ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதாவது வீடு பாக்கிய ஸ்தானம் எனப்படும். அந்த வீட்டுக்குரிய கிரக குணத்தைக்கொண்டு பித்ருக்கள், தகப்பனார், குரு உபதேசம், தான- தருமங்கள், பால் பாக்கியம், பூமி, வீடு, யோகாப் யாசம் குறித்த விவரங்களை அறியலாம்.

ஜாதகத்தில் லக்னத்துக்கு ஒன்பதாவது வீட்டிற்குரிய கிரகம் லக்னத்தில் இருந்தால், பெரியவர்களிடமும், தந்தை, குரு, தெய்வம் ஆகியவர்களிடமும் பக்தி விசுவாசம் கொண்ட வர்களாக இருப்பார்கள். பிதுர் சொத்து கிடைக்கும். தான, தருமங்கள் செய்பவர்களாக வும், சாஸ்திர ஆராய்ச்சியில் பற்றுதல் உள்ள வர்களாகவும், தெய்வ வழிபாடுகளை போதிப் பவர்களாகவும், வீடு, பூமி, வாகனம், பணி யாட்கள் உள்ளவர்களாகவும், சமூகத்தில் பெரிய பதவிகளுடனும், புத்திர விருத்திகளுடனும் மகிழ்வுடன் வாழ்வார்கள்.

ss

ஒன்பதாவது வீட்டிற்குரிய கிரகம் 2-ல் இருந்தால், செல்வம், செல்வாக்கு, பிதுரார்ஜித சொத்துகளைப் பெற்றவர்களாகவும், இவரது குடும்பம் உயர்நிலையிலும் இருக்கும்.

Advertisment

ஒன்பதாவது வீட்டிற்குரிய கிரகம் 3-ல் இருந்தால், பிதுர்தோஷத்தைப் பெற்றவர்களாக வும், பிதுர்சொத்துகளை இழந்தவர்களாகவும், இளைய சகோதர- சகோதரிகளின் ஆதரவைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

ஒன்பதாவது வீட்டிற்குரிய கிரகம் 4-ல் இருந்தால், தகப்பனார், தாய்மாமன் ஆகியோரின் ஆதரவைப் பெற்றவர்களாக இருப்பார்கள். பூமி, வீடு, வாகனம், பணியாட்கள், உறவினர்களின் ஆதரவு முதலிய செல்வாக்குடன் இருப்பார்கள். ஒன்பதாவது வீட்டிற்குரிய கிரகம் 5-ல் இருந் தால், புத்திரர்களால் பிரபல யோகத்துடன் விளங்குவார்கள். முன்னோர் சொத்துகள் இருக்கும். அரசாங்கத்தில் பெரிய பதவிகளில் சிறந்து விளங்குவார்கள். பூமி, வீடு வாகனங் களுடனும், பணியாட்களுடனும் செல்வாக்கு டன் இருப்பார்கள். தெய்வீக வழிபாடுகள் நிறைந்து, குடும்பம் பிரகாசத்துடன் இருக்கும்.

ஒன்பதாவது வீட்டிற்குரிய கிரகம் 6-ல் இருந்தால், பிதுரார்ஜித சொத்துகளை கடன்களால் இழக்க நேரிடும். புத்திர தோஷம் ஏற்படும். வியாதி, பீடைகளுடன் இருப்பார்கள்.

Advertisment

ஒன்பதாவது வீட்டிற்குரிய கிரகம் 7-ல் இருந்தால், குடும்பத்திற்கு அடக்கமும் லக்ஷ்மீ கரமும் பொருந்திய மனைவி வருவாள். புத்திரர் களால் சௌகர்யங்கள் நிறைந்துவிளங்கும். தந்தையின் சொத்துகளால் பயன் பெறுவார்கள்.

ஒன்பதாவது வீட்டிற்கு கிரகம் 8-ல் இருந் தால், தகப்பனாருடைய சொத்துகளை மற்றவர்கள் அபகரித்துக் கொள்வார்கள். புத்திர தோஷம் ஏற்படும். தந்தையின் உடல்நிலை சரியிருக்காது. சிலசமயம் அங்கஹீனமும் ஏற்படலாம்.

ஒன்பதாவது வீட்டிற்குரிய கிரகம் 9-ல் ஆட்சியாக இருந்தால், தகப்பனார் தீர்க்காயுள் கொண்டவராக இருப்பார். குடும்பத்தில் தான- தருமங்களும், தெய்வீக வழிபாடுகளும் நிறைந்து விளங்கும். புத்திரர்களால் புகழும் லாபங்களும் உண்டாகும். தந்தையின் சொத்துகள் ஸ்திர மாகக் கிடைக்கும். சமூகத்தில் சிறப்புடன் திகழ் வார்கள். பணியாட்களும், உறவினர்களும், அறிவாளிகளும் ஆதரவுடன் இருப்பார்கள்.

