Advertisment

12 ராசிகளின் ஆதிமுதல் அந்தம்வரை... மிதுனம் மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/beginning-end-12-signs-gemini-melamaruvathur-s-kalaivani

மிதுனம், ஆடவை என்ற அழகு தமிழ்பெயர் கொண்ட மிதுனம், காலபுருஷனின் முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாம் இடத்தின் பொறுப்பை ஏற்றுள்ளது.

Advertisment

இது 360 டிகிரி வானியலில், 60 டிகிரிமுதல் 90 டிகிரிவரை பரிமளிக்கின்றது. இது காற்று ராசியாகி, இரட்டை ராசியாகி, உபயத்தின் முதல் ராசியாகவும் திகழ்கின்றது.

Advertisment

மேலும் இந்த ராசியின் ராசிநாதன் புதன் கலைகளுக்கும், சாஸ்திரங்களுக்கும், புத்திக்கூர்மைக்கும், சமயோகித புத்திக்கும் சொந்தக்காரர் ஆவார்.

பொதுவாகவே இந்த மிதுன ராசி லக்னங்களில் பிறந்தவர்கள் ஆழ்ந்த தெளிவுகொண்டவர்கள். மேலும் இவர்கள் ஒரு விஷயத்தை நுனிப்புல் மேய்வதுபோல் கடந்துவிடுவார்கள். இவர்கள் விசுவாசத்தில் தலை சிறந்த வர்களாகவும், சற்று காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவும், எல்லாத் துறை விஷயங்களிலும் பயணிப்ப வர்களாகவும் பெரும்பாலும் இருப் பார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் இவர்கள் தனித்துவம் உடையவர்கள். தனிமை விரும்பிகள். நகைச்சுவை உணர்வும், உரையாடலும் உடையவர்கள். ஆனால் இவர்கள் தனித்து வெற்றிபெற முடியாது. யாரேனும் ஒருவரின் தூண்டுதலின் மூலமே வெற்றியும், முன்னேற்றத்தையும் பெறுவார்கள்.

ff

இயல்பிலேயே புத்திசாலியான இவர்களின் குண

மிதுனம், ஆடவை என்ற அழகு தமிழ்பெயர் கொண்ட மிதுனம், காலபுருஷனின் முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாம் இடத்தின் பொறுப்பை ஏற்றுள்ளது.

Advertisment

இது 360 டிகிரி வானியலில், 60 டிகிரிமுதல் 90 டிகிரிவரை பரிமளிக்கின்றது. இது காற்று ராசியாகி, இரட்டை ராசியாகி, உபயத்தின் முதல் ராசியாகவும் திகழ்கின்றது.

Advertisment

மேலும் இந்த ராசியின் ராசிநாதன் புதன் கலைகளுக்கும், சாஸ்திரங்களுக்கும், புத்திக்கூர்மைக்கும், சமயோகித புத்திக்கும் சொந்தக்காரர் ஆவார்.

பொதுவாகவே இந்த மிதுன ராசி லக்னங்களில் பிறந்தவர்கள் ஆழ்ந்த தெளிவுகொண்டவர்கள். மேலும் இவர்கள் ஒரு விஷயத்தை நுனிப்புல் மேய்வதுபோல் கடந்துவிடுவார்கள். இவர்கள் விசுவாசத்தில் தலை சிறந்த வர்களாகவும், சற்று காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவும், எல்லாத் துறை விஷயங்களிலும் பயணிப்ப வர்களாகவும் பெரும்பாலும் இருப் பார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் இவர்கள் தனித்துவம் உடையவர்கள். தனிமை விரும்பிகள். நகைச்சுவை உணர்வும், உரையாடலும் உடையவர்கள். ஆனால் இவர்கள் தனித்து வெற்றிபெற முடியாது. யாரேனும் ஒருவரின் தூண்டுதலின் மூலமே வெற்றியும், முன்னேற்றத்தையும் பெறுவார்கள்.

ff

இயல்பிலேயே புத்திசாலியான இவர்களின் குணம், புரியாத புதிராகவே இருக்கும். இந்த ராசியில் செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிஷம், ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை, குருவின் நட்சத்திரமான புனர்பூசம் போன்றவை அமர்ந்துள்ளது. இந்த ராசியில் பகைபெறும் குரு தனது நட்சத்திரத்தை இங்கே பதிய வைத்துள்ளதன் ரகசியம் நமக்கு விந்தையை அளிக் கின்றது இல்லையா? மனித மூளையின் ஒட்டுமொத்த வடிவமே குருதான். அதனால்தான் குருவான தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் கல்லால மரத்தின் மேற்பகுதி, மனித மூளையைப்போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு புத்திக்கூர்மையை கூறும் புதன், வல்லமையை பறைசாற்றும் செவ்வாய், பிரம்மாண்டமும், தந்திரமும், நிறைந்த ராகுவின் நட்சத்திரம். இந்த கூட்டு இவர்களை எல்லா விதத்திலும் ஆராய்ச்சி நோக்கிய பயணத்தில் பயணப்பட வைக்கும்.

லக்ன அதிபதி புதன் நான்கில் உச்சமாகி, பத்தில் நீசமாகும் சூழலும் இவர்களுக்கு அமையும். அதனால் நல்ல வீடு, வாகன வசதி, இருந்த பொழுதிலும், தொழில் சார்ந்த கண்ணோட்டத்தில் இவர்களுக்கு சுய தொழில் அவ்வளவு பெரிய சுகத்தை தருவது இல்லை. மேலும் இவர்களுக்கு ஏழாம் அதிபதி பாதகாதிபதியாகிவிடுவதால் கூட்டுத் தொழிலும் பெரிய சுபிட்சத்தை தருவது கிடையாது.

இரண்டாம் அதிபதி சந்திரன், பன்னிரண்டில் உச்சம். எனவே இவர்களின் வருமானத்தை இவர்கள் சேமிப்பது என்பது கடினம். மேலும் வருமானத்தில் பெரும் பகுதியை விரயம் என்கின்ற சூழ்நிலையை தரும். இந்த இரண்டாம் அதிபதி சந்திரன் இரண்டில் உச்சமாகி ஆறில் நீசமாவதால் பேச்சின்மூலம் எதிரியையும் வசமாக்கிக்கொள்வார்கள். பேச்சையும் தொழிலாகவும், உழைப்பாகவும், போட்டு பணம் ஈட்டும் தகுதி பெற்றவர்கள். இவர்களின் பேச்சில் கருணையும், தாய் அன்பும் கலந்தே இருக்கும்.

மூன்றாம் அதிபதி சூரியன் ஐந்தில் நீசமாகி 11-ல் உச்சமாகும் சூழல் இவர்களுக்கு இருக்கும். இந்த நிலையானது குழந்தை விஷயத்தில் சில நெருடர்களையும், தைரியத்தின்மூலம் பல லாபத்தையும், ஒப்பந்தத்தின் மூலமும் பல லாபங்களையும், பெரும் சூழலை உருவாக்கிவிடும்.

நான்காம் அதிபதி லக்னாதிபதி. அதனால் நான்கிலேயே ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்று எல்லா சுகங்களும் தன்மூலமே உருவாக்கிக் கொள்ளும் சுயம்புவாக இருப்பார்கள். மேலும் நான்காம் அதிபதி பத்தில் நீசமாவதால் சுய தொழில் சார்ந்த அதிருப்தி இவர்களுக்கு இருக்கும்.

ஐந்தாம் அதிபதி சுக்கிரன், நான்கில் நீசமாகி பத்தில் உச்சம்பெறுவது மீண்டும் குழந்தைகளின்மூலம் இவர்களுக்கு ஏற்படும் நெருடலை சுட்டிக் காட்டினாலும், பத்தில் உச்சமடைவது மிக சிறப் பானதொரு தன்மை யாகும். இவர்களின் பூர்வ புண்ணியாதிபதி மற்றும் விரையாதிபதி, பத்தில் உச்சமடைவது சிறப்புகள் சார்ந்த பயணத்தையும் உறுதிப்படுத்துகின்றது.

ஆறாம் அதிபதி செவ்வாய் இவர்களுக்கு 11-ஆம் அதிபதி பொறுப்பையும் ஏற்று இரண்டில் நீசமாகி எட்டில் உச்சத்தை பெறுவது நோயின் தாக்கம் வந்தால் அது சார்ந்து ஒரு தொடர் மருத்துவத்தில் பயணிக்கும் சூழ்நிலையை சுட்டிக் காட்டுகின்றது.

மேலும் இவர்களுக்கு இயல்பாகவே ஆறு மற்றும் எட்டாம் இட தொடர்பை செவ்வாய் ஏற்படுத்திவிடுவார். ஏழாம் அதிபதி குரு இரண்டில் உச்சமாகி எட்டில் நீசமாகும் தன்மை திருமண வாழ்வில் சிறப்பை எட்ட முடியாத சூழ்நிலையை உருவாக்கும். மேலும் உபய ராசிக்கு ஏழாம் அதிபதி பாதகாதிபதி என்கின்ற நிலை குடும்பத்தில் சில பிரச்சினைகளை கையாள வேண்டிய சூழலை ஏற்படுத்துகின்றது. அதோடு இவர்களுக்கான நட்பு மற்றும் சமூகத்தின் நிலையிலும் சற்று கவனம் தேவை என்பதனை எடுத்து உரைக்கின்றது.

எட்டாம் அதிபதி சனி ஒன்பதற்கும் பொறுப்பேற்று ஐந்தில் உச்சமாகி 11-ல் நீசம்பெறும் சூழல் இவர்களை சாரும். இவர்களை உருவாக்கிய மூலமான தந்தையும், இவர்கள் உருவாக்கிய கர்மாவின் தொடர்ச்சியான இவர்களின் குழந்தைகளும், லாபத்தை நோக்கிய பயணத்தின்மூலமும் அவர்களின் ஆசை கனவுகள் நிறைவேறும் சூழலையும் இவர்களின் சூழ்நிலை உருவாக்கிவிடும். எந்த பாடுபட்டும் தங்களைப் பெற்றோர்களுக்கும், தான் பெற்றவர்களையும், ஒரு நல்லவழியில் எடுத்துச்செல்லும் கடமையினை சரிவரச் செய்யும் சூழ்நிலை இவர்களுக்கு இந்த கிரகங்கள் உருவாக்கிவிடும்.

மேலும் இவர்களின் ஒன்பதாம் அதிபதி ஐந்தில் உச்சமாவதனால் குலதெய்வ வழிபாடு இவர்களுக்கு பெரும் சிறப்பினை அளிக்கும். மேலும் ஒரு நிலை கண்ணாடியை பூஜையறையில் வைத்து வழிபடும் வழக்கம் இவர்களுக்கு இருந்தால், இவர்கள் வாழ்வின் அடுத்த படியை எளிதாக எட்டிவிட முடியும், இவர்கள் தொழில் மற்றும் பணி யிடங்களில் சிறந்துவிளங்க இந்த மிதுன ராசியின் சின்னமான இரட்டையர் சின்னத்தை பயன்படுத்தலாம்.

அதோடு வருமானத்தை உயர்த்திக் கொள்ள மிருகசீரிட நட்சத்திரமாக இருந்தால் செங்கருங்காளியும், திருவாதிரை யாக இருந்தால் கொய்யா மரமும், புனர் பூசமாக இருந்தால் அரச மரத்தையும், வழிபடுவதன்மூலமும், அங்கே தங்களின் அமைதியான நேரங்களை சற்று கடத்து வதன்மூலமும், பொருளாதாரத்தில் பெரும் சிறப்பினை அடையமுடியும்.

செல்: 80563 79988

bala120124
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe