Advertisment

27 நட்சத்திரங்களுக்கும் நன்மை தரும் பலன்கள் + பரிகாரங்கள் ! கேது தரும் அதிர்ஷ்டம் - - !

/idhalgal/balajothidam/beneficial-benefits-remedies-all-27-stars-ketu-brings-luck

19. மூலம்

இது தனுசு ராசியில் நிறைந் துள்ளது. இதன் சாரநாதர் கேது. மூல நட்சத்திரத்தில் கேது நின்றால் அங்கு கேது+கேது எனும் அமைப்பு உருவாகும். இச்சேர்க்கை தனுசு ராசி அதிபர் குருவின் வீட்டில் இருப்பதால், குருவின் ஆதிக்கமும் சேர்ந்திருக்கும்.

Advertisment

இஷ்ட தெய்வம்: இவர்கள் தன்னிச்சையாக, விநாயகரை வணங்குவர். சிலர் சில சித்தர்களின் மீது அடங்கா ஆர்வம் கொண்டி ருப்பர். வேறு சிலருக்கு சிவபக்தி மிகுந்திருக்கும்.

குணம்: இவர்களுக்கு எப்போதும் ஆச்சார அனுஷ்டானங்களை சரியாகப் பின்பற்றுகிறோமா எனும் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். மேலும் முழுமையான சுத்தபத்தமாக இருக் கிறோமா என்றும் யோசனை செய்து கொண்டேயிருப்பர். இவர்கள் வணங்கும் தெய்வத்தைவிட, அதன் வழிபாட்டு முறைகளைக்கண்டு பெரிதும் அச்சப்படுவர் என்றே கூறலாம்.

ss

Advertisment

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது நின்ற சாரநாதர் கேது சுபத்தன்மை பெற்றிருந்தால், இவர்கள் தன்னிச்சையாக, இறை வழிபாட்டு விஷயங்களில் மிக ஈடுபாடு கொள்வர். இந்த அரிய ஈடுபாடு இறை சம்பந்த விஷயமே தொழிலாக மாற்றும். இவர்களில் அனேகம் ஜாதகர் அர்ச்சகர்கள், பட்டர்கள், ஆச்சாரியார்கள், பூசாரிகள் என இறைவழிபாடு சம்பந்த தொழிலைக் கொண்டிருப்பர். அல்லது கல்லூரி, பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவுக்கூர்மை தரும் ஆசிரியர், பேராசிரியர்களாக இருப்பர். பொதுமக்களின் முன்னேற்றத்துக்காகப் போராடும் சீர்திருத்தவாதியாக இருப்பர். மூலிகை சம்பந்த மருத்துவ நிபுரணராக மிளிர்வர். அறநிலையத் துறையில் அருமையான பதவியில் அமர்வர். பழங்காலப் பயிர்களின் விதைகளைப் பாதுகாப்பவர்களாக இருப்பர். நல்ல ஜோதிடராக அமைவர். மடாதிபதியாகும் வாய்ப்பும்

19. மூலம்

இது தனுசு ராசியில் நிறைந் துள்ளது. இதன் சாரநாதர் கேது. மூல நட்சத்திரத்தில் கேது நின்றால் அங்கு கேது+கேது எனும் அமைப்பு உருவாகும். இச்சேர்க்கை தனுசு ராசி அதிபர் குருவின் வீட்டில் இருப்பதால், குருவின் ஆதிக்கமும் சேர்ந்திருக்கும்.

Advertisment

இஷ்ட தெய்வம்: இவர்கள் தன்னிச்சையாக, விநாயகரை வணங்குவர். சிலர் சில சித்தர்களின் மீது அடங்கா ஆர்வம் கொண்டி ருப்பர். வேறு சிலருக்கு சிவபக்தி மிகுந்திருக்கும்.

குணம்: இவர்களுக்கு எப்போதும் ஆச்சார அனுஷ்டானங்களை சரியாகப் பின்பற்றுகிறோமா எனும் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். மேலும் முழுமையான சுத்தபத்தமாக இருக் கிறோமா என்றும் யோசனை செய்து கொண்டேயிருப்பர். இவர்கள் வணங்கும் தெய்வத்தைவிட, அதன் வழிபாட்டு முறைகளைக்கண்டு பெரிதும் அச்சப்படுவர் என்றே கூறலாம்.

ss

Advertisment

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது நின்ற சாரநாதர் கேது சுபத்தன்மை பெற்றிருந்தால், இவர்கள் தன்னிச்சையாக, இறை வழிபாட்டு விஷயங்களில் மிக ஈடுபாடு கொள்வர். இந்த அரிய ஈடுபாடு இறை சம்பந்த விஷயமே தொழிலாக மாற்றும். இவர்களில் அனேகம் ஜாதகர் அர்ச்சகர்கள், பட்டர்கள், ஆச்சாரியார்கள், பூசாரிகள் என இறைவழிபாடு சம்பந்த தொழிலைக் கொண்டிருப்பர். அல்லது கல்லூரி, பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவுக்கூர்மை தரும் ஆசிரியர், பேராசிரியர்களாக இருப்பர். பொதுமக்களின் முன்னேற்றத்துக்காகப் போராடும் சீர்திருத்தவாதியாக இருப்பர். மூலிகை சம்பந்த மருத்துவ நிபுரணராக மிளிர்வர். அறநிலையத் துறையில் அருமையான பதவியில் அமர்வர். பழங்காலப் பயிர்களின் விதைகளைப் பாதுகாப்பவர்களாக இருப்பர். நல்ல ஜோதிடராக அமைவர். மடாதிபதியாகும் வாய்ப்பும் கூடும். சிலர் துறவறம் மேற்கொண்டு மானிட இனத்துக்கு மகத்தான நன்மை செய்வர்.

கெடுபலன்கள்: மூல நட்சத்திரத்தில் கேது நின்று, அவர் அசுப கிரக சம்பந்தம் பெற்றால், ஜாதகர் கடவுளை நிந்திப்பார். "உலகில் கடவுள் என்ற ஒருவர் கிடையவே கிடையாது' என வாதிடுவார். அலைந்து திரிந்து நாத்திகத்தைப் பரப்புவார். ஒழுக்கக் கேடு நிறைந்தவர். போதை போன்ற கெட்ட பழக்கம் இருக்கும். யாராவது இவரின் கண்ணெதிரே செழிப்பாக, நன்றாக இருந்தால் பொறாமையில் பொசுங்குவார். அவர்களின் வாழ்வை நாசமாக்கும் வழிகளைத் தேடி, அவர்களை அழ அழச் செய்வார். மிகச் சிலர், ஒன்றுமில்லாமல், பிச்சைக்காரன்போல் ஆகிவிடுவர். கேது, சந்நியாசியைக் குறிப்பதால் அழுக்குத் தோற்றத்துடன் திரிவர்.

நாடி ஜோதிடம்: நாடி ஜோதிடம் குருவை ஜாதகர் எனக் குறிப்பிடும். கேதுவை சந்நியாசி என்று கூறும்.

எனவே இவ்வமைப்பு சுபமாக இருப்பின், ஜாதகர் உயரிய மந்திரம், யாகம், ஹோமம் நடத்தும் குரு அளவில் வாழ்வார்.

அசுபத் தன்மை பெறின், பிச்சைக்காரன், பைத்தியக்காரன்போல் இருக்க நேரிடும்.

பரிகாரம்: இவ்வமைப்பு கொண்டவர்கள், அனைத்து சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், காஞ்சி மகாபெரியவர், சீரடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராமனுஜர் போன்றவர்களை உள்ளன் போடு வணங்கிவேண்டும். தினமும் விநாயகர் வழிபாடு நல்லது. திருஞான சம்பந்தரை வணங்கவும்.

20. பூராடம்

இது தனுசு ராசியில் உள்ளது. இதன் சாரநாதர் சுக்கிரன், பூராட நட்சத்திரத்தில் கேது நின்றால், அங்கு கேது+சுக்கிரன் என்ற அமைப்புண்டாகும்.

இஷ்ட தெய்வம்: சிருங்கேரி சாரதாம்பாளை வழிபடுவது, மனதிற்கு மிக அணுக்கமாக உணர்வர்.

