மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். மேஷ ராசியின் 12-ஆமிடத்தில் சனி அமர்வு. மேஷ ராசியின் செவ்வாய்க்கும், சனிபகவானுக்கும் வெகு பகை உண்டு. இப்போது இந்த செவ்வாய், விரய வீட்டில் சனி வந்து உட்கார்ந்து உள்ளார். விடுவாரா சனி. ஒரு கை பார்த்துவிடுவார். முத-ல் வெட்டித்தனமாக அலைவதையும், வீண் அலைச்சலையும் கட்டுப்படுத்துவார். அப்புறம் முக்கியமாக, காசு பண செலவு வகைகளை ஒரு கட்டுக்குள் வைத்து விடுவார். இந்த செலவு கட்டுக்குள் வருவதற்கு, சனி, முதலில் வேலைக்கு ஆள் வைத்துக்கொள்வதை குறைத்து விடுவார். அப்புறம் செல்போனில் சதா பார்ப்பதை கட்டுப்படுத்துவார். உங்கள் வேலையை நீங்களே செய்யுமளவிற்கு உங்களை ட்யூன் பண்ணி விடுவார். கார் வைத்திருப்பவர்கள், டிரைவரை நீக்கிவிட்டு அவர்களே காரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள். அல்லது பொது போக்குவரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிடுவர். இதைப்போலவே, அனைத்து செலவுகளையும் குறைத்துவிடுவார். இவ்விதம் வேலையே பொழுதுக்கும் சரியாக இருப்பதால், வீண் சண்டை போடாமல், எதிரிகள் இல்லாமல் போய்விடுவர். இன்னொன்று, நிறைய வேலை செய்வதால் உடல் சுறுசுறுப்பாகி, நோய்கள் நீங்கிவிடும். இதை பார்த்த உங்கள் மனைவியும், சற்று அனுசரணையாக இருப்பாள். உங்கள் உழைப்பு, தரும் நம்பிக்கை, "சாமி கும்பிடணுமா எனும் குயுக்தியான யோசனையைத் தரும். இந்த சனி, உங்களை ஒழுங்காக தெய்வ தரிசனம் எல்லாம் செய்யவிடமாட்டார். வெளிநாட்டு விஷயங் களில், கவனமாக இருங்கள்.
வாரிசுகள், பேரன்- பேத்திகள் என இவர்களிடம் ரொம்ப நிதானமாக நடந்து கொள்ளுங்கள். மேஷ ராசிக்கு, விரய ஸ்தானத்தில் அமர்ந்த சனி, எதிர்மறை செயலை தருவார். விரய வீடு என்பது வேகமான அலைச்சல், செலவு, பயணத்துக்குரிய வீடு. அதில் மந்த காரணான சனி அமர்ந் திருப்பது நிச்சயம் மேஷ ராசியாரை ஒருவித குழப்பத்தில் ஆழ்த்தும். ஏழரைச்சனியின் பிடியிலும் உள்ளீர்கள். எனவே சற்று நிதானமாக, கவனமாக இருப்பது நல்லது. அருகிலுள்ள சனீஸ்வரருக்கு, விளக்கேற்ற உதவும். அனைத்து பொருளும் வாங்கிக்கொடுங்கள். சனி பெயர்ச்சியானவுடன், முதல் ஒரு மாதத்தில் உங்கள் தொழில், அரசியல், உயர்கல்வி, சமையல், ஓவியம் சம்பந்தம் உள்ளோர் என இந்த வகைகளில் ஒரு மாற்றம் உண்டு. எனினும் இந்த மாற்றங்கள் உங்களுக்கு ஏற்றம் தரும். அடுத்த ஒரு வருடத்திற்கு, உங்கள் தொழிலின் குறிக்கொளை நிறைவேற்ற அரும்பாடுபடுவீர்கள். அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் மிக பிராயாசையுடன், தங்கள் ஆசைகள் நிறைவேற மிக அலைவார்கள். உங்கள் நண்பர்கள், ஆதரவாளர்களின் அணுசரணை கிடைக்கும். கொஞ்சம் செலவுசெய்ய வேண்டியிருக்கும்.
உங்கள் தொழில், கௌரவம் என இவை கண்டிப்பாக முதல் இடத்துக்கு வந்தே தீரவேண்டும் என நிறைய மாறுதல் செய்வீர்கள். தொழிலில் உங்கள் கம்பெனி லோகாவை மாற்றி வடிவமைப்பீர்கள். சிலர் பெயரையே மாற்றி, கடைக்கும் புதுப்பெயர் வைத்துவிடுவீர்கள். அரசியல்வாதிகள் குறைந்தது அஞ்சாறு கட்சிக்கு மாறி, மாறி கலர், கலர் துண்டு போட்டு கொள்வர். 2026 மே 17 வரை இந்தமாதிரி கூத்தடிப்பீர்கள். அதற்கடுத்த ஒரு வருடம், இந்த அலைச்சலுக்கு ஒரு முடிவு கட்டப்படும். இப்போது, ஒரு இடமாக செட்டிலாகி விடுவீர்கள். எல்லா கட்சிக்கும் மாறி அலைந்து கடைசியாக உங்களுக்கு தோதுப்படும் ஒரு கட்சியை, அரசியல்வாதிகள் கண்டுபிடித்து விடுவர். ஒரு முதலாளி ஸ்தானம் கிடைத்து விட்ட திருப்தி, வணிகர்களுக்கு ஏற்படும். இதனால் நிறைய வேலையாட்களை வேலைக்கு நியமித்து கொள்வர். பதட்டம், படபடப்பு குறைவதால், நோய் மறையும். கடன் நீங்கும். சிறைக்கு சென்றவர்களும் மருத்துவமனை சென்றவர்களும் வீடு திரும்புவர். சனி வக்ர காலத்திலும் உங்களுக்கு நல்லதே தருவார்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரனும் சனியின் நண்பர்கள். இந்த சுக்கிரனின் வீட்டில்தான் சனி உச்சமடைவார். எனவே உள்ளார்ந்த தோழமை கொண்டவர்கள். ரிஷப ராசியின் 11-ஆமிடத்தில் தனி அமர்வு. 11-ஆமிடம் என்பது நீங்கள் என்ன நினைக் கிறீர்களோ அதனை அழகாக நிறைவேற்றி தரும் இடம். லாப ஸ்தானமும் ஆகும் இந்த சனி உங்கள் ராசியை பார்ப்பதால் சற்று சோம்பேறித்தனம் வந்துவிடும். பள்ளி குழந்தைகள் சற்று மறந்துவிடுவர். இதனால் சில வாரிசுகளால் ஏற்படும் கவலைகளை தவிர்க்கமுடியாது. உங்கள் காதல் களேபரமாகும். கலையுலகினர் ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகி, பின் அதிலிருந்து மீண்டுவருவார். உங்கள் பூர்வீக இடத்தில் பண விஷயமான ஒரு குற்றச்சாட்டை, இந்த சனிபகவான் நீக்கிவிடுவார். உங்கள் தாயாரிடம் சற்று கருத்து வேறுபாடு வரும். அது உங்கள் திருமண விஷயம் அல்லது காதல் சம்பந்தமாக இருக்கும். அரசாங்கம் உங்கள் மனைமூலம் தொல்லைத்தரும். உங்கள் இளைய சகோதரிமூலம் சிறு சண்டை உண்டு. உங்களில் சிலர், காதல் கல்யாணம் செய்துவிட்டு ஓடலாமா எனும் யோசனை வரும். இப்போது கொஞ்சம் மறதி உண்டாகி, செய்த விஷயங்களை, மறுபடி, மறுபடி செய்வீர்கள். இந்த சனி பெயர்ச்சியில், சினிமா, டிவி போன்ற துறைகளில் இருப்பவர்கள், புதுமுயற்சிகளில் இறங்க வேண்டாம். உள்ளதை காப்பாற்றினாலே போதும். உங்களில் நிறைய ரிஷப ராசியாருக்கு, மருத்துவம் சார்ந்த வேலை கிடைக்கும். மேலும் நிறைய ஜாதகர்கள், நோய் நீங்க பெறுவர். எதிரிகள், அதிலும் குறிப்பாக பெண் போட்டியாளர்கள் விலகிவிடுவார்.
சிலரின் மனை விஷயமான வில்லங்கம் நீங்கும். அரசு கொடுத்துவந்த இம்சை தீரும். உங்கள் தந்தை ஏற்படுத்திய ஒரு சிக்கலை சரி செய்துவிடுவீர்கள். உங்களில் சிலர் மறைவான இணைகளின்மூலம் அனுபவித்த கஷ்டங்கள், ஏதோ ஒரு காரணத்தால் விலக காண்பீர்கள். சிலரின் மருமகன், மருமகள் கொடுத்துவந்த துன்பங்கள் அகன்றுவிடும். வணிகம் பொருட்டு, வேறிடங்களுக்குச் செல்ல நேரிடும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், சொந்த ஊர் வருவர். சில மந்திரிகளின் நிலை குழப்பமடையும். சனி பெயர்ச்சியான ஒரு மாத காலத்திற்கு, அரசியலில் எல்லாவித குறுக்கு வழிகளையும் கையாள்வீர்கள். மேலும் உங்கள் தொழிலில், தேவையான லஞ்சம் கொடுத்து, செழிப்பாக்கி விடுவீர்கள். கோவிலுக்கு போனால், அர்ச்சகருக்கு பணம் கொடுத்து, சாமியை தொட்டுவிட்டு வருவீர்கள். சமையலில் நிறைய கலப்படம் செய்வீர்கள். கவனிக்க வேண்டியவர்களை கவனித்து பதவி உயர்வு வாங்கிவிடுவீர்கள். யாரெல்லாம், பதவி ப்ரமோஷனுக்கு ஆசைப்படுகிறீர்களோ, அவர்கள், இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றாக ஒர்க் ஆகும். அதுபோல் அரசியலில், நுழைய விரும்பும் ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாத நாட்களை நன்றாக தேர்ந்தெடுங்கள். அடுத்த ஒரு வருடம், உங்கள் முழுக்கவனமும் தொழிலின் முன்னேற்றத்தில் மட்டுமே இருக்கும். வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்புகளை வெளிநாட்டில், விற்க வெகுமுயற்சி செய்வர். அதற்கு நீங்கள் பெரு வணிகராக இருக்கவேண்டிய அவசிய மில்லை. வீட்டில் இருந்து கைத்தொழில் செய்பவர்களும் மிக ப்ரயத்தனப்படுவர். இந்த முயற்சிகள் வெற்றியடையும் என்பது தான் இதன் சிறப்பாகும். அரசியல்வாதிகள் தங்கள் கட்சியை, வெளிநாட்டிலும் கடை விரிக்க முனைவர். அதுபோலவே கட்சியை ஆரம்பித்துவிடுவர். இங்குள்ள ஒரு மடாதிபதி வெளிநாட்டில் தங்கள் மடத்தை திறந்துவிடுவார்.
இங்குள்ள கோவில்களின் மாதிரிகள் வெளிநாட்டில் நிறுவப்படும். சில அர்ச்சகர்கள் இதன் பொருட்டு வெளிநாட்டு பாஸ்போர்ட், விஸா எல்லாம் வாங்குவார். ஆக, இந்த வருடத்தில் எந்த ரிஷப ராசிக்காரர்கள் எல்லாம் வெளிநாட்டு தொடர்பு வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் இந்த வருட காலத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அடுத்த வருடம் 2026 மேமுதல் 2027 ஜூன்வரை, இவ்வளவு நாளும் மேற்கொண்ட முயற்சியின் பலனை நன்கு அனுபவிப்பீர்கள். உயர்ந்த பதவியும் பதவி உயர்வும் கிடைக்கும். அரசியலில் மந்திரி பதவி, வட்ட, மாவட்ட, சதுர முக்கோண பதவிகளை பிடித்து, ஒரு நாற்காலியில் அமர்ந்துவிடுவீர்கள். மருமகன்- மருமகள் வருவார்கள். குடும்ப விருத்தி இருக்கும். பணம் நன்கு புரளும் காலகட்டம். ஆனாலும் வெள்ளமாக பண ஓட்டம் இருந்தாலும், சனிபகவான் கொஞ்சமாக மொண்டு குடி என கஞ்சத்தனம் காட்டுவார். சினிமாவில், டிவியில் உள்ளவர்கள் நல்ல பலன் பெறுவர். பங்கு வர்த்தகம் செழிக்கும். ஆசிரியர்கள் மேன்மை பெறுவர். ரிஷப ராசிக்காரரின் நட்பு கிரகமான சனி லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், நல்ல லாபமே தருவார். சனி ஐந்தாமிடத்தைப் பார்த்து அதன் தன்மையை குறிக்கினாலும் 5-ஆமிட சாரத்தில் செல்லும்போது, சினிமா போன்ற கலைத்தொழிலை வளரச் செய்கிறார். அருகிலுள்ள சனீஸ்வரருக்கு, கற்கண்டு போன்ற இனிப்புகள் கொண்டு வணங்கி, விநியோகமும் செய்யவும். வக்ர சனி நேரத்தில், கொஞ்சம் கவனம் தேவை.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இவர் சனிபகவானின் நட்பு கிரகமாவார். மிதுன ராசியின் 10-ஆம் வீட்டிற்கு சனி வந்து அமர்கிறார். அவர் 10-ஆம் வீட்டிலிருந்து உங்களின் 12, 4, 7-ஆம் வீட்டை பார்க்கிறார். இதனால் வீட்டை விற்க வேண்டும் என யோசனை உள்ளவர்கள், அந்த எண்ணத்தை தள்ளி போடுவீர்கள். பண விஷயம் பற்றிய திட்டங்களை, மறுபரிசீலனை செய்வீர்கள். குடும்பத்தை வேறிடம் மாற்றலாம் என்ற பேச்சை நிறுத்துவீர்கள். உங்கள் வீட்டில், இப்போது இருக்கும் வாடகை ஆட்களை மாற்றி, நிறைய வாடகை தரும் புது ஆட்களை அழைத்துவருவீர்கள். வேலைமாற்றவேண்டும் எனும் யோசனை மாற்றம் பெறும். அரசியலில் ஈடுபடவேண்டும் எனும் யோசனை நிறுத்தப்படும் சனி, உங்களின் 12-ஆமிடத்தைப் பார்த்து அதன் செயல்களில் மாற்றம் வராமல் தடுத்துவிடுவார். சனி, உங்களின் 4-ஆமிடத்தைப் பார்த்து வீடு சம்பந்த விஷயங்களை குழப்பச் செய்வார். வீட்டு குத்தகை, வீடு கட்டும் ஒப்பந்தம் இவற்றை வேறுவிதமாக செய்ய செய்வார். உங்கள் தாயாரை பயணமெல்லாம் போகக்கூடாது என்று கூறிவிடுவார். வீட்டில் குழந்தைகளின் பள்ளி கல்வியில் கொஞ்சம் குழப்பம் உண்டாகும். வீட்டில் கிணறு தோண்டவா, போர் போடவா என பெரிய விவாதம் நடக்கும். அரசு சார்ந்த வீடுகளை வாங்க திட்டமிட்டால், அதில் சற்று தகராறு வரும். வேலையில் பதவி உயர்வு கொஞ்சம் காணாமல் போகும். உங்கள் மாமனார். சில விஷயங் களில் சொதப்பிவிடுவார். வாகனங்கள், வீடு இவை ரொம்ப பழுது செலவு உண்டாகும். சனி, உங்களின் 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். உங்கள் திருமணம் கொஞ்சம் தாமதமாகும். சிலரின் காதல் விஷயம் தெரியவரும். அந்த காதல் ஏற்கும்படியாக இராது. அதனால் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும்.
உங்கள் வியாபார பங்குதாரர் உங்களிடம் மனஸ்தாபம் கொள்வார். புதிதாக வணிகம், கடை தொடங்க நினைப் பவர்களுக்கு அது கைகூட வெகுசிரமம் உண்டாகும். சனியின் பார்வை தன் இயல்புபடி, தொழில், கடை, வியாபாரத்தை மளமளவென்று வளரவிடாமல், ரொம்ப மெதுவாக நடத்த செய்வார். அதற்காக கடையை மூடவிட மாட்டார். சனி ஒரு உழைப்பாளி கிரகம். உழைப்பை கை கழுவ செய்யமாட்டார். மெதுவாக பலன் கொடுப்பார். சனி, முதல் ஒரு மாதம், தொழிலில் வியாபாரத்தில் நல்ல ஓட்டத்தை கொடுத்தாலும், எல்லா விஷயத்திலும் ஒரு "கன்னா' வைத்துவிடுவார். தொழிலில் எங்கோ இடிக்கிறதே என யோசனை வரும். ஏனெனில் தொழில் நடக்கும் விதத்திற்கு நல்ல அதிர்ஷ்ட வரவேண்டும். ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறதே என அங்கலாய்ப் பீர்கள். அதுபோல் தம்பதிகளுக்குள்ளும், எல்லாம் நல்லாத் தான் போயிட்டிருக்கு, ஆனாலும் ஒரு குறை தெரிகிறதே எனும் நெருடல் தோன்றும். இதற்கு காரணம் சனி பகவான் உங்கள் மிதுன ராசிக்கு 8-ஆம் அதிபதியாகவும் இருப்பதால், மறைமுக எதிர்ப்பு எல்லா விஷயங்களிலும் கொடுத்துகொண்டே இருப்பார். அடுத்த ஒரு வருடத்துக்கு 2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 27 வரை) சனி தனது சுய சாரத்தில் செல்வார். இப்போது உங்களுக்கு நிறைய குறுக்கு யோசனைகள் தோன்றும். தொழில் மேன்மைக்கு, யாரிடம் எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டும் எனும் விஷயம் புரியபட்டுவிடும். உங்கள்மீது வழக்குகள் ஏதாவது இருந்தால்,
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். மேஷ ராசியின் 12-ஆமிடத்தில் சனி அமர்வு. மேஷ ராசியின் செவ்வாய்க்கும், சனிபகவானுக்கும் வெகு பகை உண்டு. இப்போது இந்த செவ்வாய், விரய வீட்டில் சனி வந்து உட்கார்ந்து உள்ளார். விடுவாரா சனி. ஒரு கை பார்த்துவிடுவார். முத-ல் வெட்டித்தனமாக அலைவதையும், வீண் அலைச்சலையும் கட்டுப்படுத்துவார். அப்புறம் முக்கியமாக, காசு பண செலவு வகைகளை ஒரு கட்டுக்குள் வைத்து விடுவார். இந்த செலவு கட்டுக்குள் வருவதற்கு, சனி, முதலில் வேலைக்கு ஆள் வைத்துக்கொள்வதை குறைத்து விடுவார். அப்புறம் செல்போனில் சதா பார்ப்பதை கட்டுப்படுத்துவார். உங்கள் வேலையை நீங்களே செய்யுமளவிற்கு உங்களை ட்யூன் பண்ணி விடுவார். கார் வைத்திருப்பவர்கள், டிரைவரை நீக்கிவிட்டு அவர்களே காரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள். அல்லது பொது போக்குவரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிடுவர். இதைப்போலவே, அனைத்து செலவுகளையும் குறைத்துவிடுவார். இவ்விதம் வேலையே பொழுதுக்கும் சரியாக இருப்பதால், வீண் சண்டை போடாமல், எதிரிகள் இல்லாமல் போய்விடுவர். இன்னொன்று, நிறைய வேலை செய்வதால் உடல் சுறுசுறுப்பாகி, நோய்கள் நீங்கிவிடும். இதை பார்த்த உங்கள் மனைவியும், சற்று அனுசரணையாக இருப்பாள். உங்கள் உழைப்பு, தரும் நம்பிக்கை, "சாமி கும்பிடணுமா எனும் குயுக்தியான யோசனையைத் தரும். இந்த சனி, உங்களை ஒழுங்காக தெய்வ தரிசனம் எல்லாம் செய்யவிடமாட்டார். வெளிநாட்டு விஷயங் களில், கவனமாக இருங்கள்.
வாரிசுகள், பேரன்- பேத்திகள் என இவர்களிடம் ரொம்ப நிதானமாக நடந்து கொள்ளுங்கள். மேஷ ராசிக்கு, விரய ஸ்தானத்தில் அமர்ந்த சனி, எதிர்மறை செயலை தருவார். விரய வீடு என்பது வேகமான அலைச்சல், செலவு, பயணத்துக்குரிய வீடு. அதில் மந்த காரணான சனி அமர்ந் திருப்பது நிச்சயம் மேஷ ராசியாரை ஒருவித குழப்பத்தில் ஆழ்த்தும். ஏழரைச்சனியின் பிடியிலும் உள்ளீர்கள். எனவே சற்று நிதானமாக, கவனமாக இருப்பது நல்லது. அருகிலுள்ள சனீஸ்வரருக்கு, விளக்கேற்ற உதவும். அனைத்து பொருளும் வாங்கிக்கொடுங்கள். சனி பெயர்ச்சியானவுடன், முதல் ஒரு மாதத்தில் உங்கள் தொழில், அரசியல், உயர்கல்வி, சமையல், ஓவியம் சம்பந்தம் உள்ளோர் என இந்த வகைகளில் ஒரு மாற்றம் உண்டு. எனினும் இந்த மாற்றங்கள் உங்களுக்கு ஏற்றம் தரும். அடுத்த ஒரு வருடத்திற்கு, உங்கள் தொழிலின் குறிக்கொளை நிறைவேற்ற அரும்பாடுபடுவீர்கள். அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் மிக பிராயாசையுடன், தங்கள் ஆசைகள் நிறைவேற மிக அலைவார்கள். உங்கள் நண்பர்கள், ஆதரவாளர்களின் அணுசரணை கிடைக்கும். கொஞ்சம் செலவுசெய்ய வேண்டியிருக்கும்.
உங்கள் தொழில், கௌரவம் என இவை கண்டிப்பாக முதல் இடத்துக்கு வந்தே தீரவேண்டும் என நிறைய மாறுதல் செய்வீர்கள். தொழிலில் உங்கள் கம்பெனி லோகாவை மாற்றி வடிவமைப்பீர்கள். சிலர் பெயரையே மாற்றி, கடைக்கும் புதுப்பெயர் வைத்துவிடுவீர்கள். அரசியல்வாதிகள் குறைந்தது அஞ்சாறு கட்சிக்கு மாறி, மாறி கலர், கலர் துண்டு போட்டு கொள்வர். 2026 மே 17 வரை இந்தமாதிரி கூத்தடிப்பீர்கள். அதற்கடுத்த ஒரு வருடம், இந்த அலைச்சலுக்கு ஒரு முடிவு கட்டப்படும். இப்போது, ஒரு இடமாக செட்டிலாகி விடுவீர்கள். எல்லா கட்சிக்கும் மாறி அலைந்து கடைசியாக உங்களுக்கு தோதுப்படும் ஒரு கட்சியை, அரசியல்வாதிகள் கண்டுபிடித்து விடுவர். ஒரு முதலாளி ஸ்தானம் கிடைத்து விட்ட திருப்தி, வணிகர்களுக்கு ஏற்படும். இதனால் நிறைய வேலையாட்களை வேலைக்கு நியமித்து கொள்வர். பதட்டம், படபடப்பு குறைவதால், நோய் மறையும். கடன் நீங்கும். சிறைக்கு சென்றவர்களும் மருத்துவமனை சென்றவர்களும் வீடு திரும்புவர். சனி வக்ர காலத்திலும் உங்களுக்கு நல்லதே தருவார்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரனும் சனியின் நண்பர்கள். இந்த சுக்கிரனின் வீட்டில்தான் சனி உச்சமடைவார். எனவே உள்ளார்ந்த தோழமை கொண்டவர்கள். ரிஷப ராசியின் 11-ஆமிடத்தில் தனி அமர்வு. 11-ஆமிடம் என்பது நீங்கள் என்ன நினைக் கிறீர்களோ அதனை அழகாக நிறைவேற்றி தரும் இடம். லாப ஸ்தானமும் ஆகும் இந்த சனி உங்கள் ராசியை பார்ப்பதால் சற்று சோம்பேறித்தனம் வந்துவிடும். பள்ளி குழந்தைகள் சற்று மறந்துவிடுவர். இதனால் சில வாரிசுகளால் ஏற்படும் கவலைகளை தவிர்க்கமுடியாது. உங்கள் காதல் களேபரமாகும். கலையுலகினர் ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகி, பின் அதிலிருந்து மீண்டுவருவார். உங்கள் பூர்வீக இடத்தில் பண விஷயமான ஒரு குற்றச்சாட்டை, இந்த சனிபகவான் நீக்கிவிடுவார். உங்கள் தாயாரிடம் சற்று கருத்து வேறுபாடு வரும். அது உங்கள் திருமண விஷயம் அல்லது காதல் சம்பந்தமாக இருக்கும். அரசாங்கம் உங்கள் மனைமூலம் தொல்லைத்தரும். உங்கள் இளைய சகோதரிமூலம் சிறு சண்டை உண்டு. உங்களில் சிலர், காதல் கல்யாணம் செய்துவிட்டு ஓடலாமா எனும் யோசனை வரும். இப்போது கொஞ்சம் மறதி உண்டாகி, செய்த விஷயங்களை, மறுபடி, மறுபடி செய்வீர்கள். இந்த சனி பெயர்ச்சியில், சினிமா, டிவி போன்ற துறைகளில் இருப்பவர்கள், புதுமுயற்சிகளில் இறங்க வேண்டாம். உள்ளதை காப்பாற்றினாலே போதும். உங்களில் நிறைய ரிஷப ராசியாருக்கு, மருத்துவம் சார்ந்த வேலை கிடைக்கும். மேலும் நிறைய ஜாதகர்கள், நோய் நீங்க பெறுவர். எதிரிகள், அதிலும் குறிப்பாக பெண் போட்டியாளர்கள் விலகிவிடுவார்.
சிலரின் மனை விஷயமான வில்லங்கம் நீங்கும். அரசு கொடுத்துவந்த இம்சை தீரும். உங்கள் தந்தை ஏற்படுத்திய ஒரு சிக்கலை சரி செய்துவிடுவீர்கள். உங்களில் சிலர் மறைவான இணைகளின்மூலம் அனுபவித்த கஷ்டங்கள், ஏதோ ஒரு காரணத்தால் விலக காண்பீர்கள். சிலரின் மருமகன், மருமகள் கொடுத்துவந்த துன்பங்கள் அகன்றுவிடும். வணிகம் பொருட்டு, வேறிடங்களுக்குச் செல்ல நேரிடும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், சொந்த ஊர் வருவர். சில மந்திரிகளின் நிலை குழப்பமடையும். சனி பெயர்ச்சியான ஒரு மாத காலத்திற்கு, அரசியலில் எல்லாவித குறுக்கு வழிகளையும் கையாள்வீர்கள். மேலும் உங்கள் தொழிலில், தேவையான லஞ்சம் கொடுத்து, செழிப்பாக்கி விடுவீர்கள். கோவிலுக்கு போனால், அர்ச்சகருக்கு பணம் கொடுத்து, சாமியை தொட்டுவிட்டு வருவீர்கள். சமையலில் நிறைய கலப்படம் செய்வீர்கள். கவனிக்க வேண்டியவர்களை கவனித்து பதவி உயர்வு வாங்கிவிடுவீர்கள். யாரெல்லாம், பதவி ப்ரமோஷனுக்கு ஆசைப்படுகிறீர்களோ, அவர்கள், இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றாக ஒர்க் ஆகும். அதுபோல் அரசியலில், நுழைய விரும்பும் ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாத நாட்களை நன்றாக தேர்ந்தெடுங்கள். அடுத்த ஒரு வருடம், உங்கள் முழுக்கவனமும் தொழிலின் முன்னேற்றத்தில் மட்டுமே இருக்கும். வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்புகளை வெளிநாட்டில், விற்க வெகுமுயற்சி செய்வர். அதற்கு நீங்கள் பெரு வணிகராக இருக்கவேண்டிய அவசிய மில்லை. வீட்டில் இருந்து கைத்தொழில் செய்பவர்களும் மிக ப்ரயத்தனப்படுவர். இந்த முயற்சிகள் வெற்றியடையும் என்பது தான் இதன் சிறப்பாகும். அரசியல்வாதிகள் தங்கள் கட்சியை, வெளிநாட்டிலும் கடை விரிக்க முனைவர். அதுபோலவே கட்சியை ஆரம்பித்துவிடுவர். இங்குள்ள ஒரு மடாதிபதி வெளிநாட்டில் தங்கள் மடத்தை திறந்துவிடுவார்.
இங்குள்ள கோவில்களின் மாதிரிகள் வெளிநாட்டில் நிறுவப்படும். சில அர்ச்சகர்கள் இதன் பொருட்டு வெளிநாட்டு பாஸ்போர்ட், விஸா எல்லாம் வாங்குவார். ஆக, இந்த வருடத்தில் எந்த ரிஷப ராசிக்காரர்கள் எல்லாம் வெளிநாட்டு தொடர்பு வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் இந்த வருட காலத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அடுத்த வருடம் 2026 மேமுதல் 2027 ஜூன்வரை, இவ்வளவு நாளும் மேற்கொண்ட முயற்சியின் பலனை நன்கு அனுபவிப்பீர்கள். உயர்ந்த பதவியும் பதவி உயர்வும் கிடைக்கும். அரசியலில் மந்திரி பதவி, வட்ட, மாவட்ட, சதுர முக்கோண பதவிகளை பிடித்து, ஒரு நாற்காலியில் அமர்ந்துவிடுவீர்கள். மருமகன்- மருமகள் வருவார்கள். குடும்ப விருத்தி இருக்கும். பணம் நன்கு புரளும் காலகட்டம். ஆனாலும் வெள்ளமாக பண ஓட்டம் இருந்தாலும், சனிபகவான் கொஞ்சமாக மொண்டு குடி என கஞ்சத்தனம் காட்டுவார். சினிமாவில், டிவியில் உள்ளவர்கள் நல்ல பலன் பெறுவர். பங்கு வர்த்தகம் செழிக்கும். ஆசிரியர்கள் மேன்மை பெறுவர். ரிஷப ராசிக்காரரின் நட்பு கிரகமான சனி லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், நல்ல லாபமே தருவார். சனி ஐந்தாமிடத்தைப் பார்த்து அதன் தன்மையை குறிக்கினாலும் 5-ஆமிட சாரத்தில் செல்லும்போது, சினிமா போன்ற கலைத்தொழிலை வளரச் செய்கிறார். அருகிலுள்ள சனீஸ்வரருக்கு, கற்கண்டு போன்ற இனிப்புகள் கொண்டு வணங்கி, விநியோகமும் செய்யவும். வக்ர சனி நேரத்தில், கொஞ்சம் கவனம் தேவை.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இவர் சனிபகவானின் நட்பு கிரகமாவார். மிதுன ராசியின் 10-ஆம் வீட்டிற்கு சனி வந்து அமர்கிறார். அவர் 10-ஆம் வீட்டிலிருந்து உங்களின் 12, 4, 7-ஆம் வீட்டை பார்க்கிறார். இதனால் வீட்டை விற்க வேண்டும் என யோசனை உள்ளவர்கள், அந்த எண்ணத்தை தள்ளி போடுவீர்கள். பண விஷயம் பற்றிய திட்டங்களை, மறுபரிசீலனை செய்வீர்கள். குடும்பத்தை வேறிடம் மாற்றலாம் என்ற பேச்சை நிறுத்துவீர்கள். உங்கள் வீட்டில், இப்போது இருக்கும் வாடகை ஆட்களை மாற்றி, நிறைய வாடகை தரும் புது ஆட்களை அழைத்துவருவீர்கள். வேலைமாற்றவேண்டும் எனும் யோசனை மாற்றம் பெறும். அரசியலில் ஈடுபடவேண்டும் எனும் யோசனை நிறுத்தப்படும் சனி, உங்களின் 12-ஆமிடத்தைப் பார்த்து அதன் செயல்களில் மாற்றம் வராமல் தடுத்துவிடுவார். சனி, உங்களின் 4-ஆமிடத்தைப் பார்த்து வீடு சம்பந்த விஷயங்களை குழப்பச் செய்வார். வீட்டு குத்தகை, வீடு கட்டும் ஒப்பந்தம் இவற்றை வேறுவிதமாக செய்ய செய்வார். உங்கள் தாயாரை பயணமெல்லாம் போகக்கூடாது என்று கூறிவிடுவார். வீட்டில் குழந்தைகளின் பள்ளி கல்வியில் கொஞ்சம் குழப்பம் உண்டாகும். வீட்டில் கிணறு தோண்டவா, போர் போடவா என பெரிய விவாதம் நடக்கும். அரசு சார்ந்த வீடுகளை வாங்க திட்டமிட்டால், அதில் சற்று தகராறு வரும். வேலையில் பதவி உயர்வு கொஞ்சம் காணாமல் போகும். உங்கள் மாமனார். சில விஷயங் களில் சொதப்பிவிடுவார். வாகனங்கள், வீடு இவை ரொம்ப பழுது செலவு உண்டாகும். சனி, உங்களின் 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். உங்கள் திருமணம் கொஞ்சம் தாமதமாகும். சிலரின் காதல் விஷயம் தெரியவரும். அந்த காதல் ஏற்கும்படியாக இராது. அதனால் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும்.
உங்கள் வியாபார பங்குதாரர் உங்களிடம் மனஸ்தாபம் கொள்வார். புதிதாக வணிகம், கடை தொடங்க நினைப் பவர்களுக்கு அது கைகூட வெகுசிரமம் உண்டாகும். சனியின் பார்வை தன் இயல்புபடி, தொழில், கடை, வியாபாரத்தை மளமளவென்று வளரவிடாமல், ரொம்ப மெதுவாக நடத்த செய்வார். அதற்காக கடையை மூடவிட மாட்டார். சனி ஒரு உழைப்பாளி கிரகம். உழைப்பை கை கழுவ செய்யமாட்டார். மெதுவாக பலன் கொடுப்பார். சனி, முதல் ஒரு மாதம், தொழிலில் வியாபாரத்தில் நல்ல ஓட்டத்தை கொடுத்தாலும், எல்லா விஷயத்திலும் ஒரு "கன்னா' வைத்துவிடுவார். தொழிலில் எங்கோ இடிக்கிறதே என யோசனை வரும். ஏனெனில் தொழில் நடக்கும் விதத்திற்கு நல்ல அதிர்ஷ்ட வரவேண்டும். ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறதே என அங்கலாய்ப் பீர்கள். அதுபோல் தம்பதிகளுக்குள்ளும், எல்லாம் நல்லாத் தான் போயிட்டிருக்கு, ஆனாலும் ஒரு குறை தெரிகிறதே எனும் நெருடல் தோன்றும். இதற்கு காரணம் சனி பகவான் உங்கள் மிதுன ராசிக்கு 8-ஆம் அதிபதியாகவும் இருப்பதால், மறைமுக எதிர்ப்பு எல்லா விஷயங்களிலும் கொடுத்துகொண்டே இருப்பார். அடுத்த ஒரு வருடத்துக்கு 2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 27 வரை) சனி தனது சுய சாரத்தில் செல்வார். இப்போது உங்களுக்கு நிறைய குறுக்கு யோசனைகள் தோன்றும். தொழில் மேன்மைக்கு, யாரிடம் எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டும் எனும் விஷயம் புரியபட்டுவிடும். உங்கள்மீது வழக்குகள் ஏதாவது இருந்தால், எந்த ஆபிஸரை பார்க்கவேண்டும். எந்த வக்கீலை அணுக வேண்டும் எனும் நுட்பத்தை தெரிந்துகொள்வீர்கள். தம்பதிகளுக்குள், வாழ்க்கை துணை எதை சொன்னால் பெருமை கொள்கிறார் எதை கூறினால் சீறுகிறார் எனும் விஷயத்தை தெளிவாக தெரிந்துகொள்வீர்கள். கடை வியாபாரத்தில், அதிர்ஷ்டத்தை எவ்விதம் கயிறு கட்டி இழுத்துவருவது என அளவில்லாமல் தெரிந்துகொள்வார்.
சனி மிதுனத்தின் 8 மற்றும் 9-ஆம் அதிபதியாக இருந்து, உங்களின் 10-ஆம் வீட்டில் இருந்து நகர்வதால், இல்வாழ்க்கை, புறவாழ்க்கை என எல்லாவற்றையும் சமாளிப்பது எப்படி, தகிடு தத்தம் செய்வது எப்படி என நன்கு தெரிந்து கொள்வீர்கள். சனி, இதனை நன்கு கற்றுக்கொடுப்பது என்பதே உண்மை. அதற்கடுத்த வருடம் (2026 மே 17 2027 ஜூன் 3) வரையுள்ள கால கட்டத்தில் சனி புதன் சாரத்தில் செல்வார். சென்ற வருடத்தில், சனிபகவான் கற்றுக் கொடுத்த படிப்பினையைக்கொண்டு, நீங்கள் கௌரவமாக வலம்வருவீர்கள். ரொம்ப கெத்தாக நடப்பீர்கள். அதற்கு காரணம் எந்தமாதிரி மனிதரையும், எளிதாக சமாளிக்கும் திறனாக அமையும். கையில் காசு இருக்கிறதோ- இல்லையோ, வீடு, வயல், வாகனம், தோட்டம் என இவற்றை வாங்கிவிடுவீர்கள். நாலு பேர் நம்மை மதிக்கணும் என்று நிறைய நல்ல விஷயங்கள் செய்வீர்கள். அதில் உங்கள் கௌரவம் அதிகம் ஆகிறதா என்பதில் வெகு கவனம் கொள்வீர்கள். படிக்கும் மாணவர்கள் தொழில் கல்வி கற்பர். வயதானவர்களும் ஏதாவது கல்வி பயிற்சி பெறுவர். உங்கள் வாழ்க்கைத்துணையின் தொழிலில், கூடவே ஒரு உபதொழில் ஆரம்பித்துவிடுவார். வக்ர சனி நேரத்தில் தொழில் ஆர்வம் சற்றுகுறையும். அருகிலுள்ள சனீஸ்வரரை வணங்க பக்தி புத்தகம் தானம் செய்யவும்.
கடகம்
கடக ராசிநாதன் சந்திரன். இவர் சனியின் பகை கிரகமாவார். கடக ராசியின் ஒன்பதாம் இடத்தில் சந்திரன் அமர்கிறார், அவர் அங்கிருந்து கடக ராசியின் 11, 3, 6-ஆம் வீடுகளை பார்க்கிறார். சனி பதினோராம் வீட்டைப் பார்ப்பதால் உங்கள் மூத்த சகோதரியுடன் கருத்து வேற்றுமை ஏற்படும். அரசியலில் இருப்பவர்கள் மனத் தடுமாற்றம் அடைவர். எந்தக் கட்சியில் மந்திரி பதவி தருவார்களோ, அந்தக் கட்சியில் ஐக்கியமாகிவிட வேண்டியதுதான் என தீர்மானம் செய்வீர்கள். மருமகளோடு சண்டை வரும். தொழிலில் காசு, பணம் விஷயமாக உங்கள் வாரிசுடன் வாக்குவாதம் செய்வீர்கள். அரசு வரிபாக்கி போன்ற இம்சை வரும், உங்களுடைய காரமான சொற்கள், குடும்பத்தினரைக் காயப்படுத்தும். கலைத்தொழிலில் உள்ளவர்கள் லாபத்தில் நஷ்டம் காண்பர். பங்கு வர்த்தகம் சில வரவும், சில நஷ்டமும் தரும். மறுமண பேச்சுக்கள் தாமதமாகும். உங்களுக்கு மண்டைக் குழப்பம் உண்டாகி மறதியால், செய்த செயல்களை மறுபடியும் செய்வீர்கள். சனி கடக ராசியின் மூன்றாம் இடத்தை முறைக்கிறார். இதனால் இளைய சகோதரன் சற்று சண்டை போடுவார். பணியாளர்கள் ஒத்துழையாமை நடத்துவர். கைபேசி மக்கர் பண்ணும். உங்கள் இருசக்கர வாகனம் காணாமல் போகும். உங்கள் குத்தகை ஒப்பந்தம் கான்ட்ராக்ட் இவை தடுமாறும். வீடு விற்பது தள்ளிப் போகும். மாணவர்களுக்கு படிப்பு கொஞ்சம் மறந்து விடும். நீங்கள் வம்பு, வதந்தி பேசமுடியாத நிலை ஏற்படும். பத்திரிகையில் கிசுகிசு எழுதுபவர்களை யாராவது நையபுடைப்பதால், கொஞ்சகாலம் நிறுத்த வேண்டிவரும். பயணங்கள் குறையும்.
