Advertisment

12 ராசிகளின் ஆதிமுதல் அந்தம்வரை... (கடகம்) மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/beginning-end-12-zodiac-signs-melmaruvathur-s-kalaivani

கடகம்

டக ராசி மற்றும் லக்னம், காலபுருஷனுக்கு நான்காமிடமாகி, தாயார் ஸ்தானமாக அமைகின்றது.

Advertisment

இது சந்திரனின் வசம் தன்னை ஒப்படைத்து மிளிர் கின்றது. பெண் ராசியாகவும், சர ராசியாகவும், மோட்ச வீடாகவும், உருவெடுத்து நிற்கின்றது.

ஒரு ஆதிபத்தியம்கொண்ட மனதின் முழு கட்டமைப் பையும் கையாளும் நுணுக்கத்துடன் விளங்குகின்றது.

இது 90 டிகிரிமுதல் 120 டிகிரிவரை தன்னை விஸ்தரித் துக் கொண்டுள்ளது. மேலும் நீர் தத்துவத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பரிமளித்து நின்று கொண்டிருக்கின்றது.

Advertisment

பொதுவாகவே இந்த கடக ராசி மற்றும் லக்னங்களில் பிறந்தவர்கள் மென்மையானவர்கள், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், தாய் அன்பு மிக்கவர்கள், எதிலும் அறிவைக்கொண்டு முடிவு எடுக்காமல், மனதைக்கொண்டு முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள். எல்லாரும் தன்னைப் போலவே அன்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும். அதோடு இவர்கள் சற்று பயத் தன்மையும், எளிதில் யாரையும் நம்பாத தன்மையும் இருப்பவர் களாக இருப்பார்கள். யாரையும் நம்பாத இவர்கள், இவர் களுக்கு நம்பிக்கை வரும்படி நடந்துகொண்டால் உயிரையும் கொடுப்பார்கள்.

கடக ராசி பெண்கள் தாயார்மீது அதீத பாசமும் பற்றும் உடை

கடகம்

டக ராசி மற்றும் லக்னம், காலபுருஷனுக்கு நான்காமிடமாகி, தாயார் ஸ்தானமாக அமைகின்றது.

Advertisment

இது சந்திரனின் வசம் தன்னை ஒப்படைத்து மிளிர் கின்றது. பெண் ராசியாகவும், சர ராசியாகவும், மோட்ச வீடாகவும், உருவெடுத்து நிற்கின்றது.

ஒரு ஆதிபத்தியம்கொண்ட மனதின் முழு கட்டமைப் பையும் கையாளும் நுணுக்கத்துடன் விளங்குகின்றது.

இது 90 டிகிரிமுதல் 120 டிகிரிவரை தன்னை விஸ்தரித் துக் கொண்டுள்ளது. மேலும் நீர் தத்துவத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பரிமளித்து நின்று கொண்டிருக்கின்றது.

Advertisment

பொதுவாகவே இந்த கடக ராசி மற்றும் லக்னங்களில் பிறந்தவர்கள் மென்மையானவர்கள், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், தாய் அன்பு மிக்கவர்கள், எதிலும் அறிவைக்கொண்டு முடிவு எடுக்காமல், மனதைக்கொண்டு முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள். எல்லாரும் தன்னைப் போலவே அன்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும். அதோடு இவர்கள் சற்று பயத் தன்மையும், எளிதில் யாரையும் நம்பாத தன்மையும் இருப்பவர் களாக இருப்பார்கள். யாரையும் நம்பாத இவர்கள், இவர் களுக்கு நம்பிக்கை வரும்படி நடந்துகொண்டால் உயிரையும் கொடுப்பார்கள்.

கடக ராசி பெண்கள் தாயார்மீது அதீத பாசமும் பற்றும் உடையவர்களாக இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகும்கூட. இயல்பிலேயே மனதிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் ராசியான கடகத்தில் புனர்பூசம் என்கின்ற குருவின் நட்சத்திரம், பூசம் என்கின்ற கருமக்காரகன் சனி நட்சத்திரமும், ஆயில்யம் என்கின்ற அதிநுட்பத்தன்மை வாய்ந்த புதனின் நட்சத்திரமும் அடங்கியுள்ளது.

cc

இவர்கள் கௌரவம், உழைப்பு, புக்திக்கூர்மை போன்ற தன்மையினை மனதின்மூலம் வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் இவர்களை வஞ்சிப்பது இவர்களின் குடும்ப உறவாக மட்டுமே இருக்கும்.

லக்ன அதிபதி சந்திரன் ஐந்தில் நீசமும் 11-ல் உச்சமும் அடைவார். இதனால் இவர்களுக்கு பூர்வீகம் சம்பந்தமாகவும், புத்திரம் சம்பந்தமாகவும், சில பிரச்சினைகள் இருக்கும். லக்ன அதிபதி பாதகமான 11-ல் உச்சமடைவதால் இவர்களே பாதகத்தை நோக்கி பயணிப்பவர்களாக இருப்பார்கள். மேலும் மூத்த சகோதரன், பெரியப்பா போன்ற உறவுகளுடன் சிறு கருத்து வேறுபாடும், மோதல்களும், இவர்களுக்கு இருக்கவே செய்யும்.

இரண்டாம் அதிபதி சூரியன் நான்கில் நீசமாகி பத்தில் உச்சம் அடையும். இது தாயார், வீடு, வாகனம், தன் சுகம் என்ற சூழ்நிலையை தன் வாழ்வின் கடமை யாகவும், கர்மமாகவும், எண்ணி பயணிக்கும் தன்மையை சுட்டிக் காட்டுகின்றது. தாயாரின் சுகத்திற்காக ஒரு குறிப்பிட்ட அளவிலான வருவாயை செலவிடும் சூழலும், தன் சுகத்தை குறைத்துக்கொண்டு தொழில் மற்றும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழலும் இவர்களுக்கு உருவாகும்.

