-க. காந்தி முருகேஷ்வரர்
சென்ற இதழ் தொடர்ச்சி...
பன்னிரண்டு
பன்னிரண்டாமதிபதி பன்னிரண்டில் ஆட்சி பலத் தில் இருப்பது விரயத்தையே தரும். உடல்நலமின்றி உடலுக் காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை அமையும்.
கிடைத்ததை எதாவது செலவுசெய்து அழிப்பதி லேயே மனம் செல்லும். கவனக்குறைவாக இருந் தால் இருப்பதையும் தொலைத்துவிடுவார். இவருடைய பெயரில் சொத்து கள் இருந்தால் அத்தனையும் அழிந்துபோகும். தான்தோன்றித்தனமான வாழ்க்கையே வாழ்வார். சுய நலத்திற்காக மனம்போன போக்கில் செயல்படுவார். எல்லாம் இன்பமயமாய் இருக்கவேண்டும் என்ற சிந்தனையால் ஊர்சுற்றித் திரிவார். குடும்பம் நடத்தத் தகுதியற்றவர். நம்பியவரைக் கைவிட்டுப் போக வருந்தமாட்டார். விரும்பியபடி நன்றாக உண்பதற்காக என்ன வேண்டு மானாலும் செய்வார். லட்சியமற்றவர். அடுத்த கணத்தைப் பற்றி யோசிக்காமல் வாழக்கூடியவர். அவரைப் பொருத்தவரை கவலையின்றி சந்தோஷமாக இருப்பார். நிம்மதியாக உறங்குவார். இதனால் சொத்துகளை இழக்கத் தயங்காதவர். சொத்துகளை இழப்பார். சுபகிரக வலு, சுபத்தன்மை பெற்றால் சுப விரயத்தையும், பாவகிரக வலுப்பெற்றால் அசுப விரயத்தையே தரும்.
ஒவ்வொரு மனிதன் இறந்தவுடனும் அவருடைய ஆத்மாவை எமலோகத்திற்கு எடுத்துச்சென்று, அவர் செய்த பாவ- புண்ணியத்திற்கேற்ப சொர்க்க- நரகத் தீர்ப்பு தரப்படுவதாக, மனிதர்களால் உருவாக்கப் பட்ட பெரும்பாலான மதங்களும், அதனைப் பின்பற்றும் மனிதர்களும் நம்புகிறார்கள். யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதை ஜாதகத்தில் பன்னிரண்டாமிடத்தின் நிலையைப் பொருத்தே தீர்மானிக்கப்படும். பொதுவாக பன்னிரண்டில் சூரியன், செவ்வாய், தேய்பிறைச் சந்திரன், சனி, ராகு- கேது ஆகிய பாவகிரகங்கள் இருந்தால் நரகமும், சுப கிரகங்களான வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் இருந்தால் சொர்க்கமும் கிடைக்கும். பன்னிரண்டில் இருக்கும், பார்க்கும், சேரும் அல்லது ஏதாவது ஒருவகையில் தொடர்புகொள்ளும் கிரக வலுவைப் பொருத்து, சுபத
-க. காந்தி முருகேஷ்வரர்
சென்ற இதழ் தொடர்ச்சி...
பன்னிரண்டு
பன்னிரண்டாமதிபதி பன்னிரண்டில் ஆட்சி பலத் தில் இருப்பது விரயத்தையே தரும். உடல்நலமின்றி உடலுக் காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை அமையும்.
கிடைத்ததை எதாவது செலவுசெய்து அழிப்பதி லேயே மனம் செல்லும். கவனக்குறைவாக இருந் தால் இருப்பதையும் தொலைத்துவிடுவார். இவருடைய பெயரில் சொத்து கள் இருந்தால் அத்தனையும் அழிந்துபோகும். தான்தோன்றித்தனமான வாழ்க்கையே வாழ்வார். சுய நலத்திற்காக மனம்போன போக்கில் செயல்படுவார். எல்லாம் இன்பமயமாய் இருக்கவேண்டும் என்ற சிந்தனையால் ஊர்சுற்றித் திரிவார். குடும்பம் நடத்தத் தகுதியற்றவர். நம்பியவரைக் கைவிட்டுப் போக வருந்தமாட்டார். விரும்பியபடி நன்றாக உண்பதற்காக என்ன வேண்டு மானாலும் செய்வார். லட்சியமற்றவர். அடுத்த கணத்தைப் பற்றி யோசிக்காமல் வாழக்கூடியவர். அவரைப் பொருத்தவரை கவலையின்றி சந்தோஷமாக இருப்பார். நிம்மதியாக உறங்குவார். இதனால் சொத்துகளை இழக்கத் தயங்காதவர். சொத்துகளை இழப்பார். சுபகிரக வலு, சுபத்தன்மை பெற்றால் சுப விரயத்தையும், பாவகிரக வலுப்பெற்றால் அசுப விரயத்தையே தரும்.
