க்னத்துக்கு 5-ஆம் வீட்டுக்குடைய கிரகத் தைக்கொண்டு புத்திர பாக்கியம், பூர்வ புண்ணியப் பலன்கள், தூய்மையான எண்ணங் கள், புத்தி சாதுர்யம், வித்தை, கல்வித்திறமை, சத்சங்கம், மகான்களின் நட்பு, யோகாப் பியாசம், பதவி உயர்வு, அந்தஸ்து முதலான விஷயங்களைக் கூறலாம்.

Advertisment

5-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 1-ஆவது வீடாகிய லக்னத்தில் சுபமாய் இருந்தால், புத்திர விருத்தியைப் பெற்றவராகவும், அந்த புத்திரர்கள் நல்ல உயர்பதவியுடனும், அந்தஸ்து டனும், பக்தி விசுவாசத்துடனும் இருப் பார்கள். இத்தகைய ஜாதகர்கள் தெய்வீக வழிபாடுகளில் ஈடுபட்டு மகான்களின் ஆசிகளைப் பெறுவார்கள். அரசாங்கத்திலும் மக்களிடையேயும் நல்ல விருதுகளைப் பெற்று குறிப்பிடத்தக்கவராக விளங்குவார்கள். யோகாப்பியாசத்தில் பற்றுதல் இருக்கும். உடலுறுதி கொண்ட வர்கள்.

5-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 2-ல் சுபமாய் இருந்தால், புத்திரர்களால் தனம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்து விளங்கும். பக்தி, விசுவாசம், மரியாதையுடன் பிள்ளைகள் இருப்பார்கள். கல்வியில் தேர்ச்சி பெற்று புத்திக்கூர்மையுடன் விளங்குவார்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் நல்ல வருமானங்களும் செல்வாக்கும் ஏற்படும். புராண இதிகாசங்களையும், சாஸ்திர ஆராய்ச்சி களையும் செய்து, குடும்பம் கீர்த்தியுடனும் செல்வத்துடனும் விளங்கும்.

5-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 3-ல் இருந்தால் புத்திர தோஷம் கொண்டவர்களாக இருப் பார்கள். புராணங்கள், சாஸ்திரங்கள், தெய்வீக வழிபாடுகளில் பற்றுதல் உள்ளவராக இருப் பார்கள். மக்களால் நன்மையற்றவர்கள்.

Advertisment

b

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

5-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 4-ல் பலத்துடன் அமர்ந்திருந்தால், புத்திர விருத்தி களைப் பெற்றிருப்பார்கள். குடும்பத்தை கௌரவத்துடன் காப்பாற்றுபவர்களாகவும், வாகனங்களைப் பெற்றவர்களாகவும், நிலபுலன் கள், வீடு, மனைகளைப் பெற்றும், அரசாங் கத்தில் நற்பெயர், கீர்த்தி பெற்றவர்களாக வும் இருப்பார்கள். பெரிய மனிதர்கள், படித்த வர்களின் நட்பு பெற்று அந்தஸ்துடைய வர்களாக இருப்பார்கள்.

Advertisment

5-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 5-ல் தனது சொந்த வீட்டில் பலமாக இருந்தால், புத்திரர் உயர்பதவியில், கல்வி கேள்விகளில் நல்ல ஞானத்துடன் இருப்பார்கள். படித்த அறிவாளி களின் சமூகத்திலும், சுற்றத்திலும் வாழ்க்கையை நடத்துவார்கள். பெரியவர்களிடம் பக்தி விசுவாசம் கொண்டவர்கள். அரசாங்கத்தில் உயர்பதவியில் இருப்பார்கள். செல்வம், செல்வாக்கு, நிலபுலன்கள், வீடு முதலியவை நிறைந்து விளங்கும். வாகனங்கள் இருக்கும். அதிகாரப்பதவியில் இருப்பார்கள். ராஜயோகம் ஏற்படும். ஐந்தாவது வீட்டில் சுபகிரகச் சேர்க்கை யும், உச்ச சேர்க்கைகளும் பெற்றிருந்தால் மக்களிடையே ஒரு மாணிக்கமாக, ராஜதந்திரி யாக நன்மதிப்புடன் விளங்குவார்கள்.

5-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 6-ல் இருந்தால், புத்திர தோஷமுடையவராக இருப்பார்கள். பிள்ளைகள் இல்லாத நிலையும் ஏற்படும்.

அப்படி இருந்தாலும் அவர்கள் விரோதமான நிலையில் இருப்பார்கள். பிள்ளைகளால் நன்மை களையோ லாபங்களையோ அடையமுடியாத சஞ்சலம் இருக்கும். இவர்களுக்கு ஞாபக சக்தி இருக்காது. புத்திக்குறைவும், பெரியவர்களிடம் விரோதங்களும் இருந்துவரும். வழக்குகள் அடிக்கடி தோன்றி மறையும். உடல்வலிமை இருக்காது. சுப பலமானால் சாந்திப் பரிகாரத்தால் நோய் நிவாரணம் கிட்டும்.

5-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 7-ல் இருந்தால், புத்திர தோஷத்தை உடையவராகவும், மனைவி, மனைவியின் குடும்பத்தினரால் மனஅமைதி இல்லாதவராகவும் இருப்பார்கள். அதேசமயம் தாராள மனப்பான்மையுடைவர்களாகவும், சுற்றத்தார், நண்பர்களால் நற்பெயருடனும் விளங்குவார்கள்.

5-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 8-ல் இருந்தால் புத்திர தோஷம் உண்டு. சிரமமாக குடும்பத்தை நடத்துவார்கள். மக்கள் இருப்பின் வறுமைக்குள்ளாவார்கள்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

5-ஆவது வீட்டுக்குரியவர் 9-ல் சுப பலமாய் இருந்தால், புத்திரர்கள் விருத்தியும், புத்திரர் களால் மகிழ்ச்சியும், சுக சௌகர்யங்களும் ஏற்படும். கல்வியில் திறமையுடனும் பிரகா சத்துடனும் விளங்குவார்கள். முன்னோர்வழி சொத்துகள் கிடைக்கும். பெரியவர்களிடம் பக்தி, விசுவாசத்துடன் இருப்பார்கள். அதிகாரப் பதவியில் அந்தஸ்துடன் செல்வம் நிறைந்து விளங்குவார்கள். சாஸ்திரங்களில் தேர்ச்சியும், தெய்வீக வழிபாடுகளில் பற்றுதலும் இருக்கும். சத்தியம், தர்மம், நீதியைக் கடைப்பிடித்து போக பாக்கியங்களுடன் விளங்குவார்கள்.

5-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 10-ல் இருந்தால், சந்தான விருத்தி ஏற்படும். அரசாங் கத்தில் உயர்பதவியில் இருப்பார்கள். தெய்வீக வழிபாடுகளைப் பரப்புவதில் ஆர்வம் பெற்றவர் களாக இருப்பார்கள். சுகசௌகர்யங்களுடனும், சந்தோஷத்துடனும் இவர்களது வாழ்க்கை அமையும். சுப பலமானால்தான் மேற்சொன்ன பலன் கிட்டும்.

5-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 11-ல் அமர்ந் திருந்தால், பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்.

குடும்பம் அமைதியையும் ஆனந்தத்தையும் பெற்று விளங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும், நட்பும் இருக்கும். அரசாங்கத்தில் உயர் பதவிகளும் கௌரவங்களும் கூடியவர்களாக இருப்பார்கள்.

5-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 12-ல் அமர்ந் திருந்தால், மனைவிக்கு அடிக்கடி கர்ப்பச் சிதைவுகளும், புத்திர தோஷமும் ஏற்படும். ஆரோக்கியம் கெடும். தன விரயங்களும், நஷ்டங்களும், கவலையும் ஏற்படும். உறவுகளும், நண்பர்களும் ஒற்றுமையுடன் இருக்கமாட் டார்கள். அமைதியில்லாமல் காலத்தைக் கடத்துவார்கள்.

ஐந்தாமிடத்து அதிபதி நல்ல பலன்களைத் தர கீழுள்ள எளிய பரிகாரத்தைச் செய்து கொள்ள வேண்டும்.

பரிகாரம்-1

நல்ல புத்திர சந்தானத்தை அடைய கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூர் சென்று மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். காலை 7.00 மணிமுதல் 9.00 மணிவரை மட்டும் பரிகாரம் செய்வார்கள். பரிகாரக் கட்ணம் உத்தேசமாக ரூ.900/- இந்தப் பரிகாரத்தை ஒருமுறை செய்து கொண்டால் போதும். (பரிகாரப் பொருட்கள் அனைத்தும் ஆலயத்தில் தருவார்கள்.)

பரிகாரம்-2

கல்வியில் திறமை ஏற்படவும், மற்ற காரணங்களுக்காகவும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளையும், ஹயக்ரீவரையும் வணங்கிவர வேண்டியது கிட்டும்.

செல்: 94871 68174