குணம்: இவர்களுக்கு எல்லா விஷயமும் பயம் தரும். மிகவும் கோழையாக இருப்பர். மனத் தெளிவின்மை இருக்கும். இதனால் தனக்குள் ஒடுங்கிவிடுவர். தனக்குள் தன்னை உள்ளிழுத்துக்கொள்வர். இவர்களின் மிகுதியான பயம், பெண்களை "லூசு' என்றும், ஆண்களை வேறு மாதிரியாகவும் அழைக்கச் செய்யும். சில ஆண்கள் மிகுந்த பெண்மைத்தனத்துடன் நடந்துகொள்வர்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது நின்ற சாரநாதர் உச்சம் அல்லது சுபத்தன்மை பெற்றால், இவர்கள் எந்த விஷயத்தை யும் பதறாமல், சிதறாமல் கையாள்வர். எனவே மிகப் பொறுமை தேவைப்படும் குழந்தை நல மருத்துவராக இருப்பர். கலைத்துறையில், இசைத்துறையில் மேன்மை பெறுவர். படம் வரைவது- அதிலும் குறிப்பாக, கண்ணாடித்துண்டுகள், சிறு கற்களைக்கொண்டு வரையும் தஞ்சாவூர் கலை நுணுக்கத்தில் முதன்மை பெறுவர். தெய்வப்படங்களைத் தத்ருபமாக வரைவதில் தேர்ச்சியுடையவர். கவின்கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிவர். ஆயுர் வேத மருத்துவத்தை சொல்லிக்கொடுப்பார்.

அழகான தோட்டம்- குறிப்பாக, பூஜைக் குத் தேவைப்படும் பூங்கா, தோட்டம் அமைப்பதில் தேர்ந்தவராக இருப்பர். விதைகள் ஆராய்ச்சிப் பண்ணையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பர். கோவிலில் நந்தவனம் அமைத்துப் பராமரிப்பர்.

கெடுபலன்கள்: கேது நின்ற சாரநாதர் சுக்கிரன் நீசம் மற்றும் அசுபச் சேர்க்கை பெற்றிருந்தால், இவருக்கு ஒரு குடும்பத்தோடு நிறுத்த மனம் வராது. ஆங்காங்கே குடும்பங்களை உருவாக்குவர். இருக்கிற மதத்தைவிட்டு, வேறு மதம் தழுவுவதில் மிக ஆர்வம் வரும். இவர்களின் சலனமான மனம், சற்று ஒழுக்கக்கேட்டைக் கொடுக்கும். காசு, வாக்கு விஷயங்களில் நேர்மைக் குறைவு ஏற்படும். பெரும் சுயநலவாதி. குடும்பத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். சில இக்கட்டான நோய் மற்றும் கடனுக்கு ஆட்படுவார். மனைவியின் அனுசரணை இல்லாது போகும்.

நாடிஜோதிடம்: சுக்கிரன் மனைவி யையும் கேது ஞானத்தையும் குறிப்பர். எனவே இவ்வித அமைப்புள்ளவர்களின் வாழ்க்கைத் துணை மிகுந்த பக்தியுணர்வோடு திகழ்வர்.

பரிகாரம்: இவர்கள் காமாட்சியம்மன், அபிராமியம்மனை வழிபடத் தகும். பருப்புகளும் இனிப்பும் கலந்து நைவேத்தியம் செய்து வழிபடலாம். சாதுக்கள் மடம், கோசாலைகளுக்கு நிறைய வெல்லம் வாங்கிக்கொடுங்கள். சாக்கிய நாயனாரை வழிபடவும்.

21. உத்திராடம்

இது தனுசு ராசியில் 1-ஆம் பாதமும், மகர ராசியில் 2, 3, 4-ஆம் பாதங்களையும் கொண்டிருக்கும். இதன் சாரநாதர் சூரியன். உத்திராட நட்சத்திரத்தில் கேது அமர்ந்தால், அங்கு கேது+சூரியன் எனும் இணைவு ஏற்படும்.

இஷ்ட தெய்வம்: இவர்கள் பெரும்பாலும் எல்லை சாமிகள், காவல் தெய்வம் எனும் குல சாமிகளை வணங்கவே பெரிதும் விரும்புவர்.

குணம்: இவர்களுக்குப் பெரும்பாலும் தங்கள் தந்தைமேல்தான் அதிகளவில் சந்தேகம் உண்டாகும். இருக்கிற சொத்தை, வேறு யாருக்காவது எழுதி வைத்துவிட்டால் என் செய்வது என புலம்பி மருகுவர். இந்த சந்தேகம் தந்தையுடன் இணக்கமில்லாமல் செய்துவிடும்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது நின்ற சாரநாதர் சூரியன் செம்மையாக, இருப்பின், இவ்வமைப்பு ஜாதகர்கள் அரசு மருத்துவராகவோ, தலைமை மருத்துவராகவோ இருப்பர். சிலர் வங்கிப் பணி, பேராசிரியர் வேலைகளில் முதன்மை பெறுவர். சிலர் அரசு சார்ந்த எண்ணெய் நிறுவனங்கள், தோல் தொழிற்சாலை, அரசு பாதுகாப்புத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கழிவு அகற்றும் துறை, நிலக்கரி சார்ந்த அரசுத்துறை, அரசு வானிலை மையம், அரசு சுகாதாரத்துறை, அரசு மணல் வாரியம், வனத்துறை என அரசு சார்ந்த சுகாதாரம், சுத்தம் போன்ற இனங்களில் ஈடுபடுவர். தெருக்களைத் தூய்மை செய்யும் பணியாளர்களை மேற்பார்வையிடும் அரசு சார்ந்த வேலை ஆகிவரும். சூரியன் வெளிச்சமான கிரகம். சனி இருட்டான அழுக்கான கிரகம். கேது பிரிக்கும் கிரகம். எனவே இவர்கள் தன்னிச்சையாக, அரசு சார்ந்த சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபடுவர். இதற்கு சூரியன் சுபப்பலன் பெற்றிருக்க வேண்டும்.

கெடுபலன்கள்: கேது நின்ற சாரநாதர் சூரியன் நீசமாகி, அசுபத் தன்மையுடன் இருப்பின், இவர்களுக்கு அரசு அச்சடித்த உருண்டை கிடைக்கும். ஆம்; இவர்கள் அனேகமாக சிறையில் இருக்கக் கூடும் அல்லது அடிக்கடி விபத்தில் சிக்கி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுவர். சட்டப்புறம்பான செயல்களைச் செய்து விட்டு, காவல்துறையில் சிக்கிக்கொள்வர். கண் பார்வையும் பிரச்சினை கொடுக்கும். இவர்களின் பொறுப்பற்றத் தனம் இவர்களுக்கு எந்தத் தொழிலையும் உருப்படச் செய்யாது. இவ்வமைப்பிருந்து, சாரநாதர் சூரியனும் கெட்டிருந்தால், வாழ்வு பொலிவற்று, வாழ்க்கை ஓட்டத்தில் காணாமல் போய்விடுவர்.

நாடிஜோதிடம்: சூரியனை தந்தையென்று கூறுகிறது. ஒன்று, தந்தை எப்போதும் நோய்தாக்கம் கொண்டவராக இருப்பார். இவ்வமைப்பு கொண்டவர்களுக்கு தந்தை நீண்ட ஆயுளுடன் இருப்பது பெரிய விஷயமாகும். எல்லாவற்றையும்விட, தந்தை நல்லபடியாக இருப்பின், ஜாதகர் தந்தையுடன் சண்டையிட்டுப் பிரிந்திருப்பர்.

பரிகாரம்: இவர் கண்டிப்பாக குலதெய்வ வழிபாட்டை விட்டுவிடாமல் பின்பற்றவேண்டும். முடிந்தபோது விளக்கு மற்றும் விளக்கேற்ற எண்ணெய் வாங்கிக்கொடுத்தல் நலம். ஏனாதி நாயனாரை வணங்க வேண்டும்.

(அடுத்த இதழில் திருவோணம், அவிட்டம், சதயம்....)

செல்: 94449 61845

bala300824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe