பாலமுருகன் பதில்கள் (01-06-2024)

/idhalgal/balajothidam/balamurugan-bathilkal

எனது மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? -செல்வராஜ், வேலூர்.

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி புதன் 7-ல் வலுவாக இருப்பதும், களத்திரகாரகன் சுக்கிரன் 9-ல் சிறப்பாக இருப்பதும் நல்ல அமைப்பாகும். தற்போது ராகு தசையில் சுக்கிர நட்சத்திரத்திலுள்ள சனி புக்தி 7-8-2026 முடிய நடக்கிறது. மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2-ல் குரு இருப்பது சாதகமான அமைப்பாகும். உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்க்கின்றபொழுது இவ்வாண்டு இறுதிக்குள் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

நான் படித்து முடித்து 14 வருடங்கள் ஆகிவிட்து. எனக்கு நிரந்திர பணி கிடைக்கவில்லை. எப்போது பணி நிரந்திரம் ஆகும் என்று கூறுங்கள்? -சீனிவாசன், கும்பகோணம்.

பதில்: கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி குரு 3-ல் வக்ரகதியில் இருக்கிறது. குறிப்பாக ஒருவருக்கு குரு வக

எனது மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? -செல்வராஜ், வேலூர்.

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி புதன் 7-ல் வலுவாக இருப்பதும், களத்திரகாரகன் சுக்கிரன் 9-ல் சிறப்பாக இருப்பதும் நல்ல அமைப்பாகும். தற்போது ராகு தசையில் சுக்கிர நட்சத்திரத்திலுள்ள சனி புக்தி 7-8-2026 முடிய நடக்கிறது. மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2-ல் குரு இருப்பது சாதகமான அமைப்பாகும். உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்க்கின்றபொழுது இவ்வாண்டு இறுதிக்குள் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

நான் படித்து முடித்து 14 வருடங்கள் ஆகிவிட்து. எனக்கு நிரந்திர பணி கிடைக்கவில்லை. எப்போது பணி நிரந்திரம் ஆகும் என்று கூறுங்கள்? -சீனிவாசன், கும்பகோணம்.

பதில்: கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி குரு 3-ல் வக்ரகதியில் இருக்கிறது. குறிப்பாக ஒருவருக்கு குரு வக்ரம் பெற்றால் சுய கௌரவம் கொண்ட நபராக இருப்பீர்கள். பொதுவாக குரு வக்ரகதியில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்காமல் சற்று தகுதி குறைவான வாய்ப்புகள் கிடைக்கும். அதாவது சம்பள குறைவாகக்கூட கிடைக்கலாம். உங்களுக்கு தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி 28-3-2026 முடிய நடக்கிறது. ராகுவுக்கு 8-ல் சுக்கிரன் இருப்பதால் சற்று எதிர்நீச்சல் போடவேண்டிய நிலை இருக்கும். கோட்சாரத்தில் குரு 2-ல் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் படிப்படியான வளர்ச்சிகளை அடையமுடியும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

எப்போது சொந்த வீடு கட்டுவேன். அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -தண்டபானி, திண்டுக்கல்.

பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி சுக்கிரனும் 11-ஆம் அதிபதி குருவும் பரிவர்த்தனை பெற்று இருக்கிறது. 4-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றால் நீங்கள் ஆரம்பத்தில் செய்யக்கூடிய முதலீடுகளை விற்று விட்டு வேறு ஒரு அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாக்கும். உங்களுக்கு தற்போது குரு தசையில் ராகு புக்தி 20-3-2025 முடிய நடக்கிறது. அடுத்து உங்களுக்கு பரிவர்த்தனை பெற்ற சனி தசை வர உள்ளது. தற்போது நடக்கக்கூடிய குரு தசையைவிட அடுத்து வரக்கூடிய சனி மகா தசையில் அசையா சொத்துகள் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் மகர ராசியில் பிறந்திருப்பதால் குறிப்பாக சனியின் ராசியில் பிறந்திருப்பதால் அடுத்து வரக்கூடிய சனி தசையில் ஒரு வளமான பலன்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 2025 மார்ச்சில் ஏழரைச்சனி முழுமையாக முடியும். அடுத்து வரக்கூடிய சனி தசையில் வீடு கட்டக்கூடிய வாய்ப்போ அல்லது பழைய வீட்டை வாங்கி புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளோ உண்டாகும். மகர ராசியில் பிறந்திருப்பதால் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

எனக்கு எப்போது புத்திர பாக்கியம் அமையும் என்று கூறுங்கள்? -செந்தில்ராஜன், மதுரை.

பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 5-ஆம் அதிபதி சுக்கிரன் திரிகோண ஸ்தானமான 9-ல் இருப்பது நல்ல அமைப்பு என்றாலும் புத்திர காரகன் குரு வக்ரகதியில் இருப்பது புத்திர தோஷம் ஆகும். உங்களுக்கு தற்போது புதன் தசையில் புதன் புக்தி 20-6-2024 முடிய நடக்கிறது. 2025 ஜூனுக்கு பிறகு உங்களுக்கு சுக்கிர புக்தி நடக்கும். சுக்கிர புக்தி நடக்கின்ற தருவாயில் புத்திர பாக்கியத்திற்கான வாய்ப்புகள் பலமாக இருக்கும். எது எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் மட்டுமில்லாமல் உங்கள் மனைவி ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக அமைப்பு பார்க்கவேண்டும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

எனது மகனுக்கு பல வருடமாக வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறோம், இதுவரை எதுவும் அமையவில்லை. அவருக்கு திருமணம் எப்போது நடக்கும்? எப்படிபட்ட வரன் அமையும் என்று கூறுங்கள்? -பாலன், தென்காசி.

பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு தற்போது சந்திர தசையில் குரு புக்தி 12-5-2025 முடிய நடக்கிறது. உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி புதன் 7-ல் வலுவாக அமையப்பெற்று உடன் குரு இருப்பது நல்ல அமைப்பாகும். களத்திர காரகன் சுக்கிரனும் செவ்வாய் சேர்க்கைப்பெற்று 8-ல் இருப்பதால் சாதகமான பலனைதான் ஏற்படுத்துவார். 8-ல் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷமுள்ள வரனை பார்க்க வேண்டும் என்று ஒரு கருத்து உண்டு. அடுத்து உங்கள் மகன் ஜாதகத்தில் 8-ல் செவ்வாய், சூரியன், சுக்கிரன் இருந்தாலும் செவ்வாய்க்கும் சூரியனுக்குமுள்ள இடைவேளை அதிகமாக இருப்பதால் பெரிய கெடுதிகள் கிடையாது.

குறிப்பாக உங்கள் மகன் மூல நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் பெண்வீட்டார் ஒரு சிலர் மாமனாருக்கு ஆகாது என்ற கருத்தை கூறுவார்கள். பெண்மூலம்தான் பாதிக்கும் என்றாலும் தமிழகத்தில் பெரும்பாலான பகுதியில் ஆண் மூலத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறார்கள். ஜோதிடரீதியாக ஆண்மூலம் நன்மை தரும் என்றாலும் மக்களிடம் அதனை சரியான முறையில் புரிய வைக்கமுடியவில்லை. உங்கள் மகனுக்கு கிரக அமைப்புகள் சிறப்பாக இருப்பதாலும் தற்போது குரு புக்தி நடப்பதாலும் இந்த ஆண்டு இறுதிக்குள்ளயே நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

bala jothidam 01-06-24
இதையும் படியுங்கள்
Subscribe