பத்தில் நின்ற கிரகம், அதனுடன் சேர்க்கைபெற்ற கிரகங்கள், பத்தாமதிபதியுடன் இணைந்த, பார்த்தகிரகங்களில், வலுத்த கிரகத்தைப் பொருத்து ஒருவரின் தொழில் அமையும். அதே போல் பத்தாமதிபதி நின்ற இடத்தைப் பொருத்துதான் அந்தத் தொழில் வெற்றிகரமாகச் செல்லுமா அல்லது போராட்டமாக இருக்குமா என்பதைத் தீர்மானிக்கமுடியும். பலகிரக சம்பந்தம் பெற்றால் ஜாதகர் ஒரு தொழில் மட்டும் செய்யமுடியாது. கூட்டுகிரகங்கள் பலவிதமான தொழில்களில் ஈடுபடுத்தும். தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்; தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் என்பர். ஆதலால் ஏதாவதொரு தொழிலில் கவனம் செலுத்தினால்தான் வெற்றிபெற்று நிம்மதியாய் வாழமுடியும்.
"எனக்கு எல்லாம் தெரியும்; என்னால் எல்லாம் முடியும்' என்னும் சொற்களே பலர் வாழ்க்கையை நாசம் செய்திருக்கிறது. அடுத்தவர் தூண்டிவிடுவதை நம்பி, "நான் மல்டி பெர்சனாலிட்டி' என்று கர்வமாகி, "தன்னம்பிக்கை, தைரியம், பாசிடிவ் வைபரேஷன் என்கிட்ட இருக்கு' என பேசிக்கொண்டு, இறுதியில் வசமாக சிக்கிக்கொண்டு கதறுபவர் பலர். நேரம் சரியில்லையென்றால் ஆணவம் தலைக்கேறிவிடும். நல்லவர்கள் விலகிச்சென்றுவிடுவர். கெட்டவர்கள் சூழ்ந்துவிடுவார்கள். நிதானம், பொறுமையுடன் செயல்படுதல் அவசியம்.
ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு முன்பு அந்தத் தொழிலில் தோற்றுப்போய் நிர்கதியாய் நிற்கும் வாழ்க்கை வெறுத்தவரி டம் கேட்டுப்பார்க்க வேண்டும். "என் தோல்விக்கான காரணமே நான்தான்' என்பார். தீதும் நன்றும் பிறர்தர வாரா. யாரையாவது நம்பி ஏமாந்துவிட்டோம் என்றால் அதற்கு முதல் காரணம் பிறரை நம்பியது. நாம் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து தோற்றுவிட்டு பிறரைக் குறைசொல்வதால் இழந்த எதுவும் திரும்பக் கிடைக்காது. "நண்
பத்தில் நின்ற கிரகம், அதனுடன் சேர்க்கைபெற்ற கிரகங்கள், பத்தாமதிபதியுடன் இணைந்த, பார்த்தகிரகங்களில், வலுத்த கிரகத்தைப் பொருத்து ஒருவரின் தொழில் அமையும். அதே போல் பத்தாமதிபதி நின்ற இடத்தைப் பொருத்துதான் அந்தத் தொழில் வெற்றிகரமாகச் செல்லுமா அல்லது போராட்டமாக இருக்குமா என்பதைத் தீர்மானிக்கமுடியும். பலகிரக சம்பந்தம் பெற்றால் ஜாதகர் ஒரு தொழில் மட்டும் செய்யமுடியாது. கூட்டுகிரகங்கள் பலவிதமான தொழில்களில் ஈடுபடுத்தும். தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்; தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் என்பர். ஆதலால் ஏதாவதொரு தொழிலில் கவனம் செலுத்தினால்தான் வெற்றிபெற்று நிம்மதியாய் வாழமுடியும்.
"எனக்கு எல்லாம் தெரியும்; என்னால் எல்லாம் முடியும்' என்னும் சொற்களே பலர் வாழ்க்கையை நாசம் செய்திருக்கிறது. அடுத்தவர் தூண்டிவிடுவதை நம்பி, "நான் மல்டி பெர்சனாலிட்டி' என்று கர்வமாகி, "தன்னம்பிக்கை, தைரியம், பாசிடிவ் வைபரேஷன் என்கிட்ட இருக்கு' என பேசிக்கொண்டு, இறுதியில் வசமாக சிக்கிக்கொண்டு கதறுபவர் பலர். நேரம் சரியில்லையென்றால் ஆணவம் தலைக்கேறிவிடும். நல்லவர்கள் விலகிச்சென்றுவிடுவர். கெட்டவர்கள் சூழ்ந்துவிடுவார்கள். நிதானம், பொறுமையுடன் செயல்படுதல் அவசியம்.
ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு முன்பு அந்தத் தொழிலில் தோற்றுப்போய் நிர்கதியாய் நிற்கும் வாழ்க்கை வெறுத்தவரி டம் கேட்டுப்பார்க்க வேண்டும். "என் தோல்விக்கான காரணமே நான்தான்' என்பார். தீதும் நன்றும் பிறர்தர வாரா. யாரையாவது நம்பி ஏமாந்துவிட்டோம் என்றால் அதற்கு முதல் காரணம் பிறரை நம்பியது. நாம் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து தோற்றுவிட்டு பிறரைக் குறைசொல்வதால் இழந்த எதுவும் திரும்பக் கிடைக்காது. "நண்பர் என நம்பிதான் கூட்டுத்தொழில் செய்தோம்.
என்னை ஏமாற்றி, அந்தத் தொழிலை அவரே வைத்துக்கொண்டு என்னை வெளியேற்றிவிட்டார்' என வருத்தப்படு வதால் எந்தப் பயனுமில்லை.
வாழ்க்கையில் யாரையும் நம்பக்கூடாது. ஆனால் எல்லாரையும் நம்புவதுபோல் நடித்தாகவேண்டும். எல்லாரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, எப்போதும் எதாவதொன்றை முன்பே தயாராக வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எதார்த்தமான மனிதர்கள் அகப்பட்டுக் கொண்டு தத்தளிக்கிறார்கள். இன்று திருட்டுதனம் செய்வது அறிவாளித்தனமாகக் கொண்டாடப்படுகிறது. "உன்னை அறிவாளின்னு நினைச்சேன். இப்படி ஏமாந்துட்டியே' என்று, சமூகம் ஏமாற்றுபவனை தப்பிக்க வைத்து விட்டு,ஏமாந்தவனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறது. தொழில் என வரும்போது அதிக கவனத்துடன் இருக்கவேண்டும்.
இன்று தொழில் செய்து பணத்தை சேமிப்பதைவிட, அதைப் பாதுகாப்பது தான் பெரிய போராட்டம். யாராக இருந்தாலும் தொழிலில் எச்சரிக்கையாக நடந்தால்தான் வெற்றிபெற முடியும்.தொழில் செய்யும் இடத்தில், உடனிருப்பவர்கள் எப்போது நம்மை காலி செய்யலாம் என கணக்குப் போட்டுக் காத்திப்பர். நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அன்பு, பாசம் எல்லாம் போய் கிடைத்ததைப் பிரித்துக் கொண்டு, "நீ யாரோ, நான் யாரோ' என்று, தான் வாழ பிறரைக் கெடுக்கும் மனிதர்கள் அதிகமாகிவிட்டனர்.
எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் அதற் கான முன் அனுபவம் பெற்று, அதற்குள் நுழைவதுதான் தொழில் முன்னேற்றத்தைத் தரும். பத்தாமிடத்திற்குத் தொடர்புடைய கிரகங்களால் உண்டான தொழில் எந்த அளவு பலன் கொடுக்குமென்பதை, பத்தாமதிபதி நின்ற இடத்தைத் தெரிந்து கொண்டால் அறியமுடியும். .
பத்தாமதிபதி நிற்குமிடம்
பத்தாமதிபதி கேந்திர, திரிகோணங்களில் நல்ல நிலையில் இருந்தால்தான் தொழிலில் வெற்றி கிடைக் கும். பொதுவாக பத்தாமதிபதி மூன்று, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் இருந் தால் தொழிலில் ஏதாவது தொல்லை இருந்து கொண்டே இருக்கும். பத்தாமதிபதிக்கு சுபகிரகப் பார்வை ஓரளவு நன்மையும், பாவகிரகப் பார்வை, சேர்க்கை, தொடர்பிருந் தால் தொழிலில் பின்னடைவும், நிலையற்ற தன்மையும் தரும். பத்தாமதிபதி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பலனையே தருவார்.
ஒன்று
பத்தாமதிபதி சுபபலம் பெற்று லக்னத் தில் இருந்தால் சொந்தம், பந்தம், சொத்து, சுகம் இயற்கையாகவே அமைந்துவிடும். சுய முயற்சி, திறமை, உழைப்பால் உன்னத நிலையைப் பெறுவர். பெரிய பதவி, புகழ் அடைந்தாலும், பழையதை மறக்காமல் கஷ்டப்படுபவர் களுக்கு இஷ்டப்பட்டு உதவிகள் செய்வர். அறக்கட்டளை நிறுவி கல்வி, மருத்துவம் மற்றும் ஏழை, எளிய முதியோருக்கு நன்மை பயக்கும் பல நலதிட்ட உதவிகள் செய்வர். செய்தொழிலில் பெருத்த லாபமடைவர். அதிகார பலமிக்க அரசாங்கப் பதவி, கௌரவம், நல்ல வருமானம் கிடைக்கும். தெய்வ வழிபாடு, கல்வி,ஞானம், தானதர்மம், புகழ், செல்வம், செல்வாக்கு பெறுவர். நல்ல நண்பர்கள், அறிவாளிகள் உடனிருப்பர். வெளிநாட்டு யோகம், ஆடை,ஆபரணங்கள், வாகனம், சுகபோக அமைப்பு பெற்று சுபிட்சமாக வாழ்வர். பத்தாமதிபதி பலம்குறைந்து லக்னத்தில் நின்றால் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறாமலும், திறமைக்கேற்ற புகழ் பெறாமலும், பிறருக்கு உதவும் எண்ணமிருந்தும் செயல்படுத்த முடியாமலும் வருந்துவர். பாவகிரக வலிமை பெற்றால் நல்ல சிந்தனையின்றி முன்னேற் றம் அடையாமல் வருந்திப் புலம்பியபடி திரிவர்.
இரண்டு
பத்தாமதிபதி இரண்டில் நின்றால் குடும்பத்திற்காக உழைப்பவர்கள். குடும்பத்தினரால் லாபமுண்டு. வாக்குபலிதம் மிக்கவர். வாக்கு கொடுத்தால் காப்பாற்றுவர். வாக்கு சொல்வதன்மூலம் உண்டாகும் தொழில் வழியில் சம்பாதிப்பர். பேசுவதன்மூலம்- அதாவது ஆசிரியர், பாடகர், ஜோதிடர், புரோகிதர், வக்கீல், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், அனைத்து வகையான புரோக்கர் தொழில், மக்களுக்கு விழிப்புணர்வு அல்லது உதவி மற்றும் உபதேசம் செய்யக்கூடியதொழில்களையே தரும். பிரபலமானவர்களுடன் நட்பு கிடைக்கும். இவருடைய ஆலோசனைகள் மதிக்கப்படும். நாகரீகமான பேச்சு கொண்டவர்கள். யாரிடம் எதை எப்படிப் பேசவேண்டும் என்பதைத் தெரிந்துவைத்திருப்பர். பக்குவமாகப் பேசி, முடியாத காரியத்தையும் முடித்துக் காட்டுவர். எதையும் தைரியமாக சந்திப்பர். பிறரைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் மிக்கவர். இயற்கையாகவே நல்ல சொத்து சுகம் பெற்றவர். அரசாங்கத்தில் நல்ல மதிப்பு, மரியாதை கிடைக்கும். தர்ம சிந்தனையாளர். கஞ்சனைக்கூட பேசி வள்ளலாக மாற்றிவிடுவர். செல்வம், செல்வாக்கு மிக்கவராக காலம் முழுதும் இருப்பர்.
