ஒருவரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கப் பயன்படுத்தும் பல்வேறு முறைகளில் எண் கணிதமும் (நியூமராலஜி) ஒன்று. ஒருவரின் பெயரை ஐந்து முறைகளில் மாற்றியமைக்க லாம். அதன்படி-
1. ஜென்ம நட்சத்திரப் பெயர்
ஒருவர் பிறந்த ஜென்ம நட்சத்திரத் திற்குரிய எழுத்தில் பெயர் வைப்பது இப்பொழுது பெருகிவரும் கலாச்சாரமாக இருந்துவருகிறது. வெகுசிலருக்கு நல்ல பலனைத் தரும் இந்த முறை பலருக்கு வெற்றி தருவதில்லை. இப்பொழுது "ஆன்லைனில்' அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய பெயர் கள் வருவதால் பலர் அதைத் தேர்வுசெய்து வைத்துக்கொள்கிறார்கள். அந்தப் பெயரை எண்கணிதப்படி வைத்தால் மட்டுமே நல்லபலன் தருமென்ற சூட்சுமத்தையும் புரிந்துகொள்ளவேண்டும்.
2. பிறவி எண்
ஒருவருடைய பிறந்த தேதியைக் கூட்டி னால் வரும் பிறவி எண்ணை அடிப்படை யாகக்கொண்டு எண்கணிதம் மட்டும் தெரிந்தவர்கள் பெயரை அமைக்கின் றனர். பிறந்த தேதியை மட்டும் அடிப்படை யாகக்கொண்ட பெயர்மாற்றம் பலிப்ப தில்லை.
3. விதி எண்
ஒருவரின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டிவரும் விதி எண்ணில் பெயர் வைப்பது அல்லது விதி எண்ணிற்குப் பொருத்தமான நட்பு எண்ணில் பெயர் வைப்பது சரியான முறைதான். இதைப் பல பெயரியல் நிபுணர்கள் பின்பற்றி வருகின்றனர். அப்படி பெயர் மாற்றியமைத்தும் பெரும் பாலனவர்கள் அவதிப்படுகிறார்கள்.
4. அதிர்ஷ்டப் பெயர்
ஒருவரின் பிறந்த தேதி, விதி எண் எதை யும் ஆய்வு செய்யாமல், பொதுவாக அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண் என்று நம்பி 1, 5, 9 ஆகிய எண்களில் பெயர் வைத்துக்கொள்கிறார் கள். தவறான பெயர் இயல்பாகவே அமையும் பொழுதும், அதிர்ஷ்ட எண்ணென்று நினைத்து தவறான எண்ணில் பெயர்மாற்றி வைத்துக்கொள்ளும்பொழுதும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பிரகாசிக்க முடியும். நிரந்தமான புகழ், பணம் கிடைக்காது.
5. ஜாதகப்படி பெயர் அமைத்தல்
பிறந்த எண், விதி எண் இவற்றோடு, ஒருவருடைய ஜாதகத்திற்கு யோகத்தைத் தரக்கூடிய கிரகத்தின் எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் பலன் நூறு சதவிகிதம் கிடைக்கும். பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஜாதகத்தையும் ஒப்பிட்டு, அந்த ஜாதகப்படி எந்த கிரகம் நன்மை தருமென்பதை ஆய்வுசெய்து, அந்த கிரகத்திற்குரிய எண், பிறந்த தேதி எண்ணிற்குப் பொருத்தமாக இருக்கிறதா என ஆராய்ந்து பெயரை அமைப்பதே மிக உன்னத முறையாகும். வெகு சிலர்தான் இதைப் பயன்படுத்தி பெயர்வைத்து வருகின் றனர். இந்தமுறை பலருக்கு நன்மையை அதிகமாகச் செய்கிறது.
ஒருவரின் ஜாதகத்தில் பலமாகவுள்ள கிரகம் வாழ்நாள் முழுவதும் ஜாதகத்தை இயக்கும். அதேகிரகம் லக்னரீதியான சுபர் எனில், ஜாதகருக்கு சுபப்பலன்கள் மிகுந்து கொண்டே இருக்கும். பலர் கிரகங்களின் ஆட்சி, உச்சம் மற்றும் நீசத்தன்மையை வைத்து கிரகங்களின் வலிமையை எளிதாகத் தீர்மானிக்கிறார்கள். அது அவ்வளவு சரியான முறையல்ல. ஒரு கிரகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஷட்பலம் கொண்டே தீர்மானிக்க வேண்டும். 'ஷட்' என்றால் ஆறு; "பலம்' என்றால் வலிமை.
அதாவது ஸ்தான பலம், திக்பலம், காலபலம், சேஷ்ட பலம், நைசார்க்கிய பலம் மற்றும் த்ருக் பலம் என்ற ஆறு நிலைகளில் கணக்கிட வேண்டும். ஆட்சி, உச்சம்பெற்ற கிரகங்கள் பலமாக உள்ளன என்று நினைக் கக்கூடாது. நீச கிரகங்கள் வலிமையற்றைவை என்றும் கணிக்கக்கூடாது. எனவே ஷட்பல முறையில் ஆராய்ந்தபிறகே அதன் உன்னத பலத்தை நிர்ணயிக்க வேண்டும்.
