ஒன்று

பிறப்பே நஷ்டம் என்பதுபோல் எதற்கெடுத்தாலும் நஷ்டம், எதிலும் நஷ்டமாக இருக்கும். பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் வளர வளர குடும்பத்திற்கு பலவிதமான சோதனைகளால் நஷ்டமாகும்; சோம்பேறியாக்கும். சிலருக்கு உழைப்பின்றி ஏதாவதொரு வழியில் சாப்பாடு கிடைக்கும். உண்ண- உறங்க என்பதுபோல் காலம் கழியும். எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சோறுகண்ட இடம் சொர்க்கமென வாழும் சுயநலவாதிகளாக இருப்பார்கள். சிலர் எவ்வளவு உழைத்து வாழ்ந்தாலும் எதுவும் தங்காது. சின்னச் சின்ன விரயங்களால் அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். முன்னேற் றத்திற்குப் பெரிதாய்ப் போராடவேண்டி இருக்கும். சிறிய முயற்சிகளில்கூட பல தடைகளை சந்திக்கநேரும். சுபகிரகம் சம்பந்தப்பட்டால் ஓரளவு நன்மை கிடைக் கும். நல்ல தசை நடந்தால் விரயங்கள் மட்டுப்படும். விரயாதிபதி லக்னத்தில் இருந்தால் கிடைக்கவேண்டிய சொத்து, மரியாதை, மதிப்பு, அந்தஸ்து, புகழ் கிடைக்காது.

இரண்டு

வாக்கு ஸ்தானம் என்பதால், வாக்கு கொடுத்தால் காப்பாற்ற முடியாது அல்லது போராடி நிறைவேற்றவேண்டி வரும். இந்த அமைப்பு கொண்டவர்கள் வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. வாக்கு தவறியதால் இவர்களுடைய பேச்சுக்கு மதிப்பிருக்காது. தேவையில் லாதவற்றைப் பேசி மற்றவரை எரிச்சல் மூட்டுவர். பாவகிரக வலுப்பெற்றால் தீய வார்த்தை, அவதூறு பேச்சுகளைப் பேசுவர். விரயாதிபதி ஆரம்பக் கல்வி ஸ்தானத்தில் இருப்பதால் கல்வியில் தடை, மந்தம், அடிக்கடி பள்ளி மாறுதல் ஆகியவற்றால் பெற்றோர் மனதை கலங்கவைப்பர். பெற்றோர் தொழில் விஷயமாக ஊர் ஊராக சுற்றித்திரியும் நிலை வரும். குடும்பத்தில் ஏதாவது தொல்லை, விரயம் நடந்துகொண்டே இருக்கும். திருமண வாழ்க்கையில் நஷ்டம், இழப்பு, தாமதத்தை உருவாக் கும். குடும்பப் பொருளாதாரம் மனநிறைவைத் தராது. பாவகிரக சம்பந்தம் ஏற்பட்டால் எதிர்பார்ப்புகள் ஏக்கங் களாகவே இருக்கும். குறுக்குவழியில் முயற்சித் தாலும் வெற்றி கிடைக்காது. கண்பார்வைக் கோளாறுகளையும் தரும். சுப தசாபுக்தி நடந்தால் தீமைகள் குறையும்.

Advertisment

gg

மூன்று

இளைய சகோதரர்கள் இல்லாமல் இருக்கவேண்டும். இருந்தால் அவர்களால் விரயங்கள் ஏற்படும். சகோதரர் கள் முன்னோர் சொத்துகளை அபகரிப்பர். நல்லது செய்வதுபோல் பாசத்தைக் காட்டி ஏமாற்றுவர். அதனால் பிதுர் சொத்து கள் ஜாதகருக்குக் கிடைக் காது. அனைத்தும் சகோதரர்வசம் சென்று விடும். குடும்பத்திற் குள்ளே பல அரசியல் நடக்கும். சகோதரத்திற்கு சொத்து, பணத்தை விட்டுக் கொடுப்பார்கள். பாசத்திற்காக நம்பி ஏமாறுவார்கள். உடன் பிறந்தவர்கள் நன்றியில் லாமலும், பாசமில்லா மலும் நடந்துகொள்வர். அதனைத் தாமதமாகப் புரிந்து கொண்டாலும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். முன் கோபத்தாலும், முரட் டுத்தனத்தாலும் நல்ல வாய்ப்புகளை இழப்பர். "ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு' என்பது இவர் களுக்குப் பொருந்தும். திறமைகளை வெளிக் காட்ட போதுமான தைரியம் இருக்காது. வீம்பாக பல காரியங் களைச் செய்து வருந்து வர். எதற்கும் அஞ்சாதது போல் பேசும் கோழை யாக இருப்பர். வாழ்க்கைத் துணை வருக்கு ஒத்து ழைப்பு தர மாட்டார் கள். இவர்களைத் திருமணம் செய்பவர்கள் படாதபாடு படுவர். ஈகோவால் நல்ல விஷயத்தையும் தாமதப்படுத்தி நஷ்டத்தை உண்டாக்குவர். ஆனால் தன்னால் நஷ்டம் என்பதை ஒப்புக் கொள்ளாமல் அடுத்தவர்மீது பழி போட்டு தப்பித்துக்கொள்வர். சுபகிரகப் பார்வை ஓரளவு பாதிப் பைக் குறைக்கும்.

நான்கு

நான்காமிடம் தாயார் ஸ்தானம் என்தால் தாயாரால் நஷ்டம் அல்லது தாயாருக்கு நஷ்டத்தைத் தரும். சிறுவயதிலிருந்தே சுகத்திற்குக் குறையுண் டாகும். சுகமற்றலி சொகுசு குறைந்த வீடு, பிடிக்காத வீடு, சுகாதாரமற்ற வீடு, குடியிருக்கும் வீட்டில் ஏதாவது பிரச்சினையால் நிம்மதியற்ற சூழல் நிலவும். நல்ல தூக்கத்தை இழப்பர். வீடென் றாலே ஏதாவது பிரச்சினை ஏற்படும். அதேபோல் வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பிடிக்காத- தொல்லைதரும் வாகனமே அமையும். பன்னிரண்டாம் அதிபதி பலமில்லாமலோ சுபத்தன்மை இல்லாமலோ இருந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் அல்லது பழுதுபடும். வாகனம் வாங்க முடியாமல் போராடவேண்டி இருக்கும். சுக ஸ்தானம் என்பதால் நிம்மதி, சுகமற்று அல்லல்பட நேரும். குடும்பத்தில் ஏதாவது செலவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். எதைப்பற்றியும் கவலையின்றி போஜன சுகமும் தூக்கமும் அதிகமாகும். நல்ல எண்ணம், சிந்தனை குறையும். உறவினர்களால் பல நெருக்கடிகளை சந்திப்பர். மறைமுக எதிரிகள் உறவினர்களாகவே இருப்பர். சொந்தங்களுக்கு அதிக செலவுகள் செய்யநேரும். நண்பர்களும் நிரந்தர மாக இருக்கமாட்டார்கள். பணம் இருக்கும் போது வருபவர், இல்லையென்றால் வெறுத்து ஒதுக்குவர். சுப ஸ்தான பலம், சுபகிரக சம்பந்தம் பெற்றால் தீமை குறைந்து நன்மையும் நடக்கும். சொந்த ஊரைவிட்டு வெளியில் இருப்பது நல்லது.

ஐந்து

பன்னிரண்டாமதிபதி ஐந்தில் இருப்பின் புத்திர தோஷம் ஏற்படும். புத்திரர்களால் அனாவ சிய செலவுகள் ஏற்படும். சொல்பேச்சு கேட்காத பிள்ளைகள், உதவாக்கரை பிள்ளை களால் பூர்வீக சொத்துகளை இழப்பர். பிள்ளை களுக்காக வீண்செலவு அதிகம் செய்ய நேரும். பிள்ளைகளுக்கு நிறைய விரயம் உண்டு. பூர்வீக இழப்பு, நஷ்டம், பூர்வீகத்தால் லாபமின்றி இருத்தல், பூர்வீக இடத்திற்காக வீண்செலவு செய்தல், பூர்வீக இடத்திற்காக நீதிமன்றம் செல்ல நேரும். ஆன்மிகப் பயணம், தெய்வ தரிசனம், ஆலயத் திருப்பணி செய்வதால் தோஷங் கள் தீரும். பெரிய மனிதர்கள் தொடர்பு, அரசிய லால் செலவு ஏற்படும். மூத்த சகோதரருக்காக செலவுசெய்ய வேண்டிய சூழல் வரும். சுபவலுப் பெற்றால் ஊரார் போற்ற நற்காரியங்கள் செய்வர். காலத்திற்கும் நிலைக்கும் அழியாப் புகழ்பெறுவர். பிள்ளைகள்வழியில் பணம் கிடைத்து மக்கள்சேவை செய்வர். கோவில் கட்டுதல், அன்னதானம் வழங்குதல், மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுதல் போன்ற புண் ணிய காரியங்களைச் செய்து புகழ்பெறுவர்.

ஆறு

ஆறாமிடத்தில் பன்னிரண்டாமதிபதி நின்றால் நோயால் பாதிப்பேற்படும். பிறந்தது முதல் ஏதாவது சின்னச்சின்ன வியாதி ஏற்பட்டு செலவுண்டாகும். பாவகிரகம் வலுப்பெற்றால் உடலில் நிரந்தர நோய் அல்லது முடக்கம் இருக்கும். சம்பாதிக்கும் பணம் குடும்பத்தில் யாருக்காவது மருத்துவச் செலவைத் தந்து கொண்டே இருக்கும். உழைக்கும் பணம் வீண் விரயமான நோய், எதிரி, கடனுக்கே செல்லும். எதிரிகள் வலுப்பெறுவார்கள். எதிரிகளால் நஷ்டம் உண்டாகும் அல்லது உண்டாக்குவார் கள். தேவையற்ற கடன்- அதாவது அடுத்த வருக்கு ஜாமின் போட்டு அதன்மூலம் கடன் தோன்றும். நம்பிப் பணம் கொடுத்து ஏமாறு தல், வழிப்பறியால் பணத்தை இழத்தல், சீட்டுப் பணம் கட்டி ஏமாறுதல் போன்ற ஏதாவது காரணத்தால் கடனாகி அவதிப்படுவர். சுபகிரக வலுவால் வீண் நஷ்டம், பயம் தீரும். விரயாதி பதி ஆறில் நிற்பது விபரீத ராஜயோகத்தைச் செய்யும். சுபவலுப் பெற்றால் தீமைகள் நன்மை களாய் மாறி யோகத்தை வழங்கும். பணம், பெயர், புகழ், அந்தஸ்தைத் தரும். பன்னிரண் டா மதிபதி பாவகிரகமாகி ஆறில் மறைந்து கெட்டி ருந்தால், தன் தசையில் கொடுக்கவேண்டிய கெடுபலனைத் தராமல் அதியோக நற்பலனை வழங்குவார்.

ஏழு

பன்னிரண்டாமதிபதி ஏழில் நிற்பது களத்திர நஷ்டத்தைக் கொடுக்கும். திருமணத் தாமதம், களத்திரப் பிரிவு, களத்திர அவமானத்தை உண்டாக்கும். பலதார மணம், பெண்களால் நஷ்டம் உண்டாக்கும். மனைவி நஷ்டம் அல்லது மனைவியால் நஷ்டம் உண்டாகும். பெண்மோகம் கொண்டு காம எண்ணங்களால் அவமானம், விரயச்செலவு, அவப்பெயரை சந்திப்பர். தொல்லை கொடுக்கும் மனைவி, ஆடம்பர செலவுசெய்யும் மனைவி அமைவார். பெண்டாட்டி தாசனாகி, மனைவி பேச்சைக் கேட்டு அடிமை வாழ்க்கை வாழவேண்டிய கட்டாயம் ஏற்படும். விரயாதிபதி ஏழில் நிற்பது வாழ்க்கைத் துணை, நண்பர்கள், தொழில் கூட்டாளி, பொருளாதாரம் ஆகியவற்றில் விரயத்தை உண்டாக்கும். ஆடம்பர சுக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கிடைக்கவேண்டிய முறையான- நிலையான வரவுகளை இழப்பர். சுபகிரக சம்பந்தம் பெறுவது மனைவி இழப் பைத் தவிர்க்கும். பலதார மணத்தைத் தடுக்கும். நியாயமாக நடந்துகொண்டால் பெரிய கஷ்டங் களைத் தவிர்க்கலாம். குடும்ப வாழ்க்கை சிறக்க சுபகிரக வலுப்பெறுதல் அவசியம்.

எட்டு

பன்னிரண்டாமதிபதி எட்டில் மறைவது உடல்நிலை பாதிப்பைத் தரும். பலமற்றிருந்தால் பாலாரிஷ்ட தோஷத்தால் ஆயுள் பாதிக்கும். பாவகிரக சம்பந்தம் பெற்றால் அடிக்கடி நோய்வாய்ப்பட நேரும். நிரந்தர ஊனத்தைத் தரும். தன் தசையில் சிலருக்கு கண்டத்தைத் தந்துவிடும். தேவையற்ற வழக்குகள், செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெறுதல், அவப் பெயரைப் பெறுதல், அடிக்கடி காவல் நிலையம், நீதிமன்றப் படியேறுதல் போன்ற நஷ்டப் பலனே மேலோங்கி நடக்கும். நம்பிக் கையற்ற விரக்தியான வாழ்க்கையே உண்டு. எப்போதும் எதிர்மறை சிந்தனைகள் உண்டாகி எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்பட்டு கெட்டதே அதிகம் நடக்கும். பாவகிரக சம்பந்த மிருந்தால் என்ன செய்வதென்று தெரியாமல் எதையெதையோ செய்து நஷ்டத்தை அடைவர். நல்ல எண்ணங்கள் குறைவு. உடல்நிலை தொந்தரவுகளால் அதிகம் பாதிக்கப்படுவார். "இந்த பிழைப்பு பிழைக்க சாவதே மேல்' என வருந்துமளவு துன்பமுண்டாகும். தற்கொலை எண்ணம் முயற்சி செய்வர். சுபகிரக சம்பந்த மிருந்தால் ஓரளவு தன்னம்பிக்கையால் வாழ முயற்சிப்பர். நல்ல தசாபுக்தி இருந்தால் பெரிய பாதிப்புகளைத் தராது.

ஒன்பது

ஒன்பதாமிடமான தந்தை ஸ்தானத்தில் பன்னிரண்டாமதிபதி- அதாவது விரயாதிபதி இருந்தால் தந்தைக்கு விரயம் அல்லது தந்தை யால் விரயம் ஜாதகருக்கு ஏற்படும். சிலருக்கு தந்தை இருக்கமாட்டார். பிதுர் சொத்துகளில் நஷ்டம் அல்லது முன்னோர்கள் சொத்து களில் வில்லங்கம் ஏற்படும். முறையாகக் கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்காது. பங்காளிகள் ஒற்றுமையின்றி இருப்பர். பிதுர் சொத்துகளுக் காக நீதிமன்றப் படியேற வைக்கும். தொல்லை தரும் உறவினர்களே இருப்பர். முன்னேற்றத் தடை முன்னோர்கள் செய்த பாவத்தால் ஏற்படும். நல்லவர் நட்பை முறித்துக்கொள்வர். தந்தை சொத்துகளைப் பாதுகாக்காமல் விற்கும் நிலைக்குச் செல்வர். தொழில் காரணமாக பூர்வீகத்தைவிட்டு வெளியேறுவர். சகோதர்கள் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தருவர். உடனிருக்கும் தந்தையால் உபத்திர வமே ஏற்படும். நன்றியோடு நடந்துகொள்ள மாட்டார். தந்தை பாசம் குறைவு. கடன் தொந்தர வால் பாக்கிய நஷ்டம் உண்டாகும். தந்தைக்கும் தனக்குமான உறவு பாதிக்கும். சுபகிரக சம்பந்தம் இருந்தால் தந்தைமேல் பகை ஏற்படுத்தாமல் பிரிவைத் தரும். தொழில்ரீதியாகவோ வேறு காரணத்தாலோ வெளிநாட்டில் தங்குவர்.

பத்து

பன்னிரண்டாமதிபதி பத்தில் இருப்பது தொழிலில் நஷ்டம், கஷ்டத்தைத் தரும். கூட்டுத் தொழில் செய்தால் கூட்டாளி பயனடைவார். எந்த காரியம் செய்தாலும் ஏதாவது தடை, நஷ்டத்தைத் தந்துகொண்டே இருக்கும். வருமானமின்றி இருத்தல், உழைப்பிற்கேற்ற ஊதியமில்லாமல் இருத்தல், நிரந்தரத் தொழிலின்றி அவதிப்படுதல் என தொழில்வழி கஷ்டங்களை அனுபவிப்பர். குறுக்குவழியில் சம்பாதிக்க நினைப்பது, மனம்போன போக்கில் அலைந்து திரிவது, எதிலும் முடிவெடுக் கத் தெரியாமல் நஷ்டத்தை அடைவது போன் றவை இயல்பாக நடந்து கொண்டே இருக்கும். சுபகிரகத் தொடர்பு, சம்பந்தம் இருந்தால் அடிமைத் தொழில், அரசாங்கத் தொழில் உண்டாகும். அதிலும் அடிக்கடி இடமாற்றம், தொழில் இடைஞ்சல், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சுபகிரக வலுக் கிடைத் தால் ஆரம்பத்தில் தொழிலில் கவனக் குறைவாக செயல்பட்டாலும், போகப்போக தொழிலில் நிலையான இடத்தைப் பிடிப்பர். பாவ வலுப்பெற்றவர்கள் "எனக்கு எல்லாம் தெரியும்; எல்லாம் முடியும்; என்னால் அத்தனை யும் சாத்தியம்' என்று மனம்போன போக்கில் செயல்பட்டு இருப்பதைத் தொலைத்துவிடுவர். சுபதசை நடந்தால் பாதிப்புகள் குறையும்.

பதினொன்று

பதினொன்றில் விரயாதிபதி நிற்பது, வரும் லாபத்தை வீண்வழியில் இழப்பதைக் குறிக்கும். தனக்கு எப்போதும் லாபம் வந்து கொண்டே இருக்கும் என்ற நினைப்பில் அகலக் கால்வைத்து இருப்பதையும் தொலைத்து நஷ்டமடைவர். கஷ்டப்பட்டு சம்பாதித்ததை திடீரென்று இழப்பர். கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த லாபப் பணத்தை யாரையாவது நம்பி, யாரிடமாவது கொடுத்து ஏமாந்துபோவர். பத்தாமிடம் நன்றாக இருந்தால் வருமானம் வந்தும் சேர்த்துவைக்க மாட்டார்கள். ஆடம் பரப் பிரியராக இருந்து, வாழ்க்கையை அனுபவிக்க செலவு செய்வர். மூத்த சகோதர ரால் நஷ்டம் அல்லது மூத்த சகோதரர் இழப்பை சந்திப்பர். மூத்த சகோதரரை நம்பி தான் ஈட்டிய பணத்தை இழப்பர். மூத்த சகோதர ரின் குடும்பத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப் பணிப்பர். பிள்ளைகளால் பல நஷ்டங்களையும் கஷ்டத்தையும் அனுபவிப்பர். அவர்களுக்காகப் பணவிரயம் ஏற்படும். சுபகிரக வலுப்பெற்றால் தான தர்மம், மூத்த சகோதரர், இளைய மனைவி, குழந்தைகளுக்கு சுபச்செலவு செய்து இன்புற்றி ருப்பர். மனைவிக்கு நஷ்டத்தையே தருவர். பாவகிரக வலுப்பெற்றால், கூடா நட்பால் வாழ்க்கை கேடாய் முடியும். நல்ல தசை நடந்தால் நஷ்டம், பாதிப்பைத் தராது.

தொடர்ச்சி அடுத்த இதழில்...