மூன்று மற்றும் 12-ஆம் அதிபதி மூன்றில் உச்சம், ஒன்பதில் நீசம். இந்த சூழ்நிலையானது, இவர்களின் தந்தைவழியில் பத்திரம், பாண்டு, ஒப்பந்தம், சம்பந்த மான பிரச்சினைகள் இருக்கும். மேலும் இவர்களின் தந்தை காண்ட்ராக்டின்மூலம் சில இழப்புகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும். அது பண விரயமாக வும், பொருள் விரயமாகவும் இருக்கலாம். இவர் களுக்கு மூன்றாம் அதிபதி உச்சம் என்பதால் இவர் களுக்கு சிறுதூரப் பயணமும், இளைய சகோதரத்தின் மூலம் மற்றும் ஒப்பந்தங்களின்மூலம் சிறப்பை அடையும் சூழல் கடக ராசிக்காரர்களுக்கு இருக்கும்.

நான்காம் அதிபதி சுக்கிரன் மூன்றில் நீசமாகி, ஒன்பதில் உச்சமாகும். இந்நிலையானது மீண்டும் தாயாரின் உடல்நிலையும், தாய்- தந்தை ஒற்றுமை யையும், உணர்த்தி பிரதிபலிக்கின்றது.

ஐந்து மற்றும் பத்தாம் அதிபதி செவ்வாய் தன் வீட்டில் நீசமாகி ஏழில் உச்சமடைவது குலதெய்வ தோஷத்தை உணர்த்துகின்றது. மேலும் தன் பூர்வீகத் தின் வளர்ச்சிக்கு இவர்கள் தடையாக இருப்பதையும், தனது வம்சாவழியில் பின்பற்ற வேண்டிய முன்னோர் களின் பழக்க வழக்கங்களை இவர்களின்மூலமாக புறக்கணிப்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.

ஆறாம் அதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி குரு, தன் வீட்டில் உச்சம், ஏழில் நீசம். உழைப்பு, கடன், நோய், எதிர்ப்பு, சமூக சேவை போன்றவற்றில் இவர்களின் பயணம் இருக்கும் என்பதை இது சுட்டிக் காட்டுகின்றது.

ஏழு மற்றும் எட்டாம் அதிபதி சனி, நான்கில் உச்சம், பத்தில் நீசம். எனவே இவர்கள் மனைவி, சமூகம், நண்பர்கள் போன்றவர்களை தொழிலில் இணைத்து தொழில் செய்யக்கூடாது. இவர்களை நட்பாகவும், உறவாகவும், வைத்திருக்கும்வரை மட்டுமே சுகம் தருவார்கள் என்பதை இந்த சூழ்நிலையானது உணர்த்துகின்றது.

கடகத்தில் செவ்வாய் நீசமாக இருப்பதனால், நிலம் சார்ந்த விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது பெரும் சிறப்பினைக் கொடுக்கும்.

இவர்கள் பௌர்ணமி வழிபாட்டின்மூலம் பெரும் சிறப்பினை எட்டிவிட முடியும். பௌர்ணமி தினத்தில் இரவு உணவை பச்சரிசி உணவாக சமைத்து அதில் பால் அல்லது தயிர் சாதமாக உருமாற்றி 24 நிமிடங்கள் நிலவு ஒளியில் வைத்துபின்பு இந்த உணவை உண்டுவருவதன்மூலம் மனோதிடமும் ரத்த ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள தடைகளும், அகன்று தெளிவான சிந்தனை அமையப்பெற்று, தீர்க்கமான முடிவு எடுக்கும் தன்மை இவர்களுக்கு உருவாகும்.

இவர்களின் பொருளாதாரநிலை உயர்வதற்கு புனர் பூசம் என்றால் அரசமரம் பூசம் என்றால் புன்னை மரம் ஆயில்யம் என்றால் ஆலமரம் ஆகியவற்றை வழிபடுவதன்மூலம் இவர்களின் பொருளாதார நிலையினை உயர்த்திக்கொள்ளமுடியும்.

கடக ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1. செம்பு நட்டு போல்டு போடப்பட்ட கட்டிலில் உறங்கு வது நல்லது.

2. வெள்ளி டம்ளரில் பால் அருந்துவது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும்.

3. நீங்கள் மருத்துவராக அல்லது ஹீலராக இருந்தால் கஷ்டப்படும் மக்களுக்கு கொஞ்சமாவது குறைந்த செலவில் அல்லது இலவசமாக சேவை செய்வது நன்மையினைத் தரும்.

4. எப்பொழுதும் வெறும் காலுடன் கோவிலுக்கு செல்லவேண்டும்.

5. ஆன்மிக பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகள் முடிந்தபிறகு தொண்டாற்ற வேண்டும்.

6. பௌர்ணமியன்று தாயிடமிருந்து ஒரு வெள்ளி நாணயம் மற்றும் கொஞ்சம் பச்சரிசியை ஒரு வெள்ளை துணியில் முடிந்து வாங்கி அதை எப்பொழுதும் பீரோ அல்லது பணப் பெட்டியில் வைத்திருந்தால் என்றுமே வறுமை ஏற்படாது.

7. சிறு வெள்ளி துண்டு வாங்கி அதை வீட்டின் முன்வாசலில் வைத்து எரித்துவிடவும். இது வறுமை, கடன் போன்றவற்றைத் தடுக்கும் மாபெரும் அரணாக கடக ராசிக்கு அமையும்.

செல்: 80563 79988

bala190124
இதையும் படியுங்கள்
Subscribe