ன்பதாமிடம் என்றாலே பிதுர் ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் மற்றும் தர்ம ஸ்தானம் என்பதைச் சொல்லுமிடமாகத் தான் இருக்கும்.தந்தை, பிதுர்வழி சொத்து கள் ஒன்பதாமிடத்தின் சுப- பாவத் தன்மை யைப் பொருத்துதான் கிடைக்கும். தர்மம் செய்வது, சுய சம்பாத்தியத்தில் நிலம் வாங்குதல், பூர்வீகத் தோட்டம், கிணறு, குளம் வெட்டுதல் போன்றவற்றுக்கும் ஒன்பதாமிடம் வலுப்பெறுதல் முக்கியம். ஆலயப்பணி, வேதக் கல்வி, குரு உபதேசம் கிடைக்கவேண்டுமானால் ஒன்பதாமிடம் சிறப்பாக அமையவேண்டும்.

நான்காமிடமான சொந்தக்காரரிடம் கஞ்சத்தனமாக இருக்கும் சிலர், ஒன்பதாமிட மான தானதர்ம ஸ்தான வலுவால் ஊருக்கே வள்ளலாக இருப்பர். உண்மையான மக்கள் சேவை, ஆன்மிக ஈடுபாட்டால்மகான் களின் தரிசனம் பெறுதல் போன்றவை ஒன்பதாமிட தசை நடக்கும்போது கிடைக் கும். மகான்போல வாழும் சூழலை ஏற்படுத் தும். உடன்பிறந்தவர் உதவிக்கு ஒன்பதாமிட பலம் முக்கியம். அப்போதுதான் சகோதரர் உதவிசெய்வார். வாழ்க்கையில் வெற்றி பெறுதல், தோல்வியடைதல், அதனை ஏற்கும் மனநிலை என வாழ்க்கைப் பயணத் தைத் தீர்மானித்து வாழவைக்க ஒன்பதாமிடம் சுபமாக இருத்தல் அவசியம். ஒருவர்பூலோகத்தில் பிறந்து, அனைத்து பாக்கியங்களையும் அடையமுடியுமா, முடியாதா என்பதை ஒன்பதாமிடத்தின் நிலையை வைத்தே கண்டறியலாம்.

சூரியன்

சூரியன் தந்தையைக் குறிக்கும்கிரகம். தந்தை காரக கிரகமான சூரியன், தந்தையைப் பற்றித் தெரிந்துகொள்ளக்கூடிய ஒன்பதாவது ஸ்தானத்தில் அமர்ந்தால்- அதாவது காரக கிரகம் காரக ஸ்தானத்தில் அமர்ந்தால் காரக பாவ நாஸ்தியை உண்டாக்கிவிடும். அதனால்ஸ்தான பலத்தையும், ஸ்தானத் திற்குரியவரான தந்தையையும் கெடுக்கும். தந்தையின் இழப்பைத் தரும். இறந்துவிடுவார் அல்லது தந்தையைப் பிரிந்து வாழநேரும். தாயைவிட்டு வேறு பெண்ணை தந்தை திருமணம் செய்வார் அல்லது தாயார் வேற்று நபருடன் வாழ்வார் அல்லது தந்தை வெளிநாட்டில் இருப்பார்.

Advertisment

guru

தந்தையின் நிலை என்னவென்று தெரியவேண்டுமானால், ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நிலையையும், ஒன்பதாம் அதிபர் இருக்கும் நிலையையும் அறிந்தால் சொல்லிவிடலாம். சிம்ம லக்னக்காரருக்கு ஒன்பதாமிடமான மேஷத்தில் சூரியன் உச்சம்பெறுவார்.தனுசு லக்னக்காரருக்கு சிம்மத்தில் சூரியன் ஆட்சிபெறுவது தந்தையின் வாழ்க்கையைக் கெடுக்கும். சிலரின் தந்தையை உதவாக்கரையாய்க்கூட ஆக்கிவிடும். கும்ப லக்னக்காரருக்கு ஒன்பதில் சூரியன் நீசம்பெற்றாலும் தோஷம்தான். ஒன்பதில் சூரியன் என்றாலே தீமைதான். லக்னத்திற்கேற்ப சுபகிரகப் பார்வை, சேர்க்கை நன்மைகளைத் தரும்; பாவகிரகப் பார்வை, தொடர்பு தீமைகளைத் தந்துவிடும். ஒன்பதாமிடத்து சூரியனை பாவகிரகங்களான சனி, செவ்வாய், ராகு- கேது ஆகியவை ஏதாவது ஒருவகையில் தொடர்புகொண்டால் தந்தையை பாதித்தே தீரும்.

ஜாதகத்தில் முதன்மை கிரகமான சூரியன் பாதிக்கப்படுவது, ஜாதகரின் வாழ்க்கையைப் போராட்டமாக மாற்றும்.

Advertisment

அதேபோல் ஜாதகரின் குடும்பத் தலைவரான தந்தையையும் பாதிக்கும். சூரியன் கெட்டால் தந்தையானவர், தான் ஆசைப்பட்ட கனவு, லட்சியத்தை அடையாமலேயே இறப்பார். சூரியன் நின்ற இடத்திற்கு முன்னும் பின்னும் பாவகிரகங்கள் நின்றா லும் தந்தையின் வாழ்க்கையையும், ஜாதகரின் வாழ்க்கையையும் கெடுக்கும். சிறு வயதில் தந்தையை இழந்துவிட்டால், ஜாதகர் வாழ்நாள் முழுவதும் பல இன்னல் களை சந்தித்தே தீரவேண்டும். சூரியன் கெட்டால் சிறு வயதிலேயே வருமானம் தேடவேண்டிய சூழல் வரும். அதேபோல் நீசபங்கத்தால் சாதித்த பலர் தந்தையின் இழப்பு, பிரிவு, தந்தையால் தொல்லை, அவமானம் அடைந்தவர்களாய் இருப்பர். மொத்தத்திலே ஒன்பதில் சூரியன் பலம்பெறுவதோ, பாதிக்கப்படுவதோ நன்மையைத் தராது.

தோட்டத்திற்கு கிணறு வெட்ட, வீட்டிற்குத் தண்ணீர் கிடைக்க கிழக்கு, வடகிழக்கு திசையில் தோண்டினால் தண்ணீர் கிடைக்கும். வாஸ்து சாஸ்திரப்படி பொதுவாக எல்லாருக்கும் சனிமூலை அல்லது ஈசானிய மூலையான வடகிழக்கு மூலையில் கிணறு, போர்வெல், குடிநீர் கீழ்நிலைத்தொட்டி அமைத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக சூரியன் பலமிழந்தவர்கள் வாஸ்துப்படிஅமைத்துக்கொண்டால் தந்தைக்கு நன்மை, தந்தையால் யோகம் பெறுவார். தந்தை நல்லவழியில் சம்பாதித்து வள்ளல் தன்மையுடன் புகழ்பெறுவார். பணம் வந்துகொண்டே இருக்கும். அசுத்த நீர் கலப்பிருந்தால் வீண்செலவுகளையும் அவமானத்தையும் தரும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிக்கொண்டே இருக்கும். ஈசானியம் கெட்டால் குடும்பத் தலைவர்- குறிப்பாக குடும்பத்திலிருக்கும் ஆண்களை அவமானப்படுத்தும். அதனால் பெண்கள் மனநிலை பாதிக்கும். ஆன்மிக நாட்டம் ஆறுதல் தரும். சூரியன் வலுத்து சுபபலம் பெற்றால் அரசியல் தலைவராகவோ, ஆன்மிகத் தலைவராகவோ, வள்ளலாகவோ மாற்றிவிடும்.

சந்திரன்

ஒன்பதாமிடத்தில் சந்திரன் இருந்தால், வளர்பிறைச் சந்திரனானால் லட்சுமி கடாட்சம் ஏற்படுத்தும். தர்மம் செய்வார். சுகமான, அந்தஸ்துமிக்க வாழ்க்கையைத் தரும். தேய்பிறைச் சந்திரன் என்றால் தந்தை ஏற்றம் பெறுவதையும், ஏமாந்துபோய் வீழ்ச்சியடைவதையும் காணவேண்டிய சூழல் அமையும். தந்தைக்கு குழப்பமான, நிலையில்லா வாழ்வைத் தரும். பொதுவாக சந்திரன் வளரும், தேயும் என்பதால், தந்தைக்கு ஒவ்வொரு விஷயத்திலும் அடிக்கடி ஏற்ற- இறக்கங்கள் ஏற்படும். தந்தையானவர் தாய்க்கு அடிமையாக வாழவேண்டும் அல்லது தாயுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு நாள் ராஜா, சில நாட்களில் கூலிக்காரனாய் மாற்றும். மாரகாதிபதி, பாதகாதிபதி தசையாக வந்தால் உடலையும் மனதையும் பாடாய்ப்படுத்தும்.

ஒன்பதில் சந்திரன் நின்று குருவின் பார்வையைப் பெற்றால் குருச் சந்திர யோகமாகி பணம், புகழை அள்ளித் தருவார். செவ்வாய் பார்வை சந்திர மங்கள யோகத்தைத் தருகிறது. சூரியன் ஏழாமிடப் பார்வையால் சந்திரனைப் பார்த்தால் பௌர்ணமி யோகத்தைத் தந்து புகழையும் அந்தஸ்தையும் வழங்கிவிடுவார். தாய்- தந்தையால் அதிர்ஷ்ட யோகமுண்டு. சுபகிரகப் பார்வை அழகு, சொகுசான வாழ்க்கையைத் தரும். பாவகிரகப் பார்வை, சேர்க்கை, தொடர்புகள் தாய்- தந்தையின் உடல்நலத்தையும், ஜாதகரின் உடல், மனநிலையையும் கெடுக்கும்.

செவ்வாய்

ஒன்பதில் உள்ள செவ்வாய் தந்தைக்குப் போராட்டமான வாழ்க்கையைத் தரும். உணர்ச்சிமிக்கவராக மாற்றும். முன்னோர் சொத்துகள் பலவழிகளில் சேதத்தை சந்தித்திருக்கும். பாவகிரகப் பார்வை இருந்தால் முன்கோபத்தால் தந்தை, தந்தைவழி எதிரிகளால் பாதிக்கப்படுவார். நிலம் சம்பந்தமான ஏதாவது பிரச்சினையைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். நிலத்தால்பங்காளிப் பகையைஉருவாக்கி, நீதிமன்றம்வரை செல்ல வைத்து, அலைக்கழித்து அலைய வைப்பார். பாவகிரக வலு எதிரிகளை உருவாக்கி ரத்தம் சிந்த வைக்கும். சனி, செவ்வாய் பார்த்தால் தந்தை கொடூரமானவராக மாறி தொல்லை தருவார். ஒன்பதாமிடத்தில் செவ்வாய் நின்று, சூரியன் பார்வையைப் பெற்றால், பெண்களுக்கு மாங்கல்யத்தை பலவீனமாக்கி குடும்பத்தைக் கெடுக்கும். சனி, ராகு- கேதுவும் பார்வை, சேர்க்கை, தொடர்புகொண்டால் தந்தைக்கும், ஜாதகருக்கும் மனஸ்தாபம், சண்டை, சச்சரவை ஏற்படுத்தி குடும்பத்திற்கு பாக்கியக் குறை மற்றும் சொல்லமுடியா பல துயரத்தைத் தரும். கஞ்சனாக மாற்றும். யார்மீதும் அக்கறையற்றவராக மாற்றும்.

குரு பலம்பெற்று செவ்வாயைப் பார்த்தால் குருமங்கள யோகமாகி பணம், புகழ், சந்தோஷத்தை வாரி வழங்கும். நிலபுலன்கள் அதிகம் பெறுவார். மிராசுதாராக மாற்றும். அரசாங்க அதிகாரம், அரசுப் பணி, அரசுவழி யோகத்தைத் தந்து நிம்மதியான வாழ்க்கையை தந்தைக்கும் ஜாதகருக்கும் தரும். செவ்வாய் தசையில் குரு புக்தியானது யோகத்தைத் தந்துவிடும். கூடுதலாக சுபகிரகங்கள் வலுப் பெற்றாலோ, பார்வை, சேர்க்கை, தொடர்புகொண்டாலோ அதீத பணம், புகழ், அந்தஸ்தை வழங்கும். தந்தைக்கு புகழ் கிட்டும். அசைக்கமுடியாத நபராக மாற்றும். விருது பெறுவார். வள்ளல் தன்மையைத் தரும். ஆன்மிக நாட்டம், அன்பைப் பெருக்குதல் நடை பெறும். தீர்த்தயாத்திரை செல்ல யோகம் கிடைக்கும்.

புதன்

ஒன்பதில் புதன் சுபமாகி பலம்பெற்றால், தன் அறிவால் பெரும்புகழ், அந்தஸ்து பெறுவார். பல கதைகளைக் கற்றறிந்து அதன்மூலம் மக்களுக்குப் பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்குவார். அனைத்து பாக்கியங்களும் பெறுவார். தந்தைக்கு நன்மையை வழங்கும். தந்தையால் யோகம் பெறுவார். தந்தையால் கல்வியறிவு, புத்தக அறிவு, அனுபவ அறிவு பெறுவார். தந்தை இருந்தால் தந்தையால் பயிற்றுவிக்கப்படுவார். தந்தை இல்லையென் றால் தானே பட்டறிவால் பலம்பெறுவார். புதன் பாக்கிய ஸ்தானத்தில் நிற்பது ஞானியாக மாற்றும். அறிவுசார்ந்த விஷயங்களில் பலத்தைத் தரும். பல நல்ல புத்தகங்களை எழுதுவார். புதன் நிலையைப் பொருத்து அறிவு, ஆன்மிகப் புத்தகங்களை எழுதி தானே வெளியிடுவார். நல்ல தசாபுக்தியும் இருந்தால் இவரது கருத்துகளை உலகமே ஏற்கும். அரசாங்க பாராட்டு, விருதுகள், பதவி உயர்வு பெறுவார்.

லக்னத்திற்கு ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதியாக புதன் இருந்து ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால், தந்தைக்கு பாதிப்பு, தந்தையால் பாதிப்பு ஏற்படுத்தும். எவ்வளவு கற்றாலும், கற்ற கல்வியால், பெற்ற அறிவால் நன்மை கிடைக்காது. புதன் கெட்டால் எல்லா விஷயங்களிலும் நுனிப்புல் மேய்ந்து, தனக்கு எல்லாம் தெரியுமென நினைத்து எதுவும் தெரியாதவராக மாற்றும். "எனக்கு எல்லாம் தெரியும்' என கர்வமாகப் பேசி அத்தனையும் இழந்து நிற்பார்.

பாவகிரகம் வலுப்பெற்று தொடர்புகொண்டால் வாய்ப்பேச்சால் வாய்ப்புகளை இழப்பார். "அவனுக்குதான் எல்லாம் தெரியுமே... சொன்னா கேட்க மாட்டான்' என நண்பர்கள், உறவினர்கள் விலகி நிற்பர்.ஒன்பதில் புதன் கெட்டு மேதாவி போல பேசுபவர்களுக்கு தசா புக்தியும் சரியில்லாமல் போனால் அனாதையாக்கப் படுவார்.

மதபேதமின்றி ஆன்மிகத் தலங்களுக்கு அடிக்கடி சென்றால், நல்லபுத்தி, நல்ல எண் ணம் ஏற்படும்; நல்லது தானாக நடக்கும்.

குரு

ஒன்பதிலுள்ள குரு, சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் ஆற்றலைத் தருவார். "எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான்' என்பதைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுப்பார்.

தந்தையை பலம் மிக்கவராக மாற்றும். சிறந்த நிர்வாகியாக செயல்படுவார். குரு சுபபலம் பெற்றால் ஆலோசனை வழங்கும் அமைச்சராகவும், அனைவரையும் ஆட்டிவைக்கும் மன்னராகவும் மாற்றுவார். ஜாதகர் ஒழுக்கமான பழக்கவழக்கங்கள் கொண்டவராகஇருப்பார். நல்ல விசுவாசியாக, அரசுக்கு நேர்மையான முறையில் நடந்துகொள்வார். நல்ல எண்ணங்களே இவருக்கு நிறைய வெற்றி களைத் தந்துவிடும். தன்னை நம்பி வந்தவர் களைக் கைவிடமாட்டார். வாக்கு கொடுத் தால் காப்பாற்றுவார். ஒன்பதில் குரு எதிர் பாராத அதிர்ஷ்டம், நல்வாழ்க்கையை வழங்குவார்.

ஒன்பதில் குரு கெட்டால், புத்தி கெட்ட வராக, மந்தமாக செயல்படும் நிலையையே தரும். சோம்பல் எண்ணத்தைக் கொடுத்து, தானும் கெட்டு, தன்னை சார்ந்தவர் களையும்கெடுக்கவைக்கும். நற்சிந்தனையற்ற வர். பலமடைந்த குருவை பாவகிரகங்கள் பார்த்தால் துன்பத்தையே தரும். அனைத்து பாக்கியங்களையும் அவசர முடிவால் தெரிந்தே ஏமாறும் சூழலைத் தரும். புலன் களை அடக்கத்தெரியாமல் வாழ்க்கையைத் தானே அழித்துக்கொள்வார். தீய சிந்தனை தவறான பாதைக்கு அழைத்துச்சென்று, அதிலிருந்து மீளமுடியாதவராக மாற்றி விடும். குருவால் கோடி நன்மையும் உண்டு.

குரு கெட்டால் இருப்பதையும் இல்லாம லாக்கிவிடும்.

சுக்கிரன்

ஒன்பதில் சுக்கிரன் இருந்தால் நல்ல எண்ணம் இருக்கும். தன்னைப்போல உள்ள பிறரால் லாபமடைவார். அழகான, ஆடம்பர மான, சொகுசான வாழ்க்கை உண்டாக்கும். பாக்கிய ஸ்தானத்திலுள்ள சுக்கிரன் அழகான, வசதியான பெண்ணை மணக்கும் பாக்கியத்தை வழங்கும். தந்தையின் வளர்ச்சி, ஜாதகர் வளர வளர அபரிதமானதாக இருக்கும். அன்பான குழந்தைகளைத் தந்து இன்பமயமான வாழ்க்கையைக் கொடுக்கும். சுக்கிரன், சுபமாகி வலுப்பெற்றால் வெளிநாடு சென்று வசதியான வாழ்க்கை பெறுவார். சொர்க்கத்தில் வாழும் வாழ்க்கைபோல சுக்கிரன் சுகங்களை வாரிவழங்குவார்.

அனைத்துவித சுகபோகங்களையும் வழங்கும். பெண்கிரகமான சுக்கிரன், பெண்தெய்வ வழிபாடுகளால் நன்மைகளை அள்ளித் தருவார். பாட்டி, தாய், சகோதரி, மனைவி, மகள், பேத்தி, தோழி மற்றும் பெண்களால் யோகம் பெறுபவர்கள், சுக்கிரனின் ஆதிக்கம், சுபபலம் பெற்றவர்களாக இருப்பர்.

ஒன்பதில் சுக்கிரன் பலமின்றி இருந்து பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டால், பெண்களால் அவமானம் ஏற்படும். அனைத்து பாக்கியங்களையும் இழந்து வாடுவர். வறுமை, இருந்தும் அனுபவிக்கமுடியாமல் தவிப்பது, சதா சிக்கல்களிலேயே சந்தோஷத்தை இழத்தல், பயந்து பயந்து, முழு சுகத்தை அனுபவிக்காமல் ஒருவித பீதியிலேயே அலைந்துதிரிவர். வெளிநாடு சென்றாலும் அங்கேயும் துன்பப்படுவர். தெய்வங்களை வெறுப்பர். தந்தையைப் பிரித்து வைக்கும். சுக்கி ரன் கெட்டு விபரீத ராஜயோகம் பெற்றால், அடுத்தவருக்குச் சொந்தமான சொத்துகளை, சொகுசான வாழ்க்கையை கூச்சமின்றி சந்தோஷமாக அனுபவிப்பர். தசாபுக்தி சரியில்லாது போனால் தண்டனை பெற்று அனைத்தையும் இழந்து நிற்பர்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 96003 53748