சித்தர்தாசன் சுந்தர்ஜி
ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
சென்ற இதழ் தொடர்ச்சி...
புராண, இதிகாசக் கதைகளிலும், வேதஜோதிட நூல்களிலும் ராகு- கேதுவை அசுர, பாவகிரகங்கள் எனக் கூறுவர். ஆனால், சித்தர்கள் இதனை மறுத்து, ராகு- கேது கிரங்களை உடல், உயிர்; ஞானம், மோட்சம்; பாவ-சாப நிவர்த்திக்கு வழிகாட்டும் உதாரண கிரகங்களாகக் கூறுகிறார்கள்.
ராகுவின் உருவமாக மனிதத் தலை, பாம்பின் உடல் என கற்பனையாக சித்தரிக்கப் பட்டுள்ளது. மனிதன் முகத்திலுள்ள கண்கள், காது, மூக்கு, வாய், நாக்கு ஆகிய ஐம்புலன்களும் உயிர்வாழவும், உடல் வளரவும், ஆசைகளை உருவாக்கி, பாவம்- சாபம் பார்க்காமல் எவ்வழியிலாவது செயல்பட்டு, விரும்பியதையடைந்து அனுபவிக்கத் தூண்டுகின்றன என்பதால், ராகுவுக்கு மனிதத் தலையைக் கூறியுள்ளனர். உடல், பாம்பின் உடல்போல நீண்டிருப்பது, மனிதனின் பிறவித் தொடர்ச்சியைக் குறிப்பிடுகிறது.
ராகு- கேது கிரகங்களை நிழல் கிரகங்கள் எனக் கூறுவர்.
மனிதனின் நிழல் அவரை விட்டு விலகாமல் தொடர்ந்து வருவதுபோல, ஒரு பிறவியில் செய்த பாவங்கள் நிவர்த்தியா கும்வரை பல பிறவிகள் தொடர்ந்து வரும். உடல் அழிந்தால்தான் நிழல்மறையும். அதுபோல பாவ-சாபம் நிவர்த்தியானால்தான் பிறவித் தொடர்பு முடியும். பாவ- சாபங்களுக்கென தனி உறுப்புகள் உடம்பில் இல்லை. முற்பிறவி பாவ-சாபப் பதிவுகள் சூட்சுமமாக நிழல்போல உடல் முழுவதும் பரவியிருந்து செயல்படுமென சித்தர்கள் கூறுகிறார்கள்.
தனி மனிதனுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டு மக்களும், அந்த நாட்டையாளும் மன்னனும் நாட்டு மக்களிடையே சாதி, மதம், இனம், மொழி எனபாகுபாடு பார்த்து மக்களுக்குச் செய்யும் பாவங்களுக்குண்டான தண்டணைகளையும் ராகு- கேது நிர்ணயித்துத் தருக
சித்தர்தாசன் சுந்தர்ஜி
ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
சென்ற இதழ் தொடர்ச்சி...
புராண, இதிகாசக் கதைகளிலும், வேதஜோதிட நூல்களிலும் ராகு- கேதுவை அசுர, பாவகிரகங்கள் எனக் கூறுவர். ஆனால், சித்தர்கள் இதனை மறுத்து, ராகு- கேது கிரங்களை உடல், உயிர்; ஞானம், மோட்சம்; பாவ-சாப நிவர்த்திக்கு வழிகாட்டும் உதாரண கிரகங்களாகக் கூறுகிறார்கள்.
ராகுவின் உருவமாக மனிதத் தலை, பாம்பின் உடல் என கற்பனையாக சித்தரிக்கப் பட்டுள்ளது. மனிதன் முகத்திலுள்ள கண்கள், காது, மூக்கு, வாய், நாக்கு ஆகிய ஐம்புலன்களும் உயிர்வாழவும், உடல் வளரவும், ஆசைகளை உருவாக்கி, பாவம்- சாபம் பார்க்காமல் எவ்வழியிலாவது செயல்பட்டு, விரும்பியதையடைந்து அனுபவிக்கத் தூண்டுகின்றன என்பதால், ராகுவுக்கு மனிதத் தலையைக் கூறியுள்ளனர். உடல், பாம்பின் உடல்போல நீண்டிருப்பது, மனிதனின் பிறவித் தொடர்ச்சியைக் குறிப்பிடுகிறது.
ராகு- கேது கிரகங்களை நிழல் கிரகங்கள் எனக் கூறுவர்.
மனிதனின் நிழல் அவரை விட்டு விலகாமல் தொடர்ந்து வருவதுபோல, ஒரு பிறவியில் செய்த பாவங்கள் நிவர்த்தியா கும்வரை பல பிறவிகள் தொடர்ந்து வரும். உடல் அழிந்தால்தான் நிழல்மறையும். அதுபோல பாவ-சாபம் நிவர்த்தியானால்தான் பிறவித் தொடர்பு முடியும். பாவ- சாபங்களுக்கென தனி உறுப்புகள் உடம்பில் இல்லை. முற்பிறவி பாவ-சாபப் பதிவுகள் சூட்சுமமாக நிழல்போல உடல் முழுவதும் பரவியிருந்து செயல்படுமென சித்தர்கள் கூறுகிறார்கள்.
தனி மனிதனுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டு மக்களும், அந்த நாட்டையாளும் மன்னனும் நாட்டு மக்களிடையே சாதி, மதம், இனம், மொழி எனபாகுபாடு பார்த்து மக்களுக்குச் செய்யும் பாவங்களுக்குண்டான தண்டணைகளையும் ராகு- கேது நிர்ணயித்துத் தருகிறார்கள். ஒரு நாட்டு அரசனைத் தேர்ந்தெடுப்பது மக்கள்தான். அந்த மன்னன் செய்யும் பாவங்களுக்கு உண்டான தண்டணைகளை அந்த நாட்டு மக்களே அனுபவிப்பவர். பெற்றவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளுக்கும், மன்னன் செய்யும் பாவம் நாட்டு மக்களையும் சாரும்.
பூமியில் உண்டாகும் இயற்கைப்பேரிடர்களான பூகம்பம், சுனாமி, போர், தீ விபத்துகள், மக்கள் கூட்டம், கூட்டமாக மடிதல் போன்றவற்றுக்கு ராகுவே காரகனாவார். ராகு எந்த ராசியில், திசையில் உள்ளாரோ, அந்த ராசி, திசைக்குரிய நாடுகளில் போர்கள் நிகழும். ரிஷப ராசியில் ராகு உள்ள காலங் களில் இந்தியாவின் தென்மேற்கு, தெற்கு, தென்கிழக்கு மாநிலங்களில் சிரமங்கள் உண்டாகும். இனி, ராகு தரும் கோட்சாரப் பலன்களை அறியலாம்.
பிறப்பு ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கன்னி, மகர ராசிகளில் குரு இருந்தால், தற்பொழுது ரிஷப ராசிக்கு வந்துள்ள ராகு ஜென்ம குருவுடன் இணைந்து எவ்விதப் பலன்களைத் தருவார் என அறிவோம்.
உடல் சுகவீனம், கண்டங்கள், கஷ்டங்கள் உண்டாகும். குடும்ப உறவுகளில் துக்க நிகழ்வுகள் உண்டாகும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், தாங்கள் செய்யும் எந்தச் செயலிலும் தனக்கு என்ன நன்மை லாபம் கிடைக்கும் என சுயநலத்துடனே செயல்படுவர்கள். தீய குணம் கொண்டவர்கள் நண்பர்களாக அமைவர்.
நல்லவர் நட்பு விலகும். மது, மாது, திருட்டு, பிறரை ஏமாற்றிப் பணம் பறித்தல், பொய் பேசுதல், கள்ளக் கடத்தல், சாராயம், கஞ்சா, போதைப் பொருட்கள் வியாபாரிகள், சூதாடிகள், லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள் என சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்பவர்களுக்கு நன்மையும், லாபமும் உண்டாகும். இதுபோன்ற செயல்களைச் செய்யவைத்து இவர்களின் பாவக்கணக்கினை ராகு அதிகமாக்குவார். வம்சவாரிசுகள் இவர்கள் தீயவழியில் சம்பாதித்த பணத்தை அனுப விக்கமுடியாமல் செய்துவிடுவார். வாரிசுகளை வாழ்வில் கஷ்டம் அடையச் செய்துவிடுவார்.
