மாந்தர்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள், பெண்களின் ஜாதகங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். இதற்குக் காரணம் இருக்கவே செய்கிறது. கி.பி. 25-ஆம் ஆண்டில் முனிவர் பலபத்திரர் எழுதிய "ஹோரா ரத்னம்' போன்ற சமஸ்கிருத ஜோதிட நூல்களில் மூலம், ஆயில்ய நட்சத்திரங்களைப் பற்றி சற்று அதிகமாகவே- முக்கியமாக நூலின் ஆரம்பத்திலேயே தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிரம்மாவின் குமாரரான நாரத மகரிஷி, காஷ்யப முனிவர், வசிஷ்ட முனிவர், சவுனக முனிவர் போன்ற ஜோதிட மாமேதைகள் அனைவரும் மூலம், ஆயில்ய நட்சத்திரங்களின்- ஜென்ம திரவிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடைய பலன்களைக் கூறுகிறார்கள்.
அபுக்த மூல நேரம் என்பது, கேட்டை நட்சத்திரத்தின் கடைசியும், மூல நட்சத்திரத்தின் ஆரம்பமும் சேர்ந்து ஒரு பிரகாரா நேரம் என்பதாகும். ஒரு பிரகாரம் என்பது 8-ல் ஒரு பங்காகும். அதாவது 24 மணி நேரத்தில் 8-ல் ஒரு பகுதி என்பது மூன்று மணி நேரமாகும். அதாவது கேட்டை நட்சத்திரத்தின் கடைசி 90 மணித்துளிகளும், மூல நட்சத்திரத்தின் ஆரம்ப 90 மணித்துளிகளும் சேர்ந்ததாகும். இந்த இடைப்பட்ட மூன்று மணி நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அபுக்த மூல நேரத்தில் பிறந்தவை என்று கூறப்படுகின்றன. இதேபோல் ஆயில்ய நட்சத்திரத்தின் கடைசியிலும், மக நட்சத்திரத்தின் ஆரம்பத்திலுமாக உள்ள மூன்று மணி நேரமும்; ரேவதி நட்சத்திரத்தின் கடைசியும் அஸ்வினி நட்சத்திரத்தின் ஆரம்பமும் சேர்ந்த மூன்று மணி நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அபுக்த மூல நேர மண்டலத்தில் பிறந்தவை என்று கூறப்படுகின்றன. நாரதர் முதற்கொண்டு ஏனைய ஜோதிட மகரிஷிகள் அனைவரும் இந்தப் பிறப்பில் மிகுந்த தோஷம் உண்டு என்று கூறுகின்றனர். அதற்குண்டான பிராயச்சித்தங்களையும் கூறியுள்ளனர்.
அபுக்த மூல நேரத்தில் பிறந்த குழந்தைகளைப் பெற்றோர்கள் தத்துக்கொடுத்துவிட வேண்டும். அவ்வாறு கொடுக்காவிட்டால், குழந்தையின் தகப்பனார் அந்த குழந்தைக்கு எட்டு வயது முடியும்வரை அதைப் பார்க்காமல் பிரிந்திருக்க வேண்டும். ஒன்பதாவது வயதில் தகுந்த பிராயச்சித்தம் அல்லது பரிகாரங்கள் செய்து குழந்தையைத் தகுந்த முறையில் வளர்க்கவேண்டும்.
மேலும், மூலம், ஆயில்ய நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகளின் ஜாதகப் பலன்கள் எப்படி இருக்கும் என்பதையும் விரிவாக எடுத்துரைக்கின்றனர்.
மூல நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்த குழந்தையால் தகப்பனாருக்கு ஆகாது என்றும், இரண்டாவது பாதத்தில் பிறந்த குழந்தையால் தாயாருக்கு ஆகாது என்றும், மூன்றாம் பாதத்தில் பிறந்த குழந்தையால் பெற்றோருடைய குடும்பத்தில் உள்ள சொத்துகள், சம்பத்துகள், தானியங்கள், சுகபோகங்கள், வாகனங்கள் அனைத்தும் அழிந்து, பெற்றோர் நலிவுற்று ஏழ்மைநிலை அடைவார்கள் என்றும், நான்காம் பாதத்தில் பிறந்த
மாந்தர்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள், பெண்களின் ஜாதகங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். இதற்குக் காரணம் இருக்கவே செய்கிறது. கி.பி. 25-ஆம் ஆண்டில் முனிவர் பலபத்திரர் எழுதிய "ஹோரா ரத்னம்' போன்ற சமஸ்கிருத ஜோதிட நூல்களில் மூலம், ஆயில்ய நட்சத்திரங்களைப் பற்றி சற்று அதிகமாகவே- முக்கியமாக நூலின் ஆரம்பத்திலேயே தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிரம்மாவின் குமாரரான நாரத மகரிஷி, காஷ்யப முனிவர், வசிஷ்ட முனிவர், சவுனக முனிவர் போன்ற ஜோதிட மாமேதைகள் அனைவரும் மூலம், ஆயில்ய நட்சத்திரங்களின்- ஜென்ம திரவிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடைய பலன்களைக் கூறுகிறார்கள்.
அபுக்த மூல நேரம் என்பது, கேட்டை நட்சத்திரத்தின் கடைசியும், மூல நட்சத்திரத்தின் ஆரம்பமும் சேர்ந்து ஒரு பிரகாரா நேரம் என்பதாகும். ஒரு பிரகாரம் என்பது 8-ல் ஒரு பங்காகும். அதாவது 24 மணி நேரத்தில் 8-ல் ஒரு பகுதி என்பது மூன்று மணி நேரமாகும். அதாவது கேட்டை நட்சத்திரத்தின் கடைசி 90 மணித்துளிகளும், மூல நட்சத்திரத்தின் ஆரம்ப 90 மணித்துளிகளும் சேர்ந்ததாகும். இந்த இடைப்பட்ட மூன்று மணி நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அபுக்த மூல நேரத்தில் பிறந்தவை என்று கூறப்படுகின்றன. இதேபோல் ஆயில்ய நட்சத்திரத்தின் கடைசியிலும், மக நட்சத்திரத்தின் ஆரம்பத்திலுமாக உள்ள மூன்று மணி நேரமும்; ரேவதி நட்சத்திரத்தின் கடைசியும் அஸ்வினி நட்சத்திரத்தின் ஆரம்பமும் சேர்ந்த மூன்று மணி நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அபுக்த மூல நேர மண்டலத்தில் பிறந்தவை என்று கூறப்படுகின்றன. நாரதர் முதற்கொண்டு ஏனைய ஜோதிட மகரிஷிகள் அனைவரும் இந்தப் பிறப்பில் மிகுந்த தோஷம் உண்டு என்று கூறுகின்றனர். அதற்குண்டான பிராயச்சித்தங்களையும் கூறியுள்ளனர்.
அபுக்த மூல நேரத்தில் பிறந்த குழந்தைகளைப் பெற்றோர்கள் தத்துக்கொடுத்துவிட வேண்டும். அவ்வாறு கொடுக்காவிட்டால், குழந்தையின் தகப்பனார் அந்த குழந்தைக்கு எட்டு வயது முடியும்வரை அதைப் பார்க்காமல் பிரிந்திருக்க வேண்டும். ஒன்பதாவது வயதில் தகுந்த பிராயச்சித்தம் அல்லது பரிகாரங்கள் செய்து குழந்தையைத் தகுந்த முறையில் வளர்க்கவேண்டும்.
மேலும், மூலம், ஆயில்ய நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகளின் ஜாதகப் பலன்கள் எப்படி இருக்கும் என்பதையும் விரிவாக எடுத்துரைக்கின்றனர்.
மூல நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்த குழந்தையால் தகப்பனாருக்கு ஆகாது என்றும், இரண்டாவது பாதத்தில் பிறந்த குழந்தையால் தாயாருக்கு ஆகாது என்றும், மூன்றாம் பாதத்தில் பிறந்த குழந்தையால் பெற்றோருடைய குடும்பத்தில் உள்ள சொத்துகள், சம்பத்துகள், தானியங்கள், சுகபோகங்கள், வாகனங்கள் அனைத்தும் அழிந்து, பெற்றோர் நலிவுற்று ஏழ்மைநிலை அடைவார்கள் என்றும், நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தையால் குடும்பத்தில் இதுநாள்வரை இருந்த செல்வத்தைவிட பன்மடங்கு உயர்த்தி, செல்வந்தர்க்கெல்லாம் செல்வந்தராக வாழவைக்கும் தகுதியை உண்டாக்கும் என்றும் கூறுகின்றனர். அதாவது முதல் மூன்று பாதங்களில் பிறந்த குழந்தைகளால் தோஷம் உண்டாகும்.
கடைசிப் பாதத்தில் பிறந்த குழந்தையால் வறுமையகன்று குடும்பம் செல்வச் செழிப்பாக வளரும் என்று கூறுகின்றனர்.
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளின் பலன்கள், மூல நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளின் பலன்களுக்கு நேரெதிராக இருக்கிறது. எப்படியெனில், ஆயில்ய நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்த குழந்தையால் பெற்றோருடைய குடும்பத்தில் செல்வச் செழிப்பு உண்டாகும். இரண்டாவது பாதத்தில் பிறந்த குழந்தையால் குடும்பத்திலுள்ள சொத்துகள், நிலங்கள், வாகனங்கள் அனைத்தும் நாசமாகும். மூன்றாம் பாதத்தில் பிறந்த குழந்தையால் தாயாருக்கு ஆபத்து; நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தைகளால் தகப்பனாருக்கு ஆபத்து என்றும் கூறுகின்றனர்.
சவுனக மகரிஷி, பெண் குழந்தை மூல நட்சத்திரத்தில் பிறந்தால், முதல் பாதத்தில் பிறந்த குழந்தையால் குடும்பத்திலுள்ள பசு, குதிரைகள் போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு ஆகாது; இரண்டாவது பாதத்தில் பிறந்திருந்தால் அந்த குடும்பத்திலுள்ள அனைத்து சந்தோஷங்களும், சுகங்களும் மறைந்துவிடும்; மூன்றாவது பாதத்தில் பிறந்தால் குழந்தையின் தகப்பனார் வழியில் பிறந்தவர்களுக்கு (தகப்பனார் உட்பட) தோஷத்தை உண்டாக்கி அழிக்கும்; நான்காவது பாதத்தில் பிறந்த குழந்தையால் தாயார் வழியிலுள்ள உறவுகளுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்து அழித்துவிடும் என்று கூறுகிறார்.
இவ்வாறு அபுக்த மூல நேரத்தில் பிறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும், மூல , ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு உள்ள தோஷத்தைப் பற்றிக் கூறுகின்றனர்.
இவர்களே மகம், அஸ்வினி போன்ற பிற கேது நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இதே பலன்கள் உண்டு என்றும் கூறுகின்றனர். அதுவல்லாது கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இத்தகைய தோஷங்களால் மேற்கூறிய பலன்கள் உண்டாகும் என்றும் கூறியுள்ளனர்.
மேலே குறிப்பிட்ட பலன்களுடன் அபுக்த மூல நேரத்தில் பிறந்தவர்களுக்கு செய்யக்கூடிய பரிகாரங்களையும் விரிவாகக் கூறியுள்ளனர்.
மேலும், ஜோதிடரும் முனிவருமான ஜெயர்னவர் மூல நட்சத்திரத்தை ஒரு விருட்சமாக (மரமாக) பாவித்து, அதனுடைய வேர்கள், மரத்தினுடைய நடுப்பாகம், நடுப்பாகத்தில் உச்சி, கிளைகள், இலைகள், பூக்கள், பழங்கள், நுனிப்பாகம் என்று எட்டு பாகங்களாகப் பிரித்து, மூல நட்சத்திரத்தின் 60 நாழிகைகளையும் எட்டு பாகங்களுக்குப் பகிர்ந்தளித்து, அந்தந்த நாழிகையில் பிறந்தவர்களுக்கு பலன்கள் இவ்வாறு இருக்கும் என்று பலனுரைக்கிறார். "முகூர்த்த சிந்தாமணி', "ஜாதகாபரணம்' போன்ற நூல்களிலும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள் கூறப்பட்டுள்ளன.
மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு "மூல புருஷக்காரா சக்ரா' கணிக்கப்பட்டு, அவர்கள் பிறந்த நட்சத்திர பாதம் எந்த உறுப்பில் அமைகிறதோ அதற்கேற்ற பலன்களைக் கூறுகிறது "முகூர்த்த சிந்தாமணி' என்ற நூல். இதேபோன்று, "ஜாதகாபரணம்' என்ற நூலில் தோஷத்தைக் கொடுக்கக்கூடிய உறுப்பில் ஒரு குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு பிற்காலத்தில் வாரிசு இல்லாமல் பரம்பரைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்றும் கூறுகிறது.
மேற்கண்டவாறு ஜோதிட உலகின் பழமையான நுல்கள் பல்வேறு பலன்களைக் கூறினாலும், அப்போதைய காலகட்டத்தில் குழந்தை இல்லாதவர்களை அவமதிக்கும் பழக்கம் வெகுவாக இருந்தது. குழந்தைகளை தத்தெடுத்துக் கொடுக்கும் பழக்க வழக்கங்கள் அபூர்வ நிகழ்வாகக் கருதப்பட்டன. மக்கள்தொகை குறைவாகவும், இக்காலத்தில் உள்ள தொலைத்தொடர்பு வசதிபோல் இல்லாமல் இருந்ததாலும், குறை அல்லது நிறைகளைப் பெரிதுபடுத்தும் நிலையில் இருந்தார்கள். இப்பொழுது உலகமே ஒரு சிறிய குடும்பம் என்று சுருங்கிவிட்டது. புத்திரபாக்கியம் சிறிது தாமதமானாலும் குழந்தைகளைத் தத்து எடுத்துக்கொண்டு, குழந்தையில்லை என்ற குறையை நிவர்த்தி செய்துகொள்ளும் வழிமுறை வந்துவிட்டது. வசதியுள்ளவர்கள் செயற்கைக் கரு உற்பத்திமூலம் குழந்தைப் பேறின்மையை நிவர்த்தி செய்துகொள்ளும் நிலை உருவாகிவிட்டது.
என்னுடைய நண்பர் மூல நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் பிறந்தவர். அனைத்து செல்வ வளங்கள் இருந்தும் குழந்தைப்பேறில்லை. "ஜாதகாபாரணம்' நூலில் சொல்லியதுபோல அவருடைய முழு பரம்பரைக்கு (உஹ்ய்ஹள்ற்ஹ்) முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த ஒரு பெண்ணுக்கு, அவர் திருமணத்திற்குப்பிறகு ஒரு வருடத்தில் அவருடைய மாமியார் இறந்துவிட்டார். இந்த கட்டுரையை எழுதும் ஆசிரியர் அஸ்வினி நட்சத்திரத்தில் 3-ஆம் பாதத்தில் பிறந்தவர். அவருடைய 5-ஆம் வயதில் சகோதரியையும், 14-ஆம் வயதில் தந்தையையும், 28-ஆம் வயதில் தாயையும் இழந்தார். 14 வயதில் தகப்பனாரையும் தகப்பனாருடைய சொத்துகளையும் இழந்து, அத்தகைய கெடுபலன்களை அஸ்வினி 3-ஆம் பாதம் கொடுத்ததென்றால் மிகையாகாது.
ஆகையால் அந்தக் காலத்தில் முனிவர்கள் கூறியது உண்மையே. இதைப்போன்ற பலன்கள் நடக்கத்தான் செய்கின்றன. பின்விளைவுகள் தீவிரமாக இருந்தாலும், அதற்குத் தகுந்த பரிகாரங்களை முனிவர்கள் அருளியபடி செய்துவர, கெடுபலன்களிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிவகுக்கும்.
அபுக்த நேரத்தில், ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி, அஸ்வினி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஆண், பெண்களுக்கான பரிகாரங்களை இனி காண்போம்.
நவரத்தினக் கற்கள், சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட நூறு வகையான மருத்துவ மூலிகைகள், வெவ்வேறு எட்டு இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மண் வகை ஆகியவற்றை நூறு துளைகளிட்ட பானையில் தண்ணீருடன் கலந்து, பாதிக்கப்பட்ட குழந்தையையும் பெற்றோர்களையும் அந்த நீரில் பிராமணரால் குளிப்பாட்டப்பட்டு, பிறகு அக்னியின் முன்பு உட்காரவைத்து பூஜை செய்துவர, அபுக்த நட்சத்திரத்தில் பிறந்த கெடுதியான பலன்கள் மறைந்துவிடும். இதுவே இந்த வகையில் பிறந்தவர்களுக்குரிய உன்னதமான பரிகாரம் என்று மாமுனிவர்கள் அருளிச் செய்திருக்கிறார்கள். யார் ஒருவர் இந்த பரிகாரங்களை சிரத்தையாக பிராயத்சித்தத்துடன் செய்கிறார்களோ அவர்களுக்கு மங்களகரமான பலன்கள் கிட்டுவது உறுதி என்றும் பகர்ந்திருக்கிறார்கள். இனி இந்தப் பரிகாரத்தை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மூன்று அக்னி குண்டங்கள், பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம், பஞ்சபல்லவா, கோரோசனை, குங்குமம், சங்கு, யானைத்தந்தம், 10 வகையான மூலிகைகள், நாணயங்கள், மண் வகை (எட்டு இடங்களில் எடுத்து வரப்பட்டவை), ஏழு வகையான நவதானியங்கள், யானையின் மதநீர் (சிறிதளவு), நெய், நவரத்தினக் கற்கள், நிருத்தி (நடராஜர்) என்று சொல்லக்கூடிய வடிவத்தில் (எட்டு வகையான ருத்ர வடிவத்தில் ஒன்று) தங்கத்தில் செய்த சிலை ஒன்று.
எட்டு வகை மண்:
யானையின் கால் பதிந்த மண், குதிரை சென்ற அல்லது குதிரை லாயத்திலுள்ள மண், தேர் செல்லும் பாதையில் உள்ள மண், எறும்புப் புற்று மண், ஆறுகள் சந்திக்கும் இடத்திலுள்ள மண், குளக்கரை மண், பசுக்கள் இருக்கும் இடத்திலுள்ள மண், அரசர்கள் அல்லது அமைச்சர்கள் வசிக்கும் வீட்டுவாசலில் உள்ள மண். மேற்கண்டவற்றை எடுக்கும்பொழுதும், கலக்கும்பொழுதும், மாந்தர்களைக் குளிப்பாட்டும்பொழுதும் ரிக் வேதத்திலுள்ள "யா பாலினை' மந்திரத்தைக் கூறல் நன்று.
பரிகாரம் செய்வதற்கு இரண்டு பேர் கொண்ட அந்தணர்கள் குழு தேவை.
அவர்களில் ஒருவராவது நால்வகை வேதத்திலுள்ள மந்திரங்களை நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும்.
விஷயம் தெரிந்த வேத விற்பன்னர்களை வைத்து முறைப்படி பரிகாரங்களை சிரத்தையோடு மேலே கூறியபடி செய்துவர அபுக்த மூல நேரத்தில் பிறந்தவர்களுக்கு நிச்சயம் கெடுபலன்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று நாரதமுனிவர் கூறக்கேட்டு மற்ற மகரிஷிகளும் ஜோதிட மாமேதைகளும் கூறுகின்றனர்.
எத்தகைய நட்சத்திரங்கள் கெடுபலன்களைக் கொடுக்கிறதோ, அத்தகைய நட்சத்திரங்களுக்கு எதிரிடைப் பலன்களைக் கொடுக்கும் நட்சத்திரங்களில் அமர்ந்த கிரகங்களின் ரத்தினக் கற்களை விரல்களில் அணிந்துவர நன்மையான பலன்களை அனுபவிக்கும் நிலையுண்டாகும்.
இத்தகைய பலன்களை கி.பி. 25-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சொல்லியிருக்கின்றனர்.
அந்தக் காலகட்டத்தில் உள்ள குடும்ப சூழலுக்கேற்றவாறு பலன்களின் தாக்கங்கள் குறுகிய வட்டத்திற்குள்ளே நடைபெறும். ஆனால் தற்காலத்தில் இருபது நூற்றாண்டுகளுக்குப் பிறகு, விஞ்ஞான வளர்ச்சியாலும் வான ஆராய்ச்சிகளின்மூலம் அடைந்த துல்லிய கணித வளர்ச்சிகளாலும் நாம், மேலே குறிப்பிட்ட பாதங்களையும் பலன்களையும் அப்படியே முழுமையாகப் பின்பற்றினால் அது தவறுதலாகிவிடும். பலன்களை நம் முன்னோர்கள் அக்காலத்தில் நடைமுறையில் பின்பற்றப்பட்ட சூழலுக்கேற்றவாறு கோடிட்டுக் காட்டியுள்ளனர். அவர்கள் கோடிட்ட இடத்திலிருந்து மேற்கொண்டு ஜாதகங்களை பகுத்து ஆராய்ந்து, தற்காலத்திற்கு ஏற்றவாறு பலன்களை எடுத்துரைக்க வேண்டும்.
உதாரணத்திற்கு ஆயில்யம், மூலம் போன்ற நட்சத்திரங்களை ஒரு குழுவாகப் பிரித்தால், அஸ்வினி முதல் ஆயில்யம் வரை ஒரு குழு என்று மூன்று வகைப்படும். இந்த குழுவிற்கு அஸ்வினி தலைப்பகுதியையும், ஆயில்யம் கடைசியாகவும் உள்ளது. அதாவது பரம்பரையை ஆரம்பிப்பது, அந்த பரம்பரைக்கே உண்டான பழமையான முறைகளிலிருந்து மாற்றியமைக்கும் முறையைத் தொடங்கும் நிலையாகும். அப்பொழுது முன்னோர்களுக்கு ஆபத்தை விளைவித்து, அவர்களுடைய சொத்துசுகங்களை விட்டுக்கொடுத்து, தானே ஒரு புதிய சகாப்தத்தை (ஊல்ர்ஸ்ரீட்) உண்டாக்கும் வல்லமையைக் கொடுக்கும் நிலையில் உள்ளன இந்த அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்கள். புதியன புகுதலும் பழையன கழிதலும் இயல்பு என்பதற்கிணங்க, புதிய அத்தியாயத்தைத் தொடங்குவார்கள்.
ஒரு இளைஞர் ஆயில்ய நட்சத்திரம் கடைசிப் பகுதியில் பிறந்தவர். (ஆயில்யம் மகத்தின் தொடர்ச்சி). வெளிநாடு சென்று, இங்கு அப்பா அம்மாவிடம் வந்து வாழ்வதற்கு மறுத்து, அங்கேயே தங்கி பச்சை அட்டை (ஏழ்ங்ங்ய் ஈஹழ்க்) பெற்றுவிட்டார். இங்கு வாழும் பழைய குடும்பத்தையும், கலாச்சாரத்தையும் அப்பாவின் சொத்துகளையும் துச்சமாக மதிக்கும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இத்தகைய பலன்கள் தகப்பனாருக்கும் தாயாருக்கும் ஒருவித தோஷத்தைக் கொடுத்துவிடுகின்றன. இதையே அந்த காலத்தில் முனிவர்கள் அத்தகைய நட்சத்திரங்களின் பலன்களை தாயாருக்கு ஆகாது; தந்தைக்கு ஆகாது என்று கூறினர். அத்தகைய அசுபப்பலன்கள் பலவேறு ரூபத்தில், பல்வேறு நிகழ்வுகளில் வாழ்க்கை முறைகளில் குடும்பத்தை பாதிக்கிறது என்றால் அது மிகையாகாது. இன்னும் சிலர் பெற்றோர்களைக் காப்பகத்தில்விட்டுத் தனிமைப்படுத்துவதும் இத்தகைய தோஷத்தின் பலன்களே ஆகும். இத்தகைய சூழ்நிலைகளில் பலன்களைக் கணிக்கும்பொழுது, பாதத்தை மட்டும் கணக்கில் கொள்ளாது, அவர்கள் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில், எந்த உபநட்சத்திரத்தில் உள்ளது என்பதையும், எத்தகைய பாவத் தொடர்புகளைப் பெற்றுள்ளது என்பதையும் நவீன ஜோதிடக் கணிதத்தில் துல்லியமாக அறிந்து பலன்களைக் கூறுவது தற்காலத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் கீதையில் கண்ணன் கூறியபடி மாற்றம் ஒன்றே நிலையானதாகும்.
செல்: 91767 71533