Advertisment

பாலமுருகன் பதில்கள் 08-06-24

/idhalgal/balajothidam/balamurugan-answers-53

அரசு வேலை கிடைக்குமா? தனியார் வேலை கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்யவேண்டும்? -வினோத்குமார், திண்டுக்கல்.

Advertisment

பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சூரியன் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் அமையப்பெற்று ராசிக்கு 10-ஆம் அதிபதி செவ்வாய் ராசிக்கு 11-ல்அமையப்பெற்று குருபார்வை யோடு இருப்பதால் அரசு, அரசு சார்ந்த இடங்களில் பணி அமையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. அதற்கான போட்டி தேர்வுகளில் தொடர்ந்து பங்கு பெற்றுவந்தால் நல்லது நடக்கும். கும்ப ராசியில் பிறந்திருப்பதால் தற்போது ஏழரைச்சனி நடக்கிறது. அதன் காரணமாக தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன் படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்லது நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு; விடாமல் முயற்சிசெய்யவும். ஏழரைச்சனியும் நடைபெற்று தற்போது சனி தசையில் சனி புக்தி 10-9-2024 முடிய நடப்பதால் நீங்கள் தொடர்ந்து சனிபகவானுக்கு பரிகாரங்கள் செய்வது, ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

Advertisment

என் கடன் பிரச்சினைகள் எப்போது தீரும்?

-கோபாலன், ஆவடி.

பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு கடன்களை குறிக்கக்கூடிய கிரகமான சனிபகவான் 6-ல் நீசம் பெற்றிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். சனி பலமிழந்து இருப்பவர்கள் கடன் வாங்கும் விஷயத்தில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது மிகமிக நல்லது. உங்களுக்கு தற்போது கோட்சாரத்தில் 3-ல் சன

அரசு வேலை கிடைக்குமா? தனியார் வேலை கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்யவேண்டும்? -வினோத்குமார், திண்டுக்கல்.

Advertisment

பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சூரியன் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் அமையப்பெற்று ராசிக்கு 10-ஆம் அதிபதி செவ்வாய் ராசிக்கு 11-ல்அமையப்பெற்று குருபார்வை யோடு இருப்பதால் அரசு, அரசு சார்ந்த இடங்களில் பணி அமையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. அதற்கான போட்டி தேர்வுகளில் தொடர்ந்து பங்கு பெற்றுவந்தால் நல்லது நடக்கும். கும்ப ராசியில் பிறந்திருப்பதால் தற்போது ஏழரைச்சனி நடக்கிறது. அதன் காரணமாக தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன் படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்லது நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு; விடாமல் முயற்சிசெய்யவும். ஏழரைச்சனியும் நடைபெற்று தற்போது சனி தசையில் சனி புக்தி 10-9-2024 முடிய நடப்பதால் நீங்கள் தொடர்ந்து சனிபகவானுக்கு பரிகாரங்கள் செய்வது, ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

Advertisment

என் கடன் பிரச்சினைகள் எப்போது தீரும்?

-கோபாலன், ஆவடி.

பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு கடன்களை குறிக்கக்கூடிய கிரகமான சனிபகவான் 6-ல் நீசம் பெற்றிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். சனி பலமிழந்து இருப்பவர்கள் கடன் வாங்கும் விஷயத்தில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது மிகமிக நல்லது. உங்களுக்கு தற்போது கோட்சாரத்தில் 3-ல் சனி இருப்பதால் படிப்படியான தனச்சேர்க்கை ஏற்பட்டு கடன்கள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக தற்போது ராகு தசையில் விருச்சிக லக்னத்துக்கு பாதகாதிபதியான சந்திர புக்தி 17-9-2024 முடிய நடக்கிறது. தற்போது நடைபெறக்கூடிய சந்திர புக்தியைவிட அடுத்து வரக்கூடிய செவ்வாய் புக்தி சற்று முன்னேற்றத்தைத் தரும். உங்கள் லக்னத்திற்கு 2, 5-க்கு அதிபதியான குரு லாப ஸ்தானத்தில்அமையப்பெற்று 2025 அக்டோபர் முதல் குரு மகா தசை நடைபெற இருப்பதால் குரு தசையில் பெரும்பாலான கடன்கள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அப்படி குறைகின்றபொழுதுஅடுத்தடுத்து உங்கள் பெயரில் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

கடந்த சில ஆண்டுகளாக அரசு தேர்வுக்கு படித்துக்கொண்டு வருகிறேன். ஆனால் தற்போது படிக்கும் சூழ்நிலையும் மனநிலையும் சரியாக அமையவில்லை. என்னுடைய அரசு வேலை கனவு கேள்விக்குறியாகிவிடுமா? பதில் கூறுங்கள்.

-சுதர்சன், விழுப்புரம்.

