Advertisment

நன்மை தரும் உபாசனா தெய்வங்கள்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/beneficial-upasana-deities-melmaruvathur-s-kalaivani

வாழ்வியல் நிகழ்வில் வடிவமைக்கப்பட்ட சூத்திரத்தில், சூட்சமங்களின் சாவி, நமது ஜோதிடவியலில் அவரவரின் ஜனன ஜாதகத்தில் புதைக்கப்பட்டுள்ளது. நமக்கு அளித்துள்ள ஜாதகத்தின் 12 பாவங்களும் 27 நட்சத்திரங்களின் நம் வாழ்வின் ஆதிமுதல் அந்தம் வரையிலான நிகழ்வுகள் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

Advertisment

god

முதல் பாவகம் தொட்டு பன்னிரண்டு பாவகங்கள்வரை யுமே நான், எனது குடும்பம், உடன் பிறப்பு, தாயார் சுகம், முதல் அவமானம் மற்றும் ஆயுள், வரையிலான தகவலும் திருமணம், குழந்தை பேரு, அவர்களின்மூலம் நாம் அனுபவிக்கும் நன்மை, தீமைகள், போன்றவற்றினை அடுக்கு அடுக்குகளாக, அடுக்கி வைக்கப் பட்ட பெட்டகமே, நமது ஒவ்வொரு வரின் ஜனன ஜாதகம் ஆகும்.

இதில் நண்பனின் நிலையினையும், அதேபோன்று நமக்கு உருவான எதிரியின் நிலையினையும், அமைப்புகளுடன் இணைத்து பார்த்தால் நிச்சயமாக அறிந்து விட

வாழ்வியல் நிகழ்வில் வடிவமைக்கப்பட்ட சூத்திரத்தில், சூட்சமங்களின் சாவி, நமது ஜோதிடவியலில் அவரவரின் ஜனன ஜாதகத்தில் புதைக்கப்பட்டுள்ளது. நமக்கு அளித்துள்ள ஜாதகத்தின் 12 பாவங்களும் 27 நட்சத்திரங்களின் நம் வாழ்வின் ஆதிமுதல் அந்தம் வரையிலான நிகழ்வுகள் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

Advertisment

god

முதல் பாவகம் தொட்டு பன்னிரண்டு பாவகங்கள்வரை யுமே நான், எனது குடும்பம், உடன் பிறப்பு, தாயார் சுகம், முதல் அவமானம் மற்றும் ஆயுள், வரையிலான தகவலும் திருமணம், குழந்தை பேரு, அவர்களின்மூலம் நாம் அனுபவிக்கும் நன்மை, தீமைகள், போன்றவற்றினை அடுக்கு அடுக்குகளாக, அடுக்கி வைக்கப் பட்ட பெட்டகமே, நமது ஒவ்வொரு வரின் ஜனன ஜாதகம் ஆகும்.

இதில் நண்பனின் நிலையினையும், அதேபோன்று நமக்கு உருவான எதிரியின் நிலையினையும், அமைப்புகளுடன் இணைத்து பார்த்தால் நிச்சயமாக அறிந்து விடமுடியும்.

Advertisment

மேலும் குலதெய்வம், இஷ்ட தெய்வம், எல்லை தெய்வம், உபாசனா தெய்வங்கள் என்று நம்மை வழி நடத்தும் ஆற்றல்களின் அமைப்பை யும், நமது ஜாதகத்திலேயே அறிந்து விடமுடியும்.

