Advertisment

12 ராசிகளின் ஆதிமுதல் அந்தம் வரை... -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/beginning-end-12-signs-melmaruvathur-s-kalaivani

மேஷம்!

பால்வெளி மண்டலத்தில் பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 71/2, பாகைகள் கொண்ட நீள் வட்ட பாதைக்கு ழஞஉஒஆஈ என்று பெயர். இந்த பரப்பானது 360 பாகைகள் கொண்டுள்ளது. இதனையே 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவற்றை, மேஷம், முதல் மீனம், வரையிலான 12 ராசிகளாக வகுத்து, நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இதில் முதல் ராசியான ஆதஒஊந என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், மேஷ ராசியாக விளங்குகின்றது. இது ஒரு ஆண் ராசியாகவும், பஞ்சபூத தத்துவத்தில் நெருப்பு தத்துவமாகவும், நகருகின்ற சர ராசியாகவும், தர்ம திரிகோணமாகவும், சிறந்து மேம்பட்டு திகழ்கின்றது.

Advertisment

இதன் அடையாளமாக செம்மறி ஆடு அளிக்கப்பட்டுள்ளது, மேஷ ராசியின் ராசி நாதன் செவ்வாயாகவும், அதில் அமையப் பெற்ற நட்சத்திரங்களின் நாதர்களாக அஸ்வினிக்கு கேதுவும், பரணி சுக்கிரனாக வும், கிருத்திகை சூரியன் ஆகவும், மிகவும் வலிமையுடன் பொருந்தியுள்ளது.

dd

உற்று நோக்கும்பட்சத்தில் போராட்ட குணத்திற்கு பெயர் போன செவ்வாய், வீட்டில் ஞான காரகன் கேது, சுகத்தை வாரி வழங்கும் சுக்

மேஷம்!

பால்வெளி மண்டலத்தில் பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 71/2, பாகைகள் கொண்ட நீள் வட்ட பாதைக்கு ழஞஉஒஆஈ என்று பெயர். இந்த பரப்பானது 360 பாகைகள் கொண்டுள்ளது. இதனையே 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவற்றை, மேஷம், முதல் மீனம், வரையிலான 12 ராசிகளாக வகுத்து, நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இதில் முதல் ராசியான ஆதஒஊந என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், மேஷ ராசியாக விளங்குகின்றது. இது ஒரு ஆண் ராசியாகவும், பஞ்சபூத தத்துவத்தில் நெருப்பு தத்துவமாகவும், நகருகின்ற சர ராசியாகவும், தர்ம திரிகோணமாகவும், சிறந்து மேம்பட்டு திகழ்கின்றது.

Advertisment

இதன் அடையாளமாக செம்மறி ஆடு அளிக்கப்பட்டுள்ளது, மேஷ ராசியின் ராசி நாதன் செவ்வாயாகவும், அதில் அமையப் பெற்ற நட்சத்திரங்களின் நாதர்களாக அஸ்வினிக்கு கேதுவும், பரணி சுக்கிரனாக வும், கிருத்திகை சூரியன் ஆகவும், மிகவும் வலிமையுடன் பொருந்தியுள்ளது.

dd

உற்று நோக்கும்பட்சத்தில் போராட்ட குணத்திற்கு பெயர் போன செவ்வாய், வீட்டில் ஞான காரகன் கேது, சுகத்தை வாரி வழங்கும் சுக்கிரன், ஆன்மகாரகன் சூரியன், இவர்களின் கூட்டு, பெறும் வல்லமையும், கடும் போர் குணத்தையும், கொண்டு சேர்க்கும்.

இந்த ராசியில் நவகிரகங்களின் நாயகன் என்று போற்றப்படும் சூரியன் உச்சம்பெற்று, கருமக்காரகன் என்றும், கர்மா காரகன் என்றும், அழைக்கப்படும் சனி நீசம் அடைந்தும் இருப்பார்கள்.

இந்த மேஷ ராசியில் பிறந்தவர்கள் போர்குணமும், அவசர சிந்தனையும், விவேகமற்ற வீரத்தையும், முன்னிலை வகிக்கும் குணமும், பிடிவாதமும், பெரும் ஆற்றலும் கொண்ட ராசியாக அமையப் பெற்றுள்ளது.

காலபுருஷனின் முதல் மற்றும் தலை என்று அழைக்கப்படும் இடமாக உள்ளது.

மேலும் தன் ராசிநாதனே அட்டமாதிபதி யாகவும், அமைவதனால் இவர்கள் வாழ்வில் ஒருமுறையெனும் சட்ட சிக்கலுக்கு உள்ளாவார்கள். அதோடு மட்டுமில்லாமல் நிறைய ரகசியங்களை தன் வசம் கொண்டிருக்கும் ஒரு ராசியாகவும் இது இருக்கும்.

ராசிநாதன் நான்கில் நீசம், பத்தில் உச்சமும் அடைகின்ற சூழ்நிலை உருவாகின்றது.