ஒன்பதாவது வீட்டிற்குரிய கிரகம் 10-ல் இருந் தால், செல்வாக்குள்ள குடும்பமாகத் திகழும்.

அரசாங்கத்தில் உயர்பதவிகளில் இருப் பார்கள். தந்தையின் சொத்துகள் சிறந்த முறையில் விருத்தியாகும்.

பெரியவர்களிடம் மரியாதை யுடன் இருப்பார்கள்.

தெய்வீகவழிபாட்டிலும், தான, தருமங்களிலும் சிறந்து விளங்கு வார்கள். வீடு, நிலபுலன்கள், பணியாட்கள், உறவுகள், பெரிய மனிதர்களின் நட்பு முதலியன இருக்கும்.

ஒன்பதாவது வீட்டிற்குரிய கிரகம் 11-ல் இருந்தால், தகப்பனார் செல்வாக்குடன் இருந்தாலும், நாளடைவில் தாழ்மையை அடை வார். அவர் சொத்துகள் நிற்காது. ஆனால் குடும்பம் சகல சௌகர்யங்களுடன் விளங்கும். தெய்வீக வழிபாடுகள் நிறைந்திருக்கும்.

ஒன்பதாவது வீட்டிற்குரிய கிரகம் 12-ல் இருந் தால், தகப்பனாருடைய சொத்துகள் நிலைக் காது. வழக்குகளால் அனாவசியமாக இழக்க நேரிடும். இன்ப சுகங்களுக்காக தனவிரயம் ஏற்பட்டு, அதனால் சிற்றின்பங்களை அனுபவிப் பார்கள்.

பரிகாரம்

தந்தை- மகன் உறவு சிறந்து விளங்கிட, கீழுள்ள மந்திரத்தை 16 முறை சொல்லி வணங்கிவர வாழ்வில் உயரலாம்.

"ஓம் ஹ்ரீம் ஆதித்யாயச, சோமாய, மங்களாய,

புதாய, குரு, சுக்ர, சனிப்யச்ச ராகவே, கேதவே நமஹ.'

செல்: 94871 68174

_______________

லட்சுமி வராகருக்கு மகா கும்பாபிஷேகம்!

மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக. ஹிரண்யாட்சன் கடலுக்கு அடியில் மறைத்துவைத் திருந்த பூமியை மீட்டு நிலைநிறுத்தி அருளினார் வராகப் பெருமாள். அசுரனின் அட்டகாசம் முடிவுக்கு வந்ததால், ஈரேழுலகமும் நிம்மதி அடைந்தது.

வராக புராணத்தில் ஒரு உரையாடல் வருகிறது. மகாவிஷ்ணுவால் காப்பாற்றிக் கொண்டுவரப்பட்ட பூமாதேவி, விஷ்ணுவைப் பார்த்துக் கேட்கிறாள்: ""பிரபு! பிரளய நீரில் அமிழ்த்தப்பட்ட என்னைக் காத்தருளினீர். இதேபோல், உலகின் ஜீவன்கள் முக்தியடைய சுலபமான வழியொன்றை அருளுவீராக.'' இதற்கு பரமாத்மா, ""ஓ பூமாதேவியே! என் உடல்தான் இந்த உலகம். எனக்குப் பிறப்பு- இறப்பு கிடையாது. எவனொருவன் நல்ல மனநிலையிலும், நல்ல உடல்நிலையிலும் இருக்கிறபோது பக்திப்பூர்வமாக மலர்கள் தூவி என்னை வழிபட்டுச் சரணடைகிறானோ, அவன் அந்திமக் காலத்தில் தன் இறுதிமூச்சை விடும்போது அவனைப் பரமபதம் (மோட்சம்) அடையச் செய்வேன்!'' வாஸ்து தோஷங்கள் அகலவும், பூமி, மனை, வீடு போன்றவற்றில் ஏற்படும் தடைகள் விலகவும், ரியல் எஸ்டேட் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கவும், நவகிரகங்களில் முக்கிய கிரகமான ராகு கிரகத்தினாலும், ராகு தசை, ராகுபுக்தியினாலும் ஏற்படும் பல்வேறு தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறவும், திருமணம் கைகூடவும், ஐஸ்வர்யங்கள் பெருகவும் அனுக்கிரகம் செய்யக்கூடியவர் ஸ்ரீலக்ஷ்மி வராஹர்.

இத்தகைய சிறப்புகள் பொருந்திய லட்சுமி வராக ஸ்வாமிக்கு ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் தனி ஆலயம் அமைக்கப்பட்டு, வெகுசிறப்பாக வருகிற 14-6-2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிமுதல் 9.00 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இக்கோவிலின் கருவறையில் பகவான் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்க, அவருடைய மடியில் லட்சுமிதேவி வீற்றிருக்கிறார். இந்த கும்பாபிஷேகத்தில் அனைவரும் கலந்துகொண்டு அருள்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு:

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்,

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513.

வேலூர் மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274. அலைபேசி: 94433 30203.

Email : [email protected]