சித்தர்தாசன் சுந்தர்ஜி

ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சென்ற இதழ் தொடர்ச்சி...

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பதுகிரகங்களுக்குவேத ஜோதிடத்தில் முக்கியத்துவம் தந்து பலன் கூறப்படு கிறது. சூரியன்முதல் சனிவரையுள்ள ஏழு கிரகங்களும், ஒரு மனிதன் தானும் தன் குடும்பத்தாரும்செல்வம், செல்வாக்குடன் உயர்வாக வாழ பாவம்- சாபம் என எதைப் பற்றியும் கவலைப்படாமல், தான் விரும்பியதை அடைய எதைச் செய்தாவது, நடைமுறையில் வாழச்செய்யும் கிரகங்களாகும். இந்த ஏழுகிரகங்கள் பாவச்செயல்களுக்குக் காரணமாவதால், இவற்றை பாவகிரகங்கள் எனசித்தர்கள் தமிழ்முறை ஜோதிடத்தில் கூறுகிறார்கள். இந்த கிரகங்களால் தூண்டப்படும் செயல்களைத் தடுத்து, துறந்து வாழ்பவர்களையே துறவிகள் என அழைக்கிறார்கள்.

Advertisment

ss

சூரியன்முதல் சனி வரையுள்ள இந்த ஏழு கிரகங்களின் தூண்டு தலால் மனிதர்கள் செய்யும் பாவங்களுக்குரிய தண்டனைகளை அடையச்செய்யும் கிரகம் ராகுவாகும். ராகுபகவான், பாவம் செய்தவர்களைப் பிடித்து, நீதிமன்றத் திற்குகொண்டு சென்று தண்டனை வாங்கித் தரும் பணி செய்யும் காவலர் (போலீஸ்) ஆவார். கேது பகவான் மனிதர்கள் செய்யும் பாவச் செயல்களுக்கு தண்டனைகளைத் தந்துதீர்ப்பளிக்கும் நீதிபதியாவார். மனிதன் எழுதிவைத்த சட்டத்தின்படி அனைவரும் காவல்துறைக்கும், நீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்டவர்;கள். அதேபோன்று சூரியன்முதல் சனிவரையுள்ள ஏழுகிரகங்க ளும் ராகு-கேதுவினால் அடக்கிக் கட்டுப் படுத்தப்படுகிறார்கள்.

மனிதன் இயற்றிய சட்டத்தில் குற்றவாளிகள் தப்பிக்க பல வழிமுறைகள் உண்டு. ஆனால், ராகு-கேதுநியாய மன்றத்தில் குற்றம் செய்தவர்கள் கடவுள், மனிதன் என யாராகயிருந்தாலும் தப்பிக்கமுடியாது.

Advertisment

தண்டனைகளை அனுபவித்துதீர்த்தாக வேண்டும். இதனால்தான் ராகு-கேதுவை ராஜகிரகங்கள், முதன்மை கிரகங்கள் எனசைவத் தமிழ்ச்சித்தர்கள் கூறுகிறார்கள்.

ராகு-கேது கிரகங்கள் தனி மனிதா;கள் வாழ்வில் மட்டும் நியாயம் வழங்குவதில்லை. இந்த உலகில் பாவங்கள், தவறுகள் செய்யும் மன்னர்கள் ஆட்சிசெய்யும் நாடுகளிலும், அதில் வசிக்கும் மக்க ளுக்கும் தண்டனைகளைத் தந்து அனுபவிக்கச் செய்வார்கள்.

ஒருவரின் பிறப்பு ஜாதகத்திலுள்ள கிரகங்களுடன் கோட்சாரா நிலையில் ராகு-கேது இணையும்போது அந்த தனிமனிதனை மட்டும் பாதிப்படையச் செய்வார்கள். ஆனால், கோட்சார நிலையிலுள்ள மற்ற கிரகங்களுடன் கோட்சார நிலையில் ராகு-கேது இணையும்போது உலக நாடுகளையும், அந்த நாட்டில் வசிக்கும் மக்களையும், அதிகமாக பாதிப்படையச் செய்துவிடுவார்கள்.

இந்த வருடம் கொரோனோ-19 என்ற ஆட்கொல்லி நோய் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும், ஏராளமான மக்களை மரணமடையச்செய்தும், மக்களின் வாழ்வு, தொழில், பொருளாதாரம், ஜீவனவாழ்வாதாரத்தைத் தடைசெய்து, துன்பமடையச் செய்துவருகிறது. இதற்குக் காரணம் கோட்சார நிலையில் குரு, சனி, கேது ஆகியமூன்றுகிரகங்களும் ஒரே ராசியில் சேர்ந்திருப்பதே என நாடியில் சித்தர்கள் கூறியதை சுருக்கமாக அறிவோம்.

குருகிரகம் உலகில் வசிக்கும் மனிதர் களைக்குறிப்பிடும் உதாரண கிரகமாகும். சனிகிரகம்தொழில், வருமானம், பணம், சொத்து, சேமிப்பு, செல்வநிலை,செலவு, வறுமை ஆகியவற்றைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும்.

ராகு மனிதர்களுக்கு உண்டாகும் விபத்து, மரணம், துக்க சம்பவம், இயற்கைப் பேரிடர்களால் மக்கள் கும்பல்கும்பலாக மரணமடைவதைக்குறிப்பிடும் உதாரண கிரகமாகும். கேதுகாரியம், செயல்கள், உறவுகளிடையே தடை, முடக்கம், பிரிவு,நோய் ஆகியவற்றைத் தண்டனைகளாக வழங்கித் தீர்ப்பளிக்கும் கிரகம்.

தனதுராசியில் கோட்சார நிலையில் குரு, சனி, கேது ஆகிய மூன்றுகிரகங் களும் இணைந்தும், இதற்கு ஏழாமிட மான மிதுன ராசியில் ராகுவும் சஞ்சாரம் செய்தபோதும்குரு, சனிகிரகங்கள் தங்கள் சுயபலத்துடன் செயல்படமுடியாமல் கேதுவினால் முடக்கி, அடக்கிவைக்கப் பட்டன. கேதுவின் ஆதிக்கத்தால் கொரோனோ என்ற நோய் உருவாக்கப் பட்டு, குருகுறிப்பிடும் உலக மக்களை சிறையில் அடைத்ததுபோல் அடக்கிவைத்து, ஒருவரையொருவர் சந்திக்கமுடியாமல் தடைசெய்துபிரித்துவைத்தது. பிரிவைத் தந்துவருகிறது.

தனுசுராசியில் கோட்சார சனி, கோட்சாரக் கேது இணைவால் சனியின் சுயபலம் அடக்கப்பட்டு, சனிகுறிக்கும் தொழில் முடக்கப்பட்டது. இதனால், மக்கள் தொழில்செய்துபிழைக்க வழியில்லா மல் வருமானம் தடைப்பட்டது. சேமித்து வைத்திருந்த கையிருப்புப் பணம் கரைந்து, பொருளாதாரம் அழிந்து, மக்களின் அன்றாட ஜீவனத்திற்கே வழியில்லாமல்போனது.

வாழ்வுஸ்தம்பித்தது. கொரோனா நோயால் ஏராளமான மக்கள் இறந்து, வாழ்வாதாரம் குலைந்து, இன்று உலகமே முடக்கப்பட்டிருப்பதற்கு, ராகு-கேது, கிரகங்களே காரணம்.

கொரோனாநோயினால் அமெரிக்க தேசம் அளவிற்கதிகமான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அடைந்ததற்கு அந்நாட்டு ஆட்சியாளர்களின் ஆணவ ஆட்சிமுறையும், ஆசை, அகங்காரம், கர்வம், தன் நாடு மட்டுமே உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும் என்னும் எண்ணமும், சாதி, மதம் பிரிவினை சார்ந்த செயல்பாடும் தான் காரணம்.

அமெரிக்க அரசு தனக்கு சம்பந்தமேயில்லாத காரியங்களில்- அண்டை நாடுகளின்மீது, காரணமேயில்லாமல் படையெடுத்து,போர்க்கருவிகளைத் தயாரித்துவியாபாரம் செய்து. மக்கள் மரணமடையச்செய்வது, விஞ்ஞானம்- ஆராய்ச்சி என்னும்பெயரால் வான் வெளியையும், காற்றினையும் மாசுபடுத்தும் செயல்களே அந்நாட்டின் பாதிப்புக்குக் காரணம், கேது பகவானின் நியாய மன்றத் தில் ஆண்டவனும் தப்பிக்கமுடியாது, அமெரிக்காவும் தண்டனையிலிருந்து தப்பிக்கமுடியாது.

கடந்த பதினெட்டு வருடங்களில் அமெரிக்கா அந்நியநாடுகளின்மீது படையெடுத்து, எத்தனை லட்சம் அப்பாவி மக்களைக்கொன்றதோ, அதற்கு ஈடாக அமெரிக்க தேசத்து மக்களை கொரோனா நோய்மூலம் மரணமடையவைத்து, செய்த பாவத்திற்குத் தண்டனையைத் தந்து வருகிறார் ராகு பகவான். மேலும், அமெரிக்க நாட்டிற்குத் துணைபோகும் அதன் நட்பு நாடுகளிலும், அந்த நாட்டின் கொள்கை களைக் கடைப்பிடிக்கும் நாடுகளிலும் கொரோனாநோய் அதிக மக்களை மரண மடையச் செய்துவிடும்.

கொரோனா-19 நோயின் தாக்கம் எப்போது முடிவுக்கு வரும்?

ராகுபகவான் மிதுன ராசியில், தனது சொந்த நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது கொரோனா நோய்த் தாக்கம் உருவாகியது. ராகு பகவான் ரிஷபராசியில் மிருகசீரிஷ நட்சத்திரம் இரண்டாம் பாதம், முதல் பாதங் களைக் கடந்து, ரோகிணி நட்சத்திற்குப் பெயர்ச்சியடைந்தபிறகு, அதாவது செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்கள் சென்றபிறகு தான்கொரோனாநோயின் தன்மை, வைரஸ் உருவம், அது பரவும்விதம் என இதுவரை மருத்துவர்களால் கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கும் கொரோனா பற்றிய உண்மையான நிலை மருத்துவ ஆராய்ச்சியாளர்;களால் அறியப்பட்டு, அதன்பின்பு நோயைக் கட்டுப் படுத்தும் மருந்தினைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தியதற்குப் பின்புதான் கொரோனா நோயின் தாக்கம் குறையும். அதாவது 2021-ஆம் ஆண்டு, ஜனவரிக்குமேல் நோய்த் தாக்கம் குறையும்.

பிறப்பு ஜாதகத்தில் சனிபகவான் விருச்சிகம், மீனம், கடகம், துலாராசிகளில் இருந்தால், இப்போது கோட்சார நிலையில் விருச்சிக ராசிக்கு வந்த கேது பகவான்ஜென்மச்சனியுடன் இணைந்து கீழ்க்கண்ட பலன்களைத் தருவார்.

தொழில், வியாபாரம், உத்தியோகம் ஆகியவற்றில் தடை, இழப்பு, முடக்கம் உண்டாகும். புதிதாக வேலை தேடுபவர் களுக்குவேலை கிடைப்பதில் தடையாகும். சரியான தொழில், உத்தியோகம் அமையாது, நிரந்தரத்தொழில் அமைவதுசிரமம், அரசியல் வியாபாரிகள் சிலரின் பதவி பறிபோகலாம். உழைப்பு, திறமைக்கேற்ற ஊதியம் கிடைக்காது. வருமானம் தடை யாகும். கடன்தொல்லை அதிகமாகும். கொடுத்த கடன்வராது. முன்னோர்கள் சொத்துகளில் விருத்தி இராது, அடிமை போன்றுபிறரிடம் வேலைசெய்யும் நிலை ஏற்படலாம். நேரத்திற்கு உணவுண்ண முடியாது. எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். எதனையும் அனுபவிக்கும் ஆசை குறையும். பிறர் ஆதரவு பெரிதாகக் கிடைக்காது. எதிர்காலம் இருளாகத்தெரியும், என்னசெய்யப்போகிறோம் என்ற பயமும், மனதில் விரக்தியும் உண்டாகும். தொழில், உத்தியோகம், பணம், வருமானம் என எதிலும் நன்மை, உயர்வில்லாத காலநிலை இப்போது.

உண்டாகும் கவலை, கஷ்டங்களால் கடவுள் வழிபாடு, ஆன்மிக நம்பிக்கை அதிகமாகும். அதனாலும் நன்மை இராது. வாதம், நரம்பு, வயிறு, சுவாசம் சம்பந்தமான நோய்கள் சிரமம் தரும்.

ஜாதகத் தில் விருச்சி கம், மீனம், கடகம், துலா ராசி களில் ராகு இருந்தால், இப்போது கோட்சார நிலையில் விருச்சிக ராசிக்குள் வந்துள்ள கேதுபகவான் ஜென்ம ராகுவுடன் இணைந்து கீழ்க்கண்ட பலன்களைத் தருவார், இதுவரை உங்களிடம் இருந்த சுறுசுறுப்பு, உற்சாகம் குறையும், மனம், புத்தி மந்த நிலையை அடையும், சோம்பேறியாகிவிடுவீர்கள். எந்த செயலையும் உடனே செய்து முடிக்க முடியாது, தடை, தாமதமாகும். தொழில்ரீதியான தடைகள் அதிகமாகும். பெண்களால் சில பிரச்சினைகள் உண்டாகலாம். சிலருக்கு மாற்று சாதி, இனப்பெண்கள் நட்பு உருவாகலாம், தொழிலில் அல்லதுதொழில்செய்யும் இடத்தில் பிரச்சினைகள் உண்டாகலாம், இயந்திரத்தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும். குடும்பத் திலும் குழப்பம், கருத்துவேறுபாடுகள் உண்டாகும்.

பிறர்செய்த தவறுகளுக்குநீங்கள் பொறுப்பாளி யாக்கப்படுவீர்கள். பிறர் ஆதரவுபெரிதாக இராது.

தான் நினைத்தபடி ஏதும் நடைபெறவில்லையே என்னும்கவலையும், விரக்தியும் உண்டாகும். கடவுள் காப்பாற்றுவார் எனகோவில்களுக்குச் சென்று வருவீர்கள், அதனால்கூட மனதில் அமைதிகிட்டாது. தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறாது. நரம்பு, எலும்பு பாதிப்பு, கழுத்து, கை,கால் வலி, உடல் அசதி, சோர்வு, வயிற்று, நோய்கள், கருக்குழாய் அடைப்பு போன்ற நோய்கள் சிரமம் தரும்.

ஜாதகத்தில், கேதுபகவான், விருச்சிகம், மீனம், கடகம், துலாராசிகளில் இருந்தால், இப்போது கோட்சார நிலை யில் விருச்சிக ராசிக்கு வந் துள்ள கேது கிரகம்ஜென்மக் கேதுவுடன் இணைந்து தரும் பலன்களைக் காணலாம்.

குடும்பத்தில் குழப்பம், கருத்து வேறுபாடுகள், நண்பர்களுடன் கருத்துவேறுபாடு, உறவுகளுடையே பிரச்சினை, உடன்பணிபுரிவோரிடம் கருத்துவேறுபாடு, காதலன், காதலியிடம் கருத்துவேறுபாடு, நட்பில் தடை, பிரிவு என எல்லாநிலைகளிலும் உங்கள் பேச்சைத் தவறாகப் புரிந்து கொண்டுவிலகுவார்கள், நீங்கள் கூறும் வார்த்தைகளைத் தவறான அர்த்தத்தில்தான் புரிந்து கொள்வார்கள். இதனால் பிரிவு, அவமானம், கெட்ட பெயர் உண்டாகும். மரியாதை குறையும், உங்களைவிட கீழானவர்கள்கூட உங்களைக்கீழ்த்தரமாக எண்ணுவார்கள். இந்நிலை மாற உங்கள் தனிமை நன்மை தரும்.மௌனமாக இருந்தால் மதிப்பைத் தரும். எனவே, எல்லா இடத்திலும், எந்த நிலையிலும் மௌன குருவாக இருந்துவிடுங்கள். பிறருக்கு நல்ல ஆலோசனை, கூறாதீர்கள். வயிறு, சுவாசம், தோல் சம்பந்தமான நோய்கள்சிரமம் தரும். ரத்தக்காயம், ரத்த விரயம், மூலம், கட்டிகள்போன்ற நோய்கள் சிரமம் தரும். அஜீரணம், மலச்சிக்கல் தொல்லை தரும்.

செல்: 99441 13267