இன்றைய காலகட்டத்தில் ஜோதிடம் பார்க்க வருபவர்களில் பலரும், "எப்போது மகளுக்கு அல்லது மகனுக்குத் திருமணம் நடக்கும்?' என்ற கேள்விகளோடுதான் வருகிறார்கள்.
ஜோதிடர்களும் கிரக நிலைகள், நடக்கும் தசைகளை அறிந்து இத்தனை மாதத்தில் நடக்குமென்று சொல்கிறார்கள். அதன்படி நடப்பதும் உண்டு; நடக்காமல் போவதும் உண்டு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/valai.jpg)
அதேபோல "இந்த ஜாதகருக்கு இந்தப் பெண் ஜாதகம் பொருந்தும்' என்று சொன்னாலும், பெற்றோர்கள் அவர்களை இணைந்துவிடுவதில்லை. "பையனுக்கு இந்தப் பெண் பிடிக்கவில்லை' என்றும், "அதிகம் எதிர்பார்க்கிறார்கள்; அதனால் இந்த வரன் வேண்டாம்' என்றும் ஒதுக்கி விடுகிறார்கள். ஆக, பொருத்தம் இருந்தாலும் ஏதோவொரு வகையில் நடக்காமல் போய்விடுகிறது. காரணம், ஜோதிட ரீதியாக தவறில்லை என்றாலும், "கர்மா'ரீதியாக ஏதோவொரு கணக்கிருக்கிறது. கணிதத்தைவிட கர்மாவின் கணக்கு சற்று உயர்வானதுதான் என்றும் சொல்லலாம்.
ஜோதிடத்தில் பலவகை உண்டென்பது பலருக்கும் தெரியும். நல்ல ஜோதிடர் ஒருவர் சொல்லாததை ஒரு கிளி ஜோதிடர் சொல்லிவிடுவார். கிளி ஜோதிடர் சொல்லாத விஷயத்தை வெற்றிலை ஜோதிடர் சொல்லிவிடுவார். ஆக, பலன் சொல்வதற்கு வாக்குப் பலிதமும் அவசியமாகிறது.
எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் பிரபலமாக இருந்த, இருக்கிற பெரும்பான்மையான ஜோதிடர்களைப் பார்த்துவிட்டார். இன்னும் அவர் எண்ணியது நடக்கவில்லை.
ஜாதகரீதியாகப் பார்த்தால், 7-ஆம் வீட்டிற்குடையவர் 6, 8-ல் இருக்கக்கூடாது. இரண்டு அசுப கிரகங்களுக்கு மத்தியில் 7-ஆம் வீடு அமைந்தாலும், திருமணமானபிறகு "ஏன் திருமணம் செய்தோம்' என்று யோசிக்கும் அளவில் வாழ்க்கை வேதனை நிறைந்ததாக அமையும். இதற்கு சில நூல்களில் "பாபகர்த்தரி' யோகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பெண்ணின் ஜாதகத்தில் 8-ஆம் வீடானது மிகமிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 7-ல் சனியோடு கூடி சந்திரன் அமர்ந்திருந்தால் பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விவாகம் நடக்கக்கூடும் என்று பேசப்படுகிறது. ஆக, இவற்றுக்கெல்லாம் தீர்வுண்டா என்றால், சிலருக்கு உண்டு; சிலருக்கு இல்லையென்ற உண்மையைச் சொல்லித் தான் ஆகவேண்டும்.
சொன்னது நடந் தால் நம்புவார்கள். நடக்கவில்லையென்றால் வேறொருவரை நாடிச் செல்வார்கள். இது மக்களின் மனநிலை.
சில ஜோதிடர்கள் இப்படிப்பட்ட கிரகநிலை உள்ள ஜாதகருக்கு பலன் சொல்வதையே தவிர்த்துவிடுகிறார்கள். அது ஜோதிடரின் குற்றமல்ல; வந்தவர்கள் கேட்க மாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும்.
இன்றைய கால கட்டத்தில் குறிப்பிட்ட வயதில் திருமணமானவர்கள் குறைவு. குறிப் பிட்ட வயதையும் கடந்து திருமணமாகாமல் எத்தனையோ பேர் இருக் கிறர்கள். இதற்கெல்லாம் ஜாதகத்தையும், ஜோதிடர்களையும் குறை சொல்வதை விட்டுவிட்டு மனதளவில் மாறவேண்டும்.
அதேபோல்தான் பரிகாரங்களும்- எல்லாருக்கும் ஒரேமாதியான பரிகாரங்கள் எடுபடுவதில்லை.
வாழைக்குத் தாலி கட்டியபிறகு, அந்த வாழையை வெட்டும் வழக்கம் இன்றளவும் நடந்துகொண்டுதான் உள்ளது.
அப்படி செய்தும் நடக்காத திருமணங்கள் உண்டென்பது உங்களுக்குத் தெரியும்.
திருமணத்தடையா? காளஹஸ்தி சென்று பரிகாரம் செய்த எல்லாருக்கும் நடந்துவிடுகிறதா என்ன? கார்த்திகை, திருவாதிரை, பூசம், மகம், சுவாதி, மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த வர்கள் திருமணம் சம்பந்தமாக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் கீழுள்ள வழிபாடு செய்யலாம்.
வாழையானது குலைவிடும் பருவம் வந்ததும், அதற்குமுன் சிறிய இலைவிடும். குலையானது வடக்கு நோக்கி தள்ளியதும், தாம் பிறந்த கிழமையில் அந்த வாழை மரத்தின் அடியில் ஐந்து தீபமேற்றி, இருபத்தேழு அரசாணிப் பூக்களை (பரங்கிப்பூ) வைத்து மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும். இதை அந்த வாழையை வெட்டும் வரையில் தொடர்ந்து செய்துவந்தால் நாற்பத்தெட்டு நாட்களுக்குள் திருமணப் பேச்சு முடிவுக்கு வரும். ஆனால் வாழைக்காயை காரணம் சொல்லி அதனது பூவை வெட்டிவிடக்கூடாது.
குறிப்பு: வடக்கு நோக்கி தள்ளும் குலைக்கே இந்த வழிபாடு பொருந்தும்.
செல்: 96552 69723.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-11/valai-t.jpg)