ம்மாதம் 25-ஆம் தேதி ஸ்ரீராம நவமி வருகிறது. பாரதத்தில் ராமபிரானை மரியாதை புருஷோத்தமன் என்று குறிப்பிடுவார்கள். மனிதர்களுடன் எப்படி மரியாதையுடன் பழகவேண்டும், உறவுகளுடன் எப்படிப் பழகவேண்டும், ஒரு குடும்பத்தை எப்படிக் காப்பாற்ற வேண்டும், நண்பர்களுடன் எப்படிப் பழகவேண்டும் என்பதையெல்லாம் தானே வாழ்ந்துகாட்டி, மற்றவர்களுக்கு உதாரண புருஷனாக இருந்தவர் ராமர்.

Advertisment

ராமரின் வாழ்க்கையை ஊன்றி கவனித்தால்- நாம் அதிலிருந்து பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். தாய்- தந்தைமீது அவர் எப்படி பாசம் வைத்திருந்தார், சகோதரர்களின்மீது எப்படி அன்பு வைத்திருந்தார், உயர்வையும் தாழ்வையும் எப்படி சரிசமமாக ஏற்றுக்கொண்டார், துன்பங்கள் சூழ்ந்த நேரத்திலும் எப்படி அவர் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டார் என்பது போன்ற விஷயங்களை நாம் அவரது வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

vishnu

ராமபிரானை வணங்கினால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். ஒருவர் ராமரை வணங்கினால், ராமரின் நாமத்தை உச்சரித்தால் எல்லா சிரமங்களும் தீரும் என்பது பலரது அனுபவம்.

ராமரை இவர்கள்தான் வணங்கவேண்டும் என்ற சட்டங்கள் கிடையாது.

Advertisment

அவரை யாரும் வழிபடலாம். ஏனென்றால் யார் அழைத்தாலும் அவர் அழைத்தவரைத் தேடிவந்து உதவுவார். அதனால்தான் அவருக்குப் பெயர் பக்தவத்சலன்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி நீசமாகவோ, அஸ்தமனமாகவோ இருந்தால், அவருக்கு மனதில் பயம் ஏற்படும். தேவையற்ற சிந்தனைகளில் மூழ்குவார். அதன்காரணமாக அவருக்கு நோய்கள் வரும். அவர் தினமும் ராமரை வழிபட்டு, அவரின் திருநாமத்தைக் கூறினால் மனபயம் நீங்கும். லக்னாதிபதியின் தோஷத்திலிருந்து விடுபடலாம்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் நிலை சரியில்லாமலிருந்தால், செவ்வாய் நீசமாகவோ அல்லது லக்னத்திலோ, 4, 7, 8, 12-லோ இருந்தால், அவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். அதனால் பலருக்குத் திருமணம் நடக்காது. சிலருக்குத் திருமணம் நடந்தாலும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். சிலர் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

Advertisment

செவ்வாய், ராகு லக்னத்திலோ, 7-லோ இருந்தால் கணவனும் மனைவியும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்.

செவ்வாய், சனி இணைந்து லக்னம் அல்லது 8 அல்லது 12-ல் இருந்தால் அவர்கள் பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் வீட்டில் அப்போதும் சண்டை போட்டுகொண்டே இருப்பார்கள்.

அத்தகையவர்கள் தங்களுடைய வீட்டில் ராமர் குடும்பத்துடன் இருக்கும் படத்தைவைத்துப் பூஜைசெய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை ராமர் ஆலயத்திற்குச் சென்று, ராமரை மூன்றுமுறை சுற்றிவர வேண்டும்.

லட்டு, பூந்தி, அல்வா அல்லது கற்கண்டை வைத்து, அதில் துளசியும் வைத்துப் படைக்கவேண்டும். பிறகு அதை அங்கிருப்பவர்களுக்கு அளிக்கவேண்டும். அதை அவர்களும் சாப்பிடவேண்டும். இவ்வாறு செய்துவந்தால் அவர்களுடைய ஜாதகத்திலிருக்கும் களஸ்திர ஸ்தான தோஷமும், செவ்வாய், சனி ஆகியவற்றால் உண்டாகும் கோபமும், பிரச்சினைகளும் இல்லாமல் போகும் அல்லது குறையும்.

ஒரு ஜாதகத்தில் 5-ல் செவ்வாய், ராகு சேர்ந்திருந்து அல்லது 5-ல் செவ்வாய் இருக்க, அதை ராகுவோ சனியோ சூரியனோ பார்த்தால், ஜாதகர் பெண்ணாக இருந்தால் பிரசவ நேரத்தில் வயிற்றில் ஏதாவது பிரச்சினை ஏற்படும். அத்தகையவர்கள் வியாழக்கிழமை ராமபிரானின் ஆலயத்திற்குச் சென்று, ராமருக்கு பூ, தேங்காய், துளசி வைத்துப் பூஜைசெய்ய வேண்டும். இரவில் படுப்பதற்கு முன்பு, "ஜெய் ஸ்ரீராம்' என்ற மந்திரத்தைக் கூறிவிட்டுப் படுக்கவேண்டும். இதை தொடர்ந்து ஒருவர் செய்தால் 5-ஆம் பாவத்தின் தோஷம் குறையும். குழந்தை நல்லமுறையில் பிறக்கும். அந்தக் குழந்தை ஸ்ரீராமரின் அருள் பெற்றதாக இருக்கும்.

ஒரு ஜாதகத்தில் 2-ஆவது வீட்டில் செவ்வாய் இருந்தால், அவர் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சண்டை போடுவார். அதே 2-ஆம் வீட்டில் செவ்வாய், சூரியன் அல்லது செவ்வாய், சூரியன், ராகு அல்லது ராகு, சனி அல்லது சூரியன், ராகு, சனி இருந்தால், அவருடைய குடும்பத்தில் எப்போதும் பிரச்சினைகள் இருக்கும். சகோதரர்களுடன் நல்லுறவு இருக்காது. அவர்கள் வீட்டில் ராமர்பட்டாபிஷேகம் படத்தை வைத்துப் பூஜைசெய்ய வேண்டும். அல்லது செவ்வாய்க்கிழமை ஆலயத்திற்குச் சென்று ராமரை வழிபடவேண்டும். அங்கிருக்கும் ஆஞ்சனேயரை ஏழுமுறை சுற்றிவர வேண்டும். வீட்டில் காலையிலும் மாலையிலும் ராமரை வழிபட்டு, "ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்' என்ற மந்திரத்தைக் கூறி வணங்கவேண்டும்.

ஒருவர் பயணத்தை ஆரம்பிக்கும்போது, அதில் எந்தத் தடைகளும் உண்டாகாமல் இருக்க, பயணத்திற்கு முன்பு ஸ்ரீராமரை வணங்கி, "நீங்கள் என் இதயத்தில் இருந்துகொண்டு, என் பயணம் முழுவதும் துணையாக இருக்கவேண்டும்' என்று வேண்டிக்கொண்டு, ராம நாமத்தைக் கூறி பயணத்தை ஆரம்பிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் பயணத்தின்போது எந்த விபத்தும் உண்டாகாது. நல்லமுறையில் பயணம் நடக்கும்.

மேற்கண்டவாறு ராமரை வழிபட்டு, ராமரின் நாமத்தைக் கூறிவந்தால் வாழ்க்கையில் அனைத்து தோஷங்களும் நீங்கி, சந்தோஷமாக வாழலாம்.

செல்: 98401 11534