Advertisment

27 நட்சத்திரங்களுக்கும் நன்மை தரும் பலன்கள் + பரிகாரங்கள் ! கேது தரும் அதிர்ஷ்டம் -- - -

/idhalgal/balajothidam/beneficial-benefits-remedies-all-27-stars-luck-given-by-ketu-0

25. பூரட்டாதி

பூரட்டாதியின் 1, 2, 3-ஆம் பாதங்கள் கும்ப ராசியிலும், 4-ஆம் பாதம் மீன ராசியிலும் பரவியுள்ளது. இது குரு சார நட்சத்திரம். பூரட்டாதி நட்சத்திரத்தில் கேது நிலைகொண்டிருந்தால், அங்கு கேது+குரு எனும் அமைப்பு ஏற்படும்.

Advertisment

இஷ்ட தெய்வம்: இவர்களுக்கு சிவனை வணங்குவது மிகவும் பிடிக்கும் மற்றும் சித்தர்களைத் தேடித்தேடி வணங்குவர்.

குணம்: இவர்களுக்கு, "ஒரு நல்ல குரு கிடைக்கவேண்டும்; அவரது அபரிமித மான அனுக்கிரகம் கிடைக்கவேண்டும்' எனும் பேரவா, பேராசை மனதைத் துளைத்தெடுக்கும். ஆனால் "நமக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா' எனும் சந்தேகமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆச்சரியம் என்னவென்றால், இவர்களுக்கு குருவின் அருட்கடாட்சம் நிரம்பவே கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் அதனை உள்ளுணர்வாக, உள்வாங்கத் தெரியாமல் சிரமப்படுவர்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது நின்ற சாரநாதர் உச்சம் அல்லது சுபத்தன்மை பெற்றிருந்தால், ஆன்மிக ஈடுபாட்டாளர்களாக இருப்பர். சமயம், தத்துவம், தர்மம், தெய்வீக விஷயம் இவை சார்ந்த சொற்பொழி வாளர்களாக இருப்பர். மனோதத்துவ மருத்துவராக அமைவர். நீதிமன்ற சார்பு டையவர்கள். பொதுவெளி நிகழ்வு களை அச்சமின்றி விமர்சிப்பவர், கடலில் எண்ணெய் எடுக்கும் தொழிலில் உள்ளவர், மீன்பிடிப் படகு களின் சொந்தக்காரர், சட்டக்கல்லூரி விரிவுரையாளர், தெய்வீகப் பாடங் கள் அல்லது சமஸ்கிருதக் கல்லூரி யில் பேராசிரியர், ஐ.ஏ.எஸ் போன்ற கல்வியின் பயிற்சியாளர் என இவ்விணைவு ஜாதகரை கௌரவமான ஆசிரியராக்கிவிடும்.

Advertisment

கெடுபலன்கள்: கேது நின்ற சாரநாதர் கெட்டுப்போயிருந்தால், கெட்டபுத்தி மிகுந்திருக்கும். இவர் எதை ஆசைப்பட்டாலும் அது நடக் கவே நடக்காது. இதனால் மனம் முழுக்க ஒரு இறுக்கத்துடனும், வஞ்சகத் துடனும்

25. பூரட்டாதி

பூரட்டாதியின் 1, 2, 3-ஆம் பாதங்கள் கும்ப ராசியிலும், 4-ஆம் பாதம் மீன ராசியிலும் பரவியுள்ளது. இது குரு சார நட்சத்திரம். பூரட்டாதி நட்சத்திரத்தில் கேது நிலைகொண்டிருந்தால், அங்கு கேது+குரு எனும் அமைப்பு ஏற்படும்.

Advertisment

இஷ்ட தெய்வம்: இவர்களுக்கு சிவனை வணங்குவது மிகவும் பிடிக்கும் மற்றும் சித்தர்களைத் தேடித்தேடி வணங்குவர்.

