Advertisment

நவகிரகங்கள் 9-ல் நிற்கும் பலன்கள்! -க. காந்தி முருகேஷ்வரர் -சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/benefits-standing-navagraha-9-ka-gandhi-murugeshwarar-continuation-last

சனி

ஒன்பதிலுள்ள சனி தந்தையை ஆட்டிப்படைக்கும். தந்தை சொல்ல முடியா துயரத்தை அடைவார். தந்தைக்கு ஜான் ஏறினால்முழம் வழுக்கும். நன்றாக இருக்கும் பலருக்கு, குழந்தை ஜாதகத்தில் ஒன்பதில் சனி நின்று பிறந்தால், அது வளர வளர தந்தையின் வாழ்க்கை இறங்குமுகத்தை சந்திக்கும். பொருளாதாரரீதியாக நன்றாக இருப்பதுபோல் தோன்றி னாலும், பக்கவாதம் போன்ற நோயால்,விபத்தால் நடமாட் டத்தை முடக்கிவிடும். சிரமமான பல தீமைகளை வழங்குவது ஒன்பதில் சனி நின்று கெட்டுப் போவதால்தான். மக்களால் தூற்றப்படும் நிலையைத் தந்துவிடும். மக்கள் ஆதரவின்றி, மக்களிடம் கையேந்த வைக்கும். பணத்திற்காகவோ, பசிக்கா கவோ, ஓட்டுக்காகவோ பிச்சையெடுக்க வைத்தே தீரும். மக்களின் எதிரியாக மாற்றிவிடும். வாழ்க்கை யில் பல நஷ்டத்தையும், கஷ்டத்தையும் தந்தைக்குத் தந்துவிடும். ஒன்பதில் பாவகிரகங்கள் வலுப்பெற்று ஏதாவது தொடர்பு கொண்டால், உடலை பலவீனப் படுத்தி, மனதை பயமுறுத்தி, பைத்தியகாரனாக மாற்றிவிடும். பாக்கியக் குறையைத் தந்து, தந்தையில்லாமல்,தந்தையின் பிரிவைத் தரும். மனதை வாட்டும்

சனி

ஒன்பதிலுள்ள சனி தந்தையை ஆட்டிப்படைக்கும். தந்தை சொல்ல முடியா துயரத்தை அடைவார். தந்தைக்கு ஜான் ஏறினால்முழம் வழுக்கும். நன்றாக இருக்கும் பலருக்கு, குழந்தை ஜாதகத்தில் ஒன்பதில் சனி நின்று பிறந்தால், அது வளர வளர தந்தையின் வாழ்க்கை இறங்குமுகத்தை சந்திக்கும். பொருளாதாரரீதியாக நன்றாக இருப்பதுபோல் தோன்றி னாலும், பக்கவாதம் போன்ற நோயால்,விபத்தால் நடமாட் டத்தை முடக்கிவிடும். சிரமமான பல தீமைகளை வழங்குவது ஒன்பதில் சனி நின்று கெட்டுப் போவதால்தான். மக்களால் தூற்றப்படும் நிலையைத் தந்துவிடும். மக்கள் ஆதரவின்றி, மக்களிடம் கையேந்த வைக்கும். பணத்திற்காகவோ, பசிக்கா கவோ, ஓட்டுக்காகவோ பிச்சையெடுக்க வைத்தே தீரும். மக்களின் எதிரியாக மாற்றிவிடும். வாழ்க்கை யில் பல நஷ்டத்தையும், கஷ்டத்தையும் தந்தைக்குத் தந்துவிடும். ஒன்பதில் பாவகிரகங்கள் வலுப்பெற்று ஏதாவது தொடர்பு கொண்டால், உடலை பலவீனப் படுத்தி, மனதை பயமுறுத்தி, பைத்தியகாரனாக மாற்றிவிடும். பாக்கியக் குறையைத் தந்து, தந்தையில்லாமல்,தந்தையின் பிரிவைத் தரும். மனதை வாட்டும் சம்பவங்கள் அடிக்கடி நிகழும்.

Advertisment

சனி பலவீனமடைந்து தன் தீய வலுகுறைந்து, சுபகிரகப் பார்வையால் சுபத்தன்மை பெற்று விட்டால் அதிர்ஷ்ட யோகம் பெறுவார். அரசாங்கத் தில் உயர்பதவி, வேலையாட்களுடன்கூடிய கம்பீரமான- அந்தஸ்துகொண்ட வாழ்க்கையை தந்தைக்கும் ஜாதகருக்கும் தருவார். நல்ல தசாபுக்தி வந்தால் குடிசையில் இருப்பவரையும் கோடிஸ்வர னாக மாற்றுவார்.

ss

ராகு

ஒன்பதில் ராகு நிற்பது பல வழிகளில் நன்மை யைத் தரும் அற்புதமான அமைப்பு. தந்தைக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், திடீர் நன்மைகளையும் தரும். தந்தைக்கு இரு மனைவிகளைக் கொடுப்பார். இரட்டை எண்ணம், இரட்டை வாழ்க்கையைத் தந்து சந்தோஷமாக வாழவைப்பார். ஜாதகர் வெளிநாட்டு வாழ்க்கையில் இன்பகரமாக இருப்பார். குடும்பத்தைப் பிரிந்து வாழ்வதுதான் நஷ்டம், கஷ்டமே தவிர, பொருளாதார வளர்ச்சி, பெரிய பதவி, புகழ் போன்ற அனைத்து சுகத்தையும் வாரி வழங்குவார். பாக்கிய வீடான ஒன்பதில் ராகு நின்றால், சாதாரண மனிதனையும் புகழின் உச்சிக்குக் கொண்டுபோகும். விபரீத ராஜயோகம் பெற்றவர்களில் பலருக்கு, ராகு தசை பல அனுபவங்களைக் கொடுத்து பக்குவப்படுத்தி வளர்ச்சியைத் தரும். வீடு, வாகன வசதி, பதவி, புகழ், அந்தஸ்தை எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைத் தேடித்தருவார். ஒன்பதில் ராகு கெட்டுநின்றால், தாய்- தந்தை பிரிவை ஏற்படுத்தும். அதில் ராகு தசையும் நடந்தால் தாய்- தந்தைக்கிடையே சண்டை, சச்சரவு, பிரிவை உண்டாக்கும். கெட்டவர்கள் தொடர்பால், கெட்ட வழிகளில் போய் அவமானத்தை அடைவர். தவறான, முறையற்ற உறவுகளைத் தந்தை- தாய்க்குக் கொடுத்துகுடும்பத்தைக் கெடுத்து விடுவார். நிம்மதியற்ற சூழலே அமையும். "நீயெல்லாம் ஆம்பளையா? உன்னால எந்த நன்மையும் இல்லை. மற்ற ஆம்பளைகளைப் பார்த்து குடும்பம் நடத்து. உனக்கெல்லாம் எதுக்குயா குடும்பம்... பிள்ளை?' என, கேட்கக்கூடாத- மனம் வெறுக்கும் கேள்வி களைக் கேட்டு தந்தையை தாய் கொல்வார். தசை முடியும்போது கொடுத்த சந்தோஷத்தை மறக்குமளவுக்கு அதிர்ச்சிகரமான சம்பவங் கள் நடந்து கெடுத்துவிடும். அடுத்துவரும் குரு தசையும் சரியில்லாமல் போனால் அதிக கஷ்டத்தைத் தந்துவிடும்.

கேது

ஒன்பதில் ஞானகாரகனான கேது அமர்ந்து தசை நடந்தால், புதன் தசையில் பெற்ற வெற்றி மயக்கத்தையோ, தோல்வி பயத்தையோ முற்றிலும் மாற்றி ஞானத் தைத் தந்துவிடும். நாத்திகத்தி-ருந்து ஆன்மிகத்திற்கு மனதைச் செலுத்தச் செய்யும். யாருமறியா உள்ளெண்ணத்தை வெளிக் கொண்டுவந்து உலகுக்கு உணர்த்தும் உத்தமராக, உயர்ந்த எண்ணம் கொண்ட ஞானியாக மாற்றிவிடும். இவரது பிரசங்கங்கள் உலகப்புகழ் கொடுக்கும். நற்சிந்தனை, போதனைகள் வழியில் நடக்கும் தொண்டர் கள், சீடர்கள் பின்தொடர்வர். சுபத்தன்மை பெற்ற கேது சந்தோஷமான குடும்ப வாழ்க்கை யைத் தரும். பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று ஞானத்தைக் கற்றும் பெற்றும் போதித்தும் வருவர். மனித வாழ்க்கை ஒன்றுமே இல்லை; இறந்தால் அத்துடன் உலகம் நம்மை மறந்துவிடும் என்பதைத் தெளிவாகப் புரியவைப்பார். பலமில்லாத பாவகிரகத் தொடர்பால் கெட்டுப்போன கேது ஒன்பதில் நின்றால், நன்றாக இருந்த உடல்நிலையை மாற்றி ரணமாக்கிவிடுவார். கஷ்டத்திற்குமேல் கஷ்டத்தைத் தருவார். கடவுள்மீது கொண்ட பக்தி அகன்று, விரக்தியாகி வெறுத்துப் பேசவைத்துவிடுவார். தன் தசையில் ஜாதகருக்கு எப்படிச் சொன்னால் உறவுகள், வாழ்க்கை புரியுமோ அப்படிப் புரியவைப்பார். உடலைக் கெடுத்து அல்லது மனதைக் கொடுமைப்படுத்தி, யார்மீதும் எதன்மீதும் பற்றற்ற நிலைக்குக் கொண்டுவந்து விடுவார். சிலருக்கு விபரீத முறையில் "நடப்பது நடக்கட்டும்' என்கிற மனநிலையைக்கொண்டு வந்து, தசை முடிவில் கெடுத்ததையெல்லாம் கொடுத்துச் செல்வார். ஒன்பதில் நிற்கும் ராகு- கேதுக்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றம், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் தந்து வியக்கவைப்பர்.

பரிகாரம்

ஒன்பதாம் அதிபதி எந்த கிரகம் என்பதை யறிந்து, நன்மைதரும் நிலையில் இருக்கி றதா, தீமைதரும் நிலையில் இருக்கிறதா என்பதைத் தெரிந்து நடந்துகொண்டால், பாக்கியக் குறையின்றி வாழலாம். தர்ம சிந்தனையை அதிகப்படுத்தி, ஆன்மிக செயல்கள் செய்தால், பலமற்ற ஒன்பதாம் கிரகம் வலுப் பெற்று தன் நிலையை மாற்றி நன்மைகளை வழங்கும். எந்த தெய்வமாக இருந்தாலும், நம்பிக்கையுடன் முழுதாய் சரணடைந்து வாழ்வது பெரிய நம்பிக்கையையும், தன்னம்பிக்கையும் கொடுத்து, குடும்பம் மற்றும் சுய வளர்ச்சியைப் பெறவைக்கும்.

செல்: 96003 53748

bala200821
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe