பெண்களின் வாழ்க்கைக்கு அழகு முக்கியமில்லை; குணம்தான் தேவை என்பார்கள். இவையெல்லாம் பெயரளவிற்குச் சொல்லிக்கொள்வதுதான். நடைமுறையில் அழகானவர்களையே மதிப்பு, மரியாதையுடன் நடத்துகிறார்கள். அவர்களுக்குக் கஷ்டம்
என்றால் அதைத் தீர்த்துவைக்கத் துடிப்பவர்கள் அதிகம். குறிப்பாக, அழகான பெண் அழுவதை யாரும் தாங்கமாட்டார்கள். அழகான பெண்கள் எளிதாக முடிக்கும் காரியத்தை, அழகு குறைந்த பெண்கள் அதிக மெனக் கெட்டு, திறமை இருந்தால்தான் போராடி சாதிக்கமுடியும். பெண் பார்க்க வருபவர்கள்கூட பளிச்சென்று இருக்கும் பெண்ணிற்கு படிப்பு, பணம் தேவையில்லை என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஒவ்வொரு அலுவலகத்தின் வரவேற்பறையிலும் அழகான பெண்களைதான் அமர வைத்திருக்கி றார்கள். ஏனெனில் வெளிநபர்களை முதல் சந்திப்பிலேயே மறக்காமல் இருக்கச் செய்வது உடலழகு கொண்ட அழகானவர்கள்தான். அதன்பின் அழகுடன் திறமையும் இருந்தால்தான் வியாபாரத்தில் அடுத்தடுத்த முன்னேற்றங்களை அடையமுடியும். பெண்ணியம் பேசும் பலர், பெண்களின் அழகை மையப்படுத்திப் பேசியேதான் வளர்கிறார்கள். பெண்கள் அவரவர் ஜாதகத்தில் நின்ற கிரகங்கள், பார்த்த கிரகங்களின் அமைப்பைப் பொருத்தே அழகுபெறுகிறார்கள்.
அழகு
லக்னத்தில் சுக்கிரன், குரு, வளர்பிறைச் சந்திரன் ஆகிய கிரகங்கள் இருந்தால், வட்ட முகத்துடன் அழகுடன் பிறப்பர்.
உடலான சந்திரனில், சந்திரனுடன் சுபகிரக இணைவு, சுப கிரகப் பார்வை பெற்றால் எழில் நிறைந்தவர். சூரியன், புதன்; சுக்கிரன், புதன்; குரு, சந்திரன்; குரு, செவ்வாய் இணைவு பெற்ற ஜாதகர் மக்களை வசீகரிக்கும் அழகுடையவராக இருப்பார். லக்னத் தில் சுப கிரகங்கள் நின்று சனி, புதன், ராகு இணைவு, பார்வை இருந்தால் கொஞ்சம் கருப்பு நிறத் தைத் தரும். லக்னம், லக்னாதிபதி, ராசி, ராசியாதிபதி பாவகிரக சம்பந்தமின்றி சுபத் தன்மையுடன் இருந்தால் அழகாய் இருப்பார்.
தோற்றம்
ஒருவரின் தோற்றத்தை வைத்துதான் இன்று குணத்தை முடிவு செய்கிறார்கள். அதனால்தான் இன்று அழகாய்ப் பிறக் காவிட்டாலும் அழகாய் மாற முயற்சிசெய்து அழகாக்கிக் கொள்கிறார்கள். அழகு பல குற்றங் களிலிருந்து தப்பிக்கவும், பல சலுகைகள் பெறவும் உதவுகிறது. குட்டையான தோற்றத் தில் இருப்பவர்களைவிட சற்று உயரமானவர்களையே விரும்புகிறார்கள். லக்னத்தில் புதன், குரு, ராகு- கேது இருந்தால் உயரமானவராகவும், சந்திரன், செவ்வாய், சனி இருந்தால் குட்டையானவராகவும், சூரியன், சுக்கிரன் இருந்தால் சம உயரம் கொண்டவராகவும் இருப்பர். கிரக இணைவு, பார்வையைப் பொருத்து உயரம் இருக்கும்.
தன்மை
ஆணாக இருந்தால் சிலருக்குப் பெண் தன்மையும், பெண்ணாக இருந்தால் ஆண் தன்மையும் சற்று அதிகமாக இருக்கும். குரலில் ஆணுக்குப் பெண் போலவும், பெண்ணுக்கு ஆண் போலவும்கூட ஏற்படும். லக்னத்தில் சூரியன், செவ்வாய், குரு வலுத்தால் ஆண் தன்மையையும், சந்திரன், சுக்கிரன், ராகு வலுத்தால் பெண் தன்மையும் தரும். புதன், சனி, கேது கெட்டு வலுத்திருந்தால் அலித் தன்மையைத் தந்துவிடும். சுப கிரகப் பார்வை, இணைவிருந்தால் உடல் வலிமை அதிகரிக்கும். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஆண் ராசிகளைப் பொருத்து ஆண் தன்மையும்; ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய பெண் ராசிகளைப் பொருத்துப் பெண் தன்மையும் ஜாதகருக்கு அமையும்.
தலை முடி
முக அழகிற்கு தலைமுடியின் பங்கு முக்கியமானது. அதனால்தான் இன்று தலைமுடியைப் பாதுகாப்பதில் ஆண், பெண் இருவரும் மிகுந்த ஆர்வம் செலுத்துகின்றனர்.
வயதானவராக காட்டிக்கொண்ட காலம் போய், தோற்றத்தில் இளமையாய்த் தெரிய நிறைய மெனக்கெடுகிறார்கள். என்ன செய்வது? தன்னை அழகாக வைத்துக்கொண்டால்தான் சமூகத்தில் மதிப்பு கிடைக்கிறது. நரைத்த முடிக்கு சாயம்பூசி இளமையாய்க் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. சிலருக்கு சிறுவயதில் நல்ல முடியுடன் இருந்து, வயது ஏற ஏற வழுக்கை வந்து விடும். பரம்பரைப் பரம்பரையாக, வம்சா வளி குறைபாடாக இது தொடர்கிறது. குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் அழகிய கூந்தலைத் தரும். லக்னத்தில் சூரியன், சனி, ராகு- கேது இருப்பது முடி உதிர்வையும், வழுக்கைத் தன்மையையும் உண்டாக்கும். தசா புக்திகள் கெட்டிருந்தால் வயதுக் கேற்ற தோற்றத்தை அழித்து, நோயாளி போலவும் வயதான தோற்றத்தையும் தந்துவிடும். குரு, சுக்கிரன் பார்வை பெற்றவர்கள் இளமையான தோற்றத்துடன் வலம்வருவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/beauty1.jpg)
உடலமைப்பு
மனிதனின் தோற்றத்திற்கு முக்கியப் பங்குவகிப்பது மரபணு. அதன் அடிப் படையில்தான் பலருக்கு அவரவர் தாய்- தந்தையரைப்போன்ற உடல் தோற்றம் வந்துவிடுகிறது. லக்னத்தில் சூரியன் இருந்தால் தந்தை போன்ற உடலமைப்பும், சந்திரன் இருந்தால் தாயாரைப்போலவும், புதன் இருந்தால் மாமனைப் போன்றும், ராகு இருந்தால் தந்தையின் தந்தை, தாயாரின் தாய்போலவும், கேது இருந்தால் தாயாரின் தந்தை, தந்தையின் தாயைப்போலவும் தோற்றம், பழக்கவழக்கத்தைத் தரும். லக்னத்தில் நின்ற கிரக சாரம், தோற்றம், குணத்தை கிரக வலுவைப் பொருத்துத் தீர்மானிக்கும்.
குணம்
உடலழகு, தோற்றம் வெளியுலகுக்கு முக்கியமான தேவையாக அமைந்தாலும், குடும்பத்திற்கு குணம் முக்கியத் தேவை. இளம்வயதில் எப்படி வாழ்கிறோமோ அதுவே முதுமையின் பயனாக வந்துசேரும். ஆதலால் குணத்தில் கவனமாக இருக்கவேண்டும். சுபகிரகங்களின் வலுத்தன்மை நல்ல குணத்தையும், பாவகிரகங்களின் வலுத் தன்மை குரூர குணத்தையும் வெளிப்படுத்தும். லக்னத்தில் குரு, சந்திரன் சாத்வீக குணத்தையும், செவ்வாய், சுக்கிரன் ராஜஸ குணத்தையும், சூரியன், சனி, புதன், ராகு, கேது தாமஸ குணத்தையும் ஜாதகருக்குத் தரும். சுபகிரகங்கள் நல்ல குணம், ஒழுக்கம், அறிவு, நல்ல உடற்கட்டை அளிக்கும்.
பாதிப்பு
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அழகு என்பது நிலையானதல்ல என்பதைப் பலர் ஏற்றுக்கொள்ள மறுத்து, இளமையில் ஆணவமாக இருந்து பல உறவுகளைப் பகைத்து முதுமை யில் கஷ்டப்படுகின்றனர். குணமற்ற அழகு பல குடும்பங்களின் சந்தோஷத்தைக் கெடுத்துள்ளது. வெளிப் பூச்சுகளால் அழகு படுத்தினாலும், அதனால் உடல் கெட்டு விட்டால் பாதிப்பு அதிகமாகிவிடும். முன்னோர்கள் சொன்ன மஞ்சள், மருதானி என சொன்னால், கேட்பவர் களைவிட கேலிசெய்பவர்கள் அதிகம். வழி சொல்பவர்களைவிட வலியை உண்டாக்கி நிவாரணம் தருபவர்களையே நாகரீகம் விரும்புகிறது. அழகாக இருக்கும் சிலர் திடீரென்று அழகிழந்து போய்விடுவது ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, 6, 8, 12-ஆம் அதிபதி தசா காலங்களில் நடைபெறும். சனியைப் பொருத்தவரை கஷ்டம் தருவதே உண்மையைச் சொல்வதற்காகதான்.
பரிகாரம்
கணவருக்குப் பிடித்த உணவை சமைத்துத் தருவது, பிடித்த உடை அணிவது, பிடிக்காத விஷயங்களைப் பேசாதிருத்தல், வரவுக்குள் செலவு செய்தல், இயலாத ஆசைகளை நிறைவேற்ற வற்புறுத்தாமல் இருத்தல், அக்கம்பக்கம் இருப்பவர்களை ஒப்பிடாமல் வாழ்தல், அந்தரங்கத்தில் கணவனின் ஆசைப்படி அன்யோன்யம் கொள்வது ஆகியவற்றை சரியாகச் செய்யும் மனைவியை கணவன் பேரழகியாகக் கொண்டாடுவான். கணவனை ஈர்க்க, தன் கட்டுப்பாட்டில் வைக்க பேரழகியாகவோ, பெரும் பணக்காரியாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. அன்பான சொற்கள் போதும். கணவரின் தேவையறிந்து நடந்தால், தானும் இல்லறமும் கடைசிவரை இருக்கலாம். பெண்ணிடம் ஆணின் அழகென்பது கேட்பதை, கேட்டதும் வாங்கித் தருவதில்தான் அடங்கி இருக்கிறது.
செல்: 96003 53748
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/beauty-t.jpg)