எனவே இவர்களுக்கு நான்காம் பாவகம் சார்ந்த எதிர்மறையும், பத்தாம் பாவகம் சார்ந்த சற்று நேர்மறையும், தன் உடனேயே பயணிக்கும். எனவே தாயாதிவழி சொத்துகள், வாகனம், மனை, வீடு மற்றும் பத்திரங்கள், சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. இவர்கள் தொழிலின்மூலம் பெரும் சிறப்பினை அடைவதை கண்கூடாக காணமுடியும். இருந்தபொழுதிலும் சனி தொழில்காரகனாகி, லக்னத்திலேயே நீசம் அடைவது, பணி சார்ந்த இடங்களில் சரியான உறவு நிலை இருக்காது என்பதை உணர்த்துகின்றது.

இவர்கள் சம்பாதிக்கும் திறன் மேம்பட்டவர்களாக இருந்தாலும், சேமிக்கும் திறன் அற்றவர்களாக திகழ்வார்கள்.

நான்காம் அதிபதி இரண்டில் உச்சம் பெறுவது வாக்கின்மூலம் சில நன்மைகளை பெரும் சூழ்நிலையை உருவாக்கும். மேலும் இரண்டில் நான்காம் அதிபதி உச்சம் என்ற சூழல் இவர்கள் பேச்சு சார்ந்த தொழிலில் பயணிக்கும் பொழுது தனக்கான கௌரவத்தினை எட்டிவிட முடியும்.

இந்த ராசி லக்னத்தில்படி ஒன்பதாம் அதிபதி, நான்கில் உச்சம், லக்னாதிபதி நான்கில் நீசம், தந்தைக்கு பிற்பட்ட பகுதியே இவர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும்.

ஆறாம் இடத்தில் இரண்டு மற்றும் ஏழாம் அதிபதி நீசம் ஆகி, 3 மற்றும் ஆறாம் அதிபதி உச்சம்பெறும், சூழ்நிலை இவர் களுக்கு ஏற்படும். இந்த சூழ்நிலையானது சம்பாத்தியத்தில் ஒரு பகுதி மருத்துவ செலவிற்கு செல்வதினையும், களத்திரம் சம்பந் தப்பட்ட ஒருசில பிரச்சினை ஏற்படுவதையும் சுட்டிக் காட்டுகின்றது.

ஐந்தாம் அதிபதி ஏழில் நீசம், பத்து மற்றும் பதினோராம் அதிபதி ஏழில் உச்சம். இந்த சூழலானது இவர்களுக்கு காதல் திருமணத் தின்மூலம் பெரும் இன்னலை உருவாக்கும் என்பதனை சுட்டிக் காட்டுகின்றது.

மேலும் தங்களது பூர்வீக குணங்களை எடுத்து பயணிக்கும் மனைவி பெரும்பாலும் அமைவது கடினம். என்பதனையும் இது உணர்த்தும்.

நான்காம் அதிபதி இரண்டில் உச்சமாகி எட்டில் நீசம் அடையும் தன்மை, இது பேச்சின்மூலம் இடர்பாட்டினை அடையும் சூழ்நிலையையும், தாயாதி வழியில் ஒரு அவமானத்தை சந்திக்கும் சூழ்நிலையும் உருவாக்கும். என்பதனை குறிகாட்டுகின்றது.

லக்ன அதிபதி பத்தில் உச்சம்பெறுவது தொழில் சார்ந்த நிலையில் சிறப்பு என்பதனை உணர்த்துகின்றது.

மூன்று மற்றும் ஆறாம் அதிபதி 12 நீசமும் 2 ஏழாம் அதிபதி 12 உச்சமும் அடைவது, பத்திரம், ரிஜிஸ்ட்ரேஷன், ஒப்பந்தம் போன்ற நிலையின்மூலம் விரயத்தை அடையும் சூழ்நிலையும், இதில் கவனமாக இருக்க வேண்டும் என்கின்ற தன்மையும் உணர்த்து கின்றது.

இந்த மேஷ ராசியை சார்ந்தவர்கள் முருகனின் வழிபாட்டினை மேற்கொள்ளும் பொழுதும், சிவ வழிபாட்டினை மேற் கொள்ளும்பொழுதும், ஜீவசமாதி மற்றும் குருவின் வழிபாட்டினை மேற் கொள்ளும் பொழுதும், சிறப்பினை அடைவார்கள் என்பது திண்ணம்.

மேஷ ராசியாக இருந்தாலும் இதில் அமையப்பெற்ற மூன்று நட்சத்திரங்களுக்கும் வெவ்வேறு தாரா பலன் அமைவதனால் இவர்கள் பொருளாதாரச் சார்ந்த வகையில் சிறப்புறுவதற்கு-

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் நெல்லி மரத்தை வழிபடுவதும், பரணி நட்சத்திரக் காரர்கள் அத்தி மரத்தை வழிபடுவதும், கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நாவல் மரத்தை வழிபடுவதும். பொருளாதாரம் சார்ந்த அனைத்து விஷயங்களில் இருந்தும் விடுபடமுடியும்.

மேலும் இவர்கள் சித்தப்பா, சகோதரன் ஆகிய உறவுகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது பெரும் சிறப்பினை தரும்.

இவர்கள் தொழில்புரியும் இடங்களில் இந்த ராசியின் சின்னமான ஆட்டின் உருவத்தை பயன்படுத்துவதனால் உயர்வினை அடையலாம்.

செல்: 80563 79988

bala221223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe