ஒருவர் ஜாதகத்தில் கேது நல்ல நிலையில் இருந்து குருவால் பார்க்கப்பட்டால், கேது தசை நடப்பிலிருக்கும் ஏழு ஆண்டுகள் ஜாதகர் பல நன்மைகளை அடைவார். புகழ் ஓங்கும். சிலருக்கு ஞானநிலையும், சிலருக்கு பெரிய சக்திகளின் அருளும், இன்னும் சிலருக்கு தங்கள் குருவருளும் சித்திக்கும். பொதுவாக ஜாதகத்தில் கேது 3, 6, 11, 12-ல் இருப்பது நல்லது.
ஒரு ஜாதகத்தில் கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ, அந்த வீட்டுக்குரியவரின் குணத்தையே பிரதி பலிப்பார்.
மேஷ லக்னத்தாருக்கு கேது 3, 6, 11-ல் இருந்தால் நன்மை செய்வார். ரிஷப லக்னக்காரர்களுக்கு கேத
ஒருவர் ஜாதகத்தில் கேது நல்ல நிலையில் இருந்து குருவால் பார்க்கப்பட்டால், கேது தசை நடப்பிலிருக்கும் ஏழு ஆண்டுகள் ஜாதகர் பல நன்மைகளை அடைவார். புகழ் ஓங்கும். சிலருக்கு ஞானநிலையும், சிலருக்கு பெரிய சக்திகளின் அருளும், இன்னும் சிலருக்கு தங்கள் குருவருளும் சித்திக்கும். பொதுவாக ஜாதகத்தில் கேது 3, 6, 11, 12-ல் இருப்பது நல்லது.
ஒரு ஜாதகத்தில் கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ, அந்த வீட்டுக்குரியவரின் குணத்தையே பிரதி பலிப்பார்.
மேஷ லக்னத்தாருக்கு கேது 3, 6, 11-ல் இருந்தால் நன்மை செய்வார். ரிஷப லக்னக்காரர்களுக்கு கேது 3, 5, 9, 11-ல் இருந்தாலும்; மிதுன லக்னத்தாருக்கு லக்னம், 6, 11-ல் இருந்தாலும்; கடக லக்னத்தாருக்கு 3, 6, 9, 11-ல் இருந்தாலும் நன்மைகளைச் செய்வார்.
சிம்ம லக்னத்தாருக்கு கேது 3, 5, 6-ல் இருந்தாலும்; கன்னி லக்னத்தாருக்கு கேது 3, 6, 9, 11-ல் இருந்தாலும்; துலா லக்னத் தாருக்கு லக்னம், 5, 6, 9-ல் இருந்தாலும்; விருச்சிக லக்னத் தாருக்கு 3, 6, 9, 11-ல் இருந்தாலும் நன்மைகளைச் செய்வார்.
தனுசு லக்னத்தாருக்கு கேது லக்னம், 3, 11-ல் இருந்தாலும்; மகர லக்னத்தாருக்கு கேது 3, 6, 9-ல் இருந்தாலும்; கும்ப லக்னத்தாருக்கு கேது லக்னம், 3, 9, 11-ல் இருந்தாலும்; மீன லக்னத்தாருக்கு கேது 3, 6, 11, 12-ல் இருந்தாலும் நன்மைகள் நடக்கும்.
கேது தசையில் கேது புக்தி நடக்கும்போது, பண இழப்பு, நெருப்பால் விபத்து போன்ற துன்பங்கள் நிகழலாம். கேது தசையில் சுக்கிர புக்தி நடந்தால் காய்ச்சல், மனைவியைப் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை, கேது தசை, சூரிய புக்தியில் அரசாங்கத்தால் பிரச்சினை, பகைவர்கள் அதிகரிப்பு, அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே செல்லும் நிலை, ஜுரம் ஆகியவை உண்டாகும். கேது தசை, சந்திர புக்தியில் நன்மை- தீமை இரண்டுமே நடக்கும். பணவரவு இருக்கும். வீட்டில் பிரச்சினைகள் உண்டாகும். புகழ் கிடைக்கும். கேது தசை, செவ்வாய் புக்தியில் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களுடன் சண்டை ஏற்படும். திருட்டு பயம், உடல் உபாதை போன்றவை ஏற்படும்.
கேது தசை, ராகு புக்தியில் திருடர்கள் தேடிவருவார்கள். பகைவர்கள் அதிகமாவார்கள். கேது தசை, குரு புக்தியில் நன்மைகள் நடக்கும். ஆண் வாரிசு உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். குருவின் ஆசிர்வாதம் கிடைக்கும். கேது தசை, சனி புக்தியில் வாத நோய், சகோதரர்களுடன் சண்டை ஏற்படும். கேது தசை, புதன் புக்தியில் சகோதரர்களுடன் உறவு சீராகும்.
ஒரு ஜாதகத்தில் கேது 3-ல் இருக்க, சனியால் பார்க்கப்பட்டால் ஞானியாவார். சகோதரர்களின் உறவு பாதிக்கும். 12-ல் சூரியனுடன் கேது இருந்து மாரக தசை நடந்தால் அற்பாயுள் உண்டாகும். கேது, செவ்வாய், சனி மூவரும் சேர்ந்து 12-ல் இருந்தால் முன்னோர்களின் சாபம் உள்ளதென்று பொருள். அதனால் கேது தசையில் பல துன்பங்களையும் அனுபவிக்க நேரும்.
எனவே, கேது தசைக் காலத்தில் சிவன், விநாயகர் ஆகியோரை தவறாமல் வழிபடவேண்டும். சூரிய வழிபாடும் மேற்கொள்ள வேண்டும். கேதுவுக்குரிய பரிகாரங்களையும் செய்துவந்தால் துன்பங்களிலிருந்து விடுபடலாம்.
செல்: 98401 11534