உங்கள் மாமனார் மூலம் சண்டை வரும். அரசு சார்ந்த ஒப்பந்தங்கள் பண அடிப்படையில் மாறக்கூடும். உங்கள் தைரியம் குறையும். காதல் விஷயம் கண்ணாமூச்சி ஆடும். சனி கடகத்தின் மூன்றாம் இடத்தைப் பார்ப்பதால் கொஞ்சம் சொங்கி மாதிரி ஆகிவிடுவீர்கள். சனி, கடக ராசியின் ஆறாம் இடத்தைப் பார்த்து உங்கள் நோய்களை அழித்துவிடுவார். எதிரிகள் நோ எண்ட்ரி ஆகி விடுவார்கள், கடன் அழியும். உங்களில் சிலர் வேலையை விட்டு விடுவீர்கள். பின் சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாமா, அரசியலில் நுழையலாமா, ஒரு நல்ல ஹோட்டல் ஆரம்பித்து விடலாமா, வாழ்க்கைத் துணையின் வேலை, தொழிலில் பங்கு பெறலாமா? சமூக சேவை செய்யலாமா? பறவைகளை, மீன்களை வளர்ப்புப் பிராணியாக விற்கும் கடை ஆரம்பிக்கலாமா? கைத்தொழிலை பிறருக்கு கற்றுக் கொடுக்கலாமா? என இம்மாதிரி பல, பல யோசனைகள் சிறகடிக்கும். சனி உழைக்க அஞ்சாத கிரகம். எனவே நீங்கள் உழைப்பதற்கு, உண்மையாக உழைக்கத் தயார் எனில் சனீஸ்வர பகவான் கை கொடுத்து உதவுவார். எனவே முயற்சி செய்யுங்கள். சனி முதல் மாதம், நிறைய அதிர்ஷ்ட நிகழ்வுகள் நடக்கும். வேலை கிடைத்துவிடும். சிலர் அஞ்சாறு பொய் சொல்லி பேராசிரியர் ஆகிவிடுவீர்கள். நுறு பொய் சொல்லி கல்யாணம் செய்து விடுவீர்கள். உங்கள்மீது உள்ள வழக்குகளை உங்களுக்கு சாதகமாக மாற்றி, அதில் இருந்து நன்மை கிடைக்குமாறும் மாற்றிவிடுவீர்கள். நீங்கள் சந்திக்கும் நபர்களை, உங்கள்மீது வெகு நம்பிக்கை வரும் அளவிற்கு மாற்றி விடுவீர்கள். பின்னர் அவர்கள்மூலம் வியாபார அபிவிருத்தி செய்து லாபம் சம்பாதிப்பீர்கள். தெய்வ விஷயத்தில் நிறைய டொனேஷன், பிறகு தருகிறேன் என்று வீண் ஜம்பம் அடிப்பீர்கள். உழவார சேவை செய்வேன் என்று அடம்பிடித்து விட்டு, பின் அந்தப் பக்கம்கூட போக மாட்டீர்கள். அடுத்த வருடம் (2025 ஏப்ரல் 27 -2026 மே- 17 வரை) சனி தனது சுயசாரம் எடுப்பார். முதல் மாதம் செய்த செயல்களை இன்னும் பெரிதாக விரிவாக செய்வீர்கள். வாழ்க்கைத் துணையை கொஞ்சம் ஏமாற்றிவிட்டு பின் உலக உத்தமன்போல் நடிப்பீர்கள். வியாபார பங்கு தாரரை நன்றாக நம்பவைத்து ஏமாற்றுவீர்கள்.
சில அதர்ம செயல்களைச் செய்துவிட்டு அதற்கு தர்மம் எனும் மேல் பூச்சு பூசி விடுவீர்கள். திருமணத்தில் கூறிய பொய்யை மறைக்க மேலும் பொய் கூறுவீர்கள். உங்கள் தந்தையின் உயிலை மாற்றி எழுதவைத்து விடுவீர்கள். வியாபாரத்தில் நிறைய பொய் கணக்கு எழுதுவீர்கள். வழக்குகளில் உங்கள் வக்கீலுக்கே சிலசமயம் பட்டை, நாமம் சாற்றி விடுவீர்கள். ஏனோ உங்களுக்கு நேர்மையாக செயல்கள் செய்வது எப்படி என்பதே சுத்தமாக மறந்துவிடும். எதிலும் கள்ளத்தனம் நிறைந்திருக்கும். கடக ராசி குழந்தை களும் எதற்கெடுத்தாலும் மறைத்துப் பேசி பொய் கூறுவர். பக்கத்திலிருக்கும் பிள்ளையைப் பார்த்து காப்பி அடித்து பரீட்சை எழுதுவர். அவர்களின் தகுதிக்கேற்ப பிராடுத்தனம் செய்வர். அதற்கு அடுத்த வருடத்தில் (2026 மே- 17 முதல் 2027- ஜூன் 3 வரை) இவ்வளவு நாளும் செய்துவந்த செயல்களின் பலனை அறுவடை செய்வீர்கள். புது கைபேசி வாங்கிவிடுவீர்கள். பயணங்கள் புதுப்பிக்கப்படும். அனேக செலவுகளை யாராவது ஏமாந்தவர்கள் தலையில் கட்டி விடுவீர்கள். குறைந்த சம்பளத்தில் பணியாளர்களை நியமித்துக் கொள்வீர்கள். மனைவியுடன் நிறைய இடம் சென்று அனுபவிப்பீர்கள். முதலீடுகள் நிறைய செய்வீர்கள். உங்கள் இளைய சகோதரனுக்கு திருமணம் செய்வீர்கள். கல்வி விஷயமான புத்தகக் கடை, பதிப்பகம், புத்தக பிரிண்டிங், பள்ளிப் புத்தக ஒப்பந்தம், பக்திப் புத்தகப் பதிப்பு என இதுபோன்று கல்வி சார்ந்து ஒப்பந்தம் எடுத்து மனம் மகிழ்வதோடு அதிர்ஷ்டமும் பெறுவீர்கள். சனி வக்ரகாலத்தில் சற்று அமைதியாக- பொறுமை யாக இருக்கும் சூழல் உண்டு. அருகிலுள்ள சனீஸ்வர ருக்கு அபிஷேகப் பொருட்கள் வாங்கிக்கொடுக்கவும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபர் சூரியன். இவர் சனி கிரகத்துக்கு பகை ஆவார். சிம்ம ராசிக்கு, 8-ஆமிடத்தில் சனி வந்து அமர்ந் துள்ளார். எனவே அஷ்டமச்சனி ஆகிறார். 8-ஆமிடத்தில் இருந்த, அவர் 10, 2, 3-ஆமிடங்களைப் பார்வையிடுகிறார். சனி 10-ஆமிடத்தைப் பார்த்து, சிம்ம ராசியினரின் கெத்து, கௌரவம் என இதை சற்று குறைப்பார். தொழி-ல் பின்னடைவு ஏற்படும். வெளிநாடு சம்பந்த செயல்களுக்கு கடிவாளம் போடப்படும். சில முதலீடுகள் தகராறு ஆகும். உங்கள் பெற்றோர் நலனில் அக்கறை தேவை. உங்கள் வீடு, மனை விஷயமாக, விற்பது, வாங்குவது பற்றி கவனமாக இருக்க வேண்டும். மனை விஷயத்தில் கவனம் தேவை. சீருடை பணியாளர்கள், வேலை, லஞ்சம் இந்த விஷயத்தில் சீராக நடக்க வேண்டும். தீயணைப்பு துறை, சமையல் வேலை செய்வோர் தீ, நெருப்பு, உஷ்ணம் இவற்றை அடிப்படையாகக்கொண்ட தொழிற் சாலையில் பணிபுரிவோர் முன்னெச்செரிக்கையாக இருக்கவும். சனி, சிம்ம ராசியாரின் தொழில் ஸ்தானத் தைப் பார்த்து, அதிக வேலை உழைப்பை தருவார். ஆனால் உழைப்புக்கேற்ற பலனைத் தர தயங்குவார். சனி உங்கள் 2-ஆமிடமான, தன, வாக்கு ஸ்தானத்தைப் பார்க்கிறார். இதுவரை சிம்ம கர்ஜனை செய்த சிம்ம ராசியார், "ம்யாவ்' என்று முணங்க மட்டுமே முடியும். சனிக்கு, சிம்ம சூரியனைக் கண்டால் ஆகவே ஆகாது. எனவே அவர் பார்வைபடும் வாக்கு ஸ்தானத்தை கட்டுப் படுத்துகிறார். சிலரின் சொல்லுக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும்.
அதற்கு காரணம் உங்களின் பண வரவில் குறைபாடாக இருக்கும். "ஏழை சொல் அம்பலம் ஏறுமா' என்பர். அதுபோல் பணப்புழக்கம் அதிகம் இல்லாதவர்களையும் இந்த உலகம் மதிக்காது என்பது உண்மை. சிலரின் வாக்கு குளறும். குடும்பம் குறுகும். இதற்கு உங்கள் வாரிசுகள் திருமணமாகி, தனியாக சென்றுவிடுவதும் ஒரு காரணமாக அமையும். கண் பரிசோதனை தேவைப்படும். பல டாக்டரிடம் செல்வீர்கள். சிலரின் முகத்தில் கரும் பற்று, படை பரவும். இதனால் சுபச்செலவுகள் குறைந்து, மருத்துவ செலவு அதிகரிக்கும். சீருடை பணியாளர்கள். அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள், உங்களிடம் சேவைகேட்டு, உதவிபெற வருவோரிடம், வார்த்தைகளைத் தேர்ந் தெடுத்து, கவனமாக பேசவேண்டும். சனிபகவான் சிம்ம ராசியின் 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். இதனால் வாரிசுகளுடன், தொழில், காதல், பூர்வீக சொத்து இவை குறித்த மன வேறுபாடு வரும். சினிமா கலைஞர்கள் தொழிலில், சற்று தேக்கம் காண்பர். சில மந்திரிகளின் பதவி பறிபோகும். பங்கு வர்த்தகம், விளையாட்டுத்துறை என இவை சுணங்கும். பூர்வீக சொத்து விற்பது சம்பந்தமான தடை ஏற்படும். கர்ப்ப ஸ்திரிகள் வெகு கவனமாக இருக்கவேண்டும். சில சிம்ம ராசி பெண்கள், வீட்டு விலக்கு சம்பந்தமான பிரச்சினையை சந்திப்பர். சிம்ம ராசியார் எப்போதும் கற்பூர புத்தி உடையவர்கள். இதனை சனி பார்த்து, "உங்க மூளை வேகம் இவ்வளவு வேண்டாம். குறைங்கடா' என்று புத்தியை மந்தமாக பண்ணிவிடுவார். காதலிப்ப வர்கள் ஏதேனும் டார்ச்சர் உண்டாகி, ஊரைவிட்டு, வீட்டைவிட்டு விலகும் நிலை ஏற்படும். அஷ்டம சனி, சிம்ம ராசியாரின் 10, 2, 5 எனும் முக்கியமான ஸ்தானங்களைப் பார்ப்பதால், ஜாதகர்கள், ஒருவிதமாக முடங்கும் நிலை ஏற்பட்டுவிடும். இதனால் தான் அஷ்டம சனி என்றால் எல்லாரும் அலறுகிறார்கள். சனி, ஆரம்பித்த முதல் மாதத்தில், கடன் வியாதியை நீக்கி விடுவார். காதலையும் நீக்கிவிடுவார். அஷ்டம சனி ஆரம்பித்த உடனேயே, எவனும் உங்களை நம்பி கடன் தரமாட்டான். அதனால் கடன் தொல்லை இருக்காது. காதலில் ஈடுபட்டவர்கள், அதன் உண்மை தன்மை தெரிந்து, தெளிந்து வருந்தி விலகுவர். தம்பதிகள் நிலை சோபிக்காது. ஒன்று வேலையின் பொருட்டு பிரிவர். அல்லது நோய் விபத்து ஏற்பட்டு, தனித்தனியாக இருக்க நேரிடும். அல்லது ஒரு காதல் விஷயம் தெரிந்து, அதன்பொருட்டு தம்பதிகள் ஆளுக்கொரு பக்கமாக போய்விடுவர். சிலரின் காதல் கல்யாணமே, அவர்களின் பிரிவுக்கும், வலிக்கும் காரணமாகிவிடும். ஒரு 8-ஆம் அதிபதி வீட்டில், ஒரு 7-ஆம் அதிபதி, அவரின் சாரம் எடுத்து செல்லும்போது, திருமண வாழ்வின் உச்சபட்ச வேதனைகளை அனுபவிக்க நேரிடும். அடுத்த ஒரு வருடத்துக்கு (2025 ஏப்ரல் 2 முதல் 2026 மே 17 வரை) அவர் சுய சாரம் எடுத்துக்கொள்வார். இந்த காலகட்டத்தில் சிம்ம ராசியாரின் திருமண வாழ்க்கை பெரிய கேள்விக்குறியாகிவிடும்.
சண்டையினால் குடும்பம் பிரியுமா. கடனால் விலகுமா. நோயினால் நொண்டி அடிக்குமா. வழக்கு வாய்தா கேட்டு பிரிக்குமா. மறைவான தொடர்பு, தம்பதியை வேறு வேறிடம் செல்ல சொல்லுமா. உங்களுடன் நெருங்கி பழகிய நண்பர் தம்பதிகளை பிரித்துவிடுவாரா. தொழில் பங்குதாரர் வாழ்வை பங்குபோட்டு விடுவாரா. உங்களின் சண்டை, உங்களை காவல்துறை, நீதிமன்றம் என அலைய வைத்துவிடும். தம்பதிகள் எவ்வளவு சண்டை என்றா லும், கை, கால் முறிந்து, மண்டையில் ரத்தம் வரும் அளவிற்கு அடித்துக் கொள்ளக்கூடாது. இந்த வருடம் மட்டும் தம்பதிகள் வேறு, வேறு ஊர்களில் வேலை பார்ப்பது உங்களுக்கு நல்லது. அடுத்த வருடம் (2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை). இதில் சனிபகவான் ரேவதி நட்சத்திரத்தில் செல்வார். இது அரசியல்வாதிகள் மறைந்து வாழ்வர். அது ஒளிந்து கொள்வராக இருக்கலாம். சிறையாக இருக்கலாம். மருத்துவமனையாக இருக்கலாம். கடல் கடந்து செல்வதாகவும் இருக்கலாம். அவர்களின் காசு, பணத்தை அவர்கள் மறைத்துவைத்த பணத்தை, அவர்களால் எடுத்து, அனுபவிக்க முடியாத நிலை உண்டாகிவிடும். இந்த சனிப்பெயர்ச்சிக்குமுன், சிம்ம ராசியார், தங்கள் சொத்து, பணத்தை நம்பிக்கையான ஆட்களிடம் செட்டில் பண்ணிவிடுங்கள். உங்கள் பெயரில் இருக்கும் பணம், சொத்தை, நீங்கள் தொடவே முடியாத நிலை உண்டாகிவிடும். அஷ்டமத்தில் அமர்ந்த சனி, சிம்ம ராசியாரை சுழற்றி அடிக்கிறார். இந்த துன்ப சுழலிருந்து, விலக ஆஞ்சனேயரை வழிபடுவதுதான் ஒரேவழி. சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் கொடுத்து வணங்கவும். சனி வக்ரநிலையும் ரொம்ப மாறுதல் தராது.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். சனிபகவானுக்கு, புதன் நட்பு கிரகம் ஆவார். கன்னி ராசியின் 7-ஆமிடத்தில் அமர்ந்த சனி, 9, 1, 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். சனிப்பெயர்ச்சி ஆரம்பித்தவுடன். உங்கள் செயல் களின் வேகம் மட்டுப்படும். கோவிலுக்கு தினமும் போய்க் கொண்டிருந்தவர்கள் அப்புறம் பார்த்துக்கலாம் என்று தள்ளிபோடுவர். நிறைய ஆன்மிகப் பயணம் செல்ல, பெரிய திட்டம் போட்டவர்களும், அதனை ஒத்தி வைத்துவிடுவர். அரசியலிலுள்ள பெண்கள், அரசியலில் இருந்து விலகி விடலாமா என யோசிப்பர். சமையல் செய்வது ரொம்ப அலுப்பாக தோன்றும். உங்கள் தாயார், தந்தை சற்று சோம்பி இருப்பர். உங்கள் சிறுவயது பணியாளர்கள் வேலை செய்ய முடியாத நிலை வரும். உங்கள் இளைய சகோதரன், எங்காவது டூவிலரில் செல்லும்போது அடிபட நேரும். மருந்து செலவோடு போகும். உங்கள் கைபேசி மக்கர் பண்ணும் சில ஒப்பந்தங்கள் முடிவானா லும், அது செயல்பாட்டுக்கு வர தாமதம் ஆகும். இந்த சனி உங்களை சோம்பேறி ஆக்குவதுடன் கொஞ்சம் தத்தியாகவும் ஆக்கிவிடும். எங்காவது செல்ல வேண்டும் என்றாலும், அது திருமண வீடாக இருந்தா லும், வேறு யாரையாவது அனுப்பி விடுவீர்கள். சமையல் பண்ணவோ, சாப்பிடவோ ஈடுபாடு இராது. உங்கள் மூத்த சகோதரியின்மேல் கோபம் வரும். உங்கள் வழக்கு நிலை என்னவென்றே தெரியாது. அரசியலில் மவுசு குறையும். அல்லது கட்சி மாறும் எண்ணம் வரும். காசு செலவளிக்க பயமாக வரும். இவ்வளவு நாள் இருந்த தைரியம் வற்றும். வீர்யம் வீணாக போகும். உங்கள் இளைய சகோதரன், சிலசமயம் உங்களைப் பின்னி எடுக்க வாய்ப்புள்ளது. அல்லது சீருடை பணியாட்களிடம் ஃபைன் கட்ட வேண்டிவரும். காவல் துறையில் வேலை செய்பவர்கள் ஏனோ, வெட்டி பந்தா இன்றி, அமைதியாக வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவீர்கள். வீடு, மனை, வாகனம் வாங்கும் விஷயம் பாதி யிலேயே நிற்கும். உங்களுடைய தாயார் இடமாறக் கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலில், இறக்கம் தோன்றும். அல்லது இடமாற்றம் இருக்கும்.
உங்களில் சிலர் தொழில் சார்ந்து, வீடு மாற வேண்டி இருக்கும். கன்னி ராசி குழந்தைகள் கல்வியில் சற்று மந்தமாவார்கள். கன்னி ராசிக்கு, சனி, கல்வி ஸ்தானங்களான, 4 மற்றும் 9-ஆமிடத்தைப் பார்ப்பதால், கல்வி நிலையை எளிதாக அமையுங்கள். நார்மலான கல்வியே சற்று தடுமாறும். அதனால் கடினமான கல்வியை தவிருங்கள். உங்கள் பெற்றோர் நிலையையும் பார்த்துக்கொள்வது அவசியம். வெளியூர், வெளிநாட்டு விஷயங்களில் வெகுகவனமாக இருக்கவேண்டும். சனிப்பெயர்ச்சியான முதல் மாதம், கல்யாணம் நிச்சயமாகும். அது அனேகமாக காதல் கல்யாணமாக இருக்கும். சிலர் தாய்மாமன் மகளையும் மணக்கக்கூடும். வீட்டுக் கடன் கிடைக்கும். மாமனார் வீட்டிலிருந்து வாகனம் கிடைக்கும். கலைஞர்கள் கடனில் வீடு வாங்குவர். தொழில் பங்குதாரரிடம் கொஞ்சம் சண்டை வரும். சிலரின் வாழ்க்கைத்துணை உடல்நலம் கேடு அடைவார். உங்கள் பங்கு வர்த்தகம் சார்ந்தது. அல்லது சினிமாவில் நடிப்பது பற்றி, விளையாட்டு பயிற்சி என ஏதாவது கற்றுகொள்ள ஆரம்பித்துவிடுவீர்கள். சிலர் காதலில் அல்லது தம்பதியருள் அவ்வப்போது சண்டை வரும். அடுத்த ஒரு வருடம் (2025 ஏப்ரல் 27 -2026 மே 17 வரை) சிலர் காதல் திருமணம் செய்வர். சிலர் காதலில் நிறைய சண்டை செய்வர். இத்தோடு அனேக காதல் நிறைவுக்கு வந்துவிடும். சிலர் மருத்துவம் சார்ந்து கல்வி அல்லது பயிற்சி பெறுவர். திருமண அமைப்பு நிலையம் தொடங்குவீர்கள். நீங்கள் எந்த அமைப்பில் இருந்தாலும், அது அரசியலில் அமைப்பு, குழுக்கள் என எதில் ஈடுபட்டாலும் அதில் கருத்து வேற்றுமை கண்டிப்பாக உண்டாகும்.
தம்பதி களும் சும்மா இராமல், உங்கள் தாயார் அல்லது முன்னால் காதல் விஷயம் என ஏதோ ஒன்றின் காரணமாக சண்டை வரும். தம்பதிகளுக்குள் சண்டை வராவிட்டால், ஆரோக்கியக் குறைபாடு உண்டாகும். அதற்கடுத்த வருடம் (2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை). இதுவரையில் குடும்பம் கும்மி அடித்தத்தில் வெகு அவமானமும், கௌரவ பிரச்சினையும் வந்திருக் கும். இப்போது அதனை உணர்ந்து, சற்று மாற வேண்டு மென முடிவெடுப்பீர்கள். முதலில் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். அல்லது தம்பதிகள் சேர்ந்து ஒரு தொழிலை தொடங்குவீர்கள். இதில் உங்கள் வாரிசும் உதவியாக இருப்பார். கன்னி ராசியினர், இதுவரையில் சண்டை போட்டதை, மறந்து, ஒருபடி இறங்கிவந்து, குடும்பத்தின் மேன்மையை கௌரவத்தை நிலை நிறுத்துவீர்கள். வயல், தோட்டம் இவை முன்னேற்றத் திற்கு பாடுபடுவீர்கள். சிலர் உங்கள் பூர்வீக, வேலையை மீண்டும் மீட்டெடுத்து, அதில் கவனம் செலுத்தி, அதனை வியாபாரமாகவோ, சொந்தத் தொழிலாகவோ மாற்றிவிடுவீர்கள். சனி வக்ரகாலத்தில் வீட்டில் சண்டை குறையும். அருகிலுள்ள சனீஸ்வரருக்கு பழங்கள் கொண்டும், தீபமேற்றியும் வணங்குங்கள்.
துலாம்
துலா ராசி அதிபர் சுக்கிரன். இவர் சனிபகவானோடு நட்பு உடையவர். துலா ராசியின் 6-ஆமிடத்தில் சனி சென்று அமர்கிறார். அவர் அங்கிருந்து, துலா ராசியின் 8, 12, 3-ஆம் வீடுகளை பார்க்கிறார். துலா ராசியினர், இதுவரையில் அனுபவத்துவந்த அவமானங்கள், துன்பம், கண்ணீர், நஷ்டம், அழுகை என இவை எல்லாவற்றையும் சனி துடைத்து எறிகிறார். உங்களைப் பற்றிய தவறான வதந்திகள் நீங்கிவிடும். சிலர் அதிக வட்டி, தண்டம் கட்டி வந்தால் அது கரைந்துவிடும். நீங்கள் விபத்தை சந்திக்க நேர்ந்தாலும், சனியின் பார்வை, உங்களை சிறு சிராய்ப்போடு காப்பாற்றிவிடும். இளம் பெண்கள், தெரியாத்தனமாக யாரிடமாவது மாட்டி இருந்தாலும், இப்போது விடுதலை கிடைத்துவிடும். சில பெண் அரசியல்வாதிகள் மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்படும். உங்கள் தொழிலில் இருந்த எதிர்மறை நன்மை கழன்றுவிடும். தம்பதிகளுக்குள் சண்டை இழுத்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் விலகிவிடுவார். பணக்கட்டுப்பாடும் நீங்கும். சனி உங்கள் 12-ஆமிடத்தை பார்த்து செலவு அலைச்சல், பயணங்களை கட்டுப்படுததி விடுவார். இதுவரையில் ரொம்ப அலைந்து வேலை பார்த்த அரசு அதிகாரிகள் ஓரிடத்தில் இருந்து வேலை செய்வார்கள். சில அரசியல்வாதிகள், தங்கள் அலைச்சலை கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவர். வண்டியில் வைத்து சிறு வியாபாரம் செய்து அலைந்து கொண்டிருந்தவர்கள் ஓரிடத்தில் நிலையாக வியாபாரம் பண்ணமுடியும். துலா ராசி குழந்தைகளின் தாயார் தொழில் விஷயமாக அலைந்துகொண்டிருந்தால், இப்போது அலையாமல் தொழில் செய்யமுடியும். சிலர் பண கலெக்ஷன் பொருட்டு ஒவ்வொரு இடமாக அலைந்தவர்கள், இப்போது நிரந்தர வேலை கிடைக்கப்பெறுவர். தம்பதிகள் அலையாமல் இருக்கலாம்.
சீருடை பணியாளர்களின் மாற்றம் தடுக்கப்படும். உயர்கல்வி மாணவர்கள் அலைச்சல் தடுக்கப்பட்டு, ஒரே இடமாக கல்வி கற்பார்கள். கன்னி ராசி குழந்தைகளின் தந்தையின் இடமாற்றம் தடுக்கப்படும். சனிபகவான், சிம்ம ராசியின் 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். இதனால் வாரிசுகளுடன் தொழில், காதல், பூர்வீக சொத்து இவை குறித்த மனவேறுபாடு வரும். சினிமா கலைஞர்கள் தொழிலில், சற்று தேக்கம் காண்பர். சில மந்திரிகளின் பதவி பறிபோகும். பங்கு வர்த்தகம், விளையாட்டுத்துறை என இவை சுணங்கும். பூர்வீக சொத்து விற்பது சம்பந்தமான தடை ஏற்படும். கர்ப்ப ஸ்திரிகள் வெகு கவனமாக இருக்கவேண்டும். சில துலாம் ராசி பெண்கள், வீட்டு விலக்கு சம்பந்தமான பிரச்சினையை சந்திப்பர். துலாம் ராசியார் எப்போதும் கற்பூர புத்தி உடையவர்கள். இதனை சனி பார்த்து, உங்க மூளை வேகம் இவ்வளவு வேண்டாம். குறைங்கடா என்று புத்தியை மந்தமாக பண்ணிவிடுவார். காதலிப்பவர்கள். ஏதேனும் டார்ச்சர் உண்டாகி, ஊரைவிட்டு, வீட்டை விட்டு விலகும் நிலை ஏற்படும். அஷ்டம சனி, துலாம் ராசியாரின் 10, 2, 5 எனும் முக்கியமான ஸ்தானங்களை பார்ப்பதால், ஜாதகர்கள், ஒருவிதமாக முடங்கும் நிலை ஏற்பட்டுவிடும். இதனால் தான் அஷ்டம சனி என்றால் எல்லாரும் அலறுகி றார்கள். சனி, ஆரம்பித்த முதல் மாதத்தில், கடன், வியாதியை நீக்கி விடுவார். காதலையும் நீக்கிவிடுவார். அஷ்டம சனி ஆரம்பித்த உடனேயே, எவனும் உங்களை நம்பி கடன் தர மாட்டான். அதனால் கடன் தொல்லை இருக்காது. காதலில் ஈடுபட்டவர்கள் அதன் உண்மை தன்மை தெரிந்து, தெளிந்து வருந்தி விலகுவர். தம்பதிகள் நிலை சோபிக்காது. ஒன்று வேலையின் பொருட்டு பிரிவர். அல்லது நோய் விபத்து ஏற்பட்டு, தனித்தனியாக இருக்க நேரிடும். அல்லது ஒரு காதல் விஷயம் தெரிந்து, அதன்பொருட்டு தம்பதிகள் ஆளுக்கொரு பக்கமாக போய்விடுவர். சிலரின் காதல் கல்யாணமே, அவர்களின் பிரிவுக்கும், வலிக்கும் காரணமாகிவிடும். ஒரு 8-ஆம் அதிபதி வீட்டில், ஒரு 7-ஆம் அதிபதி, அவரின் சாரம் எடுத்து செல்லும்போது, திருமண வாழ்வின் உச்சபட்ச வேதனைகளை அனுபவிக்க நேரிடும். அடுத்த ஒரு வருடத்துக்கு (2025 ஏப்ரல் 2 முதல் 2026 மே 17 வரை) அவர் சுயசாரம் எடுத்துக்கொள்வார். இந்த கால கட்டத்தில் சிம்ம ராசியாரின் திருமண வாழ்க்கை பெரிய கேள்விக் குறியாகிவிடும்.
சண்டையினால் குடும்பம் பிரியுமா. கடனால் விலகுமா. நோயினால் நொண்டி அடிக்குமா. வழக்கு வாய்தா கேட்டு பிரிக்குமா. மறைவான தொடர்பு, தம்பதியை வேறு வேறிடம் செல்ல சொல்லுமா, உங்களுடன் நெருங்கி பழகிய நண்பர் தம்பதிகளை பிரித்துவிடுவரா, தொழில் பங்குதாரர், வாழ்வை பங்கு போட்டு விடுவாரா, உங்களின் சண்டை, உங்களை காவல்துறை, நீதிமன்றம் என அலைய வைத்துவிடும். தம்பதிகள் எவ்வளவு சண்டை என்றாலும், கை, கால் முறிந்து, மண்டையில் ரத்தம் வரும் அளவிற்கு அடித்துக்கொள்ளக்கூடாது. இந்த வருடம் மட்டும் தம்பதிகள் வேறு, வேறு ஊர்களில் வேலை பார்ப்பது உங்களுக்கு நல்லது. அடுத்த வருடம் (2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை). இதில் சனிபகவான் ரேவதி நட்சத்திரத்தில், செல்வார். இது அரசியல்வாதிகள், மிக பயப்படும் காலமாக இருக்கும். நிறைய துலாம் ராசி அரசியல் வாதிகள் மறைந்து வாழ்வர். அது ஒளிந்து கொள்வதாக இருக்கலாம். சிறையாக இருக்கலாம். மருத்துவமனையாக இருக்கலாம். கடல் கடந்து செல்வதாகவும் இருக்க லாம். அவர்களின் காசு, பணத்தை அவர்கள் மறைத்து வைத்த பணத்தை, அவர்களால் எடுத்து, அனுபவிக்க முடியாத நிலை உண்டாகிவிடும். இந்த சனிப் பெயர்ச்சிக்குமுன், துலாம் ராசியார், தங்கள் சொத்து, பணத்தை நம்பிக்கையான ஆட்களிடம் செட்டில் பண்ணி விடுங்கள். உங்கள் பெயரில் இருக்கும் பணம், சொத்தை, நீங்கள் தொடவே முடியாத நிலை உண்டாகிவிடும். அஷ்டமத்தில் அமர்ந்த சனி, துலாம் ராசியாரை சுழற்றி அடிக்கிறார். இந்த துன்ப சுழலிருந்து, விலக ஆஞ்சனேயரை வழிபடுவதுதான் ஒரே வழி. சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் கொடுத்து வணங்கவும். சனி வக்ர நிலையும் ரொம்ப மாறுதல் தராது.
விருச்சிகம்
விருச்சிக ராசி அதிபதி செவ்வாய். இவர் சனிக்கு பகை கிரகமாவார். விருச்சிக ராசியின் 5-ஆமிடத்தில் அமர்ந்த சனி, ராசியின் 7, 11, 2-ஆமிடங்களைப் பார்க்கிறார். விருச்சிக ராசியாரின் திருமணத்தை சனி சற்று தாமதபடுத்துவார். அப்படியே திருமணம் நடந்தாலும், வரனில் ஒருவர் சற்று நிறம் கம்மியாக இருப்பார். நீங்கள் மாச சம்பளம் வாங்கும் வரணை எதிர்பார்த்தால், அவர் சொந்தத் தொழில் நடத்துபவராக இருப்பார். சிலசமயம் திருமணத்தின்போது கொஞ்சம் சண்டையும், மனக் கசப்பும் வந்துவிடும். சிலசமயம் மாற்றி, மாற்றி பேசுபவர் களுடன் சம்பந்தம் செய்யவேண்டி வரும். இது திருமண விஷயத்தில் மட்டுமல்ல; வியாபார விஷயத்திலும் இவ்விதமே நடக்கும். ரொம்ப எரிச்சலாகிவிடும். நீங்கள் இப்போது சந்திக்கும் நபர்கள் ரொம்ப சோம்பேறியாகவும், கஞ்சப் பயலுமாக அமைவர். அலுவலகத்தில் உங்கள் கூடவே வேலை பார்க்க வேண்டியவரும் இப்படியே அமைந்து விடுவார். நீங்கள் செம கடுப்பாகி விடுவீர்கள். இந்த விஷயத் துக்காக சில சமயம் சண்டையும் போட வேண்டியிருக்கும். இந்த சனிப்பெயர்ச்சியில், விருச்சிக அரசியல்வாதிகள் பாடு வெகு திண்டாட்டம் ஆகிவிடும். அரசியல், தொழிலில் கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொள்ளலாமா எனும் மனநிலை தோன்றும். உங்கள் பெற்றோருக்கும், உங்கள் மூத்த சகோதரனுக்கு பெரிய கருத்து வேற்றுமை உண்டாகும். சில அரசியல்வாதிகள் உடல்நிலை சரியில்லாமல் போகக்கூடும். இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில், அரசியலில் உள்ளோர். தேர்தலில் நின்றால், நிச்சயம் தோற்றுப் போவர்கள். கூடியமட்டும் இந்த தேர்தலில் நிற்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. சமையல் கலைஞர்கள், தங்களின் மெகா புராஜக்ட் சமையலின்போது, வெகு கவனமாக இருக்கவேண்டும். சமையல் சொதப்பிவிடும் வாய்ப்புள்ளது.
பதவி உயர்வு வரும் என்று நம்பி எந்த விஷயத்திலும் இறங்க வேண்டாம். பதவி உயர்வு வரும். ஆனா வராது என்ற நிலைதான் உண்டு. முக்கியமாக எந்த லட்சியமும், எவ்வித ஆசையும் நிறைவேறும் என்ற கற்பனையே வேண்டாம் லாபமும் வராது. இந்த சனி, உங்கள் குடும்பத்தை கும்மி அடிக்க வைத்துவிடுவார். குடும்பத்தில் குழப்பம் ஏன் வருகிறது. பணமும், வாக்கும்தான் காரணம். உங்கள் கையில் பண பற்றாக்குறை வருவதால், உங்கள் சொல் அம்பலம் ஏறாது. வாக்கு பலம் இல்லாதது. குடும்பத்தில் மதிப்பைக் குறைக்கும். சிலர் வீட்டில் திருமண செலவு அதிகம் ஆவதாலும், வணிகத் தில் பெரும் தொகையை முதலீடாக போட்டதாலும், தொழிலில் எதிர்பார்த்த பணம் கிடைக்க தாமதமாவதா லும், பணத் தட்டுப்பாடு உங்களுக்கு உண்டாகும். சிலருக்கு அரசாங்கம், உங்கள் பணத்தை, பணப் புழக்கத்தை தடை செய்வதாலும் பண செழிப்பு குறையும். வேறு சிலருக்கு வாக்கு குளறல் ஏற்படும். சிலர், சில கெட்ட பழக்கங் களுக்கு அடிமையாகி விடுவதால், குடும்ப நிம்மதி குறையும். யாராவது, உங்களுக்கு லஞ்சம் தரமாட்டார்களா என்று உங்கள் மனம் மிக ஏங்கும். முதல் ஒரு மாதம், உங்கள் வாரிசுகளின் அணுசரணை கிடைக்கும். உங்கள் வாரிசுகள் உங்கள் வீடு பற்றிய விஷயங் களுக்கு உதவுவர். பூர்வீக வீட்டை விற்று, புது வீடு வாங்க இயலும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புது வாகனம் வாங்குவீர்கள். நிறைய பத்திரங்களில் கையெழுத்து போட வேண்டியிருக்கும். அது வீடு விஷயம், வீடு மாற்றுவது, வீடு லீசுக்கு எடுப்பது, கலை உலகினர் புதுப்பட காண்ட்ராக்டில் கையெழுத்து போடுவது, புது பங்குகள் வாங்குவது, விளையாட்டு துறை சார்ந்த ஒப்பந்தம், வீடு கட்டுமான ஒப்பந்தம், தண்ணீர் லாரி, பள்ளி வேன் ஒப்பந்தம், வங்கிகள் பணம் நிரப்பும் வாகன சம்பந்த ஒப்பந்தம், மருத்துவமனை டிரைவர், உணவு தயாரிப்பு என பலவகை ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். அடுத்த வருடம் (2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை) சென்ற மாதம் எடுத்த ஒப்பந்தம், குத்தகை சம்பந்தமாக ஓடியாடி வேலை செய்வீர்கள்.
நல்ல உழைக்கும் பணியாளர்கள் கிடைப்பார்கள். உங்கள் இளைய சகோதரர், உங்கள் தாயார், உங்கள் வாரிசுகள் என இவர்களின் நல்ல அணுசரணை கிடைக்கும். எனவே ஊருக்கு வீடு கட்டும்போது உங்களுக்கு ஒரு வீடு கட்டடக் கொள்வீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் சுறுசுறுப்பு அடைவர். சிலர் பள்ளிகளை சீர்படுத்தும் பணி செய்வீர்கள். மருத்துவமனை கட்டலாம். சினிமா படப்பிடிப்பிற்கு, வாகனம் கொடுக்கலாம். ஆக, இந்த ஒரு வருடம் ஒப்பந்த வேலைகளுக்கு சரியாக இருக்கும். ஆனால் பணம் மட்டும் சுமாராக வரும். மாணவர்கள் கட்டடம் கட்டும், போக்குவரத்து சம்பந்த படிப்பு படிப்பார்கள். அடுத்த வருடம் (2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை) சென்ற வருடம் தொழிலில் பரபரப்பாக செயல்பட்டவர்கள், இந்த வருடம் திருஷ்டி பட்டதுபோல் இருக்கும். சிலர் உங்கள் வேலையில் குற்றம் கண்டுபிடிப்பர். சிலர் உங்கள் ஒழுக்கத்தில் குறை கூறுவர். சில அரசியல்வாதிகள், குறிப்பாக விருச்சிக மந்திரிகள், அவமானத்திற்கு உள்ளாவர். உங்கள் வாரிசுகளும், உங்கள் மருமகனும் மன வேறுபாடு கொள்வர். பங்கு வர்த்தகம் திடீர் லாபமும், திடீர் நஷ்டமும் தரும். எண்ணக் குழப்பம் வரும். கடைசி வருட பலனாக சனியால் மிக நல்ல பலன் தர இயலாது. விருச்சிக ராசியார் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சனி செல்லும் சார அதிபர் புதன் எட்டாம் அதிபதி ஆவதால் இவ்விதம் கூறப்பட்டுள்ளது. வக்ர காலத்தில் சற்று சிரமம் இருக்கும். சனீஸ்வரரை விளக்கேற்றி வணங்கவும்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு ஆவார். இவர் சனிபகவானுக்கு நட்பு கிரகம் ஆவார். தனுசு ராசியின் 4-ஆமிடத்திற்கு சனி அமர்ந்துள் ளார். அவர் அங்கிருந்து தனுசு ராசியின் 6, 10, 1-ஆம் இடங் களைப் பார்க்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியில், உங்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். வேலை இல்லாமல், திண்ணையை தேய்த்துக்கொண்டிருந்தவர்களும், இனி கண்டிப்பாக வேலைக்கு செல்லவேண்டும். ஏனெனில் சனி ஒரு உழைப்புக்குரிய கிரகம். அவர் ஒரு உழைக்கும் இடத்தைப் பார்க்கும்போது, அதன் பலனை அதிகரிக்கவே செய்வார். எப்போதும் சனி 6-ஆமிடத்தைப் பார்த்தால், கடன் நீங்கும். நோய் அகலும். எதிரி எல்லைவிட்டு சென்றுவிடுவான் என்றெல்லாம் சொல்வதுண்டு. இதற்கு காரணம், சனி, ஜாதகர்களின் 6-ஆமிடத்தைப் பார்த்து, அவர்களை செமத்தியாக வேலை வாங்குவதுதான். நிறைய வேலை பணவரவை தருவதால் கடன் அடையும். நிறைய உழைப்பு உடல் நலனைத் தரும். எதிரிகளிடம் சண்டை போட நேரம் இருக்காது. உங்கள் பெற்றோர் நலன் கவனிக்கப்பட வேண்டும். வயதான பெண்கள் அல்லது உணவு, தண்ணீர்மூலம் எதிர்பாரத யோகம் கிடைக்கும். வீண் செலவுகள் குறையும். பயணங்கள் குறுகும். சீருடை பணியாளர்கள் வீட்டுக்கு அருகில் பணி கிடைக்க காண்பர். சனி, உங்கள் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால், தொழில் கெட்டு போகாது. அதற்காக வெகு ஓட்டமாக ஓடவும் ஓடாது. மெள்ளமாக நகரும். இதற்கு அரசின் சில திட்டங்களும், சில அரசு அதிகாரிகளும் காரணமாவார்.
