குருப்பெயர்ச்சிப் பலன்கள்

/idhalgal/balajothidam/benefits-nucleation

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.

15-11-2020-ல் குருப்பெயர்ச்சி

கிரக பாதசாரம்:

சூரியன்: விசாகம்- 3, 4, அனுஷம்- 1.

செவ்வாய்: ரேவதி- 4.

புதன்: சுவாதி- 3, 4, விசாகம்- 1, 2.

குரு: உத்திரம்- 1, 2.

சுக்கிரன்: சித்திரை- 2, 3, 4.

சனி: பூராடம்- 1, உத்திராடம்- 1.

ராகு: மிருகசீரிடம்- 1.

கேது: கேட்டை- 3.

கிரக மாற்றம்:

செவ்வாய் வக்ரம்.

16-11-2020- விருச்சிக சூரியன்.

17-11-2020- துலா சுக்கிரன்.

15-11-2020- மகர குருப்பெயர்ச்சி.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- துலாம்.

17-11-2020- தனுசு.

19-11-2020- மகரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

இந்த வாரம் பதினைந்தாம் தேதிமுதல் மேஷ ராசிக்கு ஒன்பதில் ஆட்சியாக இருந்த குரு பத்தாமிடமான மகர ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். பத்தாமிடம் மகரம் குருவுக்கு நீச ஸ்தானம் என்றாலும், 10-க்குடைய சனி, குரு வீட்டில் ஒன்பதில் இருப்பது பரிவர்த்தனை யோகம் மற்றும் தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே, குரு நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். பத்தில் வரும் குரு 2-ஆமிடம், 4-ஆமிடம், 6-ஆமிடங்களைப் பார்க்கி றார். இரண்டாம் இடம் வாக்கு, தனம், குடும்பம் போன்றவற்றைக் குறிக்கும். எனவே, குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். குழப்பங்கள் அகலும். பொருளாதார சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். உங்கள் பேச்சில் கனிவு ஏற்படும். பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் இனிமையாகவும் அன்பாகவும் பேசக்கூடியவர்கள்தான். 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு கல்வியை வளப்படுத்துவார். உடல்நலத்தில் சவுக்கியம் உண்டாகும். மருத்துவச் செலவு விலகும். தாய்சுகம் நன்றாக இருக்கும். புதிய வீடு அல்லது மனை வாங்கும் திட்டம் செயலாகும். வாகன வகையில் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கலாம் அல்லது பழைய வாகனத்தை சீர்திருத்தம் செய்யலாம். ஆறாமிடம் நோய், கடன், எதிரி ஸ்தானம். எனவே மேற்கண்ட வீடு, மனை, வாகன திட்டத்தில் கடன் வாங்கலாம். கடன் ஏற்பட்டால் நோய் விலகும். தொழில் துறையில் போட்டி, பொறாமை ஏற்பட்டு விலகும். அவற்றை சமாளிக்கும் திறனும் மேம்படும்.

பரிகாரம்: சென்னை போரூர்- உத்திர ராமேஸ்வரம் எனப்படும். அங்குள்ள ஸ்ரீ ராமநாதேஸ்வரரை வியாழக்கிழமையன்று வழிபடலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

இதுவரை ரிஷப ராசிக்கு எட்டில் இருந்த குரு இந்த வாரம் 15-ஆம் தேதி முதல் ஒன்பதாம் இடமான மகரத்திற்கு மாறுகிறார். குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள். இதில் இயற்கை சுப கிரகமான குருவுக்கு 5, 9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் ஒன்பதாமிடம் ராஜயோக இடமாகும். ஏனென்றால் ஒன்பதில் இருக்கும் குரு 5-ஆம் பார்வையாக ரிஷப ராசியை நேரடியாகப் பார்ப்பார். மகரம் அவருக்கு நீச வீடு என்றாலும், மகர ராசிநாதன் சனியும் குருவும் பரிவர்த்தனை. எனவே, குரு நீசபங்க ராஜயோகம் அடைகி றார். வரும் டிசம்பரில் சனிப்பெயர்ச்சி ஆகும் போது குருவும் சனியும் ஒன்றுகூடி மகரத்தில் இருப்பார்கள். அப் போதும் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கும். எனவே, எதிர்பாராத தன யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகும். அரசியல் கட்சி ஈடுபாடுகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புள்ள கௌரவப் பதவிகளும் பாராட்டும் பெருமையும் உண்டாகும். ரிஷப ராசிக்கு 8-க்குடைய குரு ஒன்பதில் நீசம் பெற்றாலும் நீசபங்கம் பெற்று ராசியைப் பார்ப்பதால் கௌரவம், கீர்த்தி, புகழ் இவற்றைக் காப்பாற்ற போராட வேண்டியிருக்கும். போராடினாலும் காப்பாற்றி விடலாம். அதாவது கெட்டவன் நல்லவன் என்று நிரூபிக்க சாட்சிகள் வேண்டும். குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளி இல்லை என்பதற்கும் சாட்சிகள் வேண்டும். தொலைந்த பொருளை காவல்நிலையத்தில் உரிமை கொண்டாடி திரும்பப் பெறவும் சாட்சிகள் வேண்டும்.

பரிகாரம்: திருப்பத்தூர் அருகிலுள்ள பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை (அட்டமாசி

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.

15-11-2020-ல் குருப்பெயர்ச்சி

கிரக பாதசாரம்:

சூரியன்: விசாகம்- 3, 4, அனுஷம்- 1.

செவ்வாய்: ரேவதி- 4.

புதன்: சுவாதி- 3, 4, விசாகம்- 1, 2.

குரு: உத்திரம்- 1, 2.

சுக்கிரன்: சித்திரை- 2, 3, 4.

சனி: பூராடம்- 1, உத்திராடம்- 1.

ராகு: மிருகசீரிடம்- 1.

கேது: கேட்டை- 3.

கிரக மாற்றம்:

செவ்வாய் வக்ரம்.

16-11-2020- விருச்சிக சூரியன்.

17-11-2020- துலா சுக்கிரன்.

15-11-2020- மகர குருப்பெயர்ச்சி.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- துலாம்.

17-11-2020- தனுசு.

19-11-2020- மகரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

இந்த வாரம் பதினைந்தாம் தேதிமுதல் மேஷ ராசிக்கு ஒன்பதில் ஆட்சியாக இருந்த குரு பத்தாமிடமான மகர ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். பத்தாமிடம் மகரம் குருவுக்கு நீச ஸ்தானம் என்றாலும், 10-க்குடைய சனி, குரு வீட்டில் ஒன்பதில் இருப்பது பரிவர்த்தனை யோகம் மற்றும் தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே, குரு நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். பத்தில் வரும் குரு 2-ஆமிடம், 4-ஆமிடம், 6-ஆமிடங்களைப் பார்க்கி றார். இரண்டாம் இடம் வாக்கு, தனம், குடும்பம் போன்றவற்றைக் குறிக்கும். எனவே, குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். குழப்பங்கள் அகலும். பொருளாதார சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். உங்கள் பேச்சில் கனிவு ஏற்படும். பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் இனிமையாகவும் அன்பாகவும் பேசக்கூடியவர்கள்தான். 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு கல்வியை வளப்படுத்துவார். உடல்நலத்தில் சவுக்கியம் உண்டாகும். மருத்துவச் செலவு விலகும். தாய்சுகம் நன்றாக இருக்கும். புதிய வீடு அல்லது மனை வாங்கும் திட்டம் செயலாகும். வாகன வகையில் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கலாம் அல்லது பழைய வாகனத்தை சீர்திருத்தம் செய்யலாம். ஆறாமிடம் நோய், கடன், எதிரி ஸ்தானம். எனவே மேற்கண்ட வீடு, மனை, வாகன திட்டத்தில் கடன் வாங்கலாம். கடன் ஏற்பட்டால் நோய் விலகும். தொழில் துறையில் போட்டி, பொறாமை ஏற்பட்டு விலகும். அவற்றை சமாளிக்கும் திறனும் மேம்படும்.

பரிகாரம்: சென்னை போரூர்- உத்திர ராமேஸ்வரம் எனப்படும். அங்குள்ள ஸ்ரீ ராமநாதேஸ்வரரை வியாழக்கிழமையன்று வழிபடலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

இதுவரை ரிஷப ராசிக்கு எட்டில் இருந்த குரு இந்த வாரம் 15-ஆம் தேதி முதல் ஒன்பதாம் இடமான மகரத்திற்கு மாறுகிறார். குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள். இதில் இயற்கை சுப கிரகமான குருவுக்கு 5, 9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் ஒன்பதாமிடம் ராஜயோக இடமாகும். ஏனென்றால் ஒன்பதில் இருக்கும் குரு 5-ஆம் பார்வையாக ரிஷப ராசியை நேரடியாகப் பார்ப்பார். மகரம் அவருக்கு நீச வீடு என்றாலும், மகர ராசிநாதன் சனியும் குருவும் பரிவர்த்தனை. எனவே, குரு நீசபங்க ராஜயோகம் அடைகி றார். வரும் டிசம்பரில் சனிப்பெயர்ச்சி ஆகும் போது குருவும் சனியும் ஒன்றுகூடி மகரத்தில் இருப்பார்கள். அப் போதும் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கும். எனவே, எதிர்பாராத தன யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகும். அரசியல் கட்சி ஈடுபாடுகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புள்ள கௌரவப் பதவிகளும் பாராட்டும் பெருமையும் உண்டாகும். ரிஷப ராசிக்கு 8-க்குடைய குரு ஒன்பதில் நீசம் பெற்றாலும் நீசபங்கம் பெற்று ராசியைப் பார்ப்பதால் கௌரவம், கீர்த்தி, புகழ் இவற்றைக் காப்பாற்ற போராட வேண்டியிருக்கும். போராடினாலும் காப்பாற்றி விடலாம். அதாவது கெட்டவன் நல்லவன் என்று நிரூபிக்க சாட்சிகள் வேண்டும். குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளி இல்லை என்பதற்கும் சாட்சிகள் வேண்டும். தொலைந்த பொருளை காவல்நிலையத்தில் உரிமை கொண்டாடி திரும்பப் பெறவும் சாட்சிகள் வேண்டும்.

பரிகாரம்: திருப்பத்தூர் அருகிலுள்ள பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை (அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தி) வழிபடவும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

இந்த வாரம் 15- ஆம் தேதி மிதுன ராசிக்கு ஏழில் உள்ள குரு 8-ஆமிடமான மகரத்திற்குப் பெயர்ச்சியாகிறார். மகரம் அவருக்கு நீச ராசி என்றாலும், குருவுக்கு வீடு கொடுத்த சனியும் குருவும் பரிவர்த்தனை என்பதால், குரு நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். எட்டாம் இடம் என்பது இழப்பு, ஏமாற்றம், விபத்து போன்ற துர் பலன்களைக் குறிப்பிட் டாலும் 2, 11, 5, 9-க்குடை யவர்களது தொடர்பு ஏற்படும்போது அது அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறிவிடும். திருஷ்டம் என்பது கண்ணுக்குத் தெரிவது. அதிர்ஷ்டம் என்பது கண்ணுக்குத் தெரியாதது. விபத்தும் கண்ணுக்குத் தெரியாமல் நொடிப் பொழுதில் முடியும். அதேபோல அதிர்ஷ்ட மும் புலப்படாமல், எதிர்பாராமல் வரும். எட்டில் இருக்கும் குரு இரண்டாம் இடத் தைப் பார்ப்பதால் குடும்பத்தில் தவிர்க்கமுடியாத செலவுகளும் விரயங்களும் காணப்பட்டாலும், அதை சரிக்கட்டுமளவு வருமானமும் உண்டாகும். இரண்டாம் இடம் வாக்கு, வித்தை, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும். 4-ஆமிடம் கல்வி, வீடு, வாகனம், சுகம், தாய் ஆகியவற்றைக் குறிக்கும். இந்த ஸ்தானங்களை குரு பார்ப்பதால் (7, 10-க்குடையவர்) எதிர் பாராத நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் தருவார். உங்கள் கடமைகளைத் தவறாமல் நிறைவேற்றி பாராட்டும் பெறலாம். நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்று சொல்லுமளவு நல்ல மனைவி, மக்கள், நல்ல குடும்பம் அமையும். "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்' என்ற குறளுக்குத் தக்கபடி பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

பரிகாரம்: மயிலாடு துறை அருகில் வள்ளலார் கோவில் சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடவும். நந்தி வாகனத்தில் தட்சிணாமூர்த்தி அருள் பாலிப்பார்.

guru

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

இவரை உங்கள் ராசிக்கு 6-ல் இருந்த குரு இந்த வாரம் முதல் ஏழாம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். ஏழாமிடம் திருமணம், மனைவி அல்லது கணவர், உபதொழில் போன்றவற்றைக் குறிக்கும் இடம். 35 வயதாகியும் இதுவரை திருமணமாகாத ஆண்களுக்கும், 30 வயதுக்கு மேலாகி திருமணமாகாத பெண்களுக்கும் திருமணம் கைகூடி வரும். இளம்வயதில் மனைவியை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். 40 வயதாகி நிலையான தொழிலும் நிரந்தரமான வருமானமும் இல்லாமல் அல்லல் பட்டவர்களுக்கும் இந்த குருப்பெயர்ச்சி தொழில் மற்றும் வருமானத் திற்கு வழிவகுக்கும். மகர ராசிக்கு மாறும் குரு 11-ஆமிடம், ஜென்ம ராசி, மூன்றாமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். பதினொன்றாம் இடம் வெற்றி ஸ்தானம், லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், உபய களஸ்திர ஸ்தானமாகும். இதற்கு குருபார்வை அனுகூலப் பார்வையாக அமைவதால் தோல்விக்கும் இடமில்லை; தொய்வுக்கும் இடமில்லை. வெற்றி நிச்சயம். சில காரியங்களில் தாமதம் ஏற்பட்டாலும் தடைப்படாது. ஜென்ம ராசியைப் பார்க்கும் குரு இழந்த செல்வாக்கு, கௌரவம், மதிப்பு, மரியாதை ஆகியவற்றைத் திரும்பவும் தேடித்தரும். அந்தஸ்து உயரும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சுயதொழில் செய்கிறவர்களுக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் உண்டாகும். மூன்றாம் இடத்தைப் பார்ப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சகோதர சகாயமும் அனுகூல மும் பெருகும்.

பரிகாரம்: குரு ஸ்தலமான ஆலங்குடி சென்று வழிபடவும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிக்கு இதுவரை ஐந்தில் இருந்த குரு இப்போது ஆறாமிடத்திற்கு மாறுகிறார். ஆறாம் இடம் குருவுக்கு நீச ஸ்தானம் என்றாலும், சனியும் குருவும் பரிவர்த்தனையாவதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. சிம்ம ராசிக்கு ஆறில் வந்திருக்கும் குரு தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தைப் பார்க்கி றார். அது (ரிஷபம்) பாக்கிய ஸ்தானமாகும். அத்துடன் சிம்ம ராசிக்கு 12-ஆமிடம், 2-ஆமிடங்களைப் பார்க்கிறார். 12 என்பது தொழில் முதலீட்டைக் குறிக்கும். இரண்டாம் இடமென்பது தனவரவு- முதலீட்டின் பயனாக வரும் லாபத்தைக் குறிக்கும். ஏற்கெனவே கொடுத்திருந்த பணமெல்லாம் இப்போது திரும்பக் கிடைக்கும் காலம். ஒரு பணக்காரர் கையிலிருந்த பணத்தைக்கொண்டு ஊருக்கு வெளியே காலியாகக் கிடந்த நிலங்களை வாங்கிப் போட்டார். அவர் யோகத்திற்கு அந்த இடங்களை ஒட்டி பைபாஸ் ரோடு- நெடுஞ்சாலை அமைந்துவிட்டது. வாங்கிப் போட்ட இடத்தின் மதிப்பு பலமடங்கு கூடி விட்டது. பிளாட் போட்டு அதிக லாபத்திற்கு விற்று முதலீடாக்கிவிட்டார். அதுபோல் உங்களுக்கு யோகம் கிட்டும். பத்திலுள்ள ராகுவை குரு பார்ப்பதால் ஏற்றுமதி- இறக்கு மதித் தொழிலில் ஈடுபடவைக்கும் அல்லது பிளாஸ்டிக், ரப்பர் போன்ற தொழில் துறையிலும் ஈடுபடவைக்கும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்துவிட்டால் லட்சாதிபதியாக, கோடீஸ்வரராக மாறிவிடும் அதிர்ஷ்டமும் ஏற்படலாம்.

பரிகாரம்: தென்காசி போகும் வழியில், வாசுதேவநல்லூர் அருகில் தாருகாபுரம் சென்று நவகிரக தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிக்கு இதுவரை 4-ல் இருந்த குரு இப்போது 5-ஆமிடமான மகர ராசிக்கு மாறுகி றார். மகரத்தில் குரு நீசமென்றாலும், ஏற்கெனவே கூறியபடி சனி, குரு பரிவர்த்தனையால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. டிசம்பரில் சனிப்பெயர்ச்சி. அப்போது சனி மகர ராசிக்கு மாறுவார். குருவும் சனியும் ஒன்றுகூடியிருப்பதால் நீசபங்க ராஜயோக அமைப்பு நீடிக்கும். குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் அடையும் ஐந்து ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவர். கன்னி, தனுசு, மீனம், ரிஷபம், கடகம் ஆகியவையே அந்த ஐந்து ராசிகள். இவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி அற்புத யோகத்தைச் செய்யும். நலம் பெருகும். நற்புகழ் குவியும். கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் உங்களுக்கே பொருந்தும். அற்புத கீர்த்தி வேண்டின், ஆனந்த வாழ்வு வேண்டின், நற்பொருள் குவிதல் வேண்டின், நலமெலாம் பெருக வேண்டின் கற்பக விநாயகரை வழிபடுவதோடு குருவையும் கைகூப்பி வழிபடலாம். ஐந்தில் வரும் குரு 9-ஆமிடம், 11-ஆமிடம், ஜென்ம ராசி ஆகியவற்றைப் பார்க்கிறார். 5-ஆமிடம் மகிழ்ச்சி, திட்டம், புத்திரர், குரு உபதேசம், தெய்வ வழிபாடு போன்றவற்றைக் குறிக்கும். இவற்றையெல்லாம் குரு நிறைவேற்றுவார். பூர்வீக சொத்து விவகாரங்களில் அனுகூலமான திருப்பம் உண்டாகும். சுய சம்பாத்திய சேமிப்பு உண்டாகும். குருவருளாலும் திருவருளாலும் எல்லாவித பாக்கியங்களையும் சௌபாக்கியங்களையும் அடையலாம். உங்கள் திறமை, செயல்பாடு எல்லாம் சிறப்பாக அமையும்.

பரிகாரம் சென்னை- ஊத்துக் கோட்டை அருகிலுள்ள சுருட்டப்பள்ளி சென்று தாம்பத்திய தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிக்கு இதுவரை 3-ல் இருந்த குரு இந்த வாரம் 4-ஆமிடத்திற்கு மாறுகிறார். ஏற்கெனவே இருந்த மூன்றாம் இடமும், இப்போது மாறியுள்ள நான்காம் இடமும் சிறப்பான இடங்களாகக் கருதமுடியாவிட்டாலும், குருவும் சனியும் பரிவர்த்தனையாக இருப்பதால் குரு சிறப் பான- அனுகூலமான நற்பலன்களைத் தருவார் என்று எதிர்பார்க்கலாம். அதிலும் குரு நீசமானாலும் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். 4-ல் வந்துள்ள குரு 8-ஆமிடத்தையும் 10-ஆமிடத்தையும் 12-ஆமிடத்தையும் பார்க்கிறார். 10 என்பது தொழில் ஸ்தானம், வாழ்க்கை ஸ்தானம். 8, 12-ஆமிடங்கள் மாறுதலை ஏற்படுத்தும் ஸ்தானங்கள். எனவே தொழில் அல்லது வாழ்க்கையில் மாபெரும் மாறுதல்கள் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் பாதகமில்லாத யோகங்கள் உண்டாகும் 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் நடந்தால் சுகர் டேப்லட்- இனிப்பு மூலாம் பூசிய கசப்பு மாத்திரைபோல பலன்கள் நடக்கும். ஏற்கெனவே 3-ல் இருந்த குரு 9-ஆமிடத்தைப் பார்த்த காரணத்தால், பூர்வீக சொத்தில் அல்லது தகப்பனார் தேடிய சொத்தில் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கி சங்கடப்படுத்தினார். இப்போது 8-ல் வந்திருக்கும் குரு அவற்றுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்துவார். சிக்கல்களை நிவர்த்திசெய்துவிடுவார். தந்தையின் சுய சம்பாத்தியம் அல்லது பூர்வீக பாட்டனார் சம்பாத்தியம் வகையில் சொத்துப் பிரச்சினைகள் தோன்றி மறையும்.

பரிகாரம்: மேற்படி சொத்துப் பிரச்சினை தீர பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியை வழிபடவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிக்கு 2, 5-க்குடைய குரு இப்போது மூன்றில் மறைகிறார். மூன்றாமிடம் மகரம் குருவுக்கு நீசவீடு என்றாலும், குருவுக்கு வீடுகொடுத்த சனியும் குருவும் பரிவர்த்தனை என்பதால், குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனி நடப்பதால் சில காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறும்; சில காரியங்கள் மந்தமாகவும் தாமதமாகவும் நிறைவேறும். குரு, சனி பரிவர்த்தனை என்பதால், நம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியோடு செயல்பட்டால் தோல்விக்கு இடமில்லை; வெற்றி காணலாம். 2, 5-க்குடையவர் நீச ராசியில் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால், எதிர்பாராத தனப் பிராப்தியும் அதிர்ஷ்டமும் யோகமும் தேடிவரும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அன்பர் சிங்கப்பூரிலுள்ள நண்பருக்குப் பணம் அனுப்பி லாட்டரி சீட்டு வாங்கினார். அதற்கு பரிசுத் தொகையும் கிடைத்தது. அவருடைய மைத்துனரும் அங்குள்ள வேறொரு நண்பருக்குப் பணம் அனுப்பி லாட்டரி டிக்கெட் வாங்கினார். அவருக்கும் பரிசு கிடைத்தது. ஆனால் முதலில் சொன்னவருக்கு அவருடைய நண்பர் பரிசுத் தொகையை அனுப்பிவிட்டார். இன்னொரு நண்பருக்கு பரிசு கிடைத்தும் அனுப்ப வில்லை. ஏமாற்றப்பட்டார். இதுதான் பிராப்தம் என்பது. விருச்சிக ராசிக்கு நடக்கும் ஏழரைச்சனி இப்படி யோகத்தையும் கொடுத்து ஏமாற்றத்தையும் கொடுக்கும். குரு அந்த யோகத்தைத் தருவார்.

பரிகாரம்: கும்பகோணம்- குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபட ஏமாற்றம், இழப்பு ஏற்படாது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஜென்ம ராசியில் ஆட்சியாக இருந்த குரு, இப்போது தன ஸ்தானமான 2-ஆமிடத்துக்கு மாறுகி றார். குருவுக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்கள் யோகமான இடங்களாகும். மேற்கண்ட இடங்களில் இருந்தாலும் அல்லது மேற்கண்ட இடங்களைப் பார்த்தாலும் அற்புதமான யோகப் பலன்களைத் தருவார். கடந்தகாலத்தில் ஜென்மத்தில் இருந்த குரு 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்த்தாலும் அந்த அளவுக்கு திருப்தியான- மனநிறைவான பலன்களைச் செய்யாமல் ஏமாற்றிவிட்டார். இப்போது 2-ஆமிடத்திற்கு வந்திருக்கும் குரு அப்படிச் செய்யாமல், தவறிய பலன்களை யெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்துப் பலன்தருவார். உங்களை மகிழ்ச்சிப்படுத்துவார். மகர குரு உங்கள் ராசிக்கு 6-ஆமிடம், 8-ஆமிடம், 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். அதனால் தொழில் மாற்றம், இடமாற்றம், குடியிருப்பு மாற்றம், பதவி மாற்றம் போன்ற பலன்களைத் தரக்கூடும். அந்த மாற்றங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றமான மாற்றங் களாக அமையும். ஒருசிலருக்கு மாற்றத்தை விரும்பும் எண்ணங்களும் திட்டங்களும் இருந்தாலும், அதை செயல்படுத்துவதில் தடை அல்லது தாமதம் அல்லது தயக்கம் ஏற்படலாம். "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' என்ற பழமொழிப்படி தடை, தாமதம் ஏற்படலாம். என்றாலும் அன்றாட வாழ்க்கையில் பிரச்சினை ஏதுமின்றி சுமூகமாகச் செயல்படும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் கால பைரவரை வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

இதுவரை மகர ராசிக்கு 12-ல் இருந்த குரு இப்போது ஜென்ம ராசிக்கு மாறுகிறார். மகர குருவும் தனுசு சனியும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும் பரிவர்த்தனை யோகத்திற்கு ஒரு தனிச் சிறப்பு, முக்கியத்துவம் உண்டு. அது ராசிப் பரிவர்த்தனையாக இருந்தாலும் சரி; நட்சத்திர சாரப் பரிவர்த்தனையாக இருந்தாலும் சரி- அதற்கு முக்கியத்துவம் உண்டு. அதனால் ஐந்தில் உள்ள ராகுவும் 11-ல் உள்ள கேதுவும் உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் பக்கபலமாக இருப்பார்கள். மகர குரு 5, 7, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். அதனால் பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். அதற்கு ஆதரவாக உங்களுக்கு வாழ்க்கைத்துணை இருப்பார். ஒருசிலருக்கு தந்தையின் வழிகாட்டுதலும் ஆலோசனையும் பக்கபலமாக அமையும். மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதால், குருப்பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், குடியிருப்பு மாற்றம், பதவி மாற்றம், தொழில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அந்த மாற்றங்கள் யாவும் ஏற்றமான மாற்றங்களாக மாறும். எப்போதும் மாற்றம் என்பது ஏற்றமாகவும் இருக்கும்; இறக்கமாகவும் இருக்கும். இயற்கை உடன்மறை, எதிர்மறையாகச் செயல்படும். அதாவது மழை பெய்தும் கெடுக்கும்; பெய்யாமலும் கெடுக்கும்.

பரிகாரம்: ஏழரைச்சனியின் தாக்கம் குறைய ஆஞ்சனேயரையும் காலபைரவரையும் வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிக்கு இதுவரை 11-ல் இருந்த குரு இப்போது 12-ஆமிடத்திற்கு மாறுகிறார். 12-ஆமிடம் குருவுக்கு நீச ஸ்தானம் என்றாலும் குரு, சனி பரிவர்த்தனை என்பதால் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். விரயச் செலவில் சுபச்செலவு, அசுபச் செலவு என்று இருவகை உண்டு. உங்கள் யோகத்திற்கு எல்லாம் சுபமங்களச் செலவுகளாகப் பிரதிபலிக்கும். 12-ஆமிடத்து குரு 4-ஆமிடம், 6-ஆமிடம், 8-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். 4 என்பது பூமி, வீடு, வாகனம், கல்வி, சுகம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அங்கு ராகு நிற்பதால், ராகு தசாபுக்தி நடப்பவர்களுக்கு தாயார்வகையில் வைத்தியச் செலவுகள் வரலாம். அல்லது வீடு, நிலம், வாகனம் ஆகியவற்றில் மாறுதல்கள் ஏற்படலாம். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்கும் சூழ்நிலை (பரிவர்த்தனை) ஏற்படலாம். 6-ஆமிடத்தையும் 8-ஆமிடத்தையும் குரு பார்ப்பதால் சிலருக்கு கடன் கவலை ஏற்படலாம் அல்லது கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாற்றம் உண்டாகலாம். ஒருசிலருக்கு வீடு, நிலம், கட்டடம் சம்பந்தமாக பணத்தைக் கொடுத்துவிட்டு பத்திரப்பதிவு செய்ய முடியாமல் இழுபறிநிலை ஏற்படலாம். அல்லது வாங்கிய பணத்தை இல்லையென்று சொல்ல இழப்பு, ஏமாற்றம் ஏற்படலாம்.

பரிகாரம்: மேற்கண்ட ஏமாற்றம், இழப்பு ஏற்பட்டால் அது திரும்பக் கிடைப்பதற்கு கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று கார்த்தவீர்யார்ஜுன எந்திரத்தைப் பூஜைசெய்யலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு 10-ல் இருந்த குரு இப்போது 11-ஆமிடத்திற்கு மாறுகிறார். மகரம் குருவுக்கு நீசராசி என்றாலும், சனியும் குருவும் பரிவர்த்தனையாவதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் உண்டாகிறது. பொதுவாக குரு நற்பலன் தரும் இடங்கள் 2, 5, 7, 9, 11-ஆமிடங்களாகும். இவற்றில் குரு வரும்போது அதிர்ஷ்டமும் யோகமும் தருவார். அதன்படி உங்கள் ராசிநாதன் பதினொன்றாம் இடம் வந்திருப்பதும், அங்கு அவர் நீசபங்க ராஜயோகத்தை அடைவதும் மிகமிக சிறப்பான அமைப்பாகும். பதினொன்றாம் இடத்திற்கு வந்திருக்கும் குரு இதுவரை நீங்கள் உழைத்த உழைப்புக்கும் விசுவாசத்துக்கும் பரிசும் பாராட்டும் கிடைக்கச் செய்வார். பயனும் பலனும் அடையலாம். ராசிநாதன் குரு 3-ஆமிடம், 5-ஆமிடம், 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். 3- சகோதரம், நட்பு, தைரியம், வீரிய ஸ்தானமாகும். சகோதர- சகோதரிவகையில் இதுவரையில் நிலவிய கருத்து வேறுபாடு, மனக்கசப்புகள் எல்லாம் நீங்கி உறவுகள் பலப்படும். அன்பும் பாசமும் பெருகும். உதவியும் ஒத்தாசையும் உண்டாகும். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்ற பழமொழிப்படியும், குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்ற கருத்துப்படியும் ரத்தபந்த சொந்தம் பாராட்டி, உடன்பிறந்தவர்களோடு ஒட்டி உறவாடலாம். மனைவி, மக்கள்வகையில் எண்ணிய காரியங்கள் செயலாகும். அன்பும் பாசமும் பெருகும்.

பரிகாரம்: தென்காசி அருகில் புளியறை சிவன் கோவில் சென்று, அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

bala201120
இதையும் படியுங்கள்
Subscribe