Advertisment

12 ராசிகளின் ஆதிமுதல் அந்தம் வரை (ரிஷபம்.)... -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/beginning-end-12-signs-taurus-melmaruvathur-s-kalaivani

ரிஷபம்

ஜோதிடவியலில் கால புருஷனுக்கு இரண்டாம் பாவகமாக அமையப் பெறுகிறது இந்த ரிஷபம். இது சுகங்களை சுகித்தே தீரவேண்டும் என்கின்ற சுக்கிரனின் முதல் பாவகம் ஆகும். அழகு, அழகியல், அமைப்பு, சுகம், பேரின்பம் என்ற அனைத்தையும் தன்னில் பொதித்து வைத்திருக்கும் ராசி இந்த ரிஷப ராசி ஆகும்.

Advertisment

இது ஒரு பெண் ராசியாகி, ஸ்திர ராசியாக அமர்ந்து, நில தத்துவத்தில் சுகம் காணும் ராசியாகும். இது அர்த்த திரிகோணமாகவும் திகழ்கின்றது, இதன் சின்னம் உழைப்பையும், கம்பீரத்தையும், பறைசாற்றும் காளையின் சின்னமாக அமைந் துள்ளது.

குருவிற்கு அடுத்து சுப கிரகமாக திகழ்கின்றார் இந்த ராசிநாதன் சுக்கிரன். இந்த ராசி லக்னங்களில் பிறந்தவர்கள் அழகும், ஈர்ப்பும், கம்பீரமும், ஒருங்கே பெற்று மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பவர்களாக அமைந்திருப்பார்கள். சற்று கருத்த நிறமாக இருந்தாலும், இவர்கள் மிகவும் வசீகரமாக இருப்பார்கள். இவர்களின் கண்கள் பல கவிதைகளையும், காவியங்களையும், மிதந்துகொண்டே பேசும் ஆற்றல் பெற்றது.

புருவமும் வளைந

புருவமும் வளைந்து தளிர்போல் அமைய பெற்றிருக்கும். கூட்டத்தின் நடுவே சிறப்பாக இடம்பெறும் சிறப்பாளர்கள் இவர்கள். இவர்கள் நல்ல உழைப்பாளியாகவும், பாசமானவர்களாகவும், கருணை மிக்கவர்களாகவும், இருப்பார்கள். தாயின்மீது அதீத பற்றுகொண்டவர்கள்.

Advertisment

tt

இந்த ராசியில் கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் என்னும் நட்சத்திரங்கள் அமையப்பெற்றுள்ளது.

சுக்கிரனின் வீட்டில் சூரியன், சந்திரன், செவ்வாய் என்கின்ற கூட்டு இந்த ராசியை பலமானதாக இருக்கச் செய்கின்றது.

இவர்கள் நேர்மை, கருணை, வீரியம் என்ற ஆயுதங்களை அழகியலோடு பயன்படுத்துவார்கள்.

இவர்களுக்கு உழைப்பை போட்டு சம்பாதிக்க தெரியுமே தவிர, சேமிக்க தெரியாது. ஆடை அலங்காரங்களுக்கும், வாசனை திரவியத்திற்கும், தன்னை மெருகேற்றிக்கொள்வதற்கும், அதீத பணத்தை செலவிடும் ராசியாக இது அமையப்பெற்றுள்ளது.

உலக சுகங்களை அனுபவித்து தீர்த்துவிடவேண்டும் என்கின்ற அலாதியான விருப்பம்கொண்டவர்கள் இவர்கள்.

இவர்களின் ராசியிலேயே தாய்க்கும், மனதிற்கும், காரகமான சந்திரன் உச்சம் பெறுவதனால் தாய் அன்பு கொண்டவர்கள்.

மேலும் தாய்யாதி வழி உறவுகளுடனான தொடர்பும் சிறப்பை தரும். இந்தச் சந்திரன் மூன்றாம் அதிபதியாகி லக்னத்தில் உச்சம்பெற்று ஏழில் நீசம் அடைவதால், வாழ்க்கைத்துணையிடம் சில விஷயங்களை விட்டுக்கொடுத்து செல்வார்கள். இவர்கள் களத்திரத்திடம் சில விஷயங்களை விட்டுக்கொடுத்து செல்வதுதான் இவர்கள் வாழ்விலும் சிறப்பினை அளிக்கும்.

மேலும் இரண்டுக்கும் ஐந்துக்கும் பொறுப்பு ஏற்றுள்ள புதன் இவர்களை கலையின் வசம் இட்டு செல்லும். அதோடு மட்டுமல்லாமல் இவர்களின் பேச்சில் இலக்கணம், இலக்கியங்களும், சதுராடும். இவர்கள் எல்லாவித தரவுகளையும் தங்களின் பேச்சில் இடம்பெற செய்வார்கள். இவர்களின் இரண்டு ஐந்தாம் அதிபதி பதினொன்றில் நீசமாவதால் ஒப்பந்தம், ரெஜிஸ்ட்ரேஷன், பத்திரம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருப்பது சிறப் பினை தரும்.

இவர்களுக்கு நாலாம் அதிபதி சூரியன், ஆறில் நீசமாகி 12-ல் உச்சம் பெறும் இந்த சூழ்நிலையானது சொத்தின்மூலமும், வீட்டின்மூலமும், சில இடர்பாடுகளையும், கடன் சார்ந்த பிரச்சினைகளையும், அளிக்கும். மேலும் லக்ன அதிபதி ஐந்தில் நீசமாவதனாலும் இவர்களுக்கு காதல் திருமணம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். மேலும் இவர்களுக்கு பூர்வீகம் பெரும் சிறப் பினை அளிக்காது. அதோடு சுக்கிரன் இவர்களின் லக்னத்திற்கு 11-ல் உச்சம் பெறுவது உலக சுகங்களும், எதிர் பார்ப்புகளும் இவர் களுக்கு சித்திக்கும் என்பதனை மேலும் உறுதிப்படுத்து கின்றது.

இவர்களின் ஏழு, பன்னிரண்டாம் அதிபதி செவ்வாய், மூன்றில் நீசமாகி, ஒன்பதில் உச்சமடையும் சூழ்நிலை உருவாகும். இந்த நிலையானது தந்தை வழியில் செவ்வாயின் காரகமான பூமி சம்பந்தமான பாக்கியம் இவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்றபொழுதிலும் ஸ்திர லக்னங்களுக்கு ஒன்பதாம் இடம் பாதகம் என்பதனால், இதை சார்ந்த முழு பயனையும் இவர்கள் அனுபவிப்பது கிடையாது.

இவர்களின் எட்டு மற்றும் 11-ஆம் அதிபதி மூன்றில் உச்சமாகி, ஒன்பதில் நீசமாவதால் இவர்களின் தந்தைவழியில் இருந்து, குரு தன்மையில் அமையப்பெற்ற ஒரு வழிகாட்டி இவர்களுக்கு அமையாது. அப்படி அமைந்தாலும் அவர்கள் கூறும் ஆலோசனைகள் இவர்களை பாதகத்தின் வழியே இட்டு செல்லும்.

ரிஷபத்தின் 9 மற்றும் 10-ல் பொறுப்பேற்ற சனிபகவான் ஆறில் உச்சமாகி, பன்னிரண்டில் நீசமாகும் சூழல் இவர்களுக்கு அமையப்பெறும். இந்நிலையானது தொழில் மற்றும் தந்தைவழி சார்ந்த பயணத்தில் உழைப்பும், விரையங்களும், சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும்.

மேலும் இந்த லக்னத்தில் அமையப்பெற்ற கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிட நட்சத்திரங்களுக்கான பொருளாதாரத்தை உயர்த்தும் விருட்சங்கள்.

கார்த்திகை நாவல் மரம், ரோகிணி கருங்காலி மரம், மிருகசீரிடம் செங்கருங்காலி மரம்.

இந்த விருட்சத்தை வழிபடுவதன்மூலமும், பராமரிப்பதன்மூலமும், பெரும் பொருளாதார முன்னேற்றத்தை அனுபவிக்க முடியும்.

இவர்கள் சுக்கிரன் மற்றும் புதனின் நிலை இவர்களின் ஜாதகத்தில் சரியாக அமையப்பெற்று இருந்தால், ஸ்ரீரங்கம் சென்றுவருவது பெரும் சிறப்பினை அளிக்கும். அதோடு மட்டுமல்லாமல் இவர்களின் சின்னமாகிய காளை மாட்டை தொழில் மற்றும் பணி சார்ந்த இடங்களில் பயன்படுத்துவதன்மூலம் பெரும் சிறப்பினை அடையமுடியும்.

செல்: 80563 79988

bala291223
இதையும் படியுங்கள்
Subscribe