உங்கள் தொழில், தொழிற்சாலை பற்றி, எதிர்மறை செய்தி பரவுக்கூடும். நீங்கள் ஓட்டல் நடத்தினால் உங்கள் உணவு கெட்டுபோய், அதனை விற்றதாக உங்கள் பெயரில் புகார் கிளம்பும். சுகாதாரம் சுத்தமாக இல்லை என்பர். சில தொழில்களில், மந்திரிகள் பங்கு பெற்றுள்ளனர் எனக்கூறி, அதனை கண்காணிப்பர். குடும்பத்தில் மனைவியும், அம்மாவும் போடும் சண்டை, உங்கள் கௌரவத்தை குலைத்துவிடும். பெற்றோரின் நிலை கவனிக்கப்பட வேண்டும். சிலரின் சொந்தத் தொழில் இடத்தில், தண்ணீரால் பிரச்சினை ஏற்படும். சனி, இந்த பெயர்ச்சியில், உங்கள் ராசியை பார்ப்பதால், மண்டை குழம்பும். உங்களுக்கு, திடீரென்று நாம் இவ்வளவு மாங்கு மாங்கென்று உழைக்கிறோமே, அதற்கேற்ற கூலி லாபம் கிடைக்கிறதா என யோசனை வரும். சில அரசியல்வாதிகள் அதிலும் குறிப்பாக பெண் அரசியல்வாதிகள் ஒரு வெறுமையை உணர்வர். சிலர் நமக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா, இல்லையா என சந்தேகப்படுவர். உங்களுக்கு அரசு, அரசு அதிகாரிகள், தந்தை இவர்கள்மேல் கோபமாக வரும். வெளிநாட்டு பயணம் தள்ளிப்போடப்படும். ஒரு பிடிப்பில்லாமல், தான் தோன்றித்தனமாக, நடந்துகொள்வீர்கள். உங்களில் சிலர் தினமும் குளிக்க வேண்டுமா என எண்ணுவீர்கள். ஒருவித சோம்பேறித்தனம் வந்து ஒட்டிக்கொள்ளும். அழுக்கு மூட்டையாக அலைவீர்கள். சனிப்பெயர்ச்சியான முதல் மாதம் நிறைய மாற்றங்கள் இருக்கும். வீடு கட்ட ஒப்பந்தம் செய்த இடம் சரியில்லை என்று அதனை மாற்றுவீர்கள். தனியார் நிறுவனத்தில் போட்ட பணத்தை, தபால் துறைக்கு மாற்றுவீர்கள். வீடு மாற்றம் உண்டு. பணியாளர் மாறுவர். கை பேசி வேறுவிதமாகும். சில தனுசு மாணவர்கள், பள்ளியை மாற்றவேண்டி வரும். விவசாய நில குத்தகை மாறும். வண்டி வேறாகும். உங்கள் இளைய சகோதரன் வேறு இடம் மாறுவார். உங்கள் மாமனார் வேறிடம் செல்வார்.
ட்யூசன் இடம் மாறும். டி.வியை மாற்றி புதுசு வாங்குவீர்கள். பத்திரிகை ஏஜென்சி மாறும். ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் மாறுதல் அடையும். நூலகங்களில் பணிபுரிவோர் இடமாற்றம் அடைவர். அடுத்த ஒரு வருடத்திற்கு (2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை), போன மாதத்திலுள்ள மாற்றங்கள் தொடரும். கூடவே அந்த மாற்றங்களை, வாழ்வியலுக்கு ஏற்ப நெறிப்படுத்தவே நேரம் சரியாகிவிடும். சில மாற்றங் கள் உங்களுக்கு பிடிக்காமலும், சரிப்பட்டு வராமலும் போய்விடும். பழசே நல்லாயிருந்தது. புதுசு நல்லால்ல என்று குடும்பத்தினர் வியாக்னம் செய்வர். எனவே சனி பெயர்ந்த ஒன்றேகால் வருட அளவில் ஆட்டைத் தூக்கி குட்டியில் போடவும் குட்டையைத் தூக்கி ஆட்டில் போடவும் நேரம் சரியாகிவிடும். இதற்கு அடுத்த வருடம் (2026- மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை). உங்களில் நிறைய பேர், திருமண சம்பந்த கேட்டரிங், அலங்காரம், மேக்கப், திருமண மண்டபம் என இவைசார்ந்த தொழில்களில் பிஸியாகிவிடுவீர்கள். சிலர் திருமண மண்டபம் கட்டுவீர்கள். சிலர் திருமண மண்டப குத்தகை எடுப்பீர்கள். திருமண பத்திரிகை தாம்பூல பை என இவை நல்ல சுறுசுறுப்பு பெறும். திருமண மேட்ரி மோனியல்ஸ் நடத்துபவர்கள் நல்ல வாய்ப்பு பெறுவர். இந்த காலகட்டத்தில், தனுசு ராசியார் உங்கள் தொழிலை திருமணம் சார்ந்து அமைத்துக்கொள்ளுங்கள். நல்ல மேன்மை கிடைக்கும். உங்களில் சிலருக்கு திருமணம் நடக்கும். சீதனமாக வீடு அல்லது வாகனம் கிடைக்கும். வக்ர காலத்தில் சற்று தொழில் தேக்கம் காணும். பின்பு சரியாகிவிடும். சனீஸ்வரனுக்கு வஸ்திரம் கொடுத்து வணங்கவும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி ஆவார். மகர ராசியின் 3-ஆமிடத்திற்கு வந்து அமர்ந்த சனி, ராசியின் 5, 9, 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் சனி, உங்கள் 5-ஆமிடத்தைப் பார்த்து, உங்களுக்கும், உங்கள் வாரிசுக்கும் இடையே ஆகவிடாமல் பண்ணிவிடுவார். உங்களின் சில காதல் விஷயங்கள் வெளியே தெரிந்து பெரிய களேபரம் ஏற்படும். சில காதல் விஷயம் விட்டு வெளியே வந்துவிடலாம் என நீங்கள் திட்டம் போட்டால், நம்ம சனிபகவான், அந்த கல்யாணத்தை நடத்திவைத்து, உங்களை அழ, அழசெய்வார். நிஜமான காதல் பிரிய நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சினிமா, டி.வி கலைஞர்கள் ஒருவித தடுமாற்றம் சந்திப்பர். இதுவரையில் சுற்றுலா, பொழுதுபோக்கு என ஜாலியாக ஊர் சுற்றிகொண்டு இருந்தவர்கள், இனி அப்படியிருக்க இயலாமல் போய்விடும். பொழுது போக்கை, தொழிலாளகக் கொண்டவர்கள், கொஞ்சம் பின்னடைவை சந்திப்பர். பங்குகளின் அளவு குறுகும். குலதெய்வ தரிசனம் ரொம்ப தடைகளை சந்திக்கும். ஒழுங்காக இருந்த சில நபர்கள் மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளாவார்கள். கர்ப்ப ஸ்திரிகள் கவனமாக இருக்கவேண்டும். சனி உங்களின் 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் தர்மம் செய்யும் எண்ணம் குறையும். பிறகுக்கு ஏன் உதவ வேண்டும் என்று எதிர்மறை எண்ணம் தோன்றும்.
உங்கள் நம்பிக்கையில் சேதாரம் உண்டாகும். தெய்வத்தைக் கும்பிட்டு என்னத்தைக் கண்டோம் எனத் தோன்றும். ஆச்சாரமான செயல்களில் குறை ஏற்படும். இதுவரையில் தியானம், யோகா போன்று செய்தவர்கள், அவை செய்ய விருப்பமில்லாமல் போகும். உங்களை சேர்ந்தவர்கள், பங்குதாரர், நண்பர்கள் உடன் கல்வி பயில்பவர்கள் இவர்கள்மீது தேவையில்லாமல் வெறுப்பு தோன்றும். உயர்கல்வி சார்ந்த வெளி நாட்டு பயணம் தாமதம் ஆவதால், விரக்தி ஏற்படும். ஒரு உன்னதமான 9-ஆமிடத்தை சனி பார்த்து, அதனை பாழடித்து, ஜாதகரின் நிலையை மட்டமாக்கு கிறார். சனி உங்களின் 12-ஆமிடத்தைப் பார்த்து, செலவு, அலைச்சல், பயணம், தூக்கம் எல்லாவற்றையும் சுருக்கிவிடுகிறார். நிறைய சினிமா பார்ப்பது நின்று விடும். சினிமா கலைஞர்கள். தங்கள் தொழில் ஏனோ இறுக்கமாக இருப்பதாக உணர்வர். உங்களின் பங்குவர்த்தக ஆர்வம் மட்டுப்படும். ஊர் சுற்றுவது நிறுத்தப்படும். ஒருசிலர், சில தொழி-ல் இருக்கிற அனைத்து பணத்தையும், சனி பெயர்ச்சியில் முதலீடு செய்துவிடுவர். பின் செலவுக்கு பணம் கிடைப்பது கஷ்டமாகிவிடும். சிலருக்கு அரசு வரி சட்டப்படி, இவ்வளவு பணம் கட்டியே ஆகவேண்டும் எனும் சூழ்நிலை ஏற்படும். அதனாலும் மற்றய செலவுகளை கட்டுப்படுத்தும் நிலை உண்டாகிவிடும். சனிபகவான் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி மகர ராசியினரை, அங்கிங்கு அலையாதபடி, செலவு செய்யாமல் லாக் பண்ணிவிடுவார். சனி வந்த ஒரு மாதத்தில், நிறைய நட்ண்ச்ற்ண்ய்ஞ் வேலை இருக்கும். ஏதோ ஒரு காரணத்தால் வீட்டை விட்டு வேறிடத்தில் தங்க வேண்டிவரும். அது சிலரின் வீடு பழுது பார்ப்பதால் அல்லது வீட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக இருக்கும். இதன்காரணமாக, சிறு தூர மற்றும் வெகு தூரப் பயணம் இருக்கும்.
சிலர் ஒப்பந்த அடிப்படையில் வேறிடம் சென்று பணிபுரிய நேரிடும். முக்கியமாக பண சம்பந்தம், வாக்கு சம்பந்தம், கல்வி பயிற்சி கொடுப்பது அல்லது பயிற்சிபெறுவது, என ஏதோ ஒரு காரணத்தால் இடமாற்றம் உண்டு. அடுத்த வருடம் (2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை), போன மாத பயிற்சியினால், பணம் கையில் புரளும். இதனால் மன தைரியம் அதிகமாகி, கொஞ்சம் இஷ்டம்போல் வாழ ஆரம்பித்து விடுவீர்கள். வாழ்வின் சௌகர்யத்தை அதிகப்படுத்துவீர்கள். நாமும் கொஞ்சம் சுகபோகமாக வாழ்வோம் என்ற எண்ணம் வரும். அதன்பொருட்டு ஒன்றுக்கு இரண்டாக கைபேசி வாங்குவது, பணியாட்களை அதிகப்படுத்துவது, பயணத்துக்கான வசதிகளை அதிகரிப்பது, பெரிய சைஸ் டி.வி, புதுமையான வாகனம் மற்றும் புதிய புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது என வாழ்க்கை ரொம்ப குதூகலமாக போகும்; கொஞ்சம் சில்மிஷ வேலையும் தொடரும். அதற்கடுத்த வருடம் (2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை) சென்ற வருட பணப்புழக்கம், பெருமையில், இந்த வருடம் நிறைய பணியாளர் களை வைத்து வேலை வாங்கும் நிறுவனம் போன்ற அமைப்பை ஆரம்பித்துவிடுவீர்கள். இதனால் ஒரு முதலாளி அந்தஸ்து சிலருக்கு கிடைக்கும். வேறு சிலர் நல்ல பணியில் அமர்ந்துவிடுவீர்கள். சிலர் பணியில் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். சிலர் மனிதவள மேம்பாடு அதிகாரியாக வேலை செய்ய முடியும். நிறைய மனிதர்களை குழுக்களாக வேலைக்கு அனுப்பும் ஒப்பந்தம் கிடைக்கும். பரபரப்பும் தருவார். வக்ரசனி காலத்தில் சற்று தொய்வு ஏற்படும். சனீஸ்வரரை தீபமேற்றி வணங்கவும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி ஆவார். கும்ப ராசியின் 2-ஆமிடத்தில் அமர்ந்த சனி 4, 8, 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். சனி 4-ஆமிடத்தைப் பார்ப்பதால், உங்கள் வீடு குறுகும். நீங்கள் இப்போது வேறு வாடகை வீடு பார்த்தால், அது கொஞ்சம் சின்னதாக, வெளிச்சம் இல்லாத வீடு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழில் கொஞ்சம் டல் அடிக்கும். தாயார் முகத்தில் ஏதோ படைபோல் காணப்படும். பெற்றோர் நிலை கவனிக்கப்பட வேண்டும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நச்சு நச்சு என்று சின்ன இம்சை தொடரும். வேலை சின்ன இம்சை தொடரும். வேலை செய்யும் இடம் மாறும். நீங்கள் தொழிற்சாலை, பட்டறை போன்று வைத்திருந்தால் அந்த இடத்தை அடாவடியாக மாற்றச் சொல்வார்கள். உங்கள் இளைய சகோதரி, வீடு விஷயமாக விவாதம் செய்வாள். குளம், நதி, ஆற்றில் குளிக்கும்போது, கவனம் தேவை. பயணத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அடிபட வாய்ப்புண்டு. சனி கும்ப ராசியின் 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். எட்டாமிடம் அவமானம், துன்பத்துக்கு உரிய இடம். சனி பார்வைபட்ட இடத்தின் பலன்களை அழிப்பார். அதன்படி 8-ஆமிடத்தின் துர்பலன்களை அழிக்கிறார். உங்கள் இல்வாழ்க்கையில், மோசமான சிக்கிலில் சிக்கிகொண்டிருந்தால், அதிலிருந்து வெளியேறிவிடலாம். சில எதிரிகளிடமிருந்தும் விடுதலை கிடைக்கும்.
நிறைய வட்டி கட்டி கொண்டிருந்த கடன் தீர்ந்து அந்த கடன்காரர்களிடமிருந்து தப்பிவிடுவீர்கள். வெகுநாள் உங்களை இம்சித்துக்கொண்டிருந்த நோய் விலகிவிடும். உங்களில் சிலர் மாமனார், மாமியாரிடம் சொல்லொண்ண துயரம் அனுபவித்தும் கொண்டிருந்தால், அதிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள். ஆக 8-ஆமிடத்தைப் பார்த்த சனி, உங்களை பெரிய துன்பங்களிலிருந்து காப்பாற்றிவிடுவார். சனி உங்களின் 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். இதனால் அரசியல்வாதிகள் மிக சங்கடபட போகிறார் கள். சில அரசியல்வாதிகள் அரசியலைவிட்டு நீங்கும் நிலையுண்டு. அது நோய், அதிக சொத்து, உங்கள் ஆதரவாளர்கள் என இவர்கள்மூலம் விலகிவிட நேரிடும். இதேபோல் உங்கள் பகுதிகளிலுள்ள தலைமைப் பொறுப்புகளும் உங்களைவிட்டு நீங்கிவிடும். தொழிலில் லாபம் என்பது வருவது தடை, தாமதமாகும். நீங்கள் எண்ணியது கைகூட சிரமப்படும். வழக்குகள் இழுத்தடிக்கும். நீங்கள் ஒருவிதமாக முயற்சிசெய்தால், விஷயங்கள் வேறுவிதமாக மாறி நடக்கும். ஆக, 11-ஆமிடம் என்பது மிக நல்ல ஸ்தானம். அதை பார்க்கும் சனி அதனை சுருக்குகிறார். சனி முதல் மாதம் விக்க விக்க கொடுத்து. கக்க கக்க அடிப்பான் என்ற ஒரு பழமொழி உண்டு. சனி லாபம், விரயம் என்ற இரண்டு சம்பந்தமும் பெறுவதால், பணம் வர வர அதனை செலவழித்தும் விடுவார். சனி ஒரு தன ஸ்தானத்தில், லாப அதிபதியின் சாரத்தில் செல்லும்போது பண வரவு வரத்தான் செய்யும். எனினும் சனி விரயாதிபதி என்பதால், அத்தனையும் செலவழிந்தும்விடும். எனவே பணம் கைக்கு கிடைத்த வுடன் கூடியமட்டும் முதலீடாக செய்வது நல்லது. அடுத்த (2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை) போன மாதம் வரவும் செலவுமாக இருந்தது. இந்த வருடம் சிலர் நல்ல யோசனையுடன் நிறைய முதலீடு செய்துவிடுவீர்கள். அது தொழில் ஆரம்பிப்பது, நல்ல ஆட்களுக்கு வட்டிக்குக் கடன்கொடுப்பது, வீடு வாங்கி அதனை வாடகைக்கு விடுவது, மருந்துக்கடை, மூலிகை கடை திறப்பது, நோயுள்ளவர்களுக்கு சிறப்பு உணவு தயாரிப்பு என இவ்வகையான தொழில்களை தேடிப்பிடித்து முதலீடு செய்வீர்கள்.
இன்னொரு சாரார் "நிறைய பணம் இருக்கிறதே அரசியலில் ஒரு சீட்டு பார்சல்' என்று கூறி, அதைக் கொண்டு நன்றாக செலவழிப்பார்கள். உணவு, நகை, குடும்பத்துடன் சுற்றிப் பார்ப்பது என இவ்வகையில் செலவு செய்யக்கூடும். கூடியமட்டும் இந்த வருட காலத்தில் செலவு என்பது முதலீடு என்ற சூத்ரம் கொண்டு இருக்கட்டும். அதற்கடுத்த வருடத்தில் (2026 மே 7 முதல் 2027 ஜூன் 3 வரை) போன வருடம்போல் அலைச்சல், செலவு இருக்கும்தான். ஆனால் இந்த செலவுகள் விரும்பத் தகாதவை ஆக அமையும். சிலருக்கு ஆரோக்கியம் சம்பந்தமாக செலவு இருக்கும். சிலர் சிறைக்கு போகாமல் இருக்க அதிகளவு லஞ்சப் பணம் கொடுக்க வேண்டி இருக்கும். சினிமா கலைஞர்கள், மந்திரிகள், இவர்கள் ஓரிடத்தில் மறைந்து வாழ வேண்டிவரும். பங்கு வர்த்தகம் சரியாக இராது. காதல் விஷயத்தால், வீட்டைவிட்டு ஓடி எங்காவது மறைந்து வாழ வேண்டியிருக்கும். எனவேதான் சென்ற வருடத்தில் பணத்தை முதலீடுசெய்து வைத்துக்கொண்டால், இந்த வருடம் மிக உதவியாக இருக்கும். வக்ரசனி காலத்தில் கொஞ்சம் நல்லதே நடக்கும். சனீஸ்வரருக்கு தீபமேற்றி வணங்கவும். உங்களுக்கு ஏழரைச் சனியும் ஆகும்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு. இவர் சனிக்கு நட்பு கிரகம் ஆவார். இவர் உங்களின் ராசியில் அமர்ந்து ஜென்ம சனியாகிறார். மேலும் ஏழரைச்சனியின் நடப்பும் அமையும். சனி, உங்களின் மீன ராசியில் இருந்து 3, 7, 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். சனிபகவான் உங்கள் 3-ஆமிடத்தைப் பார்த்து, உங்களின் தைரியத்தைக் குறைக்கிறார். வீரம் காணாமல் போகும். இவ்வளவு நாளும், ஒப்பந்தத்தில் வேலை பார்த்து வந்தீர்களானால், இப்போது அந்த ஒப்பந்தம் ரத்தாகிவிடும். நீங்கள் வேறு வேலை தேடி சேர்வீர்கள். சினிமா, டி.வி. கலைஞர்களின் காண்ட்ராக்ட் முடிந்து விடும். சில பொழுதுபோக்கு ஒப்பந்தத்தையும் முடித்துக் கொள்வர். உங்கள் மாமனார். ரொம்ப குறை சொல்வார். உங்கள் இளைய சகோதரி பண விஷயமாக எரிச்சல்படுவார். பணியாளர்களிடம் நீக்கு போக்காக நடந்துகொள்ளவும். பெரிய சண்டை வர வாய்ப்புள்ளது. கவனம் தேவை. சனி மீன ராசியின் 7-ஆமிடத்தைப் பார்த்து, திருமண விஷயங்களை தாமதமாக்குவார். தம்பதிகளுக்குள் சண்டை வரும். காதல் திருமணம் நடக்க இருந்து, சிலபல காரணங்களால் தடை ஏற்படும். உங்கள் தந்தைக்கும், உஙகள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே பணப் பிரச்சினையால் கருத்து வேறுபாடு வரும். வியாபாரம் சுறு சுறுப்பில்லாமல் ஆகும். பங்குதாரர் சுணக்கம் காண்பார். இப்போது திருமணம் நடந்தால் வரும் வரன் நிறம் கம்மியாக இருப்பதோடு, சோம்பேறியாகவும் இருப்பார். உங்கள் வாரிசின், திருமண விஷயமாக சண்டை வரும். சனி மீன ராசியின் 10-ஆமிடத்தைப் பார்த்து, உங்கள் கௌரவத்தை குறைப்பார்.
உங்கள் மாமியாரை சற்று அமைதியாக இருக்கும்படி செய்வார். உங்கள் தொழில் சார்ந்த லஞ்ச விஷயங்கள், அதன் இம்சை முடிவுக்கு வரும். தொழிலில், வரி சம்பந்த, அரசுவகை வழக்குகள் இன்னல் தரும். பணியாளர்கள் சரியாக கிடைக்க மாட்டார்கள். தொழில் சார்ந்த ஒரு ஒப்பந்தம் தகராறு தரும். வருமான கணக்குகளை சரியாக பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களை பயமுறுத்தும் வகையில் வளர்ந்துவிடும். 10-ஆமிடத்தைப் பார்த்த சனி, தொழிலையும், கௌரவத்தையும் பாதிப்படையச் செய்கிறார். சனி வந்த முதல் மாதம் நிறைய லாபமும், செலவும் வரும். உங்கள் லட்சியங்களை நிறைவேற்ற, நிறைய செலவு செய்யவேண்டி இருக்கும். நீங்களும், உங்கள் மூத்த சகோதரனும் இணைந்து புதிய தொழில் ஆரம்பித்து. விடுவீர்கள். சிலர் அரசியல்வாதிகள் தரும் முதலீட்டில் தொழில் தொடங்குவீர்கள். இதற்காக நிறைய அலைச்சல் இருக்கும். சிலர் வெளிநாட்டு பயணமும் மேற்கொள்வர். உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறதோ அவ்வளவு அலைச்சல் இருக்கும். எவ்வளவு கௌரவம் கிடைக்கிறதோ, அவ்வளவு செலவும் இருக்கும். அடுத்த வருடம் (2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை) போன மாத நிகழ்வுகள் தொடரும். நீங்கள் எந்த செலவு செய்தாலும், அதில் ஒரு லாபம் கிடைக்கிறதா என கருத்தாக இருப்பீர்கள்.
இது அரசியல்வாதிகளின் கணக்கல்லவா. எனவே நிறைய மீன ராசியினர். ஏதோ ஒருவகையில் அரசியல் சம்பந்தம் பெறுவர். அரசியல் தலைவராக, தொண்டராக மட்டுமல்ல. அரசியல் சார்ந்த தொழில் சம்பந்தமும் பெறுவீர்கள். அரசியல் கூட்டம் கூட்டுவது, கூட்டத்துக்கு ஆள் கூட்டிவருவது, கூட்டத்துக்கு உணவு விநியோகம், கூட்டத்துக்கு போக்குவரத்து ஏற்பாடு என, அரசியல் சார்ந்த தொழில்களையும் எடுத்துச்செய்வீர்கள். பெரிய சமையல் காண்ட்ராக்ட் எடுத்துசெய்வீர்கள். வேனில் சமையல் செய்து விற்கும் தொழிலை உங்களில் சிலர் ஆரம்பித்து விடுவீர்கள். அதற்கடுத்த வருடம் (2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை) போன வருட நிகழ்வுகள் தொடரும். கூடவே ரியல் எஸ்டேட், பள்ளி, கல்லூரி தொடங்குவது, திருமண அமைப்பு தண்ணீர் சார்ந்த தொழில், வணிக காம்பௌக்ஸ், ஹோட்டல் என இவைபோன்ற நிறைய இணை தொழில்களில் ஈடுபடுவீர்கள். உங்களில் சிலர் அரசியல்வாதிகளின் முதலீடுகளை ரொட்டேஷனில் விட்டு, நிறைய தொழில் ஆரம்பித்துவிடுவீர்கள். இதனால் நிறைய மனிதர்களின் நட்பும், பழக்கமும் கிடைக்கும். உங்களில் சிலர் பிறந்த இடத்தில் வியாபாரம் ஆரம்பித்துவிடுவீர்கள். சிலர் வெளிநாட்டு தொடர்பு பெறுவர். வக்ரகாலத்தில் செயல்கள் சற்று தடுமாறும். சனீஸ்வரருக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும்.