ஒவ்வொரு மனிதன் இறந்தவுடனும் அவருடைய ஆத்மாவை எமலோகத்திற்கு எடுத்துச்சென்று, அவர் செய்த பாவ- புண்ணியத்திற்கேற்ப சொர்க்க- நரகத் தீர்ப்பு தரப்படுவதாக, மனிதர்களால் உருவாக்கப் பட்ட பெரும்பாலான மதங்களும், அதனைப் பின்பற்றும் மனிதர்களும் நம்புகிறார்கள். யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதை ஜாதகத்தில் பன்னிரண்டாமிடத்தின் நிலையைப் பொருத்தே தீர்மானிக்கப்படும். பொதுவாக பன்னிரண்டில் சூரியன், செவ்வாய், தேய்பிறைச் சந்திரன், சனி, ராகு- கேது ஆகிய பாவகிரகங்கள் இருந்தால் நரகமும், சுப கிரகங்களான வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் இருந்தால் சொர்க்கமும் கிடைக்கும். பன்னிரண்டில் இருக்கும், பார்க்கும், சேரும் அல்லது ஏதாவது ஒருவகையில் தொடர்புகொள்ளும் கிரக வலுவைப் பொருத்து, சுபத்தன்மை பெற்றால் சொர்க்கம் கிடைக்கும். பன்னிரண்டாமதிபதி சூரியன், சந்திரனுடன் இணைவது, செவ்வாய் கேதுவுடன் இணைந்து சுபத்தன்மை பெற்றால், பிறருக்காக உயிர்த்தியாகம் செய்து கடவுளை அடைவர். சுக்கிரன் தொடர்பு இந்திர லோகத்திற்கும், குருவின் தொடர்பு தேவலோகத்திற்கும், புதன் வைகுண்ட பதவியும் தரும்.
ஆடம்பர வாழ்க்கை
பணம் இருப்பவர்கள்தான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக பலர் எண்ணுகிறார் கள். உண்மையில் பணக்காரர்களைவிட, பணக்காரர்களிடம் வேலை பார்ப்பவர்களே சொகுசான வாழ்க்கையை நிம்மதியுடன் வாழ்கிறார்கள். பணக்காரராய் இருப்பதைவிட, பணக்காரருடன் ஒட்டிவாழ்வதே புத்திசாலித் தனம். எல்லாருக்கும் அப்படியொரு எண்ணம் வராது. வாழ்க்கையும் அப்படி அமையாது. பன்னிரண்டாமதிபதி லக்னாதி பதியுடன் தொடர்புகொண்டால் தன்னை அலங்கரிக்கவும், தன் சந்தோஷத்திற்காகவும் கடன் வாங்கியோ அல்லது பொய்பேசி யாரையாவது ஏமாற்றியோ, எந்தவகையிலாவது பணத்தைத் திரட்டி சந்தோஷமாக வாழ்வர். முதல்தர சுயநலவாதியாக இருப்பர். தசாபுக்தி சாதகமானால் உலகம் முழுவதும் சுற்றி அனைத்து சிற்றின்பங்களையும் அடைந்து சுகவாசியாக- நிம்மதியாக உறங்கி வாழ்வர். நான்காமிடமும் சாதமாக இருந்தால் பிறர் சொத்து ஏதோவொரு வகையில் கிடைத்து சுகத்தை அனுபவிப்பர். ஒன்பதாமிடம், பன்னிரண்டாமதிபதியுடன் சுப பலம் பெற்றால் பிச்சையெடுத்து சுகத்தை அனுபவிப் பார்.
பன்னிரண்டாமதிபதி நீசம் மற்றும் பாதிப்படைந்து பலம் குறைந்தாலோ அல்லது பதினொன்றாம் அதிபதியுடன் சேர்ந்து புத்தி ஸ்தானமான ஐந்தாமிடத்தில் இருந்தாலோ தேவை தவிர வேறு செலவுசெய்யாத கஞ்சனாக இருப்பார். பத்தாமதிபதி, பன்னிரண்டாமதிபதி இணைந்து ஆறு, எட்டில் மறைந்தாலோ, ஐந்தாமிடத்துடன் தொடர்புகொண்டோலோ புத்தியை மழுங்கவைக்கும். எதைச் செய்தாலும் நஷ்டமே உண்டாகும். நான்காமிடத்துடன் பத்து, பன்னிரண்டாமிடத் தொடர்பிருந்தால் வீட்டிற்காக, வீடுகட்ட செலவுசெய்வர். சிலர் வீட்டை அலங்கரிப்பதாகச் சொல்லி வீட்டை மாற்றிமாற்றிக் கட்டுவதென, வீட்டிற்காக ஏதாவது வீண்செலவு செய்வர். நான்காமிடம் வாகனத்தைக் குறிக்கும் என்பதால், வாகனத் தையும் ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள். உறவினர்கள் செலவு வைப்பர். இரண்டாமதிபதி பன்னிரண்டில் இருந்து பாவகிரக பலம்பெற்றால் குடும்பத்திற்காக அதிக செலவு செய்யநேரும். மேலும் பன்னிரண்டாமதிபதி ஆறு, எட்டுடன் தொடர்புகொண்டு சனியுடன் கூடினால் யாருக்காவது தேவையற்ற மருத்துவ செலவுகள் செய்யநேரும்.
பன்னிரண்டாமதிபதி எட்டில் அல்லது எட்டாமதிபதியுடன் தொடர்புபெற்று இரண்டு, மூன்றில் இருந்தால் யாருக்காவது கடன் கொடுத்தால் திரும்ப வாங்கமுடியாது. குடும்பத்தில் உடன்பிறந்தவருக்குக் கொடுத்தால்கூட திரும்பத் தரமாட்டார்கள். அதனால் குடும்பக் கலகம் வரும். ஐந்தாமதிபதி தொடர்புபெற்றால் பிள்ளைகளுக்கு ஆடம்பரச் செலவுசெய்து விரயமாவார்கள். என்ன பலன்கள் நடந்தாலும், விரயமாவது என்னவோ பன்னிரண்டாமதிபதி தசாபுக்திக் காலங்களில் மட்டுமே நடக்கும்.
ஒவ்வொரு லக்னத்திற்கும் பன்னிரண் டாமதிபதி தசை என்ன பலனைத் தருமென் பதைப் பார்ப்போம்.
பன்னிரண்டாமதிபதி தசை
மேஷ லக்னத்திற்கு குரு ஒன்பது, பன்னிரண்டுக்குரியவராக வருவார். சுபவலுவாக இருந்தால் தன் தசையில் வெளிநாட்டு வாழ்க்கை, சுபச் செலவுகள் உண்டாக்கும். பாவ வலுப்பெற்றால் பலவித மனக்கஷ்டம் உண்டாகி வாழ்க்கையையே வெறுப்பர். ரிஷப லக்னத்திற்கு செவ்வாய் ஏழு, பன்னிரண்டுக்குரியவராகி தன் தசையில் உடன்பிறந்தோருடன் பிணக்கு அல்லது இழப்பைத் தருவார். கண்நோய், பங்காளிப் பகையைத் தருவார். சுபபலம் இருந்தால் கெடுபலனைத் தவிர்க்கும். மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் ஐந்து, பன்னிரண்டுக்குரியவராகி சுகபோகத்தைத் தருவார். புதனுக்கு நட்பாக இருப்பதால் சிற்சில விரயங்களைத் தவிர பெரும்பாலும் சொகுசான வாழ்க்கை யைத் தரும். சொந்த ஊரைவிட்டு அன்னிய தேச வாசம், பெண் லாபம், சொகுசான வாழ்க்கையைத் தந்துவிடும். கடக லக்னத்திற்கு புதன் மூன்று, பன்னிரண்டுக்குரியவராக வருவதால் படித்ததற்கேற்ற வேலை தராமல் அலக்கழிப்பார். நாடோடி வாழ்க்கையைத் தந்து மரண அவஸ்தையைத் தருவார். தாய்மாமன் உதவி கிடைக்காது; தொல்லை தான் உண்டு.
சிம்ம லக்னத்திற்கு விரயாதிபதி தசையாக சந்திரன் வருவதால் தேவையற்ற வீண் குழப்பத்தையே தருவார். மனநிலை, நீர், தாய்வழி தொல்லைகள் ஏற்படும். கோட்சார சனி சரியில்லையென்றால் குடும்பத்தில் கண்டம், பொருளாதார கஷ்டத்தைத் தந்துவிடும். குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு சென்றுவிடுவது நல்லது. கன்னி லக்னத்திற்கு சூரியன் விரயாதிபதியாவதால் தந்தைக்கு கண்டம், தந்தை பிரிவு, தந்தையுடன் மனஸ்தாபம் உண்டாகும். சுமாரான தசையாகவே இருக்கும். துலா லக்னத்திற்கு ஒன்பது, பன்னிரண்டுக்குரியவரான புதன், லக்னாதி பதிக்கு நட்பாகி தசை நடப்பதால் வெளிநாட்டுத் தொழில், தொடர்பு, தெய்வ காரியங்களில் ஈடுபடுவது நல்வாழ்க்கையைக் கொடுக்கும். விருச்சிக லக்னத்திற்கு ஏழு, பன்னிரண்டுக்குரியவராக சுக்கிரன் வருவதால் வாழ்க்கைத் துணைவருக்கு விரயம், பிரிவு, பிரச்சினையைக் கொடுக்கும். உடல், மனநலம் கெடும். சுக சந்தோஷங்களை மறைமுகமாக அனுபவிப்பர்.
தனுசு லக்னத்திற்கு ஐந்து, பன்னிரண்டுக் குரியவரான செவ்வாய் தசை நடந்து பூர்வீக விரயத்தைத் தருவார். பிள்ளைகள்வழி தொல்லை, இழப்பு, பிரிவை அடைவர். தவறான முடிவுகளால் கடன் உருவாகி சொத்துகளை இழப்பர். மகர லக்னத்திற்கு மூன்று, பன்னிரண்டுக்குரியவரான குரு தசையில் கல்வி, குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், உபதேசம் செய்பவர்களால் தொல்லை ஏற்படும். தொழில் அமை யாமல் நாடோடிபோல் அலைந்து திரிய நேரும். கும்ப லக்னத்திற்கு லக்னாதிபதி, விரயாதிபதியாக சனி வருவதால் நேர்மையாக பணிசெய்ய விரும்புவர். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. பூர்வீக இழப்பு ஏற்பட்டாலும் அதற்கு இணையான சொத்துகளை அடைவர். சுய உழைப் பால் முன்னேறுவர். மீன லக்னத்திற்கு பதினொன்று, பன்னிரண்டுக்குரியவராக சனி வந்து தசை நடக்கும்போது வரும் லாபப் பணம், வீண்வழி செலவுகளை உருவாக்கும். வேற்றுதேச வாசத்தைத் தரும். நன்மை- தீமை கலந்தே நடக்கும்.
அனைத்து லக்னங்களுக்கும் பன்னிரண்டுக் குரிய தசை, சுபகிரக சம்பந்தத்துடன் இருந்தால் சுப விரயங்களாகவே நடக்கும். பன்னிரண்டாமிடம் வெளிநாட்டைக் குறிப்பதால், தன் தசையில் ஜாதகரை வெளிநாடு செல்ல வைக்கும். பன்னிரண்டாமதிபதி கிரகம் வலுப்பெறுதல், பன்னிரண்டாமிடம் நீர் மற்றும் சர ராசியானாலும், பன்னிரண்டில் சந்திரன் மற்றும் ராகு இருந்து சுபகிரகப் பார்வை, தொடர்புபெற்றால் வெளிநாட்டு யோகம் கட்டாயம் ஏற்படும்.
பரிகாரம்
பன்னிரண்டாமதிபதி பாவ வலுப்பெற்று எந்த இடத்தில் இருந்தாலும் வீண் விரயத்தையே தரும். அசுபச் செலவு குடும்பத்தில் அடிக்கடி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவச்செலவு, தவறுசெய்து தண்டச் செலவு, தண்டனைச் செலவு, நீதிமன்றச் செலவு, முடக்கச் செலவு என அனைத்தும் காரணமே இன்றி உருவாகி, நிம்மதியற்ற சூழல் ஏற்பட்டு, தூக்கத்தைக் கெடுத்து வாழ்க்கையை வெறுக்கச் செய்துவிடும். பன்னிரண்டாமதிபதி தசை நடந்தால் இழப்புகளையும் வீண் செலவுகளையும் செய்யுமென்பதால், சுப விரயங்களைச் செய்து கடனாளியாக இருந்தால் பெரிய இழப்புகளைத் தவிர்க்கலாம்.
சுபவிரயம் என்பது கல்விக்குச் செலவு, கோவில்கட்ட செலவு, வீடு, இடம், நகை எடுத்தல், திருமணச் செலவு, பிரசவச் செலவு, பெற்றோருக்கு செலவு, உடன்பிறந்தோருக்கு உதவுதல், நண்பருக்கு செலவுசெய்வது, உடல் ஊனமுற்றோர், கைவிடப்பட்டோர், கைம் பெண்ணுக்கு உதவுதல், உணவு, உடை, பொருள் தானம் செய்வது ஆகியவைதான். இவையனைத் தையும் செய்வது சுபச்செலவு மற்றும் மிகச்சிறந்த பரிகாரமாகும். அவ்வாறு சுபச்செலவு செய்யவில்லையென்றால் பலவித சோதனைகள் நடந்து விரயங்கள் கூடும். யாருக்கும் செலவுசெய்ய மனமில்லாதவர்கள் மன நிம்மதியை எதிர்பார்க்க வேண்டாம். பன்னிரண் டாமதிபதியை அறிந்து அதற்குரிய தெய்வத்தை வணங்கி நடப்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத் தைப் பெறுவது உத்தமம்.