பாலமுருகன் பதில்கள்!

/idhalgal/balajothidam/balamurugan-answers-51

என் மகன் முதுகலை பட்டபடிப்பு படிக்கின்றான். இதுவரை வேலை எதுவும் அமையவில்லை. மேற்படிப்பு ஏதேனும் தொடரலாமா? அல்லது வேலைக்கு முயற்சிக்கலாமா? அவரது எதிர்காலம் எப்படி யிருக்கும் என்று கூறுங்கள்? -பாலசாமி, கோவை.

பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ல் புதன் மிக வலுவாக இருந்து லக்னாதிபதி குரு லக்னத்தைப் பார்ப்பது அற்புதமான அமைப்பு ஆகும். 10-ல் புதன் இருப்ப தால் எதிர்காலத்தில் ஒரு உயர்வான நிலையினை அடையக்கூடிய யோகம் உண்டு. பூசத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு செவ்வாய்- கேது சேர்க்கைப்பெற்று தற்போது கேது தசை 16-5-2030 முடிய நடப்ப தால் வேலைவாய்ப்பு சம்பந்தப் பட்ட விஷயங்களில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காது. தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஜாத கருக்கு கேது தசை முடிந்து, சுக்கிர தசை வரும்போதுதான் ஒரு நல்ல நிலையை அடையக்கூடிய அதிர்ஷ்ட

என் மகன் முதுகலை பட்டபடிப்பு படிக்கின்றான். இதுவரை வேலை எதுவும் அமையவில்லை. மேற்படிப்பு ஏதேனும் தொடரலாமா? அல்லது வேலைக்கு முயற்சிக்கலாமா? அவரது எதிர்காலம் எப்படி யிருக்கும் என்று கூறுங்கள்? -பாலசாமி, கோவை.

பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ல் புதன் மிக வலுவாக இருந்து லக்னாதிபதி குரு லக்னத்தைப் பார்ப்பது அற்புதமான அமைப்பு ஆகும். 10-ல் புதன் இருப்ப தால் எதிர்காலத்தில் ஒரு உயர்வான நிலையினை அடையக்கூடிய யோகம் உண்டு. பூசத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு செவ்வாய்- கேது சேர்க்கைப்பெற்று தற்போது கேது தசை 16-5-2030 முடிய நடப்ப தால் வேலைவாய்ப்பு சம்பந்தப் பட்ட விஷயங்களில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காது. தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஜாத கருக்கு கேது தசை முடிந்து, சுக்கிர தசை வரும்போதுதான் ஒரு நல்ல நிலையை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. புதன் வலுவாக இருப்பதால் மேற்படிப்புக்கான முயற்சிகளைத் தற்போது முயற்சிக்கலாம். கேது தசை நடப்பதால் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

aa

என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? மணப்பெண் பற்றி விவரம் கூறுங்கள். -முத்துலட்சுமி முருகேசன், திருப்புவனம் புதூர்.

பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 6-ல் மறைந்திருப்பதால் திருமணம் தாமதமாகிறது. சுக்கிரன் 6-ல் சந்திரன்- புதன் சேர்க்கைப்பெற்று உள்ளதும், குரு பார்வை சந்திரன், புதன், சுக்கிரனுக்கு இருப்பதும் நல்ல அமைப்பாகும். தற்போது சனி தசையில் புதன் புக்தி நடப்பதால் விரைவில் திருமண யோகம் உண்டு. 7-ஆம் அதிபதி 6-ல் மறைந்திருப்பதால் தாய்வழி குலதெய்வத்தை வழிபாடு செய்வது, பெருமாள் வழிபாடு செய்வதன் மூலமாக விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். புதன் பலமாக அமையப்பெற்று புதன் புக்தி நடப்பதால் படிப்படியான வளர்ச்சிகள் கிடைக்கும். 7-ஆம் அதிபதி சந்திரன் வளர்பிறை சந்திரன் என்ற காரணத்தால் நல்ல இடத்தில் வரன் அமையக்கூடிய யோகமுண்டு.

எனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று கூறுங்கள். -வெங்கட்ராமன், தஞ்சை.

பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ல் சனி இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. 7-ஆம் அதிபதி குரு 12-ல் மறைந் திருப்பதும் திருமண தாமதத்தை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்ப தால் நல்ல வாழ்க்கை அமையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தற்போது குரு தசையில் கேது புக்தி 27-11-2024 முடிய நடப்பதால் அடுத்து வரவுள்ள சுக்கிர புக்தியில் மணவாழ்க்கை சிறப்பாக அமையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. 7-ல் சனி இருப்பதால் கால பைரவரை வழிபாடு செய்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மையைத் தரும்.

எனது மகன் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகியிருக்கிறார். வேலையில் சேரும் காலம் எப்போது வரும் என்று கூறுங்கள்? -கிருஷ்ணகுமார், மதுரை.

பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத் தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சூரியன் கேந்திர ஸ்தானமான 7-ல் அமைந் திருப்பது சிறப்பான அமைப்புதான். தற்போது ராகு தசையில் குரு புக்தி நடப்பதால் நல்ல வாய்ப்புகளும் படிப்படியான வளர்ச்சிகளும் உண்டு. தற்போது கோட்சாரத்தில் ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதாலும் 10-ல் சனி சஞ்சரிப்பதாலும் தற்போது கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை உங்கள் மகன் பயன் படுத்திக்கொண்டால் 2025 மே மாதத்திற்கு பிறகு தற்போது இருக்கக்கூடிய நிலையைவிட ஒரு நல்ல ஒரு உயர்வான நிலை உண்டாகும். குறிப்பாக குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சிக்கு பிறகு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். அதுவரை கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

நான் எட்டு வருடமாக அரசு வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருக்கின்றேன், எப்போது கிடைக்கும் என்று கூறுங்கள்.

பதில்: பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் 8-ல் மறைந்திருந்தாலும் பாவகரீதியாக 9-ல் இருப்பது நல்ல அமைப்புதான். உங்களுக்கு சூரியன், குரு இணைந்து 9-ல் இருப்பது சாதகமான அமைப்பாக இருந்தாலும் தற்போது மூன்றா வது தசையாக சந்திர தசை நடப்பது அவ்வளவு சிறப்பு அல்ல. 10-ஆம் வீட்டில் சூரியன் இருந்தால்தான் நேரடியாக அரசுத்துறையில் வேலை கிடைக்கும் அல்லது ஜீவனகாரகன் சனி உடன் சூரியன் இணைந்திருந்தால் அரசு வேலை எனலாம். உங்களுக்கு சூரியன் ஆட்சி பெற்றிருப்பதால் அரசு, அரசு சார்ந்த துறையில் மனம் தளராமல் முயற்சிக்கவும்; விரைவில் ஒரு நல்லது நடக்கட்டும். தற்போது சந்திர தசை நடப்பதால் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

bala240524
இதையும் படியுங்கள்
Subscribe