குணம்: இவர்களுக்கு, "ஒரு நல்ல குரு கிடைக்கவேண்டும்; அவரது அபரிமித மான அனுக்கிரகம் கிடைக்கவேண்டும்' எனும் பேரவா, பேராசை மனதைத் துளைத்தெடுக்கும். ஆனால் "நமக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா' எனும் சந்தேகமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆச்சரியம் என்னவென்றால், இவர்களுக்கு குருவின் அருட்கடாட்சம் நிரம்பவே கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் அதனை உள்ளுணர்வாக, உள்வாங்கத் தெரியாமல் சிரமப்படுவர்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது நின்ற சாரநாதர் உச்சம் அல்லது சுபத்தன்மை பெற்றிருந்தால், ஆன்மிக ஈடுபாட்டாளர்களாக இருப்பர். சமயம், தத்துவம், தர்மம், தெய்வீக விஷயம் இவை சார்ந்த சொற்பொழி வாளர்களாக இருப்பர். மனோதத்துவ மருத்துவராக அமைவர். நீதிமன்ற சார்பு டையவர்கள். பொதுவெளி நிகழ்வு களை அச்சமின்றி விமர்சிப்பவர், கடலில் எண்ணெய் எடுக்கும் தொழிலில் உள்ளவர், மீன்பிடிப் படகு களின் சொந்தக்காரர், சட்டக்கல்லூரி விரிவுரையாளர், தெய்வீகப் பாடங் கள் அல்லது சமஸ்கிருதக் கல்லூரி யில் பேராசிரியர், ஐ.ஏ.எஸ் போன்ற கல்வியின் பயிற்சியாளர் என இவ்விணைவு ஜாதகரை கௌரவமான ஆசிரியராக்கிவிடும்.

Advertisment

கெடுபலன்கள்: கேது நின்ற சாரநாதர் கெட்டுப்போயிருந்தால், கெட்டபுத்தி மிகுந்திருக்கும். இவர் எதை ஆசைப்பட்டாலும் அது நடக் கவே நடக்காது. இதனால் மனம் முழுக்க ஒரு இறுக்கத்துடனும், வஞ்சகத் துடனும் நடமாடுவார். இவர் அடிப் படையில் கஞ்சத்தனமானவர். அதே சமயம் அடுத்தவர் காசில் மஞ்சள் குளிக்க விரும்புவார். இதுபோன்று இவரது வாழ்வுநிலை, இருப்பதால், இவர் "சாமியாவது ஒண்ணாவது, காசு இருந்தால்தான் சாமி. இல்லாத பயல்களுக்கு சாமியும் கிடையாது; பூதமும் கிடையாது' என தெய்வத்தைத் திட்டுவார். இவர் முழு நாஸ்திகனுக்கும் மேலே இருப்பார். கடவுள் இவரைக் கண்டால், எடு ஓட்டம் என ஓடியே போய்விடுவார்.

நாடி ஜோதிடம்: கேதுவை ஞானகாரகர் என்றும் குருவை ஜாதகர் எனவும் வர்ணிக்கும். ஒன்று இவர்கள் மிகமிக ஆன்மிகவாதியாக, அறிவு மிளிர்ந்தவராக இருப்பர். அல்லது அறிவற்றவராக, நாஸ்திகனாக இருப்பர்.

பரிகாரம்: புதுக்கோட்டை, பிரகாதாம் பாள் ஆலயத்தில், குருபகவானும், விநாயகரும் சேர்ந்து ஒரே மேடையில் அமர்ந்துள்ள இடத்தில், தாமரைத்தண்டுத் திரியில், தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வணங்கவும். நம்மாழ்வாரை வணங்கவேண்டும்.

26. உத்திரட்டாதி

இது முழுமையாக மீன ராசியில் உள்ளது.

இதன் சாரநாதர் சனி ஆவார். எனில் இந்த உத்திரட்டாதியில் கேது நிலைகொண்டிருப் பின், அங்கு கேது+சனி எனும் நிலை உருவாகும்.

இஷ்ட தெய்வம்: சற்று முரட்டுக் காவல் தெய்வங்களை வழிபடுவதில் ஈடுபாடிருக்கும். அனேகமாக குலதெய்வமாக அமையும்.

குணம்: இவர்களுக்கு எப்போதும் தங்களின் கௌரவத்தின் பேரில் பெரும் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். "உலகத்தில் தான் தான் உயர்ந்தவன்; மற்றவர்கள் எல்லாம் மிக மட்டம்தான்' எனும் எண்ணம் கொண்ட வர்கள். எனவே இந்த போலி கௌரவத்துக்கும் பங்கம் வந்துவிடுமோ என பயப்படுவர். "மரியாதை, கௌரவம் இம்மியளவு குறையினும், மானைப்போல் மரிப்பேன்' என பேசித் திரிவர். எனவே பெருமையே பெரிய சந்தேகமாகும்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது நின்ற சாரநாதர் சனி உச்சம் அல்லது சுபத்தன்மை கொண்டு நின்றால், இவர்களுக்கு திரவ சம்பந்த மான தொழில் மிக இயைந்து அமையும். கடலில் மீன்பிடிப் படகுகளை சொந்தமாக வைத்திருப்பர். கப்பல் உரிமையாளராக இருப்பர். சொகுசுக் கப்பலில் ஏஜென்சி எடுப்பவராக தொழில் செய்வர். கடலில் எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தில் பெரிய பதவியில் இருப்பர். துறைமுகத்தில் நல்ல பணி கிடைக்கும். ஏற்றுமதி- இறக்குமதி சம்பந்த வேலை செய்வர். கடல் ஆராய்ச்சி அலுவலகத்தில் பணிபுரிவர். மீன் பதப்படுத் தும் வேலை கூடிவரும். கப்பல் கட்டும் பணியில் ஈடுபடுவர். அதுபோல் படகு, கட்டுமரம் போன்ற வற்றைக் கட்டுவதிலும், பழுது செய்வதிலும், மீன் வலைகளை செப்பனிடுவதிலும் திறமை யானவர்களாக இருப்பர். கப்பல் பயண டிக்கெட் புக் செய்வார். மேலும் சற்றே துர்மணம் வீசும் மண்ணென்ணெய், பெட்ரோல், டீஸல் சம்பந்தம் கொண்டிருப்பார். மதுபானம் விற்கவும், குடிக்கவும் செய்வர். கடலின் சங்கு, பவளப்பாறை ஆராய்ச்சி, மீன் பெருக்கப் பாதுகாப்பு என இவற்றில் தன்னிச்சையாக ஈடுபாடு கொண்டிருப்பர்.

கெடுபலன்கள்: கேது நின்ற சாரநாதர் சனி நீசம் அல்லது அசுபத் தன்மை பெற்றால், ஜாதகர் எப்போதும் தண்ணீரில் வாசம் செய்வார். 24 மணி நேரத்தில், 20 மணி நேரம் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருப்பார். மீதி நான்கு மணி நேரத்தை சாராயம் வாங்கவும்.

சண்டையிடவும், தூங்கவும் பயன்படுத்திக் கொள்வார். இன்னும் சிலர், கடல் வழியாக, அனைத்து தடை செய்யப்பட்ட பொருட்களை யும் கடத்துவர். சிலசமயம் ஐந்தறிவு ஜீவன் களான நண்டு, பாம்பு போன்றவை இருக்கும்.

சிலசமயம் ஆறறிவு ஜீவன்களான வெளிநாட்டு அகதிகளையும், நிறைய பணம் வாங்கிக் கொண்டு நாடுவிட்டு நாடு கடத்துவர். ஏதோ ஒன்று- காவல்துறை கைது செய்யும் செயல் களைச் செய்துவிட்டு, ஜாலியாக வெளியே சுற்றுவர்.

நாடிஜோதிடம்: கேதுவை தடைகாரகன் என்றும், சனியை உத்தியோகக்காரகன் எனவும் குறிப்பிடுகிறது. இதனால் இவர்கள் உத்தியோகத்தில் அடிக்கடி தடையை சந்திப் பார்கள் எனலாம். அல்லது தடை செய்யப் பட்ட வேலைகளை தைரியமாகச் செய்வர் எனவும் கொள்ளலாம்.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி, கற்பக விநாயகரை வணங்கவும். உங்கள் ஊரிலுள்ள கணபதிக்கு, அபிஷேகத்திற்கும், விளக்கேற்றவும், பிரசாதம் தயாரிக்கவும் அதற்குரிய எண்ணெய் வாங்கிக்கொடுக்கவும். கருடாழ்வாரை வணங்கவும்.

27. ரேவதி

இது மீன ராசியில் உள்ளது. இதன் சார அதிபர் புதன் ஆவார். ரேவதி நட்சத்திரத்தில் கேது நின்றால் அங்கு கேது+புதன் எனும் இணைவு ஏற்படும்.

இஷ்ட தெய்வம்: இவர்கள் விஷ்ணுவின் அம்சமான நரசிம்மர், ஹயக்ரீவர், சக்கரத் தாழ்வார் எனும் தெய்வங்களை உள்ளன்போடு வணங்குவர்.

குணம்: இவருக்கு எப்போதும், "யாராவது போட்டுக் கொடுத்து வேலையைவிட்டு நீக்கிவிடுவார்களோ' எனும் சந்தேகம் தலைவிரித்தாடும். இதோடு, "திடீரென்று கை, கால் விளங்காமல் போய்விட்டால் என்ன செய்வது' எனும் பயம் இருந்துகொண்டே இருக்கும். நோய் பயம் பீடித்தவர். இளைய சகோதரர்மேல் சற்று சந்தேகம் இருக்கும்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது நின்ற சாரநாதர் புதன் உச்சம் அல்லது சுபத்தன்மை பெற்றிருப்பின், இவர்கள் கல்வி சம்பந்தமான விஷயங்களில் மேன்மை பெறுவர். அதிலும் குறிப்பிட்ட கல்வி சார்ந்த விஷயத்தில் மிக நுணுக்கமான அறிவைப் பெற்றிருப்பர். இவர்கள் வணிகக் கல்வி கற்றால், அதில் வரி கட்டுவது, வரி ஏய்ப்பது எனும் விஷயத்தில் கில்லாடியாக இருப்பர். பத்திரிகை சம்பந்தத்துறையில் ஆன்மிகம், ஜோதிட இதழ்களில் புகழ்பெறுவர். செய்தித்துறையில் இணைந்திருந்தால், மறைவான, மறைக்கப்பட்ட செய்திகளை வெளிக்கொணர்வதில் முதன்மை வகிப்பர். சினிமா, டி.வி.யில் நகைச்சுவையில் இவரை மீற ஆள் கிடையாது எனும் அளவில் புகழப்படுவர். பலமொழி கற்றுக்கொள்வர். பத்திரிகை நிருபர், ஏஜென்டாக இருப்பர். கடல்கடந்து வணிகம் செய்வர். இவர்கள் சதுரங்க (செஸ்) போட்டிகளில் தங்களது குறுக்கு மறுக்கான புத்திசாலித்தனத்தால் பல நாடுகள் சென்று பேரும் புகழும் பெறுவர். நுணுக்கமாக, தந்திரமாக அறிவுகொண்டு செயல்படும் விஷயங்களில் இவர்களே "தி டாப்' என வருவர்.

கெடுபலன்கள்: கேது நின்ற சாரநாதர் புதன் நீசம் அல்லது கெட்டுப் போனால், இந்த ஜாதகரின் மூளை கோக்குமாகக்காக சிந்திக்கும். அதுவும் "உள்நாட்டில் நம் திறமையைக் காண்பித்தால் என்ன மதிப்பிருக்கிறது? நம் திறமை வெளிநாட்டிலும் பரவவேண்டும்' என அடங்கா ஆர்வம் கொள்வர். எனவே ஒவ்வொரு நாட்டு போலீஸும் "இவரை எங்கே கண்டாலும் உடனே கைது செய்யவும்' என தாக்கல் செய்யும். இன்டர்போல் போலீஸ் தலையைப் பிய்த்துக்கொள்ளும். வெளிநாட்டில் மதிப்பான பொருள் காணாமல் போனால், அதற்கு இவர்தான் காரணமாக இருப்பார். அது விலையுயர்ந்த வைரம், மதிப்புமிக்க ஓவியம். அரிதான ஆபரணங்கள் என பிறர் எளிதில் திருடத் தயங்கும் பொருளை மட்டுமே இவர்கள் திருடுவர். அதில்தானே ஒரு பெருமை. இவர்கள் திருடுகிற விஷயமே ஒரு சுவாரசியமான கதை போலிருக்கும். இவர்கள் தன்னுடைய குயுக்தியான மூளையைக் கொண்டு தப்பித்துக்கொண்டே இருப்பர். இவர்களின் காதல் கண்டம்விட்டு கண்டம் தாவும்.

நாடிஜோதிடம்: கேது ஒரு அழுத்தமான, ஆழ்ந்த கிரகம். புதன் வியாபாரம் மற்றும் பேச்சுக்கலை பற்றிய கிரகம். எனவே இவர்கள் தனது பேச்சுகளால் எந்த வியாபாரத் தையும் திருட்டு வழியில் அமைதியாக முடித்து விடுவர்.

பரிகாரம்: விஷ்ணு துர்க்கையை வணங்க வும். விநாயகருக்கு அறுகம்புல் மற்றும் பச்சை வஸ்திரம் சாற்றி வழிபடவும். வாயிலார் நாயினாரை வணங்கவும்.

(முற்றும்)

செல்: 94449 61845

bala130924
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe