க்னத்துக்கு 2-ஆம் வீடு ஜாதகரின் வாக்குவண்மை, கல்வி, தனம், குடும்பம், சுக சௌகர்யங்களைப் பற்றிக் கூறும் இடம்.

Advertisment

2-ஆம் வீட்டுக்குரிய கிரகம் லக்னத்திலேயே இருந்தாலும், லக்னாதிபதி 2-ல் இருந் தாலும் வாக்கு வண்மையுடையவராகவும், அறிவாளியாகவும், பட்டம் பெற்று உயர் பதவியில் இருப்பவராகவும், குடும்ப விருத்தி அடைபவராகவும், பொன் முதலிய செல்வங்களுடனும், அங்க லட்சணங் களுடனும், குடும்பத்தை நன்றாக போஷிப் பவராகவும், மற்றவர்களால் புகழப் பெறு பவராகவும், சுக சௌகர்யங்களுடனும், நீண்ட ஆயுளுடன்- கண் பார்வையுடன் இருப்பார்.

இரண்டாமதிபதி லக்னத்துக்கு 2-ஆம் வீட்டில் ஆட்சியாக அமர்ந்திருந்தால் வாக்கு சாதுர்யம் உள்ளவராகவும், சத்திய வாக்கு கொண்டவராகவும், கண்டிப்பாகப் பேசுபவராகவும், செல்வம், செல்வாக்கு பெற்றவராகவும், பெரிய குடும்பத்தைப் பராமரிப்பவராகவும் இருப்பர். பிறர் இவர்களுடைய வாக்குக்குக் கட்டுப்பட்ட வர்களாக இருப்பார்கள்.

லக்னத்துக்கு 2-க்குரிய கிரகம் 3-ஆம் வீட்டில் அசுப பலமாயிருந்தால், சகோதரர்கள் அரிஷ்டமும், சகோதர- சகோதரிகளின் ஆதரவைப் பெறாதவராகவும், அடிமையாயும், கல்விஞானம் இல்லாதவராகவும், கல்வி பயிலமுடியாத சூழ்நிலை உடையவராகவும், செல்வமற்றவ ராகவும் இருப்பார்.

Advertisment

லக்னத்துக்கு 2-ஆம் வீட்டுக்குடையவர் 4-ல் சுப பலமாக இருந்தால், தாய்வழி மாமன்களின் ஆதவைப் பெற்றவராகவும், வீடு, நிலபுலன்கள் உள்ளவராகவும், உறவினர், நண்பர்களின் ஆதரவைப் பெற்றவராகவும், வியாபாரத்தில் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்.

லக்னத்துக்கு 2-க்குரிய கிரகம் 5-ஆம் வீட்டிலிருந்து, 5-க்குடையவர் கெட, சந்தான தோஷத்தைப் பெற்றவராகவும், பிள்ளைகள் இருந்தாலும் அவர்களின் ஆதரவைப் பெறாதவ ராகவும், பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் கிட்டாதவராகவும், கூர்மையான புத்தி இல்லாதவராகவும், தர்மசிந்தனை குறைந்தவ ராகவும் இருப்பார். 5-க்குரிய கிரகம் வலிமை பெற்றிருந்தால் சந்தான லாபம், செல்வாக்கு, புத்திக்கூர்மை இவையனைத்தும் உண்டாம்.

லக்னத்துக்கு 2-க்குரிய கிரகம் 6-ஆம் வீட்டிலிருந்தால் வியாதிகளைப் பெற்றவராகவும், மாற்றிப் பேசும் குணமுடையவராகவும் இருப்பர்.

Advertisment

அவர்கள் பிள்ளைகளே எதிரிகளாக விளங்கு வார்கள். கடன்காரர்களின் தொல்லையுடன் பணச்செலவுகளுடனும் இருப்பார். 6-க்குரியவர் சுப பலமானால் வியாதியின்மை, எதிரிகளால் லாபம், கடன் நிவர்த்தி முதலான நல்ல பலன்கள் உண்டாகும்.

s

லக்னத்துக்கு 2-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 7-ஆம் வீட்டிலிருந்து அசுப பலமானால் மனைவியினால் கஷ்டங்களை அனுபவிப்பார். சந்தோஷம் குறைந்தவராகவும் இருப்பார். செல்வத்துடன் இருந்தாலும், பெண்கள் விஷயங்களில் செலவுகள் ஏற்படும். லக்னத்துக்கு 7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் சுப பலமானால் எல்லாம் நன்மையாக நடக்கும்.

லக்னத்துக்கு 2-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 8-ஆம் வீட்டிலிருந்து பாவ பலம் பெற்றால் வாக்குவண்மை இல்லாதவராகவும், பேச்சில் இனிமை இல்லாதவராகவும், ஊமைகள் போலவும், தான் போன போக்கில் போய்க் கொண்டிருப்பவராகவும், எவருடைய பேச்சையும் மதிக்காதவராகவும், விரயங்களைச் செய்பவராகவும் இருப்பார். 2-ஆம் வீட்டிற் குரிய கிரகம் சுப பலமாய் இருந்தால் மேற் சொன்னவை நன்மையாக அமையும்.

லக்னத்துக்கு 2-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 9-ஆவது வீட்டிலிருந்து, 9-க்குரியவர் வலுவாக இருந்தால் முன்னோர் வகை சொத்துகள் நிறைய இருக்கும். ஆனால் பிதுர்தோஷங்களி னால் விரயங்கள் ஏற்படும். வாழ்க்கையின் பிற்பாதியில் நல்ல நிலையில் இருப்பார்கள். பெரி யோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்றவ ராகவும், சொத்துகளை விருத்திசெய்யும் குணங்களுடனும் இருப்பார்கள்.

லக்னத்துக்கு 2-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 10-ஆம் வீட்டில் சுப பலமாக விளங்கினால் கல்வியில் திறமையுடன் விளங்குவார்கள். சாஸ்திர ஆராய்ச்சிகள், கல்வி சம்பந்தமான வாதங்களில் தேர்ச்சியுற்று விளங்குவார்கள். மற்றவர்களைவிட மேலான அந்தஸ்து உடையவ ராகவும், ஆசிரியர், அதிகாரி, ஆசாரியன் போன்றவர்களாகவும் விளங்குவர். சட்டம் பயின்றவர்களாகவும், நல்ல உடல், செல்வம், செல்வாக்கு ஆகிய பாக்கியங்களுடன் இருப்பார்கள். லக்னத்துக்கு 2-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 10-ஆவது வீட்டில் அசுப பலமாக இருந்தாலும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கமாட்டார்கள். நல்ல பாக்கியம் சேரும்.

லக்னத்துக்கு 2-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 11-ஆம் வீட்டில் சுப பலமாக இருந்தால், வாக்கு சாதுர்யம் உள்ளவர். விசாலமான புத்தியைப் பெற்றிருப்பார். கொடுக்கல்- வாங்கல் (Banking Business) போன்ற வியாபாரங்களைச் செய்து லாபங்களைப் பெறுபவராகவும், சுக சௌகர்யங்கள் நிறைந்தவரா கவும் இருப்பார். சகோதர- சகோ தரிகளின் ஆதரவு இருக்கும். வீடு மற்றும் சொத்துகளுடன், மனஅமைதியுடனும் மகிழ் வுடனும் குடும்பத்துடன்சு கமாகவாழ்வார்கள். லக்னத்துக்கு 2-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 11-ல் அசுப பலமாக அமைந்திருந்தாலும் பொருளாதாரத்தில் ஏற்றமுள்ளவராக இருப்பர்.

லக்னத்துக்கு 2-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 12-ஆம் வீடாகிய விரய ஸ்தானத்தில் அசுப பலம் பெற்றிருந்தால் மதிப்பில்லாதவராகவும், வீண் பேச்சு பேசுபவராகவும், ஊர் சுற்றும் குணம் கொண்டவராகவும், சுக சௌகர்யங்கள் பெறாதவராகவும், உணவு, சயன, சுகவாழ்வு இல்லாதவராகவும், எல்லாரும் இழிவாகப் பேசும்படியும் இருப்பார்கள். வரவுக்குமேல் செலவு செய்வார்கள். கடன் வாங்கி செலவு செய்யும் துணிவும் ஏற்படுத்தும். தன் மதிப்பை தானே கெடுத்துக் கொள்வார்கள். சிலர் வாழ்வின் பிற்பாதியில் உடலுறுப்பை இழப்பர். 2-க்குரிய கிரகம் 12-ல் சுப பலமாக இருக்க, நல்ல வழியில் செலவு செய்ய பணவரவு, சயனசுகம், வரவு- செலவு உடனுக்குடன் நேரிடுதல், பிற இடங்களில் வசித்தல் முதலியவை ஏற்படும்.

2-ஆம் வீட்டின் அதிபதியின் வாக்கு வண்மை, தனம், குடும்பம், கல்வி, சுக சௌகர் யங்களைப் பெற்றிட திருமணமானவர்கள் செய்துகொள்ள வேண்டிய பரிகாரம்:

பரிகாரம்-1

பொருளாதாரம் உயரவும், மற்றவர்களிடம் ஏமாறாமல் இருக்கவும் சனிக்கிழமையன்று வீட்டில் அவல் பாயசம் செய்து பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும். (பால், நெய் ஊற்றக்கூடாது).

பின்பு அன்று மாலையில் பெருமாள் கோவில் சென்று துளசி அர்ச்சனை செய்து வரவேண்டும்.

ஒருமுறை செய்தால் போதும்.

பரிகாரம்-2

பிள்ளைகளின் கல்வி உயர அருகிலுள்ள ஹயக்ரீவரை வணங்கிவர வேண்டும். அல்லது

"ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகா ஹ்ருதீம்

ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஷ்மஹே'

என்னும் சுலோகத்தை தினமும் மூன்றுமுறை சொல்லிவந்தால் கல்வி உயரும்.

செல்: 94871 68174