கால், மூட்டுகளில் வலி, வாயு சம்பந்தமான நோய், உடல் களைப்பு, அசதி உண்டாகும். சிலரின் வம்சமுன்னோர்கள் பாட்டன் வசித்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டவரின் ஆத்மாவின் தாக்கம் இப்போது குடும்பத்தில் துன்பம் தரும். இதனையே ஏவல், பில்லி, சூனியத் தாக்க மெனக்கூறி அலைவார்கள்.
ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கன்னி, மகர ராசிகளில் சுக்கிரன் இருந் தால், தற்போது ரிஷபத்திற்கு வந்துள்ள ராகு ஜென்மச் சுக்கிரனுடன் இணைந்து எவ்விதப் பலன் தருவார் என்பதை அறிவோம்.
இந்த சுக்கிரன் ராகு இணைப்பு, உங்களின் முன்ஜென்ம பாவ- புண்ணியக் கணக்கீடுபடி நன்மை, தீமை என இருவிதப் பலன்களைத் தரும். கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக வாழ்வர். சிலருக்கு தடை நீங்கி திருமணம் நடைபெறும். சிலர் மாற்று சாதி, மதத்தினரைத் தங்கள் விருப்பம்போல, வீட்டைவிட்டு வெளியேறித் திருமணம் செய்துகொள்வர்.
வாகனம், ஆபரணம் வாங்குதல், வீடுகட்டுதல், எதிர்பாராத பண வரவு, மனைவியால் நன்மை உண்டாகும். கலைத்தொழில் செய்யும் பெண்கள் மேன்மை யடைவர். சிலர் சட்டத்திற்குப் புறம்பான தொழில்களை மான, அவமானம் பாராமல் செய்து பணம் சம்பாதிப்பர். எப்படியாவது, எதைச் செய்தாவது பணம் சம்பாதிக்கவேண்டும் என எண்ணி செயல்படுவர். பெண்களுக்கு கர்ப்பப்பை, கருக்குழாயில் அடைப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கன்னி, மகர ராசிகளில் சனி பகவான் இருந்து, இப்போது ராகு பகவான் ரிஷப ராசியிலுள்ள ஜென்மச் சனியுடன் இணைந்து, எவ்விதப் பலன் தருவார் என அறிவோம்.
மனிதன் பணம், பொருளாதாரத்தில் உயர்ந்து வாழ தொழில், உத்தியோகமே காரணமாகும். தொழில், பணம், சேமிப்பு, செல்வநிலைக்கு சனி பகவானே ஆதிக்கம் பெற்றவர்.
இந்த சனி, ராகு இணைவினால், தொழில், உத்தியோக உயர்வில் தடை, தாமதம் உண்டாகும். உங்கள் அறிவு, திறமை, உழைப் புக்குக் கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்காது. உங்களைவிடக் கீழான வர்களால் துன்புறுத்தப்படுவீர்கள்.
உங்களைக் கீழ்த்தரமாக நினைப்பார்கள் பெற் றோரிடம் கருத்து வேறு பாடுண்டாகும். பெற்றோரால் புறக்கணிக்கப்படுவீர்கள்.
தீயஎண்ணம் உருவாகும். தீய நண்பர் களிடம் சேர்ந்து கௌரவக்குறைவான செயல் களைச் செய்வீர்கள். பிறர் செய்த தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பாளி ஆக்கப்படுவீர்கள்.
அதனால், சிறைவாசம், தலைமறைவு வாழ்க் கையை சிலர் வாழநேரிடும். சிலர் வெளியில் செல்லமுடியாமல் வீட்டிலேயே இருப்பீர்கள்.
வாகனத்தால் விரயம், செலவு, விபத்து, மருத்துவச் செலவுகள் உண்டாகும். விபத்துகள், கால்களில் அடிபடுதல், வாத நோய், கழுத்து, கைகள், கால்களில் வலி, நெருங்கிய உறவுகளில் மரணம் ஏற்படும்.
முற்பிறவிகளில் கடவுள் பெயரால் கோவில் களில் பறவை, மிருகங்களைப் பலிகொடுத்துக் கொன்ற பாவம், பறவை, மிருகங்களை வேட்டை யாடிக் கொன்ற பாவம், அதிகாரம், அந்தஸ்து, மதம், சாதி, இனம் பார்த்துப் பாமர மக்களைத் துன்புறுத்திக் கஷ்டப்படச் செய்தபாவம், பிறருக்கு ஏவல், பில்லி, சூனியம் செயல்களைச் செய்ததால், அதற்குண்டான தண்டனைகளை இப்போது தந்து பாமர சாபத்தை அனுபவிக்கச் செய்வார்.
சனி பகவான் இதுபோன்ற சிரமங்களைத் தந்து, உங்கள் கையிலுள்ள பணத்தை ஆன்மிகம், கடவுள், பரிகாரம், ஹோமம், யாகம், மந்திரம், தந்திரம் போன்ற செயல்களைச் செய்யவைத்து விரயச்செலவு செய்யவைத்துவிடுவார். இதனால் பலன் என்ன? மாந்த்ரீகர்கள், பழைய இரும்பு, பேப்பர், சாராயம் விற்றல், போதைப் பொருட்கள் வியாபாரம், அச்சுத் தொழில் செய்பவர்கள் நன்மை அடை வார்கள்.
ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கன்னி, மகரம் ராசிகளில் ராகு பகவான் இருந்து, தற்பொழுது ரிஷபத்திற்கு வந்துள்ள ராகு, ஜென்ம ராகுவுடன் இணைந்து, எவ்விதப் பலன் தருவாரென அறிவோம்.
காரியம், செயல்களில் தடைகள் உண்டாகும்.
பிறரால் வெறுத்து ஒதுக்கப்படுவீர்கள். குடும் பத்தில் சிரமம், கஷ்டம் உண்டாகும். மனதில் ஒருவிதப் பயவுணர்வு இருந்து கொண்டே இருக்கும். மாற்றான் மனைவி, விதவை சங்கமம், வாழ் விழந்த பெண்கள் உறவு உண்டாகும்.
நீர் சம்பந்தமான நோய், வயிறு, குடல், செரிமானம் சம்பந்தமான நோய்கள், பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் உண்டாகும்.
ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கன்னி, மகர ராசிகளில் கேது இருந்து, தற்போது ரிஷப ராசிக்கு வந்துள்ள ராகு, ஜென்ம கேதுவுடன் இணைந்து எவ்விதப் பலனைத் தருவாரென அறிவோம்.
நீங்கள் ஆசைப்படுவதுபோல எதுவும் நடக்காது. பொதுவாக, நற் பலன்கள் குறைவாகவே நடக்கும். தொழில் தடையாகும். பணவருவாய்க் குறையும். சிலர் காதல் வலையில் சிக்குவீர்கள். வயிறு சம்பந்தமான நோய், பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள், மந்திரம், தந்திரம், மடாதிபதி, குரு எனக் கூறி தொழில் செய்பவர்களிடம் பழக்கம் ஏற்பட்டு, அவர்கள் கூறுவதை நம்பி அவர்களுக்கு அடிமை போலாகிவிடுவீர்கள். அவர்களிடம் பணத் தையும், இழக்கக்கூடாதவற்றையும் இழப்பீர்கள்.
சுய அறிவு, புத்தி, சிந்திக்கும் திறன் குறையும்.
அலைச்சல்,திரிச்சல் அதிகமாகும். நேரத்திற்கு உணவுண்ணமுடியாது.
அடுத்த இதழில், விருச்சிக ராசிக்கு வரும் கேது தரும் பலன்களை அறிவோம்.
செல்: 99441 13267