இந்த கணக்கீடு சற்று கடினமானது என்றா லும், தற்போது இதற்கென்று ஜோதிட மென்பொருட்கள் வந்துவிட்டதால், அதன் மூலம் எளிதில் கிரகங்களின் ஷட் பலத்தை அறிந்துவிடலாம். ஷட்பலத்தில் வலிமை பெற்ற கிரகத்தின் எண்ணின் அடிப்படையில் அல்லது அதன் நட்பு எண்ணின் அடிப்படையில் பெயர் வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும்.
இவ்வாறு தேர்வு செய்யும் எண் ஜாதகரின் சுய ஜாதக லக்னரீதியான பாதகாதிபதியாக இருக்கக்கூடாது. பாதகாதிபதியாக உள்ள கிரகத்தின் எண்ணில் பெயர் வைத்தால் கெடுதலே மிகையாக இருக்கும்.
மேஷம், ரிஷப லக்னத்தினர் 8-ஆம் எண்ணிலும்; மிதுனம், கன்னி லக்னத்தினர் 3-ஆம் எண்ணிலும்; கடகம், கும்ப லக்னத் தினர் 6-ஆம் எண்ணிலும்; விருச்சிக லக்னத்தினர் 2-ஆம் எண்ணிலும்; தனுசு, மீன லக்னத்தினர் 5-ஆம் எண்ணிலும்; மகர லக்னத்தினர் 9-ஆம் என்னிலும் பெயர் வைக்கக்கூடாது. சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் ஏக யோகாதிபதி என்பதால் வலுப்பெறலாம். கெடுதல் செய்யாது.
ஜோதிடமும் எண்கணிதமும்
ஒரு குழந்தை பிறக்கும்பொழுது வான மண்டலத்திலுள்ள கிரகங்களில் சில கிரகங் கள் வலிமையாக இருக்கலாம். சில கிரகங் கள் வலிமையிழந்து நிற்கும். ஷட்பல நிர்ணயத்தில் லக்னரீதியான அசுபகிரகம் வலிமையிழந்தால் அதைப்பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. அதேநேரத்தில் லக்னரீதியான சுபர் எனில், அதன் தசா புக்திக் காலங்களில் நற்பலன்களை அனுபவிக்கமுடியாமல் போய்விடும். வலிமை யற்ற கிரகத்தை பலப்படுத்த பல்வேறு பூஜை, பரிகாரமுறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப் பட்டிருந்தாலும், பரிகாரம் குறுகிய காலத்திற்கு மட்டுமே பலன்கள் தரும். ஆனால் நிரந்தரமான பலன்களைத் தருவது எண்கணிதம் என்றால் அது மிகையாகாது. வெறும் அதிர்ஷ்டப் பெயரை மட்டும் அமைத் துக்கொண்டால் 25 சதவிகிதம் மட்டுமே பலன் கிடைக்கும். அந்த நல்ல பெயரை ஜாதகம் பார்த்து, பிறந்த எண், விதி எண் ஆகியவற்றோடு ஒப்பிட்டு, ஒருவருடைய ஜாதகத்திற்கு யோகத்தை அளிக்கக்கூடிய எண்ணில் பெயரை வைத்துக்கொண்டால் நூறு சதவிகிதம் நற்பலன் கிடைக்கும்.
மனிதர்களாய்ப் பிறந்த பலருக்கும் அதிர்ஷ்டத்தின்மேல் தனி விருப்பமுண்டு. எண்கணிதம் மட்டுமே பிரதானமான பலன்களுக்குக் காரணமென்று கூறிவிட முடியாது. மதியால் விதியை வெல்லும் அமைப்பு ஜனனகால ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே எண்கணிதப்படி பெயரை வைத்துக் கொண்டு பயன்பெற முடியும். அதாவது சரியான ஆலோசகர் கிடைக்கவேண்டுமென்ற பிராப்தம் இருப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.
ஒருவருடைய ஜாதகத்தில் எத்தனைவித மான யோகங்கள் இருந்தாலும் முழுமையான பலன் கிடைக்க உடல் மற்றும் உயிர் எண்ணுக் கேற்ற பெயர் வைப்பதால் ஜாதகத்திலுள்ள கெடுபலன்களைக் குறைக்கலாம். ஆகவே பிறந்த ஜாதகத்துடன் எண்கணிதத் தைப் பயன்படுத்தும்போது வெற்றி நிச்சயம்.
எண்கணிதப்படி ஒருவர் பெயர் வைத்துக்கொண்டால் மட்டும் லட்சாதிபதி யாகவோ, கோடீஸ்வரராகவோ ஆக முடியாது. பெயரை மாற்றிக்கொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தால் ஒரு பயனும் கிடைக்காது.
கடுமையாக உழைத்தால் மட்டுமே உழைப்பிற் கேற்ப பயனுண்டு. எனவே ஜாதகம், எண் கணிதம், உழைப்பு ஆகிய மூன்றும் சரியான முறையில் ஒன்றுசேர்ந்தால் ஒருவரது வாழ்க்கை கண்டிப்பாக உயரும்.
குறிப்பு: பெயருக்கான எண்களைக் கணக்கிடும்போது இன்ஷியலையும் சேர்த்தே கணக்கிடவேண்டும்.
செல்: 98652 20406