மிதுனம்
மிதுனத்திற்கு புதன் லக்னாதிபதி மற்றும் சுகாதிபதி. சூரியன் 3-ஆமதிபதி. பள்ளிப் படிப்பை முடிக்கும்முன்பு குறைந்தது நான்கு பள்ளியை மாற்றுவார்கள். அல்லது இவர்கள் படிக்கும் வகுப்பில் ஆசிரியர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அதேநேரத்தில் இவர்கள் மனது வைத்தால் மட்டுமே நன்றாகப் படிப்பார்கள். பிறர் வற்புறுத்தலுக்காகப் படிக்கமாட்டார்கள். படிக்காத மேதையாக- படிக்காமலே பரிட்சையில் தேர்வாகிவிடுவார்கள். படிப்பிற்கும் தொழில், வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. வாகனம், பூமி லாபம், அரசுவகையில் ஆதாயம், உயர்ந்த பதவி அமையும். செல்வச் செழிப்புண்டு. சுய உழைப்பில் சொத்துச் சேர்க்கையுண்டு. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் சாதனை படைப்பார்கள். பலவிதமான சுபப் பலன்கள் வாழ்நாள் முழுவதும் மிகுந்துகொண்டே இருக்கும்.
பரிகாரம்
புதன்கிழமை காலை 6.00-7.00 மணிவரையான புதன் ஓரையில் சூரிய நமஸ்காரம் செய்துவர வளர்ச்சி தொடர்ச்சியாகும்.
கடகம்
கடகத்திற்கு சூரியன் தானாதிபதி. புதன் 3, 12-ஆமதிபதி. பல பள்ளிகளை மாற்றுவதில் முன்னணியில் இருப்பவர்கள் கடக லக்னத் தினர். இவர்கள் படித்து முடிப்பதற்குள் பெற்றோர் களுக்கு விரயச் செலவு மிகுதியாக இருக்கும். ஒருமுறை படித்ததை வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவில் வைத்திருப்பார்கள். முதுநிலை ஆராய்ச்சிக் கல்விக்கு வெளிநாடு செல்வார்கள். படித்து முடித்தபிறகு வெளிநாட்டில் செட்டிலாவார்கள். படித்த படிப்பிற்குத் தகுந்த வேலையுண்டு. படிப்பிற்கான முக்கிய ஆவணங்களை- குறிப்புகளை அடிக்கடி தவறவிடுவார்கள். ஊடகங்கள், தகவல் தொடர்புத் துறையில் நாட்டமுண்டு. திறமைசாலிகள், சிந்தனையுள்ளவர்கள். தவறான வழியில் செல்லமாட்டார்கள். நல்ல சிந்தனையும், புகழும் அடைவார்கள். சுய முயற்சியில் பணக்காரராவார்கள். சுக வாழ்வு அமையும். தனாதிபதி சூரியன், விரயாதிபதி புதன் சம்பந்தம் மிகுதியான தன விரயத்தை ஏற்படுத்தும்.
பரிகாரம்
அமாவாசை, பௌர்ணமி காலங்களில் சிவபூஜை செய்துவர முன்னேற்றமுண்டு.
சிம்மம்
சிம்ம லக்னத்தினருக்கு சூரியன் லக்னாதிபதி. புதன் தன, லாபாதிபதி. ரிஷப லக்னத்தினருக்கு இணையான சுபப் பலன்கள் சிம்ம லக்னத்தினருக்கும் உண்டு. நல்ல கல்வி, கேள்வி ஞானமுண்டு. ஆசிரியர் வகுப்பில் நடத்தும்பொழுதே மனதில் குறிப்பெடுத்து மூளையில் சேமித்துவிடுவார்கள். தூங்கும்பொழுது எழுப்பிக் கேட்டாலும் சொல்லும்வகையில் ஞாபகமிருக்கும். வழக்கறிஞர், அரசியல் வாதி, உயர் நிர்வாகப் பதவி, உயர்ந்த பதவி, அந்தஸ்தை அடைவர்கள். படித்த படிப்பு, அனுபவமென அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு. செல்வாக்கு, சொல்வாக்கு படைத்தவர்கள். கற்ற கல்விமூலம் நிறைந்த வருமானமும் திரண்ட சொத்துகளும் சேரும். சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை காலை 8.00-9.00 மணிவரையான புதன் ஓரையில் சிவனுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபட நன்மைகள் அதிகரிக் கும்.
