Advertisment

நன்மை தரும் காலப்பகை தசாபுக்தி! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/beneficial-time-warp-dasapukthi-melmaruvathur-s-kalaivani

ஜோதிடத்தில் ஜாதகரீதியான பலவகை பகுப்புகளும், சூழ்நிலைகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் தசை மற்றும் புக்தி ஆகியவற்றின் துணைகொண்டு தான் ஒருவருக்கு நிகழவிருக்கும் நற்பலனும், தீமையான பலன்களையும் அனுமாணிக்க முடியும்.

அந்தவகையில் சிறப்பான தசா புக்திகளைத் தழுவி பயணித்தாலும், சில இடர்பாடுகளை நாம் சந்திக்கிறோம்.

அதேபோல் திருமணம் என்று வரும்பொழுது 2, 5, 7 ஆகிய பாவகங்கள் இயங்கினால் திருமண காலம் என்பது நாம் அறிந்ததே. அப்படிப்பட்ட இயக்கத்தில் நிச்சயத்த திருமணங்களும், எல்லாவகை பொருத்தங்கள் இருந்தும், பிரிவை நோக்கி செல்வதற்கான காரணம் என்ன என்பதையும், இதன் அடிப்படைக் கரு என்னவாக இருக்குமென்று ஆராயும் சூழலில் பயணிக்கும்பொழுது, இதற்கு காலப்பகை தொடர்புகொள்வதை அறியமுடிகின்றது.

Advertisment

tt

பொதுவாக ஒரே தசையில் ஒரே புக்தி சுப கிரகமாக இருந்தாலும் பெரும்பாலும் சிறப்பை தருவதில்லை.

அதேபோல் காலப்பகை தசையும், அவ்வளவு எளிதில் அளிக்க வேண்டிய நன்மையாகவே இ

ஜோதிடத்தில் ஜாதகரீதியான பலவகை பகுப்புகளும், சூழ்நிலைகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் தசை மற்றும் புக்தி ஆகியவற்றின் துணைகொண்டு தான் ஒருவருக்கு நிகழவிருக்கும் நற்பலனும், தீமையான பலன்களையும் அனுமாணிக்க முடியும்.

அந்தவகையில் சிறப்பான தசா புக்திகளைத் தழுவி பயணித்தாலும், சில இடர்பாடுகளை நாம் சந்திக்கிறோம்.

அதேபோல் திருமணம் என்று வரும்பொழுது 2, 5, 7 ஆகிய பாவகங்கள் இயங்கினால் திருமண காலம் என்பது நாம் அறிந்ததே. அப்படிப்பட்ட இயக்கத்தில் நிச்சயத்த திருமணங்களும், எல்லாவகை பொருத்தங்கள் இருந்தும், பிரிவை நோக்கி செல்வதற்கான காரணம் என்ன என்பதையும், இதன் அடிப்படைக் கரு என்னவாக இருக்குமென்று ஆராயும் சூழலில் பயணிக்கும்பொழுது, இதற்கு காலப்பகை தொடர்புகொள்வதை அறியமுடிகின்றது.

Advertisment

tt

பொதுவாக ஒரே தசையில் ஒரே புக்தி சுப கிரகமாக இருந்தாலும் பெரும்பாலும் சிறப்பை தருவதில்லை.

அதேபோல் காலப்பகை தசையும், அவ்வளவு எளிதில் அளிக்க வேண்டிய நன்மையாகவே இருந்தாலும் வழிவிடுவதே இல்லை.

Advertisment

அது என்ன காலப்பகை தசாபுக்தி என்றால் இயல்பாகவே சில தசையில் சில புக்திகள் நடப்பில் இருக்கும்பொழுது பல பிரச்சினைகளைத் தருகின்றது.

இது ஒருசில வயதில் ஒருசில தசாபுக்திகள் காலப்பகையாக இயங்கும் சூழலை அளித்துவிடும்.

இந்தக் காலப்பகை தசையில் நன்மை அளிக்கவேண்டிய கிரகங்களும், இயல்பினை மாற்றி தீமையை அளிக்கின்றது.

பிறந்ததிலிருந்து 2 வயதுவரை சனி தசையும், மூன்று வயதுமுதல் 11 வயதுவரை செவ்வாய் தசையும், 12 வயதுமுதல் 18 வயதுவரை சூரியன் தசையும், 19 வயதுமுதல் 34 வயதுவரை சந்திர தசையும், 35 வயதுமுதல் 52 வயதுவரை சுக்கிரன் தசையும், 53 வயதுமுதல் 68 வயதுவரை கேது தசையும், 69 வயதுமுதல் 100 வயதுவரை புதன் தசையும் காலப்பகை தசையாக விளங்கும்.

இதில் சில புக்திகள் குறிப்பிடும்பொழுது பிரச்சினைகளின் தீவிரத்தை நமக்கு அளிக்கின்றது.

