லக்னம் என்பது உயிர். எனவே ஜாதகம் பார்க்கும்பொழுது அதையே முதல் வீடாகக் கொள்வர். ஒரு ஜாதகத்தில் லக்ன வீட்டிற் குரிய கிரகம் ஆட்சியாக இருந்தால், அந்த ஜாதகர் பூரண ஆயுளுடனும், ஸ்திரமான பலத்துடனும், சொத்துகள் உடையவராக வும், கீர்த்தி பெற்றிருப்பவராகவும் நல்லமுறையில் ஜீவன பலத்துடன் இறுதிவரை இருப்பார்.
லக்னத்தில் நீச கிரகங்களோ- பகை கிரகங்களோ இல்லாமலும், இவை கேந்திரங்களிலிருந்து லக்னத்தைப் பார்க்காமலும் இருந்தால் மிகவும் நலம். மேலும் கேந்திரங்களில் அந்த கிரகங்களின் பார்வை இருந்தாலும், லக்ன வீட்டிற்குரிய உச்சன் அமர்ந்திருந்தாலும், நட்பு கிரகங்கள் இருந்தாலும், பலம் பெற்றிருந்தாலும் அந்த லக்னத்தில் (உயிர்) பிறந்த ஜாதகர் ஆயுள் வரை பிரதாபம் பொருந்தியும், உயர்பதவியிலும், தெய்வ பக்தி மிக்கவராகவும், கௌரவத்துடனும், சுற்றமும் நட்பும்சூழ மகிழ்வுடன் வாழ்வார்.
லக்னாதிபதி 2-ஆம் வீட்டில் சுபமாய் இருந்தால், வாக்குவண்மையுடன் கல்வியில் தேர்ச்சியுடையவராகவும், உடல்தூய்மை, மன அமைதி பெற்றவராகவும், உயர்குடும்பத்தில் பிறந்தவராகவும், புகழ்பெற்றவராகவும் இருப்பார். செல்வம், செல்வாக்கு உள்ளவராக வும் இருப்பார். குடும்ப விருத்தியுடனும் சௌகரியங்களுடனும் நிறைவாக வாழ்வார்.
லக்னாதிபதி 3-ஆவது வீட்டில் சுபமாய் இருந்தால், அந்த ஜாதகர் சகோதர- சகோதரி களுடன் கூடிவாழ்பவராகவும், கலையில் நாட்டம் உள்ளவராகவும், பலரை வேலை வாங்கும் அந்தஸ்து பெற்றவராகவும், செல்வம், செல்வாக்கு பெற்றவ ராகவும் இருப்பார்.
லக்னாதிபதி 4-ஆம் வீட்டில் சுப பலமாய் இருந்தால், நல்ல குடும்பத்தைப் பெற்றவ ராகவும், வீடு, நிலம் உடையவராகவும், உணவுமுதலான சௌகரியங்களைப் பெற்றவ ராகவும், உறவுகளின் ஆதரவு, தாயாரின் அன்பைப் பெற்றவராகவும், கல்வியில் உயர்ந்தவ ராகவும், வாகனங்களை உடையவராகவும் இருப்பார். மாடு, கன்றுகளுடன் பால் பாக்கியத்துடனும் இருப்பார். லக்னத்துக் குடைய கிரகமும்- நான்காவது வீட்டிற்குரிய ஆட்சி கிரகமும், உச்ச கிரகமும் நான்கில் சேர்ந்திருந்தால் மேலே சொன்ன பலன்களை அந்த லக்னாதிபதி பெறுவார். தாய்வழி மாமன்களின் ஆதரவும், சொத்துகளும் கிடைக்கும்.
லக்னாதிபதி 5-ஆவது வீட்டில் சுபப்பல னாய் இருந்தால், மக்கள் செல்வத்தைப் பெற்றவராகவும், அவர்களால் மகிழ்ச்சியையும் ஆதரவையும் பெற்றவராகவும் இருப்பார். தெய்வ நம்பிக்கை நிறைந்தவர். மகான்களின் சத்சங்கத்துடனும், பரோபகார சிந்தனையுடனும், பிரதாபங்களை உடையவராகவும், விசால புத்தியுடனும் யோகம் பெற்று வாழ்வார்.
லக்னத்துக்குரிய கிரகம் 6-ஆவது வீட்டில் இருந்தால், 6-க்குரியவரோடு கூடி அல்லது பார்க்கப்பட்டாவது இருந்தால், அந்த ஜாதகர் நோயாளியாக இருப்பார். விரோதி கள், அவதூறு பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள். கடன் தொல்லை நிறைந்தவராக மன அமைதியில்லாமல் இருப்பார்.
லக்னத்திற்குரிய கிரகம் 7-ஆவது வீட்டில் இருந்தால், பெண்கள் வகையில் அதிக செலவு செய்வார். மற்றவர்களின் மனதைக் கவரும் குணங்களுடன் குடும்பப் பொறுப்பை ஏற்காமல் வெளியே கற்றுபவராக இருப்பார். எந்தத் தொழிலிலும் ஸ்திர புத்தியுடன் இருக்கமாட்டார். "தான்' என்ற எண்ணம் தலைதூக்கி இருக்கும். மனைவிவழியில் சொத்து, லாபம் பெற்று வாழ்வார்.
லக்னத்திற்குரியவர் 8-ல் சுப பலமாக இருந்தால், ஆயுள் நிறைந்தவராகவும், சிரமத்துடன் குடும்பத்தை நடத்துபவராகவும், பிறர் இகழக்கூடியவராகவும், வம்சப் பரம்பரை அற்றவராகவும், தத்து எடுத்துக் கொள்பவராகவும், உடல் குறைபாடு உடைய வராகவும் இருப்பார். இதே 8-ஆம் வீட்டில் இருக்கக்கூடியவர் பாவப் பலனாக அமைந் தால் ஆயுள் குறைவு. வறுமை, தண்டனை, கடுங்காவல், கேவலபுத்தி உள்ளவராக வாழ்வார்.
லக்னாதிபதி 9-ஆவது வீட்டில் சுப பலமாய் இருந்தால், பிதுர்களின் ஆசிர்வா தத்தைப் பெற்றவரகவும், தந்தையிடமும் அன்பைப் பெற்று பாக்கியமும் பெறுவார். பெரியவர்களிடம் விசுவாசத்துடன் இருப்பார். சத்தியம் நிறைந்தவராகவும் இருப்பார். நேர்வழியில் செல்வார். தர்ம குணம், தெய்வீக வழிபாடு உள்ளவராகவும் இருப்பார். பால்பாக்கிய விருத்தியும், புகழையும் பெற்று யோகமுடன் வாழ்வார்.
லக்னாதிபதி 10-ஆவது வீட்டில் சுப பலமாய் இருந்தால், ஜீவன பலம் உள்ளவராகவும், குடும்பப் பொறுப்பை அறிந்து நடப்பவராகவும் வாழ்வார். தெய்வீக வழிபாடு செய்வார். நித்ய கர்ம அனுஷ்டானங்களைத் தவறாமல் செய்வார். புண்ணிய காரியங்களில் பற்றுதல் கொண்டவராகவும் இருப்பார்.
நற்பெயரும் கீர்த்தியும் ஏற்படும். இடை விடாமல் தொழில் செய்வார். களைப்பைக் கருதமாட்டார். அரசாங்கத்தில் கீர்த்தி பெறுவார். செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட உயர் பதவி வகிப்பார். மக்களிடையே சிறந்த தலைவனாகப் போற்றப் படுவார். ஐஸ்வர்யங்களுடன், வாகனங்களுடன், நிலபுலன்களுடன், மாளிகை போன்ற வீட்டில் வாசம் செய்வார்.
லக்னத்துக்குரியவர் 11-ஆவது வீட்டில் சுப பலமாய் இருந்தால், லாபகரமான தொழிலைச் செய்வார். நல்ல பெயர், புகழ் பெறுவார். மூத்த சகோதர- சகோதரிகளின் ஆதரவு நிறைந்திருக்கும். லக்னத்துக்குரியவரை சுப கிரகங்கள் பார்த்தாலும், 11-ஆவது வீட்டிற்குரிய கிரகம் ஆட்சியாகவோ, சுபகிரகமாகவோ இருந்தாலும் ஜாதகர் நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பார்.
அதேநேரத்தில் பாவகிரகங்களின் பார்வை, சம்பந்தம், அசுபப் பலனாய் இருந்தால், மரணத்திற்கு ஒப்பான கண்டத்தையும், கஷ்ட- நஷ்டத்தையும் அடைவார்.
லக்னாதிபதி 12-ஆவது வீட்டில் சுப பலமாய் இருந்தால், எவ்வளவு வருமானம் வந்தாலும் செலவுகள் ஏற்படும். அசுப பலமானால் அகால போஜனம் உடையவர். சிற்சிலசமயம் உணவே கிடைக்காமலும், தூக்கமில்லா மலும், மனஅமைதியில்லா மலும் வாழநேரும். குடும்பம் அடிக்கடி இடமாற்றத்திற்கு உள்ளாகும். அலைச்சல் அதிகமாக இருக்கும். "திறமையற்றவர், சோம்பேறி' என்று மற்றவர்கள் இகழ்வாகக் கூறுவார்கள். அரசாங் கத்தின் நிந்தனையும், கெட்ட பெயரும் கிட்டும்.
லக்னப் பலன்கள் மேற் கண்டவாறு அமையும் என்றாலும், இதற்கு முன்னர் திருமணம் செய்தவர்கள் நல்ல பலன்களை அடையவும், ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டவர்களும் மற்றும் திருமணம் செய்யவிருப்பவர் களும் கீழ்க்கண்ட பரிகாரங் களைச் செய்து பயன்பெறலாம்.
பரிகாரம்-1
திருச்செந்தூர் முருகன் அருளை நேரடியாகச் சென்று பெற்றுவர, லக்னாதிபதி பலன் கள் சிறப்பாக இருக்கும். எனவே ஒருமுறையாவது திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்து வரவும்.
பரிகாரம்-2
இப்படிப்பட்ட ஜாதகம் அமை யப் பெற்றவர்கள், ஜாதகம் பார்க் காமலே திருமணம் செய்ய இருப் பவர்கள் தங்களது திருமணத்தை முருகன் சந்நிதியில் செய்தால், லக்னாதிபதி பலன் நன்மையாய் அமையும்.
(அடுத்த இதழில் இரண்டாம் பாவம்)
செல்: 94871 68174