ருது காலப் பலன்களும் பரிகாரங்களும்! -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

/idhalgal/balajothidam/benefits-and-remedies

ரு பெண் ருதுவான பிறகுதான் முழுமை அடைகிறாள்.

தற்போது ஜனன நட்சத்திரத்தை வைத்துப் பொருத்தம் பார்க்கிறோம். இருந்தாலும் ருது நட்சத்திரத்தை வைத்தும் பொருத்தம் பார்க்கவேண்டும். ருது என்பது கணவருக்கு மட்டுமே பொருந்தும். எப்படிப்பட்ட கணவர் வருவார்? சொந் தத்தில் முடியுமா அல்லது அந்நியத்தில் வருமா? அல்லது தானே தன் திருமணத்தை முடிவுசெய்வாரா? மதம் மாறு வாரா? சமுதாயத்தை மீறுவாரா போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பது ருது நட்சத்திரம் மட்டுமே.

தற்காலத்தில் பெற்றோர் தங்கள் மகள் ருதுவான நட்சத் திரத்தையும், தேதி, மாதம், வருடத்தையும் பெரும்பாலும் மறந்துவிடுகிறார்கள். ருது நட்சத்திரம் என்பது பொருத்தம் பார்க்கும்பொழுது அவசியமானது என்பதை பெற்றோர்

ரு பெண் ருதுவான பிறகுதான் முழுமை அடைகிறாள்.

தற்போது ஜனன நட்சத்திரத்தை வைத்துப் பொருத்தம் பார்க்கிறோம். இருந்தாலும் ருது நட்சத்திரத்தை வைத்தும் பொருத்தம் பார்க்கவேண்டும். ருது என்பது கணவருக்கு மட்டுமே பொருந்தும். எப்படிப்பட்ட கணவர் வருவார்? சொந் தத்தில் முடியுமா அல்லது அந்நியத்தில் வருமா? அல்லது தானே தன் திருமணத்தை முடிவுசெய்வாரா? மதம் மாறு வாரா? சமுதாயத்தை மீறுவாரா போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பது ருது நட்சத்திரம் மட்டுமே.

தற்காலத்தில் பெற்றோர் தங்கள் மகள் ருதுவான நட்சத் திரத்தையும், தேதி, மாதம், வருடத்தையும் பெரும்பாலும் மறந்துவிடுகிறார்கள். ருது நட்சத்திரம் என்பது பொருத்தம் பார்க்கும்பொழுது அவசியமானது என்பதை பெற்றோர்கள் மறக்கக்கூடாது.

● ருது காலத்தில் லக்னம் அல்லது 7-ல் செவ்வாய் நின்றால், அந்த ஜாதகி பக்குவ காலத்தில் ருதுவாகியுள்ளார் என்று பொருள்.

● குரு லக்னம் அல்லது 7-ல் இருந்தால், உறவினர்கள் வீட்டிற்கு திருமணம் காரணமாக குடும் பத்துடன் சென்றிருக்கும் காலத்தில் பெண் பூப்படைவார்.

● சுக்கிரன் லக்னம் அல்லது 7-ல் இருந் தால், ஸம்யோக கால ருது எனப்படும். (ஸம்யோகம் என்பது தாய்- தந்தை சேர்க்கையின்போது இரவில் ருதுவாகும் காலம்.)

● மற்ற கிரகங்களின் பலத்தைக் கொண்டு நன்மை- தீமைகளைக் கூறவேண்டும்.

ருதுவாகும் நட்சத்திரங்கள்

● உத்திராடம்முதல் மிருக சீரிடம்வரை பெண்கள் ருதுவானால் மிகவும் விசேஷம். மேற்கண்ட நட்சத்திரங்களில் ருதுவாகும் பெண்கள் ஆயுள் வரை கணவருடன் சிறப்பாக வாழ்வார்கள்.

● திருவாதிரைமுதல் உத்திரம் வரையில் ருதுவாகும் பெண் களுக்கு ஆதிக்கம் நிறைந்திருக்கும். எனவே சாத்வீக குணமுள்ளவரை மணமகனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

● அஸ்தம், சித்திரை நட்சத் திரத்தில் ருதுவானவர்கள் வாழ்க்கையில் திருப்தியிருக்காது. மிகவும் சிக்கனமாக, அளவோடு வாழ்க்கை நடத்தினால் திருப்தி ஏற்படும். மற்றவர் வாழ்க்கையில் திருப்தி இராது.

● சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, பூராடம், மூலம் ஆகிய ஆறு நட்சத்திரங்களில் ருதுவாகின்றவர்களுக்கு தீர்க்க சுமங்கலி ஸ்தானம் கிடைக்காது. மாங்கல்ய பலம் குறையும் என்று ருது சாஸ்திரம் கூறுகிறது.

rr

ருது வாரப் பலன்கள்

ஞாயிறு- புத்திரர் குறைவாக இருப்பார்.

திங்கள்- பதிவிரதையாக இருப்பார்.

செவ்வாய்- மாங்கல்ய பலம் குறைவு.

புதன்- விசேஷ சம்பத்து உண்டாகும்.

வியாழன்- நல்ல செல்வம் படைத் தவளாவாள்.

வெள்ளி- ஆரோக்கியமாக இருப்பாள்.

சனி- புறம்பேசுவாள்.

ருதுவாகும் இடம்

● மேஷம், சிம்ம ராசிகள் என்றால் வீட்டின் பின்புறம் அல்லது வெளியிடத்தில் ருது ஆவார்.

● ரிஷபமாகில் தோட்டத்தில் ருது நிகழும்.

● துலாம், கன்னி எனில் பண்டிகைக் காலம் அல்லது விரத காலங்களில் ருது ஆவார்.

● விருச்சிகம், மிதுன ராசிகளில் ருதுவானால் சூரிய உதய காலத்தில் ஏற்படும்.

● தனுசு, கும்ப ராசிகளில் ருதுவானால் தூக்கத்தில் தன்னையறியாமலேயே நிகழும்.

● கடகம், மகரம், மீனம் எனில் சந்தோஷ மான நேரத்தில் ருது ஏற்படும்.

பொதுவான ருது கிரகப் பலன்கள்

● லக்னத்துக்கு 7, 8-ல் சனி, ராகு- கேது, செவ்வாய் இருந்தால் பலன்கள் குறைவாகக் கிடைக்கும்.

● லக்னத்துக்கு 7, 8-ல் குரு நின்றால் செல்வப்பெருக்கு உண்டாகும்.

● லக்னத்துக்கு 7, 8-ல் சுக்கிரன் நின்றால் கணவன்- மனைவி ஒற்றுமை குறையும்.

பரிகாரம்-1

சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம் ஆகிய ஆறு நட்சத்திரங்களில் ருதுவானவர்கள் மட்டும் வாழ்வில் ஒருமுறையாவது திருக்கடையூர் சென்று அபிராமியை வழிபடவேண்டும்.

பரிகாரம்-2

லக்னத்துக்கு 7-ல் சுக்கிரன் நின்றால் தினசரி காலையில்-

"சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்

வக்ரமின்றி வரமிகத்தருள்வாய்

வெள்ளிக் சுக்கிர வித்தக வேந்தே

அள்ளிக் கொடுப்பாய் அடியார்க் கருளே'

என்னும் துதியைச் சொல்லிவரவும்.

செல்: 94871 68174

bala060919
இதையும் படியுங்கள்
Subscribe