மூன்று
பத்தாமதிபதி மூன்றில் இருந்தால் சகோதர தோஷம் ஏற்படும். சகோதரர்கள் தானும் முன்னேறாமல் ஜாதகரையும் முன்னேற விடமாட்டார்கள். அல்லது ஏமாற்றுவார்கள். சுயநலவாதிகளாய் இருந்து ஏதாவது தடை ஏற்படுத்துவார்கள்.
ஜாதகரால் சகோதரர்கள் லாபம் பெறுவர். "ஈகோ'வால் ஜாதகருடன் இருந்துகொண்டே கெடுப்பார்கள். இத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர்கள் சகோதரர்களைவிட்டு விலகியிருப்பதே வெற்றிதரும். சுபகிரக வலுப்பெற்றால் ஓரளவு தொல்லை குறையும். நன்றிகெட்ட மனிதர்களை நிறைய சந்திப்பர்.
தொழி-ல் ஏமாற்றமடைவர். பாசத்தால் ஏமாந்து பக்குவத்தால் முன்னேறிக் காட்டுவர். வாழ்க்கையில் ஏமாற்றம் அதிகம் ஏற்பட்டு எழுத்தாளராகக் கூடிய திறமை இருக்கும். மூன்றில் பத்தாமதிபதி இருந்தாலோ அல்லது புதனுக்கு பத்து, மூன்றாமிட சம்பந்தம் ஏற்பட்டாலோ புத்தகம் எழுதிப் புகழ்பெறுவர்.
மூன்றாமிடத்தில் பத்தாமதிபதி வக்ரம் பெற்றால் தொழில் லாபம் தருவார். சுயதொழில், கூட்டுத்தொழில் செய்யக் கூடாது. அடிமைத் தொழிலே ஜாதகருக்கு நன்மை தரும். கேட்கும்போதெல்லாம் வெவ்வேறு தொழில் செய்வதாகச் சொல்வார்கள். நிலையில்லாமல் அடிக்கடி தொழில் மாற்றம் செய்துகொண்டே இருப்பர். சுபகிரக வலுப்பெற்றவர்கள் திறமைக்கேற்ப தைரியமாக இருந்து தொழிலில் வெற்றிகாண்பர்.
நான்கு
பத்தாமதிபதி கேந்திர ஸ்தானமான நான்கில் இருந்தால் தொழில் சிறப்பாக இருக்கும். சுக ஸ்தானத்தில் இருப்பதால் நிலையான தொழில் அமைந்து அல்லது தொழிலால் லாபம் பெற்று வீடு, வாகனம், ஆடம்பர அலங்காரப் பொருட்கள் சம்பாதிப்பர். பொதுவாகவே நல்ல வருமானம் இருப்பவருக்கு மதிப்பு, மரியாதை மற்றும் அனைத்து சுகமும் கிடைத்து, சொந்தம் பந்தம், நண்பர்கள் என அனைவரும் அதிக மாக அன்புசெலுத்துவர். குரு சுபபலம் பெற்றால் பிறப்பிலிருந்தே பல சுகபோகத்தை அனுபவிப் பர். உயர்கல்வி யோகம் கிடைக்கும்.
நல்ல தொழில் இல்லாதவனை- அதாவது பணம் சம்பாதிக்காதவனை பெற்ற தாய், உடன்பிறந்த சகோதரி, கட்டிய தாரம், பெற்ற பிள்ளை என யாரும் மதிக்கமாட்டார்கள். நான்கில் பத்தாமதிபதி வலுப்பெற்றால் தாயால் யோகம்,வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட், நிலபுலனால் லாபம், கார், பஸ் மற்றும் வாகனத்தால் தொழில், தோட்டம், காடு, பள்ளி, கல்லூரி நிறுவுதல், உயர்கல்வியால் நன்மை என அனைத்து யோகமும் பெற்று வாழ்வர். சுபகிரக வலுக் குறைந்தால் அல்லது பாவகிரக வலு மற்றும் வக்ர, நீசநிலை பெற்றால் சுகங்கள் குறைந்து மேற்சொன்ன தொழிலில் அடிமைப்பணி செய்வர்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 96003 53748