கேள்வி: நல்ல வேலை எப்போது கிடைக்கும் மற்றும் திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -சற்குருநாதன், புதுச்சேரி

பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி எட்டில் மறைந்தாலும் குருபார்வை ஏழாம் வீட்டுக்கு இருப்பது சிறப்பு. சுக்கிரன் 10-ல் இருப்பது நல்ல அமைப்பாகும். கோட்சார குரு ஏழாம் வீட்டை பார்ப்பதால் விரைவில் இந்தாண்டே ஒரு சிறப்பான வாழ்க்கை அமை யக்கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. 10-ஆம் அதிபதி சந்திரன் 5-ல் இருப்பது சிறப் பான அமைப்பு ஆகும். 10-ல் புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருப்பதும் நல்ல வேலைவாய்ப்பு தரக்கூடிய அமைப்பாகும். உங்களுக்கு சனி தசையில் சனி புக்தி 26-12-2023 முடிய நடப்பதால் நல்ல வேலைவாய்ப்பு அமைய இடையூறுகள் ஏற்படுகிறது. 2024 தொடக் கத்தில் சுய புக்தி முடிந்தவுடன் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். விநாயகர் வழிபாடு, சனிபகவானை பிரார்த்திப்பது நற்பலனை தரும்.

ப் கேள்வி: என் மகனின் படிப்பு எப்படி யிருக்கும். அவன் இ.ஊ. அல்லது வேறு எந்த குரூப் எடுத்து படிப்பது என்று கூறுங்கள்?

பதில்: உங்கள் மகன் பூச நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னத்தில் பிறந்துள்ளார். லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி சனி, 11-ல் சுக்கிரன்- கேது சேர்க்கை பெற்று இருக்கிறது. டெக்னிக்கல் கல்வி தொழில் நுட்பரீதியான படிப்புகள் நற்பலனை தரும். 10-ல் சந்திரன் அமைந்து நான்காம் வீட்டை பார்ப்பதும், சந்திரனை குரு பார்ப்பதும் எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. ஜாதகரீதியாக தொழில் நுட்பம், வரைகலை தொடர்பு டைய கல்வி, டிசைனிங் தொடர்பு டைய படிப்பு அமைய வாய்ப்புண்டு. புதன் வக்ரகதியில் இருப்பதால் படிப்பில் எண் ணியதைப் படிக்காமல் வேறு ஒரு துறையில் படிக்கக்கூடிய அமைப்புகள் ஏற்படும்.

Advertisment

aa

கேள்வி: என் மகனுக்கு தோல் சம்பந்தபட்ட நோய் உள்ளது. அது எப்போது குணமாகும். பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்? -தேவபக்தன், சேலம்

Advertisment

பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்கள் மகன் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2-ல் ராகு, 8-ல் சூரியன், கேது அமையப்பெற்று இருக்கிறது. லக்னத்துக்கு 8-ல் சூரியன், கேது, காலபுருஷப்படி 8-ஆவது ராசியான விருச்சிகத்தில் ராகு அமையப்பெற்றபொழுது பிறந்ததால் ஒரு சில உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. குரு பார்வை 6, 8-ஆம் வீட்டுக்கு இருப்பதால் முறையான சிகிச்சைகள் மேற்கொள்ள வும். விரைவில் நல்லது நடக்கும். தற்போது வக்ரகதியில் உள்ள சனி புக்தி சுக்கிர தசையில் 20-1-2025 முடிய நடப்பது சாதகம் இல் லாத அமைப்பு ஆகும். 2025 தொடக்கத்தில் புதன் புக்தி தொடங்குகின்றபொழுது தற்போது இருக்கும் உடம்பு பாதிப்புகள் அனைத்தும் விலகி நல்லநிலை அடைய முடியும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வும்.

கேள்வி: என் மகள் தற்போது இ.ஊ. கடைசி வருடம் படிக்கப்போகிறார். வரும் 2025-ல் நடைபெறும் ஒ.ஆ.ந தேர்வில் கலந்துகொண்டால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறுவாரா என்று கூறுங்கள்? -விமல், சென்னை.

பதில்: உங்கள் மகள் கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத் தில் பிறந்துள்ளார், ஒரு ஜாதகத்தில் 10-ல் சூரியன் செவ்வாய் மிக வலுவாக இருந்து, குரு போன்ற கிரகங்கள் வலுவாக அமையப்பெற்று பத்தாம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தால் அரசு உயர் பதவி வைக்கக்கூடிய யோகம் உண்டாகும். உங்கள் மகள் ஜாதகத்தில் சந்திரன் உச்சம்பெற்று குரு உச்சம் பெற்று இருப்பது சிறப்பான அமைப்புதான். ஜாதகிக்கு சனி ராகு சந்திரன் சேர்க்கை பெற்று ராகு தசை நடக்கிறது. இது வெளியூர்மூலம் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிவதற் கான வலுவான அமைப்பாகும். 10-ஆம் அதிபதி சூரியன், குருபார்வை பெற்றிருப்ப தால் போட்டி தேர்வுகள் எழுதி னால் நல்ல நிலை அடையக் கூடிய வாய்ப்பு கள் உண்டு என கூறலாம். இருந்தாலும் நீங்கள் எதிர் பார்க்கக்கூடிய அளவிற்கு மிக உயரிய பதவி அடைவதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு. ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

கேள்வி: நான் லாட்ஜ் கட்டலாம் என்று நினைக்கிறேன். அது சாத்தியமாகுமா என்று கூறுங்கள்? -முருகபாரதி, ராமநாதபுரம்

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் ஆட்சி பெற்றிருப்பதும், நான்காம் அதிபதி சூரியன் லக்ன கேந்திரம் பெற்றது சிறப்பான அமைப்பு. குரு, சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இணைந்து தற்போது குரு தசை நடப்பது நல்ல அமைப் பாகும். லார்ஜ் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வும்; நல்லது நடக்கட்டும்.

கேள்வி: நான் நிறைய கடன் பிச்சினைகளில் உள்ளேன். குடும்பத்தில் இருந்தும் பிரிந்து இருக்கின்றேன். என் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்?

பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் வலுவாக இருப்பது சிறப்பான அமைப்பு என்றாலும் சனி வக்ரகதியில் இருந்து 8-ல் இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். பொதுவாக சனி வக்ரகதியில் இருப்பதால் வாங்கிய கடன்களை அடைக்க இடையூறுகள் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் ராகு புத்தி நடந்ததால் குடும் பத்தைவிட்டு பிரியக்கூடிய நிலை ஏற்பட்டது. தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி 7-12-2025 முடிய நடப்பதால் விரைவில் குடும்பத்துடன் இணையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது அஷ்டமச்சனி நடப்பதால் கடன் பிரச்சினை சற்று இருந்தாலும், 2024 மே மாததிற்குப் பிறகு கடன்களை குறைத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர் காலத்தில் உங்கள் பெயரில் கடன் வாங்கா மல் இருப்பது மிகவும் நல்லது. பைரவர் வழிபாடு மேற்கொள்ளவும்; கடன்கள் குறையும்.

கேள்வி: கடந்த பல வருடங்களாக என் மகனின் திருமணத்திற்காக வரன் பார்த்துகொண்டு வருகிறேன். பரிகாரங்களும் செய்துவிட்டேன். ஆனாலும் திருமணம் கைகூடவில்லை. திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்?

பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு லக்ன ராசிக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் வக்ரம் பெற்றிருப்பதாலும், 2-ல் சனி, 7-ல் ராகு அமையப்பெற்று, 2-ல் உள்ள சனி தசை 23-2-2034 வரை நடப்பதாலும் திருமணம் கைகூட தடைகள் உண்டாகிறது. குறிப்பாக 2, 7-ல் பாவ கிரகங்கள் அமையப்பெற்று திருமண வயது காலத்தில் அந்த கிரகத்தின் தசை நடைபெற்றால் மண வாழ்க்கை அமைய இடையூறுகள் ஏற்படும். தற்போது 2-ல் உள்ள சனி தசையில் சுக்கிர புக்தி 14-2-2025 முடிய நடப்பதால் உறவில் லாமல் அந்நியத் தில் குறிப்பாக வேற்று ஜாதி பெண்ணைகூட திருமணத்திற்கு முயற்சி பண்ண லாம். சனி தசை முடியும் வரை திருமணம் அமைந்தாலும் விட்டுக்கொடுத்து நடந்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்..

கேள்வி: என் மகனின் எதிர்காலம் எப்படியிருக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? -பாரி, விருத்தாச்சலம்

பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு இதுநாள்வரை 3-ஆவது தசையாக ராகு தசை நடைபெற்றது. வரும் 5-7-2023 முதல் குரு மகா தசை நடக்க இருக்கிறது. கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 6, 9-க்கு அதிபதி யான குரு 5-ல் இருந்து தசை நடக்க இருப் பது சிறப்பான அமைப்பு ஆகும். ஜாதகருக்கு வெளியூர், வெளிநாடுகளில் நல்ல வாய்ப்பு அமையும். தற்போது ஏழரைச்சனி நடப்ப தால் 2025 முதல் ஒரு சிறப்பான நிலையினை எட்டமுடியும். ஜாதகருக்கு குரு தசையில் உயர்வான நிலையினை எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 5-ஆம் அதிபதி செவ்வாய் வக்ரகதியில் இருப்பதாலும், சூரியன், ராகு நட்சத்திரத்தில் 8-ல் இருப்பதாலும் ஜாதகருக்கு பிறந்த ஊர், பிறந்த மாநிலத்தைவிட வெளியூர், வெளிநாடுகளில் நல்லநிலை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 10-ஆம் அதிபதி வக்ரம் பெற்றிருப்பதால் செய்யக்கூடிய பணிகளில் அடிக்கடி மாற்றங்கள் இருந்தாலும் குரு, சனி சிறப்பாக இருப்பதால் நல்ல நிலை அடைவார்.