகொண்டு பூஜை செய்யவேண்டும். வெற்றிலை யுடன் சிறிது நெய் சேர்த்து வழிபடவேண்டும். பூஜை முடிந்தபின்னர், வீட்டிற்குச் சென்று அந்த நெய்யை நீங்கள் சாப்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதன்மூலமாக கஷ்டங்கள் நீங்குவதோடு, மனதிலுள்ள பாரங்கள் குறையும்.

மீனம்

ஒவ்வொரு ஞாயிறன்றும் இஷ்ட தெய்வத்தை நினைத்து வீட்டில் பூஜைசெய்யவேண்டும். அப்போது இரண்டு வெற்றிலையுடன் சேர்த்து சர்க்கரையும் வைக்கவேண்டும். பூஜை முடிந்தபிறகு அந்த சர்க்கரை, வெற்றிலையை நீங்களே பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதன்மூலமாக சகல பிணிகளும் நீங்கப்பெற்று நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம்.

செல்: 98425 50844