(பெண்) எனது அம்மா வீட்டின் பூர்வீக சொத்து பணம் எப்பொழுது கிடைக்கும்? -ஷீலா, செங்கல்பட்டு.
பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி வக்ரகதியில் இருக்கிறார். 4-ஆம் வீட்டுக்கு 9-ஆம் அதிபதி சந்திரன்-ராகு சாரம் பெற்றிருக்கிறார். 4-க்கு 9-ஆம் வீட்டில் கேது இருக்கிறது. கடக ராசியில் கேது அமையப்பெற்று தாய்காரகன் சந்திரன்- ராகு சாரம் பெற்றிருக்
கிறது. உங்கள் ஜாதகரீதியாக தாய் வழி பூர்வீகவழியில் அனுகூலங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை. கிடைப்பதை பெற்றுக்கொள்வது நல்லது.
எனக்கு வீட்டு சொத்து பிரச்சினை எப்போது தீரும்? சொந்த வீடு எப்போது அமையும் என்று கூ
(பெண்) எனது அம்மா வீட்டின் பூர்வீக சொத்து பணம் எப்பொழுது கிடைக்கும்? -ஷீலா, செங்கல்பட்டு.
பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி வக்ரகதியில் இருக்கிறார். 4-ஆம் வீட்டுக்கு 9-ஆம் அதிபதி சந்திரன்-ராகு சாரம் பெற்றிருக்கிறார். 4-க்கு 9-ஆம் வீட்டில் கேது இருக்கிறது. கடக ராசியில் கேது அமையப்பெற்று தாய்காரகன் சந்திரன்- ராகு சாரம் பெற்றிருக்
கிறது. உங்கள் ஜாதகரீதியாக தாய் வழி பூர்வீகவழியில் அனுகூலங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை. கிடைப்பதை பெற்றுக்கொள்வது நல்லது.
எனக்கு வீட்டு சொத்து பிரச்சினை எப்போது தீரும்? சொந்த வீடு எப்போது அமையும் என்று கூறுங்கள்? -ராஜா, பண்ருட்டி.
பதில்: பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி புதன் 7-ல் ஆட்சி,உச்சம்பெற்று, குரு- சூரியன் சேர்க்கை பெற்றிருப்பதும் சொந்த வீடு யோகத்துக்கு காரகனான சுக்கிரன் 8-ல் இருந்தாலும் ஆட்சி பெற்றிருப்பதால் அசையா சொத்துவகையில் அனுகூலங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகரீதியாக நான்காம் வீட்டில் கேது இருப்பதால் நல்லது நடைபெற தாமதமாகிறது. தற்போது ராகு தசையில் சனி புக்தி 13-1-2025 முடிய நடப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். 2025 ஜனவரி முதல் உங்களுக்கு புதன் புக்தி நடைபெற இருக்கிறது. புதன் புக்தி காலத்தில் சொத்து பிரச்சினை தீரக்கூடிய அமைப்புகள், அசையா சொத்துவகையில் அனுகூலங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
எனக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது தனியார் துறையில் வேலை கிடைக்குமா? அரசு வேலை கிடைக்க என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -கார்த்திகாயனி, கோவை.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி குரு 2-ல் ஜீவனகாரகன் சனி சேர்க்கைப் பெற்றிருப்பது சிறப்பான அமைப்பு. சூரியன் 6-ல் ஆட்சி பெற்று குரு பார்வை சூரியன் மற்றும் 10-ஆம் வீட்டுக்கு இருப்பதால் அரசுவழியில் அல்லது அரசு உதவி பெறக்கூடிய இடத்தில் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது ராகு தசையில் சுயபுத்தி 24-10-2024 முடிய நடப்பதால் அடுத்து வரக்கூடிய குரு புக்தி காலத்தில் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. 10-ஆம் அதிபதி வக்ரம் பெற்றிருப்ப தால் முதலில் தற்காலிக பணி அமைந்து அதன் பின்பு சில தடைக்குப் பிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. விடாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெறுவது நல்லது.
(ஆண்) கடன் எப்போது தீரும்? -எழிலரசி.
பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 6-ல் உள்ள சுக்கிர தசையில் கேது புக்தி 8-6-2025 முடிய நடக்கிறது. உங்கள் ஜாதகரீதியாக சனி வக்ரகதியில் இருக்கும்பொழுது பிறந்து உள்ளீர்கள். குறிப்பாக வக்ரகதியில் சனி இருக்கும்போது பிறந்தால் வாங்கிய கடனை அடைக்க ஒருசில இடையூறுகள் ஏற்படும். தற்போது கேது புக்தி தொடங்கியிருப்பது சாதக மில்லாத அமைப்பாகும். 8-6-2025 முதல் உங்களுக்கு சூரிய தசை தொடங்க இருக்கிறது. மூன்றாவது தசையாக தற்போது நடக்கக்கூடிய சுக்கிர தசையைவிட அடுத்து வரக் கூடிய சூரிய தசையில் கடன்கள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனிவக்ரகதியில் இருப்பதால் கடன்கள் வாங்குகின்ற பொழுது சற்று கவனத்தோடு
இருப்பது மிகவும் நல்லது. குறிப்பாக தற்போது சுக்கிர தசையில் கேது புக்தி நடப்பதால் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
உங்கள் கேள்விகளை பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், ஆணா பெண்ணா மிகவும் முக்கியமான ஒரு கேள்வி ஆகியவற்றுடன் 9841771188 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பவும்!