சனி தசையில் செவ்வாய் புக்தியும், செவ்வாய் தசையில் சனி புக்தியும், ராகு தசையில் புதன் புக்தியும், புதன் தசையில் ராகு புக்தியும், சூரியன் தசையில் சுக்கிரன் புக்தியும், சுக்கிரன் தசையில் சூரியன் புக்தியும், கேது தசையில் சனி புக்தியும், சந்திர தசையில் குரு புக்தியும், காலப்பகை தசை புக்திகளாக செயல்பட்டு பல இடர்பாடுகளை அளிக்கின்றது.

மூன்று வயதுமுதல் 11 வயதுவரையிலான ராகுவின் தசா காலங்களில், பெண் குழந்தை யாக ஜனித்தால் அது பூப்பெய்தும் காலகட்ட மாக அமைந்துவிடுகின்றது. இந்த காலகட்டம் இந்த குழந்தையின் கருப்பை சார்ந்த பிரச்சினை களையும், சமூகத்தில் ஒரு அவப்பெயரையும் உருவாக்கிவிடுகின்றது.

அதுவே, ஆண் குழந்தையாக இருந்தால் தேவையில்லாத சகவாசங்கள் தொற்றிக் கொள்கின்றது.

அதேபோல் 19 வயதுமுதல் 34 வயதுவரை யிலான சந்திர தசையில், குரு புக்தி வரும் வேளையில் திருமணம் நிச்சயிக்கும்பொழுது அந்த திருமணம் பெரும்பான்மையாக சிறப்புறுவதில்லை.

இந்த காலகட்டத்தில் ஒரு வருடம் ஐந்து மாதங்களை விடுத்து பின்பு திருமணம் நிச்சயம் வைக்கும்பொழுது இது ஒரு பெரும் பிரச்சினை களை வழங்குவது இல்லை என்பதை நிதர்சனத்தில் காணமுடிகின்றது.

இந்தக் காலப்பகை தசாபுக்தி காலங்களில் கோட்சாரரீதியான சந்திரனும், தசா மற்றும் புக்திநாதனும், சம சப்தம பார்வையான ஏழாம் பார்வையாக வரும்பொழுது பிரச்சினைகளை உருவாக்குகின்றது.

இதில் சூரியன் மற்றும் சுக்கிரன் மட்டும் சம சப்தம பார்வையில் அடங்காது. ஏனென் றால்? பால்வழி மண்டலத்தில் சூரியனுக்கு அடுத்தது புதனும் அதற்கு அடுத்து சுக்கிரனும் இருப்பதனால் இவர்கள் 180 டிகிரியை சந்திக்க முடியாது. இந்த இரண்டு கிரகங் களைத் தவிர்த்து சம சப்தம பார்வையைப் பகிர்ந்துகொள்ளும் கிரகங்களின் காலங் களில் சற்று நிதானமாகவும், பொறுமை யாகவும் முடிவெடுப்பது சிறந்தது.

அதேபோன்று சனி தசையில் செவ்வாய் புக்தி செல்லும்பொழுது சந்திரன் அவிட்ட நட்சத்திரத்திற்கு வருகின்ற காலமும், செவ்வாய் தசையில் சனி புக்தி நடப்பில் இருக்கும்பொழுது சந்திரன் அனுஷம் நட்சத்திரத்திற்கு வருகின்ற காலமும், ராகு தசையில் புதன் புக்தி நடப்பில் இருக்கும்பொழுது கோட்சார சந்திரன் திருவாதிரையில் பயணிக்கும் காலமும், சூரிய தசையில் சுக்கிரனுடைய புக்தியில் சந்திரன் பூர நட்சத்திரத்தில் பயணிக்கும் காலமும், சுக்கிர தசையில் சூரிய புக்தியில் கோட்சார சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பில் இருக்கும்பொழுதும், கேது தசையில் சனி புக்தியில் கேதுவின் அந்தரம் காலத்திலும், சந்திர தசையில் குரு புக்தியில் கோட்சார சந்திரன் புனர்பூச நட்சத்திரத்தில் செல்லும் காலமும் மிகமிகக் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டமாகும்.

இந்த காலகட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நிச்சயமாக நன்மையை தருவதே கிடையாது என்பதுதான் உண்மை.

ஒருசில காலப்பகை தசைகளில் நிகழ வேண்டிய செயல்களை சற்று தள்ளிப் போடு வதனால் ஒன்றும் பெரும் விரையங்கள் வந்து விடப்போவதில்லை என்பதை மனதில் வைத்துக்கொண்டு காலப் பகை தசா புக்தியை கையாளும்பொழுது பல நன்மைகளை நாம் அடையமுடியும் என்பது இதிலிருந்து திண்ணம் ஆகின்றது.

செல்: 80563 79988

bala030125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe