ருவர் ஜாதகத்தில் சந்திரன் நிலை சரியில்லையென்றால் அவர் நிறைய சிந்திப்பார். பலருக்கு மன அழுத்தம் இருக்கும். சந்திரன், ராகுவுடன் அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தால் அவர் எப்போதும் சிந்தனையிலேயே காணப்படுவார். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும்.

Advertisment

சந்திரன் மாலை வேளைக்கு அதிபதி. சந்திரன் வானத்தில் காட்சி தரும்போது சந்திர தோஷம் உள்ளவர்கள் அனைவரும் சந்திரனைப் பார்த்து வணங்க வேண்டும். கிண்ணத்தில் பால் எடுத்து, அதை சந்திரனைப் பார்த்தவாறு தெளிக்க வேண்டும். தேய்பிறையாக இருந்து, மாலை நேரத்தில் சந்திரன் தெரியவில்லையென்றால், சந்திர மவுலீஸ்வரரை (தலையில் சந்திரனை வைத்திருக்கும் சிவன்) வழிபடவேண்டும். துர்க்கைக்கு தீபமேற்றி வழிபடவேண்டும். சிவப்பு மலர்களால் பூஜை செய்யவேண்டும்.

Advertisment

ஒருவர் ஜாதகத்தில் சந்திரனும் கேதுவும் சேர்ந்திருந்தால், அவருடைய மனதில் அதிகமான பிரச்சினைகள் இருக்கும். பல காரியங்களில் தடைகள் உண்டாகும். சந்திர தசை நடக்கும்போது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். அதனால் அவர் சூரியன் மறைந்தபிறகு துர்க்கையையும் விநாயகரையும் வழிபட வேண்டும். விநாயகரை நான்குமுறை சுற்றிவரவேண்டும்.

murugan

சந்திரன், சனி ஒரு ஜாதகத்தில் சேர்ந்திருந்தால், அதுவும் 6, 7-ல் இருந்தால், இளம்வயதிலேயே அவர் பலவிதமான கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியதிருக்கும். இந்த விஷ யோகத்தால், பலருக்கு இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி இருக்காது. அவர்கள் இரவு எட்டு மணிக்குப் பிறகு சிவனை வணங்கி, பிறகு துர்க்கைக்கு வெள்ளை நிறமலர் வைத்துப் பூஜை செய்யவேண்டும். ஆலயத்திற்குச் செல்லும்போது கறுப்புநிற ஆடைகளைத் தவிர்க்கவேண்டும்.

ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாக அல்லது அஸ்தமனமாக இருந்தால், அவருடைய வீட்டிலிலிருக்கும் பெண்களுக்கு நோய் இருக்கும். மனதில் சந்தோஷம் இருக்காது. பல தொழில்கள் செய்தும் வெற்றி கிடைக்காது. எந்த சுப காரியத்தைச் செய்தாலும் தடைகள் உண்டாகும். பல முயற்சிகள் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால், அது சீக்கிரமே செலவாகிவிடும். அவர்கள் மாலை நேரத்தில் சூரியன் மறைந்தபிறகு பெருமாள் ஆலயத்திற்குச் சென்று, மகாலட்சுமிக்கு துளசி, வெண்ணிற மலர், பால்கோவா, தேங்காய் ஆகியவற்றை வைத்துப் பூஜை செய்து, அந்தப் பிரசாதத்தை வீட்டிலுள்ள எல்லாருக்கும் தரவேண்டும். படுக்கும்போது, லட்சுமியின் மந்திரத்தைக் கூறவேண்டும்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் சேர்ந்திருந்தாலும், செவ்வாய் பலவீனமாக இருந்தாலும் பலருக்கும் தைரியமில்லாமல் இருக்கும். பலர் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். சுக்கிரனும் சரியில்லையென்றால், அந்த வீட்டில் லட்சுமி தங்காது. நோய், நொடி இருக்கும். அவர்கள் மாலை வேளையில் வீட்டைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் தீபமேற்றி வைக்கவேண்டும். துர்க்கை ஆலயத்திற்கும் சென்று ஒரு தீபமேற்றி, சிவப்பு மலர்களை வைத்து வழிபட வேண்டும். துர்கா சாலீசா அல்லது துர்க்கை ஸ்துதியைப் படிக்கவேண்டும். இதைச் செய்தால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நோய்கள் குறையும்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு, சுக்கிரன் சேர்ந்திருந்தால், கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. சிலருக்கு ராகு தசையில் சுக்கிர புக்தி அல்லது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்தால், அவர் வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து கொண்டிருப்பார்.

அதிலிலிருந்து விடுபடுவதற்கு தினமும் மாலை வேளையில் சூரியன் மறைந்தபிறகு சிவனுக்கு பால், நீர், கடுகெண்ணெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்களால் பூஜை செய்யவேண்டும்.

இதனால் தோஷங்கள் நீங்கி, சந்தோஷ சூழல் உண்டாகும்.

ஒரு வீட்டில் சந்தோஷ சூழ்நிலை நிலவுவதற்கு, கணவன்- மனைவி உறவு சரியாக இருப்பதற்கு, அவர்கள் மாலைவேளையில் குலதெய்வத்தை வணங்கவேண்டும். துர்க்கை ஆலயத்திற்கு மாலைப்பொழுதில் சென்று, இனிப்பு வைத்து வணங்க வேண்டும்.

அதை வீட்டிலிலிருக்கும் எல்லாருக்கும் பிரசாதமாகத் தரவேண்டும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் பல தோஷங்களால் திருமணம் நடக்காமலிலிருந்தால் அவர்கள் மாலை வேளையில் சிவனையும், துர்க்கையையும் வழிபடவேண்டும். அதனால், தடைகள் நீங்கி விரைவிலேயே திருமணம் நடக்கும்.

குழந்தை தூங்குவதற்கு சிரமப்பட்டால், மாலை நேரத்தில் ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றி வந்து, அவர் காலிலில் இருக்கும் செந்தூரத்தை குழந்தைக்கு பொட்டாக வைக்கவேண்டும். குழந்தை நன்கு தூங்கும். குழந்தைக்கு நோய், நொடி வராது. நல்ல உடல்நலத்துடன் இருக்கும்.

செல்: 98401 11534

Advertisment