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சூரியன் 4-ஆம் வீட்டில் செவ்வாய் சேர்க்கைப்பெற்று சூரியன், செவ்வாய் இருவரும் ராகுவின் நட்சத்திரத்தில் உள்ளனர்.10-ஆம் அதிபதி சூரியன் ராகு நட்சத்திரத்தில் இருப்பதால் நேரடியாக அரசு துறையில் வேலை கிடைப்பதில் ஒருசில இடையூறுகள் இருக்கும். உங்களுக்கு குரு பார்வை 10-ஆம் வீட்டில் இருப்பதாலும் 10-ல் சந்திரன் இருப்பதாலும் பிறந்த ஊரைவிட வெளியூர், வெளிமாநிலங்களில்அரசு உதவி பெறக்கூடிய இடங்களில் பணிக்காக முயற்சி செய்தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. தற்போது சூரிய தசையில் சூரியனுக்கு 8-ல் இருக்கக்கூடிய ராகு புக்தி 5-9-2024 முடிய நடப்பது அனுகூலமற்ற

அமைப்பாகும். அடுத்து குரு புக்தி வருகின்றபொழுது ஒருசில சாதகமான பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

என் மகளுக்கு திருமணம் எந்த திசையில் நடைபெறும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் லக்ன கேந்திரத்தில் இருப்பது நல்ல அமைப்பாகும். களத்திரகாரகன் செவ்வாய் திரிகோண ஸ்தானமான 5-ல் இருப்பது நல்ல அமைப்பு என்றாலும் கேது நட்சத்திரத்தில் இருப்பதால் தேவையற்ற இடையூறுகள் ஏற்படுகிறது. தற்போது 7-ல் ராகு அமையப்பெற்று சுக்கிர தசையில் ராகு புக்தி 8-12-2025 முடிய நடக்கிறது. பொதுவாக 7-ல் ராகுஅமையப்பெற்று அதன் புக்தி நடைபெற்றால் திருமணத்திற்கான முயற்சிகள் தடைப்படும். அடுத்து வரக்கூடிய குரு புக்தியில் நல்ல வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் இருக்கக்கூடிய இடத்தில் இருந்து கிழக்கு திசையில் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. உங்கள் மகள் ஜாதகத்தில் செவ்வாய்- கேது சாரம் பெற்றிருப்பதாலும் பாரம்பரியத்தை குறிக்கக்கூடிய கிரகமான குரு வக்ரகதியில் இருப்பதாலும் உறவில்லாமல் அன்னியத்தில் பார்ப்பது, ஒரு புது இடத்தில் பார்ப்பது நன்மை தரும். 7-ல் ராகு இருப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

-ஞானம், புதுச்சேரி.

பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 2, 7-க்கு அதிபதியான செவ்வாய் 6-ல் வக்ரம் பெற்றிருப்பது தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். சுக்கிரன் 10-ல் இருப்பது நல்லஅமைப்பு என்றாலும் சனி நட்சத்திரத்தில் இருப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. உங்கள் ஜாதகத்தில் சூரியன்- கேது சேர்க்கைப்பெற்று சந்திரன்- ராகு சாரம் பெற்றிருப்பதால் அந்நியஜாதியில் பார்ப்பதுகூட நல்லது. உறவினர் வகையில் குறிப்பாக தந்தைவழி உறவினர் வகையில் தேவையில்லாத மனஸ்தாபங்கள் இருக்கும். சனி தசையில் சுக்கிர புக்தி தற்போது நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜாதி என்பது முக்கியமில்லை. உங்களுக்கு திருமணம் அமைவதுதான் முக்கியம் அதனால் அந்நியத்தில் வரன் வந்தால் சுமூகமாக முடித்துக் கொள்வது நல்லது. சூரியன்- கேது சேர்க்கைப் பெற்றிருப்பது கடுமையான தோஷம் என்பதால் தந்தைவழி உறவினர் வகையில் பகை இருக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்

விருச்சிகம்: 7-6-2024 காலை 7.55 மணிமுதல் 9-6-2024 பகல் 2.07 மணிவரை சந்திராஷ்டமம். உங்கள் பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. நியாயப்படி உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் தாமதப்படும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்சமயத்திற்கு தவிர்க்கவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. பைரவரை வழிபடவும்.

தனுசு: 9-6-2024 பகல் 2.07 மணிமுதல் 11-6-2024 இரவு 11.38 மணிவரை சந்திராஷ்டமம். உங்களது முன்கோபத்தால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். பங்காளியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் நிலவும் நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது, இரவுநேரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது மன அமைதியைத் தரும்.

மகரம்: 11-6-2024 இரவு 11.38 மணிமுதல் 14-6-2024 பகல் 11.54 மணிவரை சந்திராஷ்டமம். தேவையில்லாத அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் விட்டுக்கொடுத்து செல்லவும். வண்டி, வாகனங்கள்மூலமாக எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது கெடுதியைக் குறைக்கும்.

கும்பம்: 14-6-2024 பகல் 11.54 மணிமுதல் 16-6-2024 பின்னிரவு 12.34 மணிவரை சந்திராஷ்டமம். பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்பட்டு உங்களது மனஅமைதி குறையும். வயது மூத்தவர்களிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது உத்தமம். வெளியூர் பயணங்களைத் தள்ளிவைக்கவும். மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

balajothidam 08-06-24
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe