நாம் எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கிரகப் பெயர்ச்சிகளுள் ராகு- கேது பெயர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வருடம் வாக்கியப் பஞ்சாங்கப்படி 1-9-2020 அன்று பகல் சுமார் 2.16 மணியளவில், ராகு மிதுனத்திலிருந்து ரிஷபத்திற்கும், கேது தனுசிலிருந்து விருச்சிக ராசிக்கும் இடம் பெயர்ந்துள்ளன. இவை சார்ந்த நற்பலன்கள், கெடுபலன்களை மிகச் சுருக்கமாக இங்கு ஆய்வு செய்வோம்.
ராகுவுக்கு விருச்சிகம் உச்சவீடு; ரிஷபம் நீசவீடு; கன்னி சொந்தவீடு.
கேது விருச்சிகத்தில் உச்சமாவார்; ரிஷபத்தில் நீசமாவார்; மீனத்தை சொந்த வீடாகக் கொள்வார்.
இனி நாம் ராசி அடிப்படையிலான பலன்களைக் காண்போம்.
மேஷம்
ராசிக்கு 2-ல் ராகு; 8-ல் கேது. அடுத்து வரும் ஒன்றரை ஆண்டுகள் பணம்தான் குடும்பத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். வேலைவாய்ப்பு, கல்வி, சுப நிகழ்ச்சிகள், வீடுமனை எல்லாமே உங்கள் எண்ணம்போல் நிறைவேறிவிடும்.
சோம்பல் பற்றிக்கொள்ளும். உணவில் கட்டுப்பாடின்மையால் தேகசுகம் கெடும். பேச்சில் நாணயம் கேள்விக்குறியாகும். மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்றவை பாடாய்ப் படுத்தும். ஆயுதங்களைக் கையாள்வோர் மிகமிக கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: பர்சில் எப்போதும் ஒரு வெள்ளி உலோக உருண்டை வைத்திருப்பது நன்று. எலக்ட்ரானிக், மின்சார உபகரணங்களை இலவசமாகப் பெறுவது கூடாது. சிறு வெள்ளிப் பெட்டியில் குங்குமப்பூ நிரப்பி பூஜையறையில் இருக்கச் செய்யவும். கருப்பு, வெள்ளை நிறம் கலந்த கைக்குட்டையை வாங்கி தலையைச் சுற்றி திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடவும்.
ரிஷபம்
ராகு 1-ல்; கேது 7-ல். எதிரிகளை வெல்லலாம். போட்டிகளில் வெற்றி உங்கள் பக்கம்தான். புத்திக்கூர்மை மிகையாகும். எப்போதோ செய்த விடாமுயற்சி தற்போது சுலபமான நன்மைகளைப் பெற்றுத் தரும். இனம் மாறி மதம் மாறி காதல் திருமணம் செய்வது வெற்றி தராது. முன்கோபத்தைத் தவிர்க்கவேண்டும். தெய்வ நம்பிக்கை, மதக் கோட்பாடுகள் கேள்விக் குறியாகும். சுய கௌரவம், குடும்ப நன்மைகளில் கவனம் வேண்டும். சிற்றின்பத் தாக்கம் கெடுபலனை மிகை யாக்கும்.
பரிகாரம்: ஒன்றரை ஆண்டுகள் நீலநிற ஆடை களைத் தவிர்ப்பது நல்லது. சமச்சதுர வெள்ளி உலோகத் துண்டை வீட்டு வாசலில் பதிக்கவும். நான்கு எலுமிச்சம்

பரிகாரம்: ஒன்றரை ஆண்டுகள் நீலநிற ஆடை களைத் தவிர்ப்பது நல்லது. சமச்சதுர வெள்ளி உலோகத் துண்டை வீட்டு வாசலில் பதிக்கவும். நான்கு எலுமிச்சம்பழம், ஒரு முழுத் தேங்காயை, மேற்கு நோக்கி நின்று திருஷ்டி சுற்றி ஓடும் நீரில் போடவும். பொய் சாட்சி சொல்வதைத் தவிர்க்கவும். வைடூரிய மோதிரம் அணிதல் நன்று.
மிதுனம்
ராகு 12-ல்; கேது 6-ல். பேச்சாற்றல் மிகும். மந்திரம், தந்திரம் கைகூடும். ஆன்மிக போதனை கள் மேம்படும். இறைசக்தி பெருகும். அமானுஷ்ய சக்தி வலுப்பெறும். வெளி நாட்டில் வசிப்போர் வெற்றியின் நேர்ப்பாதை பளிச்செனத் தெரிவதை உணரலாம். குழந்தைகளின் பார்வை மந்தமாகலாம். பெண்களுக்கு கருப்பை சார்ந்த பின்னடைவுகள் வேதனை தரக்கூடும். பெற்ற குழந்தை களுக்காக செலவுகளை எதிர்நோக்க நேரிடும்.
பரிகாரம்: பிறர் துயரங் களைத் துடைப்பது மிக நன்று. மாதத்தில் நான்கு நாட்கள் சமையல்கூடத்தில் இருந்து உணவுண்ணவேண்டும். வருமானத் தில் சிறு பகுதியை மகள் மற்றும் சகோ தரிக்குக் கொடுப்பது நல்லது. சிறுதுளி தங்க மாவது உடலில் இருப்பது மிகவும் நன்று. விநாயகரைத் துதிப்பது போதுமானது.
கடகம்
11-ல் ராகு; 5-ல் கேது. அசையா சொத்து, நிலபுலன் வைத்திருப்போருக்கு நல்ல வருமானம் கிட்டும். தொழில் மேன்மை, உற்பத்தி, அதிக விளைச்சல் பூரிப்படையச் செய்யும். எதிரிகளை சுலபமாக எதிர் கொள்ளலாம். குழந்தைகள் விஷயங்களில் உன்னிப்பான கவனம் வேண்டும். தீய வழிகளில் முதலீடு செய்வது லாபம் தராது. ஆண் சந்ததிகளும், பெண் சந்ததிகளும் பொருளாதார உதவியை எதிர்பார்ப்பார்கள். சிலருக்கு உதவியும் புரிவார்கள். கலைஞர்கள் சக கலைஞர்களை உதாசீனப்படுத்துதல் கூடாது.
பரிகாரம்: காலஞ்சென்ற தந்தையின் பொருட்களை உபயோகிப்பது வெற்றியைப் பெற்றுத் தரும். வியாழக்கிழமை மஞ்சள் துணியில் மஞ்சள் தூள் நிரப்பி, ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து முடிந்து பூஜை யறையில் வைத்து, எட்டு மாதங்கள் கடந்தபின் கோவில் குளத்தில் போட்டுவிடுதல் நன்று. வலது காதில் கடுக்கன் அணியலாம்.
சிம்மம்
10-ல் ராகு; 4-ல் கேது. எழுத்தாளர்கள், கலை ஞர்களுக்கு கற்பனைமூலம் புகழ்சேர்க்க சூழ்நிலை ஆதரவு தரும். அரசியல்வாதிகள், பொதுநலத் தொண்டர்கள், இசைக் கலைஞர்கள் நல்ல சந்தர்ப்பங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு இது பொற்காலம். அதிக வாய்ப்பேச்சு கூடாது. நாவடக்கம் மிக நன்று. உடல்சார்ந்த வம்புகளை எதிர்கொண்டால் மிக பாதிப்பை அனுபவிக்க நேரிடும். இளம் வயதில் தாய்- தந்தையை இழந்தோர் கட்டுப்பாட்டுடன் நடப்பது நன்மை தரும். வயது முதிர்ந்தோரைக் காப்பாற்றுவது மிக நன்று.
பரிகாரம்: தாயின் ஆரோக்கியத்தை கவனிப் பது நல்லது. ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். கெடுதல்கள் தொடர்ந்தால் கொஞ்சம் நெல்லும் பச்சரிசியும் சம அளவு எடுத்து, அதனுடன் எட்டு ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து முடிந்து திருஷ்டி சுற்றி சிவன் கோவில் குளத்தில் போடவும்.
கன்னி
ராகு 9-ல்; கேது 3-ல். கணிதப் பேராசிரி யர்கள், ஆடிட்டர்கள், வங்கி ஊழியர்கள், பொருளாதார நிபுணர்கள், போதகர்கள் ஆகியோருக்கு அற்புதப் பலன்கள் நடை பெறும். வெளிநாட்டு தயவுடன் வாழ்வோர் பதவி உயர்வு பெறலாம். ராணுவம், காவல் துறையினருக்கு பதவி மேன்மை கிட்டும். நீண்டதூரப் பயணம் வெற்றி தரும். அடிப்படை விதிகளை மீறி செயல்படுதல் கெடுதலைத் தரும். மின்துறையில் பணிபுரி வோர் மிக பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். மாற்றுமொழியினரைப் பகைப்பது கூடாது. நெடும்பகையாகிவிடும்.
பரிகாரம்: அமாவாசைக்குப் பின்வரும் பஞ்சமி நாட்களில் நாகருக்குப் பால் ஊற்றுதல் நன்று. இரு கோமேதக ராசிக்கல் வாங்கி, விநாயகர் பாதத்தில் வைத்து வணங்கி, ஒன்றை கடலில் அல்லது குளத்து நீரில் போட்டுவிட்டு, மற்றொன்றை வெள்ளி மோதிரமாக அணியலாம்.
துலாம்
8-ல் ராகு; 2-ல் கேது. பொருளாதாரரீதியாக முன்னர் இருந்ததைவிட முன்னேற்றத்தைக் காணலாம். சட்டம் தெரிந்த நபர்கள் வாதாடிப் புகழ் சேர்க்கலாம். விவசாயத்தில் நன்செய் பயிருக்கு நிகராக புன்செய்ப் பயிர்களும் செழிப்பைப் பெற்றுத்தரும். ராகு காலங்களில் முளைநெல் கூலிப் பயிர்செய்வது கூடாது. அது பூச்சித் தொல்லையை உருவாக்கும். சிலருக்கு கூடாநட்பால் தேகசுகம் கெடும். மேலும் மருத்துவமும் ஒத்துவராத சூழ்நிலை யால் பணச்செலவு மிகுதியாகும். சனிக்கிழமை களில் நோய் தீ தொற்றினால் தொல்லை வந்தால், உரிய பரிகாரம் செய்துகொள்ளவும்.
பரிகாரம்: ஐந்து சனிக்கிழமைகள் ராகு காலத்தில் (காலை 9.00-10.30) எட்டு மரக்கறித் துண்டுகள், எட்டு செல்லாத பழைய நாணயங் களை கருப்புத் துணியில் முடிந்து, மேற்கு நோக்கி நின்று திருஷ்டி சுற்றி பாழடைந்த கிணற்றில் போடலாம். கடல்நீரில் போடு வதும் நல்ல பரிகாரம். வியாழனன்று ஆலயம் சென்று அங்குள்ள குப்பைகளை அகற்றி தூய்மை செய்வதும் நன்மை தரும்.
விருச்சிகம்
ராகு 7-ல்; கேது 1-ல். கூட்டு வியாபாரம், ஆடம்பர வாழ்க்கை தொடரும். நல்ல சுவையான உணவுகளை உண்டு மகிழ சூழ்நிலை வழிவகுக்கும். சுற்றுலா, நெடுந்தூரப் பயணங்கள் அதிக நன்மைகளை அள்ளித் தரும். உயரதிகாரிகளின் பேராதரவு ஆனந்தத்தைத் தரும். மனையாளின் ஆரோக்கியம் கேள்விக் குறியாகலாம். குறிப்பாக மாதாந்திரப் போக்கு அதிக தொல்லை தரும். அதிக சிற்றின்பத் தாக்கம் பேராபத்தைத் தரும். ஆண்கள் அபிலாசைகளை கட்டுப்படுத்தவேண்டும். தரம்தாழ்ந்த செய்கை பெரும் கெடுதலைத் தந்துவிடும்.
பரிகாரம்: நாய்களுக்கு உங்கள் கைகளால் உணவூட்டுதல் கூடாது. ஐந்து பாதாம் பருப்பு, ஐந்து கருப்பு திராட்சை, முழுத் தேங்காய் ஆகியவற்றைத் தன் கையால் திருஷ்டி சுற்றி மீனுள்ள குளத்து நீரில் போடுதல் நன்று. மூன்று கேரட்டில் வைடூரிய மோதிரம் அணிவது நற்பலன் தரும்.
தனுசு
பணபலம், உடல்பலம், மனபலம், பணப் புழக்கம், தங்கநகைப் பெருக்கம் போன்றவை தடையின்றி வந்துவிடும். பயமின்றி வாழலாம். பெற்ற அன்னையை ஆராதிக்க வேண்டும். தெற்கு நோக்கிய வீட்டில் குடியிருப்போர் வாசல் கதவில் மூன்று இன்ச் அளவுள்ள இரும்பு ஆணியை தென்மேற்குப் பகுதியில் பதிப்பது பொதுவான பரிகாரம். சீரற்ற சிற்றின்பம் கூடவே கூடாது. விட்டுக் கொடுக்கும் குணத்தை வளர்த்துக் கொள்ளா விடில் சில நேரங்களில் இருக்கும் செல்வம் பறிபோக நேரலாம்.
பரிகாரம்: பழுப்புநிற நாய் வளர்ப்பது நல்லது. கருப்பு அல்லது நீலக்நிற கண்ணாடிக் குவளையில், சைக்கிள் சக்கரத்திற்குப் பயன் படுத்தும் பால் பேரிங் உருண்டைகளை 10 எண்ணிக்கையில் நிரப்பி, அதை இருட்ட றையில் வைத்து, ஒன்பது நாட்களுக்குப் பிறகு ஆல மர வேருக்கருகில் பள்ளம் தோண்டி அதை வைத்து மூடிவிடுதல் கெடுதலைப் போக்கும்.
மகரம்
5-ல் ராகு; 11-ல் கேது. மேற்படிப்பு, பதவி உயர்வு, பணபலம், விளையாட்டுத் துறையில் புகழ், கலைஞர்களுக்கு அடுத்தடுத்த சந்தர்ப் பங்கள், நல்ல நல்ல முதலீடுகள், திடீர் பணவரவு போன்ற அனைத்தையும் எதிர்பார்க்கலாம். இளம் தம்பதியருக்கு கருச்சிதைவு ஏற்படக் கூடும். சொந்த ஜாதகத்தில் எட்டில் சனி காணப்பட்டால் எலும்பு சார்ந்த வேதனைகளும் அதிகரிக்கும். எருமை வளர்ப்போர், சனிக்கிழமைகளில் அவற்றை மேய்ச்சலுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.
பரிகாரம்: அடுத்து வரும் திருமண நாளில் மனைவிக்கு இன்னுமொரு மாங்கல்யம் அணிவித்தல் நன்று. வீட்டில் வெள்ளியிலான சிறு யானை பொம்மை வைப்பதும் சிறந்தது. சொந்த மகன், பேரன் களுக்கு கண் உபாதை வரலாம். கவனம் தேவை. ஐந்து வெள்ளிக்கிழமைகள் செந்தாமரைப் பூவால் மகாவிஷ்ணுவை வணங்குதல் நன்று.
கும்பம்
4-ல் ராகு; 10-ல் கேது. எதை நினைக்கிறீர்களோ அதை செய்து முடிக்க நல்ல தருணம். கற்பனை வளம் பெருகும். சுற்றுலாத் துறை யினருக்கு நல்ல சந்தர்ப்பங்கள் வெளிநாட்டிலும் புகழ் சேர்க்கும். பிறமொழி பேசுபவரால் நன்மைகள் பெறலாம். தாய்வழி சொத்தால் வருமானம் பெருகும். நாணயமற்ற வழிகளில் பொருளீட்ட முயல்வது கூடாது. மாணவர்களுக்கு கூடாநட்பு வாழ்வை சீரழியச் செய்யும். நவீன வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றைத் தவிர்ப்பது நன்று. மதம் மாறி இனம் மாறி காதல் வேண்டாம். வெற்றி தராது.
பரிகாரம்: 400 கிராம் கொத்தமல்லித் தழை, 400 கிராம் பாதாம்பருப்பு ஆகியவற்றை கறுப்பும் வெள்ளையும் கலந்த பசுவுக்குத் தருதல் நன்று. ஒரு இன்ச் அளவுள்ள ஆலம் விழுதுத் துண்டுகள் எட்டு எண்ணிக்கையில் எடுத்து, அவற்றுடன் மூன்று இரும்பு ஆணிகளையும் வைத்து, கருப்புநிறத் துணியில் முடிந்து ஆற்றுநீரில் திருஷ்டி சுற்றிப் போடவும்.
மீனம்
ராகு 3-ல்; கேது 9-ல். எல்லா சூழ்நிலைகளும் ராகு- கேதுவால் ஏற்றம் பெறும். எதிரிகளை சுலபமாக வெல்லலாம். வங்கிக்கடன், வீட்டுக் கடனை மேலும் செலுத்தாமல் காலம் தாழ்த்த சந்தர்ப்பம் கிடைக்கும். செய்தித் தொடர்பு ஆலோசகர்களுக்கு நன்மதிப்பு பெருகும். பத்திரிகைத் துறையினருக்கு பலம் ஓங்கும். தந்தைவழி சொத்தையடைய மிகவும் தரம் தாழ்ந்து செயல்பட நேரிடும். சொந்த ஜாதகத்தில் லக்னத்திற்கு பன்னிரண்டில் சனி இருந்தால் சிலருக்கு நல்வழி தெரியவரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் நலிவுற்ற மாமனாருக்கு உதவி புரிதல் மிக நன்று. புரோகிதர்கள், பாடம் கற்பிக்கும் குருவுக்குரிய மரியாதை செலுத்துதல் நல்ல பரிகாரம். சாதாரண சிறு மண்குடுவை வாங்கி, அதில் தேனை நிரப்பி திருஷ்டி சுற்றி ஆலயம் சார்ந்த குளத்தில் வீசுவது நன்று.
செல்: 93801 73464