சித்தர்கள் வாக்கில் ராகுலிகேது பலன்கள்!

/idhalgal/balajothidam/benefits-raghuliketu-siddharths-vote

சித்தர்தாசன் சுந்தர்ஜி

ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சென்ற இதழ் தொடர்ச்சி...

முன்னாட்களில் மனிதர்கள் தங்களின் தாய்- தந்தை, சகோதரர்களுடன் ஒற்றுமையாக ஒரு தோப்புபோல வாழ்ந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை, இன்றைய நாளில் மறைந்துபோய், தாய்- தந்தையை ஒதுக்கிவைத்து தோப்பில்லா தனிமரம்போல, தனிக்குடித்தனம் செய்து வாழும் நிலை மக்களிடையே அதிகமாகி வருகிறது. இந்த தனிக்குடித்தன நிலைக்கு தொழில், உத்தியோகம் போன்ற பல காரணங்களைக் கூறினாலும், அவை உண்மையும், ஏற்புடையதும் அல்ல.

சில குடும்பங்களில் அந்த குடும்ப உறுப் பினர்கள் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு பாசத்துடன் வாழ்கிறார்கள். ஆனால், அதிகமான குடும்பங்களில் குடும்ப உறவினர்களுக்கிடையே வெறுப்பு, பிரிவினை, கருத்து வேறுபாடுகள், ஒற்றுமையின்மை, ஒருவருக்கொருவர் எதிரி போன்ற நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

குடும்ப உறவினர்களுக்கிடையே பாசநிலை நீங்கி, பகைநிலை உண்டாவதற்கு ஒவ்வொரு மனிதனும் தன் முற்பிறவிகளில் தனது குடும்ப உறவினர்களுக்கு செய்த பாவ-சாபச் செயல் கள்தான் காரணம். ஒவ்வொரு மனிதனும் தனது முற்பிறவிகளில் தன் உறவினர் களுக்குச் செய்த கொடுமைகள், தீமைகள் அவர் இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து, வாழ்வில் தொழில், பதவி, திருமணம், புத்திரர், பணம், நோய், வீடு, சொத்து, உறவினர்கள் தடை என இது போன்ற அனைத்திலும் தடைகளைத் தந்து அனுபவிக்கமுடியாமல் செய்பவர் கேது பகவான்தான்.

இந்த பூமியில் ஒரு மனிதப் பிறப்பிற்கும் பிறவித் தொடர்ச்சிக்கும், வாழ்வில் உண்டாகும் கஷ்டம் காரியத் தடைகளுக்கும் புராண, இதிகாசக் கதை களிலும் ஜோதிடர்களும், கடவுள் கதை சொல்லிப் பிழைப்பவர்களும் பலவிதமான காரணங்களையும், பாவ-சாப- தோஷங்களையும் கூறுகிறார்கள். ஆனால், ஒரு மனிதன் எவ்வித பாவச் செயல்களைச் செய்தால் பூமியில் பல பிறவிகள் பிறந்து, சிரமங்களை அனுபவித்து வாழநேரிடும் என உண்மையான காரணங்களை காகபுசுண்ட ரிஷி கூறியுள்ள ஒரு பாடல்மூலம் அறிவோம்.

ss

"நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம்

நடுவாக வந்தவிடம் பாராத் தோஷம்

கூடியே பிறந்தவிடங் காணாத் தோஷம்

கூடியே உறவற்றே யிருந்த தோஷம்

வாடிய வித்தோடே சேராத் தோஷம்

வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம்

பாமரனை நிந்தனைகள் செய்த தோஷம்

கும்பியுங் கற்சிப்பியையும் அறியான் பாவி'

(காகபுசுண்ட ரிஷி)

தந்தையின் விந்தில் உதயமாகி தாயின் கர்ப்பத்தில் உடல் உருவான மனிதன், தன் முற்பிறவிகளில் பெற்ற தந்தைக்கு அன்னம், உடை தராமல் வீட்டைவிட்டு விரட்டி, விலக் கிவைத்து, வறுமையில் வாடி மடியச் செய்ததால், பெற்ற தந்தையே மனம் வெறுத்து, விட்ட சாபம்-பித்ரு தோஷம்.

ஒரு குழந்தையைத் தன்

சித்தர்தாசன் சுந்தர்ஜி

ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சென்ற இதழ் தொடர்ச்சி...

முன்னாட்களில் மனிதர்கள் தங்களின் தாய்- தந்தை, சகோதரர்களுடன் ஒற்றுமையாக ஒரு தோப்புபோல வாழ்ந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை, இன்றைய நாளில் மறைந்துபோய், தாய்- தந்தையை ஒதுக்கிவைத்து தோப்பில்லா தனிமரம்போல, தனிக்குடித்தனம் செய்து வாழும் நிலை மக்களிடையே அதிகமாகி வருகிறது. இந்த தனிக்குடித்தன நிலைக்கு தொழில், உத்தியோகம் போன்ற பல காரணங்களைக் கூறினாலும், அவை உண்மையும், ஏற்புடையதும் அல்ல.

சில குடும்பங்களில் அந்த குடும்ப உறுப் பினர்கள் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு பாசத்துடன் வாழ்கிறார்கள். ஆனால், அதிகமான குடும்பங்களில் குடும்ப உறவினர்களுக்கிடையே வெறுப்பு, பிரிவினை, கருத்து வேறுபாடுகள், ஒற்றுமையின்மை, ஒருவருக்கொருவர் எதிரி போன்ற நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

குடும்ப உறவினர்களுக்கிடையே பாசநிலை நீங்கி, பகைநிலை உண்டாவதற்கு ஒவ்வொரு மனிதனும் தன் முற்பிறவிகளில் தனது குடும்ப உறவினர்களுக்கு செய்த பாவ-சாபச் செயல் கள்தான் காரணம். ஒவ்வொரு மனிதனும் தனது முற்பிறவிகளில் தன் உறவினர் களுக்குச் செய்த கொடுமைகள், தீமைகள் அவர் இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து, வாழ்வில் தொழில், பதவி, திருமணம், புத்திரர், பணம், நோய், வீடு, சொத்து, உறவினர்கள் தடை என இது போன்ற அனைத்திலும் தடைகளைத் தந்து அனுபவிக்கமுடியாமல் செய்பவர் கேது பகவான்தான்.

இந்த பூமியில் ஒரு மனிதப் பிறப்பிற்கும் பிறவித் தொடர்ச்சிக்கும், வாழ்வில் உண்டாகும் கஷ்டம் காரியத் தடைகளுக்கும் புராண, இதிகாசக் கதை களிலும் ஜோதிடர்களும், கடவுள் கதை சொல்லிப் பிழைப்பவர்களும் பலவிதமான காரணங்களையும், பாவ-சாப- தோஷங்களையும் கூறுகிறார்கள். ஆனால், ஒரு மனிதன் எவ்வித பாவச் செயல்களைச் செய்தால் பூமியில் பல பிறவிகள் பிறந்து, சிரமங்களை அனுபவித்து வாழநேரிடும் என உண்மையான காரணங்களை காகபுசுண்ட ரிஷி கூறியுள்ள ஒரு பாடல்மூலம் அறிவோம்.

ss

"நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம்

நடுவாக வந்தவிடம் பாராத் தோஷம்

கூடியே பிறந்தவிடங் காணாத் தோஷம்

கூடியே உறவற்றே யிருந்த தோஷம்

வாடிய வித்தோடே சேராத் தோஷம்

வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம்

பாமரனை நிந்தனைகள் செய்த தோஷம்

கும்பியுங் கற்சிப்பியையும் அறியான் பாவி'

(காகபுசுண்ட ரிஷி)

தந்தையின் விந்தில் உதயமாகி தாயின் கர்ப்பத்தில் உடல் உருவான மனிதன், தன் முற்பிறவிகளில் பெற்ற தந்தைக்கு அன்னம், உடை தராமல் வீட்டைவிட்டு விரட்டி, விலக் கிவைத்து, வறுமையில் வாடி மடியச் செய்ததால், பெற்ற தந்தையே மனம் வெறுத்து, விட்ட சாபம்-பித்ரு தோஷம்.

ஒரு குழந்தையைத் தன் கர்ப்பத்தில் சுமந்து பெற்று, பகல், இரவாய் சிரமப்பட்டுக் காப்பாற்றி வளர்த்த தாயைத் தன் மனைவியின் பேச்சைக் கேட்டு அவளைக் காப்பாற் றாமல் பசியும் பட்டினியுமாய்த் தவிக்கவிட்டு துன்பம் அடையச்செய்ததால், பெற்ற தாய் தன் மரணத்தறுவாயில் வயிறு எரிந்து, விட்ட சாபம்- தாய் சாபம்.

சகோதர, சகோதரிகளுக்கு பூர்வீக சொத்து களில் அவர்களுக்கு முறையாகக் கொடுக்க வேண்டிய, உரிய பங்கு சொத்தை பிரித்துக் கொடுக்காமல், தானும், தன் மனைவி, மக்கள் மட்டுமே அனுபவித்து, அவர்களை வாழ்வில் கஷ்டப்படச் செய்ததால், அவர்கள் மனம் குமுறி கோபத்துடன் கைமண் வாரிவிட்டு, பகர்ந்த சாபம்- சகோதர சாபம்.

ஒருவர், தான் கட்டிய மனைவியுடன் கூடிக் கலந்து உறவாடி, ஒரு கணவன் தன் மனை வியிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தரவேண்டிய கர்ப்பதானம், அன்னதானம், வஸ்திரதானம், சொர்ணதானம், கிரகதானம் ஆகியவற்றைக் குறைவில்லாமல் தந்து காப் பாற்றாமல் அவளை வறுமையில் வாடச் செய்ததாலும்- ஒரு மனைவி தன் கணவனையும், கணவன் வீட்டாரையும் மதிக்காமல், பாசம் காட்டாமல், தன் மனம் போனபடி வாழ்ந்து, கணவனுக்கு துரோகம் செய்ததால், பாதிக்கப்பட்ட கணவன் மனம் வெறுத்து, விட்டசாபம்- களத்திர சாப தோஷம்.

வம்சம் விளங்க தான் பெற்ற பிள்ளைகளுக்கு ஒரு தகப்பன் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து, நல்ல முறையில் அவர்களைக் காப் பாற்றி வளர்க்காமல், உணவிற்கும், உடைக்கும், கல்விக்கும், அநாதைபோல் அலையவிட்டு, இளம்வயதிலேலேயே தான் பெற்ற பிள்ளை களை வறுமையில் வாடச்செய்ததால், பெற்றமகனே மனம் வெறுத்து தன் தந்தை அழிய, விட்ட சாபம்- புத்திரதோஷம்.

இந்த பூமியில், பணம், பதவி, ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றை அடைந்து தன் வாழ்வை உயர்த்திக்கொண்டு, தான் சுகமாக வாழ, தானே தலைவன் எனக்கூறி ஏமாற்றிக்கொண்டு சமுதாயத்தில் ஒற்றுமையாக, அமைதியாக வாழும் மக்களிடையே ஆன்மிகம், கடவுள், மதம், இனம், சாதி எனக்கூறி பிரிவினை, பேதத்தை உருவாக்கி, சமுதாயத்தில் வம்பு, வழக்கு கலவரங்களை நடத்தி, இதனையே தொழிலாகச்செய்து பிழைக்கும் இந்த வீணர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு தொண்டர்கள் என்ற பெயரால் வம்பு செய்தும், அப்பாவி மக்களை அடித்தும், உதைத்தும், சொத்துகளை சேதப்படுத்துவதால், பாதிக்கப் பட்ட மக்கள் வயிறு எரிந்து, விட்ட சாபம்- தோஷம்.

இந்த சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் விட்ட சாபம், வீணர்களின் தலைவனையும், அவன் வம்ச வாரிசுகளையும் பாதிக்காது. அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டு, தன் குடும்பத்தைக் கவனிக்காமல் அழிவுகாரியங் களில் ஈடுபட்டு, பொதுமக்களை பாதிப்படையச் செய்யும் தொண்டர்களையும், அவன் வம்ச வாரிசுகளையும் மட்டுமே பாதிப்படையச் செய்யும் என்கிறார் காகபுசுண்ட ரிஷி.

தன்னிடம் வேலை செய்த வேலையாட் களுக்குரிய கூலியைக் கொடுக்காமல், குறைத்துக் கொடுத்து, தன் வாழ்வை உயர்த்திக்கொண்ட தாலும், முறையான கூலியைக் கொடுங்கள் என்று கேட்டவர்களைத் திட்டியும், அடித்தும், வதைசெய்ததால் அந்தப் பாமர வேலையாட்கள் மனம் வெறுத்து, விட்ட சாபம் பாமர சாபதோஷம்.

இந்த ஏழுவிதமான பாவங்களும் தோஷங் களும், கடலின் ஆழத்தில் மறைந்திருக்கும் சிப்பிக்குள் முத்து மறைந்து, உள்ளிருந்து வளர்வதுபோல், ஒருவன் ஒருபிறவியில் செய்த இந்த பாவங்கள், அவனை ஏழு பிறவிகள் பிறப்பிக்கச்செய்து, அவன் வம்சத்தில் முத்துபோல் வளரச்செய்து, வம்ச வாரிசுகளின் வாழ்க்கையில், இந்த பாவங்களுக்குண்டான தண்டனைகளைத் தந்து கேதுபகவான் அனுப விக்கச் செய்வார்.

இந்த ஏழுவிதமான தோஷங்கள் நீங்க ஹோமம், யாகம், புண்ணிய தீர்த்தம், தல யாத்திரை, மந்திரம், நாமஜபம் பாராயணம், அமாவாசை விரதம், தர்ப்பணம், பிரார்த்தனை பூஜைகள், தானம், தர்மம், தவம் போன்ற மாயச் செயல்களால் தீராது. பரிகாரங்களால் எந்த பலனும் இராது. ஆனால், பரிகாரம் கூறும் ஜோதிடர்களுக்கு நல்ல பணப்பலன் கிடைத்து, அவர்கள் சுகமாக இருப்பார்கள். இந்த பாவங்களை சரியான முறையான பாவ -சாப நிவர்த்தி முறைகளைச் செய்தால் மட்டுமே கேதுபகவானின் அருளால் நிவர்த்தியாகும். எந்த மதம்-சாதி-இனத்தைச் சேர்ந்தவர்களா னாலும் எதனைச்செய்தும் கேது பகவானை ஏமாற்ற முடியாது.

காக புசுண்ட ரிஷி கூறியுள்ள இவ்வகை பாவ-தோஷங்களைத்தவிர, தெய்வசாபம், சித்தர்சாபம், குருசாபம், பிரேத சாபம், ஏவல், பில்லி, சூனிய தோஷம், வாஸ்து தோஷம், மனை தோஷம், பூமி தோஷம் போன்று கூறப்படும் இன்னும் பல தோஷங்கள் என எதுவுமில்லை. அவற்றைக் கேட்டு பயப்படவேண்டாம். பணம் செலவழித்துச் செய்யும் பரிகாரங்களால் எந்த பயனும் கிட்டாது.

விருச்சிக ராசியில் கேது பகவான் இருப் பதால், தங்கம் விலை குறையும். ஆனால் பூமி, நில மதிப்பு கூடும். இனி, விருச்சிகக் கேது, பிறப்பு ஜாதகத்தில் உள்ள புதன், குரு சுக்கிர கிரகங் களுடன் இணைந்து தரும் பயன்களை அறிவோம்.

புதன்+ கேது

ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், கடகம், துலா ராசிகளில் புதன் கிரகம் இருந்தால், தற்போது கோட் சார நிலையில் விருச்சிக ராசிக்கு வந்துள்ள கேது பகவான் ஜென்ம புதனுடன் இணைந்து கீழ்க்காணும் பலன்களைத் தருவார்.

தொழில் இழப்பு, முடக்கம் ஏற்பட்டு வருமானக்குறைவுண்டாகும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் ஏமாற்றப்பட்டு, கை முதலீட்டை இழப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளால் தொல்லைகள் உண்டாகும். இதனால் சிலர் நீண்ட விடுப்பில் செல்லநேரிடும். சிலருக்கு உத்தியோகத்தையே விட்டுவிடும் சூழ்நிலை உருவாகலாம். உத்தியோக உயர்வு தடையாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் செய்யும் ஆர்வம் குறைந்து சோம்பேறித்தனம் உண்டாகும். இதனால், வீட்டைவிட்டு வெளியில் செல்ல மனம் வராது. வியாபாரக் கடைகளில் பிரச்சினை உருவாகும்.

பொருளாதாரம் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். பணம் கையில் தங்காது. பணத்தோடு பணம் சேர்க்கமுடியாது. சேமிப்பு குறையும். சேமித்து வைத்த பணம் செலவாகும். கடன் தொல்லை அதிகமாகும். பைனான்ஸ், சீட்டுக்கம்பெனி நடத்துபவர்களுக்கு வசூல் சரியாக இராது. கடன்கொடுத்தது வராது. வாங்கிய கடனைக் கொடுக்கமுடியாது. பெண்களால் பொருள் இழப்புண்டாகும். பெண்கள் உங்களை ஏமாற்றிப் பணம், பொருளைப் பறித்துவிடுவார்கள்.

தாய்மாமன் உறவு பகையாகும் அல்லது தாய்மாமனுக்கு வழக்கு, வியாஜியங்கள் உண்டாகும். இளைய சகோதர்களிடம் உறவு சரியாக இராது. நீங்கள் பிறந்தவீட்டில் சொத்துத் தகராறு உண்டாகும். காதலில் தோல்வி உண்டாகும். காதலன்- காதலி இருவருள் யாராவது ஒருவர் மனம் மாறி பிரிந்துசெல்ல நேரிடும் அல்லது காதல் சமபந்தமான பிரச்சினைகள், அவமானம், அவப்பெயர் உண்டாகலாம்.

கட்டிய வீடு, மனை, வியாபாரக்கடைகள், கல்விக்கூடக் கட்டடங்களில் பிரச்சினைகள் உண்டாகும். கல்வி சம்பந்தமான காரியம், செயல்களில் தடையுண்டாகும். நிலம், சொத்து, நிர்வாகக் கணக்குகளில் பிரச்சினைகள் உண்டாகும்.

தோல் சம்பந்தமான நோய்கள், தொண்டை, காது மற்றும் தைராய்டு போன்ற சுரப்பிகள் சம்பந்தமான நோய்கள் சிரமம் தரும்.

குரு + கேது

ஜாதகத்தில் விருச்சிக ராசியில் குருபகவான் இருந்தால், இப்போது கோட்சார நிலையில் விருச்சிக ராசிக்கு வந்துள்ள கேது பகவான், ஜென்ம குருவுடன் இணைந்து தரும் பலன்கள்-

ஜாதகரின் அறிவுத் திறமை, சூட்சும புத்தி மந்தமாகும். சுயஅறிவு, பகுத்தறிவு செயல் படாது. தன்னம்பிக்கை குறையும். பொதுவாக, நல்லபலன்கள் நடைபெறுவது தடையாகும். செயல்களில் தடை, தாமதம் உண்டாகும். பிறருக்காக ஈடுபட்டுச் செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாகும். உங்கள் உழைப்பு, அறிவு, திறமை, பணம், பொருள் என அனைத்தும் பிறர் அனுபவிப்பார்கள். சோம்பேறித்தனம் உண்டாகி சுறுசுறுப்பு குறையும். திருமணம் தடையாகும். புத்திரத் தடைகாட்டும். யாருடனும் எதற்கும் ஒத்துப்போகும் குணம், அனுசரித்துப் போகும் குணம் இராது. குடும்பத்தார், மற்றவர்கள் கூறுவதை மறுத்துப்பேசுவீர்கள்.

இதனால் குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பிறரால் ஒதுக்கப்படுவீர்கள். மனம் ஒருநிலையில் இராது. சலனம், குழப்பத்துடனே இருக்கும்.

திட்டமிடும் காரியங்களைச் செய்ய முடியாது. வாயைவிட்டுச் சொல்லும் காரியம், செயல் நடக்காது. உங்கள் வாழ்வில் நன்றி கெட்டவர்களையும், விசுவாசம் இல்லாத வர்களையும் இப்போது கண்டுகொள்வீர்கள். மனதில் விரக்தி உண்டாகும். எதிலும் பிடிப்பு இராது. இதனால் உண்பது, உடுத்துவதில்கூட ஆர்வம் குறையும். உடல்நலம், மனநலம் பாதிப்பு அடையும். தனிமையை நாடுவீர்கள். சந்நியாசி போன்று இருப்பீர்கள். வாழ்வில் உண்டாகும் பிரச்சினைகளைத் தீர்க்கமுடி யாமல் தவிப்பீர்கள். பிறர் ஆதரவு பெரிதாக இராது.

இதுபோன்ற நிலையில் செயல்களில் தடைகள் நீங்க கடவுள் துணைசெய்வார் என சிலர் புண்ணியத் தலயாத்திரை, புண்ணிய தீர்த்த யாத்திரை செல்வீர்கள். சிலர் ஊர்ஊராக, கோவில் கோவிலாகச் சென்று கடவுளைத் தேடிக்கொண்டு இருப்பீர்கள். இன்னும் சிலர் மடாதிபதி, குருபீடம், என தேடிஓடிக்கொண்டு இருப்பீர்கள். சித்தர்களின் ஜீவபீடங்களைத் தேடியும், நாடியும் ஓடிக்கொண்டு இருப்போர் சிலர். ஜாதக நோட்டைத் தூக்கிகொண்டு ஜோதிடர்கள் வீட்டை நாடிச் செல்வோர் பலர்.

ஆனால், இவர்களால் கேது தரும் பலன்களைத் தடுக்க முடியாது. பணம்தான் பறிபோகும். வேண்டுதல், பிரார்த்தனைகள் பலிக்காது. எவ்வித வழிபாடும் பலன் தராது. நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, சுவாசம், வயிறு சம்பந்தமான நோய்கள் சிரமம் தரும்.

முற்பிறவிகளில் நீங்கள் செய்த வினை செயல் படும் காலம், தன்வினை தன்னைச்சுடும் காலம்.

சுக்கிரன் + கேது

ஜாதகத்தில் சுக்கிரன், விருச்சிக ராசியில் இருந்தால், தற்போது கோட்சார நிலையில் விருச்சிக ராசிக்கு வந்துள்ள கேது பகவான் ஜென்ம குருவுடன் இணைந்து கீழ்க்காணும் பலன்களைத் தருவார்.

திருமண வயதிலுள்ளவர்களுக்கு திருமணம் தடை, தாமதமாகும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுண்டாகும். பணம், பொருள் சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாகும். பொருளாதாரத் தடைகள், பணமுடக்கம் சம்பந்தமான தகராறுகள் உண்டாகும். விவாகரத்து வழக்குகள் உண்டா கலாம். சொத்து, வீடு, மண், மனை சம்பந் தமான பிரச்சினைகள், வாகனத்தில் விரயம் உண்டாகலாம்.

மனைவி விரக்தி மனப்பான்மையுடன் இருப்பாள். அடிக்கடி ஏதாவது ஒரு நோய் உண்டாகி சிரமம் தரும். கருப்பை சம்பந்தமான நோய்கள் தொல்லைதரும். மகளுக்கும் நோய் காட்டும். குடும்பத்தில் வாக்குவாதம், சண்டை, சச்சரவுகள் உண்டாகும். தாம்பத் தியம் குறையும். ஆன்மிக சிந்தனைகள் அதிகமாகும்.

சினிமா தொழில், கலைத்தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் தடைகள் உண்டாகலாம். படத்தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிடத் தடை, தாமதமாகும். பணம் கொடுத்து வாங்கு வதில் சிக்கல்கள் உண்டாகும். பணம் முடங்கிப் போய்விடும். வம்சத்தில் வாழவந்த பெண்ணிற்குச் செய்த பாவம்-சாபம் இப்போது செயல்படும் காலம் அடுத்த இதழில், மீதமுள்ள சனி, ராகு, கேது இந்த மூன்று கிரகங்களுடன் கேது கிரகம் இணைந்து தரும் பலன்களை அறிவோம்.

செல்: 99441 13267

bala110920
இதையும் படியுங்கள்
Subscribe