கன்னி
கன்னி லக்னத்தினருக்கு புதன் ராசியாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதி. சூரியன் விரயாதிபதி. 1, 10-ஆமதிபதி புதன் விரயாதிபதி சூரியனுடன் சேர்க்கை. புதனும் சூரியனும் நட்பு கிரகங்கள் என்பதால் நல்ல கற்றல் ஞானம் உண்டு. படிக்கும்போதே பிறருக்கு சொல்லிக்கொடுக்கும் வகையில் கைதேர்ந்தவர்களாக இருப்பார் கள். ஆசிரியர்கள் தவறாகக் கற்பித்தால்கூட கண்டுபிடித்து விடுவார்கள். கற்ற கல்விக்குத் தகுந்த வேலையுண்டு. பல தொழில்துறை பற்றிய அறிவுண்டு. பல அரிய புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் ஜாதகர் தன் ஞானத்தைப் பிறருக்கு இலவசமாக விரயம் செய்வார். அல்லது இவர்களது கண்டுபிடிப்பு கள் திருடப்படும். இந்த அமைப்பி னர் வெளிநாட்டில் வாழ்ந்தால் கற்ற கல்வியால் பயனுண்டு. சூரியன் விரயாதிபதியாக இருப்பதால் சுபப் பலன்கள் மட்டுப்படும்.
பரிகாரம்
புதன்கிழமையில் 11.00-12.00 சூரிய ஓரையில் சிவனுக்கு பச்சைக் கற்பூரத்தால் அபிஷேகம் செய்ய, புதாதித்ய யோகப் பலன் ஜாதகருக்குப் பயன் தரும்.
துலாம்
துலா லக்னத்திற்கு சூரியன் லாபாதிபதி, பாதகாதிபதி. புதன் பாக்கியாதிபதி, விரயாதிபதி. சிறுவயது முதலே கல்வியை ஆர்வத்துடன் கற்பார்கள். இவர்களுடைய தந்தைக்கும், தந்தைவழி முன்னோர் களுக்கும் புதாதித்ய யோகமுண்டு. வம்சாவளியாக ஆசிரியர் தொழில் செய்வார்கள். கற்ற கல்வியால் பயனுண்டு. கல்வியை எளிமையாகப் பிறருக்குப் புரியம்படி கற்பிப்பதில் வல்லவர்கள். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக போதிப்பவர்கள். சிலர் புத்தக ஆசிரியர்களாக இருப்பார்கள். நன்மைகள் அதிகம் உண்டாகும். பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என தொழில் வெற்றியும், சிறந்த அந்தஸ்தும் கிட்டும். சிறந்த ஆராய்ச்சியாளர்களாக அனைவராலும் புகழப்படுவார்கள். புகழ்பெற்ற வியாபாரியாகவும், பரம்பரை சுயதொழில் புரிபவர்களாகவும் இருப்பார்கள். சூரியன் 11-ஆம் அதிபதியாகவும், பாதகாதிபதியாகவும் ஆகிறார். பாதகாதிபதி சூரியனுடன் கூடியிருக்கும் புதன் எவ்வித நன்மையை ஜாதகருக்கு உண்டுபண்ண முடியும்? என்றாலும் 9, 11-க்குடையவர்கள் ஒன்றுகூடியிருத்தல் என்ற நிலையை கவனிக்கும்போது இச்சேர்க்கையால் ஓரளவு நற்பலன்கள் கிட்டும் வாய்ப்புள்ளது.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை பகல் 12.00-1.00 வரையிலான சூரிய ஓரையில் சிவனடி யார்களுக்கு உணவு, உடை தானம் வழங்க நற்பலன் மிகுதியாகும்.
விருச்சிகம்
விருச்சிக லக்னத்தினருக்கு சூரியன் 10-ஆமதிபதி. புதன் 8, 11-ஆமதிபதி. கல்வியில் அதிகத் தடையிருக்கும். கற்றலில் ஆர்வம் குறைவாக இருக்கும். பல பள்ளி மாறுவார்கள். அல்லது பெயிலாகி படிப்பார்கள். எந்த மேற்படிப்பைத் தேர்வுசெய்வது என்ற குழப்பம் மிகுதியாக இருக்கும். தன் அறிவுத்திறமைக்கு மீறிய கல்வி கற்க விரும்புவார்கள். எளிதில் கல்லூரி அட்மிஷன் கிடைக்காது. பள்ளிப் படிப்பு முடித்து சில வருடத் தடைக்குப்பிறகு கல்லூரிப் படிப்பு வாய்ப்பு கிடைக்கும். அல்லது பல அரியர்ஸ் வைப்பார்கள். முடிவாக குருட்டு அதிர்ஷ்டத்தில் ஏதோ ஒரு படிப்பைப் படித்து முடிப்பார்கள். படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாத வேலை அல்லது தொழில் உண்டு. 35 வயதிற்குமேல் பல்வேறு உலகியல் ஞானம் பெற்று வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை காலை 9.00-10.00 வரையிலான புதன் ஓரையில் சிவனுக்கு அரளி மாலை அணிவித்து வழிபட தடைகள் தகரும்.
தனுசு
தனுசு லக்னத்திற்கு புதன் 7, 10-ஆமதிபதி, சூரியன் 9-ஆமதிபதி. அதாவது பாக்கியாதிபதி. இந்த கிரக இணைவு ராஜயோகத்தைத் தரும். இது தர்மகர்மாதிபதி யோகம். அறிவுடையவர்கள். அழகாய்ப் பேசுபவர்கள். தீர்க்கமான சிந்தனையுடைய வர்கள். பெற்றோர்கள் நன்கு படித்தவர் களாக இருப்பார்கள். கல்வி, தொழில், உத்தியோகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வம்சத்தினராக இருப்பார்கள். கல்வி, புகழ், அரசியல், லாபங்களும், பூர்வீக வகையில் நன்மையும் கிட்டும். வாழ்க்கைத் துணையாலும் ஆதாயமுண்டு. நல்ல படித்த உத்தியோகத்திலுள்ள வாழ்க்கைத் துணை கிடைக்கும். புதனுக்கு கேந்திராதிபத்திய தோஷம், பாதகாதிபத்திய தோஷமுள்ளதால் 5, 9, 10-ல் இருந்தால் மட்டுமே சிறப்பான யோகம் தரும்.
பரிகாரம்
வியாழக்கிழமை காலை 8.00-9.00 வரையான சூரிய ஓரையில் சிவனுக்கு பசும்பாலால் அபிஷேகம் செய்து வழிபட சுபப் பலன் இரட்டிப்பாகும்.
மகரம்
மகர லக்னத்திற்கு சூரியன் 8-ஆமதிபதி. புதன் 6, 9-ஆமதிபதி. 12 லக்னத்தில் புதாதித்ய யோகம் மகர லக்னத்தினருக்கு கடுமையான பாதிப்பைத் தருகிறது. பலர் சூரியனுக்கு அஷ்டமாதிபத்திய தோஷம் கிடையாது என்று கூறுகிறார்கள். ஆனால் நடைமுறை யில் மகர லக்னத்தினர் சூரிய தசையில், புதன் தசையில் (சூரியனும் புதனும் 7 டிகிரி வித்தியாசத்தில் இருந்தால்) மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள். அதேபோல் லக்னாதிபதி சனியும், அஷ்டமாதிபதி சூரியனும் பகை கிரகங்கள். ஆனால் புதனும் சனியும் நட்பு கிரகங்கள். புதனுக்கு சனியின் சம்பந்தமிருந்தால் புதனின் காரகத்துவங்கள் மட்டுப்படும். இந்த கிரகச் சேர்க்கை சிலருக்கு 6, 8, 11-ல் இருந்தால் சிறப்பான பலனைத் தரும். விபரீத ராஜயோகம் அமையும். தொழிலில் மேன்மையும், அரசியல் பதவியும், செல்வாக்கும், சட்டத்துறையில் மதிப்பும் கிடைக்கும்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை காலை 6.00-7.00 வரையான சூரிய ஓரையில் நெய்தீபமேற்றி வெண்மையான மலர்களால் சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.
கும்பம்
கும்ப லக்னத்திற்கு புதன் 5, 8-ஆமதிபதி. சூரியன் 7-ஆமதிபதி. நன்றாகப் படிப்பார்கள். விரும்பிய கல்லூரி படிப்புண்டு. சிலருக்கு கல்லூரிக் கல்வியில் நண்பர்களால் பிரச்சினை உண்டாகும். எப்படியாவது படித்து நல்ல வேலைக்குச் சென்றுவிடுவார்கள். உயர்ந்த பதவி, தொழில் அனுக்கிரகம் உண்டு. சிலருக்கு பதவியில் நெருக்கடி இருக்கும். அடிக்கடி மெமோ வாங்குவார்கள். இந்த கிரகச் சேர்க்கை 3, 6, 10-ல் இருந்தால் சிறப்பான யோகம் தரும். அரசியலில் பெரிய பதவி, செல்வாக்கு, சட்டசபைத் தலைவர்கள், நீதிபதி பதவி கிட்டும். ஆனால் மண வாழ்க்கையில் மனச் சங்கடங்கள் உண்டு. சிலருக்கு வம்பு வழக்கான காதல் திருமணம் நடக்கும். சிலருக்குத் திருமணமே நடக்காது. சிலரது திருமணம் விவாகரத்தில் முடியும். சிலருக்கு குழந்தை பிறக்காது அல்லது குழந்தைகளால் வாழ்நாள் முழுவதும் மன சங்கடம் நீடிக்கும். சூரியனும், லக்னாதிபதி சனியும் பகை கிரகங்கள் என்ப தால் சுபமும், அசுபமும் கலந்தே நடக்கும்.
பரிகாரம்
சனிக்கிழமை காலை 9.00-10.00 மணிவரையான சூரிய ஓரையில் சிவனுக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடவும்.
மீனம்
மீன லக்னத்திற்கு புதன் 4, 7-ஆமதிபதி. சூரியன் 6-ஆமதிபதி. கேந்திராதிபத்திய தோஷம், பாதகாதிபத்திய தோஷம் என்ற அடிப்படையில் பாதிப்பைத் தரும். இந்த கிரக இணைவு பள்ளிப் படிப்பையே தடுமாறச் செய்யும். நண்பர்களுடன் இணைந்து தீய பழக்கத்தில் ஈடுபடுவார்கள். நிலையான தொழில், உத்தியோகம் இருக்காது. சுயதொழில் செய்தால் கடன்சுமை மிகுதியாக இருக்கும் அல்லது நோய் தொந்தரவிருக்கும். உத்தியோகத்தை அடிக்கடி மாற்றுவார்கள். தாயாரைப் பிரிந்து வாழ்வார்கள். தாய்வழிச் சொத்தில் தாய்மாமாவுடன் மனபேதம் உண்டாகும். நல்ல சொத்து சுகத்துடன்கூடிய வாழ்க்கைத் துணை அமையும். கிடைத்த வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ளத் தெரியாது. வெகுசிலருக்கு லக்னாதிபதி குரு வலுத்தால் புதன், சூரியனின் சுயபலத்தின் அடைப்படையில் நற்பலன்கள் உண்டு.
பரிகாரம்
மீன லக்னத்தினர் வியாழக்கிழமை காலை 8.00-9.00 மணிவரையான சூரிய ஓரையில் ஆதித்ய ஹிருதயம் படிக்க அல்லது கேட்க நல்ல பலன் கிடைக்கும். நமது ஜோதிட நூல்களில் சூரியன் பாதி அசுபர்- அதாவது அரைப் பாவி என்று குறிப்பிடப்படுகிறார். அதன்படி சூரியன் மீதி சுபர் என்பதால் ஒருவருக்கு சூரியன் பாதி நல்லவராகவும், மீதி கெட்டவராகவும் செயல்படுவார். இதில் நல்லவர், கெட்டவர் எனும் நிலை சம்பந்தப்பட்ட லக்னங்களைப் பொருத்தது. சூரியன் தனது நட்பு கிரகங்களின் லக்னங்களுக்கு தனது ஆதிபத்தியத்தைப் பொருத்து சுபராகவே செயல்படுவார். நட்பு லக்னங்களுக்கு ஆதிபத்திய பாவராக வந்தாலும் பெரிய கெடுதல்களைச் செய்வதில்லை. இதற்கு உதாரணமாக மீன லக்னத்தைக் குறிப்பிடலாம். மீனத்தின் ஆறுக்குடைய கொடிய பாவியான சூரியன் லக்னாதிபதி குருவுக்கு நெருங்கிய நண்பர் என்பதால், தனது தசையில் பெரும் கெடுதல்கள் எதையும் செய்யமாட்டார். இதுபோன்ற நிலையில், சூரியன் தனது பாவ வலுவை வெளிக்காட்ட இயலாத சூழலில், அவருடன் இணைந்திருக்கும் புதன் சுபத்தன்மை பெற்று சுபராகி நன்மைகளைச் செய்வார். சுருக்கமாகச் சொன்னால் சூரியன் சுபத்தன்மை மேலோங்கி இருக்கும்பட்சத்தில் அவருடன் இணையும் புதனும் சுபராகி நற்பலன் செய்வார். அதேபோல் சூரியன் அவ யோகியாகி கெடுபலன்களைத் தரும்போது அவருடன் இணைந்திருக்கும் புதன், அந்த லக்னங்களுக்கு சுபராக இருந்தாலும் நன்மை களைக் குறைத்தே தருவார். அதாவது சூரியனின் நிலைக்கேற்பவே புதனின் வலிமையைத் தீர்மானிக்க வேண்டும். பொதுவாக மிதுனம், சிம்மம் ஆகிய லக்னங் களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே சிறப் பான- முழுமையாக பலன் தருமென்பது என் கருத்து.
செல்: 98652 20406