குலதெய்வம் என்பது நமக்கு நன்மை செய்வதற்காகவே கடமைப்பட்ட ஒரு ஆற்றல் ஆகும். எல்லை தெய்வங்கள் நம்மை காக்கும் ஆற்றலாகவும், இஷ்ட தெய்வங்கள் நமக்கு மனரீதியான பிரச்சினைகளை கையாளும் சூட்சுமத்தை அளிக்கும் ஆற்றலாகவும், அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உபாசனா தெய்வம் என்பது நம் அணுகு முறையையும், அதனுடனான தொடர்பையும், வைத்து நட்புரீதியாக நம்மை அணுகி அனைத்து பிரச்சினையும் தீர்க்கும் வல்லமை படைத்த சக்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உபவாசம் என்பது விரதமுறையாக நமக்கு நமது முன்னோர்களால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஏதாவது ஒரு தெய்வத்திற்கு உபவாசம் இருந்து அந்த ஆற்றலினை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முறைதான் உபாசனா முறையாகும். இப்படிப்பட்ட முறையில் எத்தனை சதவிகிதம் நமக்கு நன்மை அளிக்கும் என்பது தெரியாது! ஏனென்றால் ஒரு ஜாதகத்தில் சூரியன் எட்டில் அமர, அவர்கள் ஆதித்ய ஹிருதயம் படித்தோ, அனுஷ்டித்தோ, வந்தால் அது பெரும் நன்மையை அளிக்காது. அதேபோன்று சூழ்நிலை உருவாகாமல் இருக்க அவரவர்களின் ஜனன ஜாதகத்தை வைத்து அவர்களின் உபாசனா தெய்வத்தை எடுப்பது மிகவும் சிறந்த வழியாகும்.

மேலும் நமக்கு துன்பத்தை வழங்கும் அஷ்ட மாதிபதி, மாரகாதிபதி, பாதகாதிபதி, திசைகளாக இருந்தாலும், நம்மை தற்காத்துக்கொள்ளும் வழி இந்த உபாசனா தெய்வ வழிபாடு ஆகும். அதோடு மட்டுமல்லாமல் ஜனன ஜாதகத்தில் இருக்கும் சில விரும்பத்தகாத தோஷங்களையும், வலியினையும், வழங்கும் தசாபுக்தி நிகழ்வுகளையும், ஒரு கவசம்போல் இருந்து காக்கும் சக்தி இந்த உபாசனா தெய்வ வழிபாட்டின்மூலம் அமையும்.

எப்படி? இந்த உபாசனா தெய்வத்தை கண்டறிவது என்பதனை பின்வருமாறு காணலாம்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தின் அதிபதி ஏறி நின்ற நட்சத்திர நாதன் சுட்டிக்காட்டும் ஆற்றலே, நமக்குத் தகுந்த உபாசனா தெய்வமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

உதாரணமாக மிதுன லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் கும்பம், அதன் அதிபதி கர்மகாரகன் சனி, சனி மீனத்தில் ரேவதி நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால், உபாசனா கிரகமாக புதன் வரும். ஆகவே புதன் சுட்டிக்காட்டும் தெய்வத்தினை உபாசனை செய்யவேண்டும்.

உபாசனை செய்யும் முறை தினமும் காலை வேளையில் ஏதாவது ஒரு பிரசாதம் அதாவது கற்கண்டு, பேரிச்சம்பழம் அல்லது வெறும் பானகம், போன்றவற்றுடன் ஒரு நெய் தீபம் ஏற்றி உங்களின் கையில் கிடைத்த ஏதோ ஒரு மலரினை சாற்றி உங்களின் தேவையினை நட்புரீதியாக சமர்ப்பிக்க வேண்டும். உள்ளார்ந்த அன்புடன் இந்த நிலையில் ஐந்து நிமிடம் அமர உங்களின் வாழ்க்கை தேவைகளை உபாசனா தெய்வம் பெரும் கருணையுடன் உங்களின் கரம் சேர்க்கும். எந்த கிரகத்திற்கு எந்த தெய்வம் என்பதனை பின்வருமாறு காணலாம்.

உபாசனா கிரகமாக சூரியன் வந்தால் சிவனையும், சந்திரன் என்றால் அம்மன் மற்றும் முத்து மாரியம்மன், செவ்வாய் என்றால் முருகன் மற்றும் காத்தவராயன், புதனாக வந்தால் மீனாட்சியம்மன், காமாட்சியம்மன், பாலா திரிபுர சுந்தரி, குருவாக வந்தாள் ஜீவசமாதி வழிபாடு மற்றும் குருமார்கள், சுக்கிரன் என்றால் மகாலட்சுமி மற்றும் கன்னி தெய்வங்கள், சனியாக வரப்பெற்றால் காலபைரவர் மற்றும் எல்லை தெய்வங்கள் ராகுவாக வந்தால் காலபைரவர் மற்றும் துர்க்கா தேவி, கேது வாக அமையப்பெற்றால் கணபதி மற்றும் பிரத்தியங்கரா, உபா சனை தெய்வங்களாக ஏற்றுக் கொள்ளலாம்.

செல்: 80563 79988

bala241123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe